என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, November 4, 2010

பாலி பகுதி 3

அடுத்த நாள் எங்க டிரைவர் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கற எடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான்.

"ஏன்டா ஏதோ தண்ணி வெளையாட்டுன்னு சொல்றானே, அத தான் நாம ஊர் ப்ளாக் தண்டர் இல்ல அதிசயம் போனாலே போதுமே இங்க வந்து அது தான் பண்ணனுமா?"
"அதையே தான் நானும் நெனச்சிட்டு இருக்கேன்டா, ஏதோ ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றான், பாக்கலாம்"

வாட்டர் ஸ்போர்ட்ஸ்ன்னு அவன் கூட்டிட்டு போன எடம் பீச். அங்க பாத்தா பாராசூட் பறந்துட்டு இருந்தது, என்ன என்னமோ பறந்துட்டு இருந்தது. பாத்துட்டு எனக்கு கிலி கெளம்பிடுச்சு. இன்னைக்கு உயிரோட திரும்பி போறது கஷ்டம்னு நெனச்சிட்டு இருந்தேன். இவனுங்க ஏதோ பாராசூட்ல பொறந்த மாறி ரொம்ப சீரியஸ்ஸா பேசிட்டு இருந்தாங்க. யாரோ ஒருத்தன் கிட்ட "நோ நோ, ரேட் ஓவர்" னு என்னமோ வாரம் ரெண்டு டைம் பாராசூட்ல போற மாறி பேரம் பேசிட்டு இருந்தாங்க. இவங்க பெரிய ஆள் போல, நாமளும் போய்டுவோம் இல்லனா ஓட்டுவாங்கன்னு அவனுங்க கேட்டதுகெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிடேன். கடசில பாத்தா நான் தான் ஏமாந்துட்டேன்.

"ஓகே வாடா?, போலாம் வா"
"யாரு போலாம், நீ மட்டும் தான் போற, எங்களுக்கெல்லாம் தண்ணி, ஹைட்னா பயம், அதுக்கு தான் உன்ன ஏமாத்தி கூட்டிட்டு வந்தோம், உன்ன வெச்சு தான் டெஸ்ட் பண்ணி பாக்கணும். காசு குடுத்தாச்சு, கண்டிப்பா போகணும்"

அடபய புள்ளைங்களா இங்கயும் நான் தான் மாட்டிகிட்டேனா? பாசகார பசங்கடா நீங்க.
வருவது வரட்டும் பாத்துக்கலாம்னு ஏதோ குருட்டு தைரியத்ல கெளம்பிட்டேன்.

லைப் சூட் எல்லாம் போட்டு என்னமோ சாக போற பீலிங் குடுத்தாங்க. போட் கிட்ட வந்ததும் அந்த கைர புடிச்சு என் லைப் சூட்ல கட்டி விட்டுடாங்க. அப்டியே ஜிவ்ன்னு பறந்தேன். சும்மா சொல்ல கூடாது நல்லா தான் இருந்தது. அப்டியே பீச்ச ஒரு ரவுண்டு வந்தான். மொத்த ஊரும் தெரிஞ்சது. பிளேன்ல போனா தெரியும்ல அதே மாறி. என்ன கண்ணாடிக்கு உள்ள இருந்து பாக்காம, சில்லுனு கடற்கரை காத்து மூஞ்சில அறைய, அந்த கடல் வாசம் ஆள தூக்க நல்ல ஒரு சுகானுபவம்.


சில புகைப்படங்கள் கீழே

நான் பறக்கிறேனே மம்மி
தூரத்துல தெரியறது அண்ணன் தான்
நாங்க கை விட்டுட்டே பறப்போம்


ஏதோ சாதிச்ச மாறி சிரிசிட்டே வந்தேன்.
"ரொம்ப சிரிக்காதடா, இந்த சந்தோசம் நிரந்தரம் இல்ல".
அவன் பி.எஸ் வீரப்பா மாறி சிரிச்சான். எனக்கு அடுத்த அடிவிழுந்தது.

"சரி லைப் வெஸ்ட் கழட்டு. இந்த டிரஸ் போடணுமாம்"
"இது எதுக்குடா" அப்பிராணியா கேட்டேன்.
"அடுத்த நிகழ்ச்சி தான் முக்கியம்"
அடுத்து விழுந்த அடி இருக்கே,அப்பா அப்பா ஒரு கொழந்த புள்ளைய எத்தன அடி தான்டா அடிப்பீங்க.


பின்குறிப்பு :
இது பதிய சில டிப்ஸ் அடுத்த பதிவுல சொல்றேன்.இப்போவே ரொம்ப பெருசா போச்சு.
பின்குறிப்பு 2:
அருண் அண்ணே மாறி நான் நெனையலயே!!!!! அவர் எப்டி நெனஞ்ச கோழி மாறி இருக்காருன்னு இங்க போய் பாருங்க. அவர் நடு கடல்ல போய்  பாராசூட்ல போயிருக்காரு. நான் கரைல இருந்து போனேன். அவ்ளோ தான் வித்யாசம்.

8 comments:

அருண் பிரசாத் said...

நல்லா இருந்த்தது... இன்னும் கொஞ்சம் சுவாரசியமா எழுதி இருக்கலாம்...

Arun Prasath said...

அருண் பிரசாத் : மிக்க நன்றி அருண் அண்ணே!!!
அடுத்து சுவாரஸ்யமா ட்ரை பண்றேன்.

Unknown said...

அருண் சொன்னமாதிரி சுவாரஸ்யம் கூட்ட முயலுங்கள் தம்பி ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown said...

//அடபய புள்ளைங்களா இங்கயும் நான் தான் மாட்டிகிட்டேனா? பாசகார பசங்கடா நீங்க.
வருவது வரட்டும் பாத்துக்கலாம்னு ஏதோ குருட்டு தைரியத்ல கெளம்பிட்டேன்.//


நல்லாவே இருக்குது....
nothing to worry.

Unknown said...

அப்படியே பறந்து மேட்டுப்பாளையம் பக்கம் வாங்க.. பக்கம் தானே

Arun Prasath said...

//அடபய புள்ளைங்களா இங்கயும் நான் தான் மாட்டிகிட்டேனா? பாசகார பசங்கடா நீங்க.
வருவது வரட்டும் பாத்துக்கலாம்னு ஏதோ குருட்டு தைரியத்ல கெளம்பிட்டேன்.//


நல்லாவே இருக்குது....
nothing to worry.//

வாழ்த்துக்கு நன்றி பாரதி அவர்களே...

Arun Prasath said...

//அப்படியே பறந்து மேட்டுப்பாளையம் பக்கம் வாங்க.. பக்கம் தானே//

வந்துட்டா போச்சு, உங்க வீட்டு மொட்ட மாடிலயே எறங்கிடுவோம்...