என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, November 2, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 7

பரீட்சைக்கு முந்தின நாள் எவ்ளோ படிச்சாலும் தான் ஏறாதே. ஏதோ கொஞ்சம் படிச்சிட்டு ஒரு 2 மணி போல படுத்து தூங்கினேன். காலைல 6 மணிக்கு  எந்திரிக்கலாம் அப்டினு அலாரம் எல்லாம் சிறப்பா வெச்சிட்டு படுத்தாச்சு. படிபாளிங்க மட்டும் படிச்சிட்டு இருந்தாங்க.நானும் JP யும் ஒரே கட்டில்ல படுத்திருந்தோம்.

JP சொந்த ஊர் நாகர்கோயில். பேருக்கு தான் கம்ப்யூட்டர் பொறியாளர். ஆனா காட்ல எலி புடிப்பாங்களே, அவங்க செய்யற வேலை எல்லாம் கரெக்ட்டா செய்வான். பல்லி புடிச்சு பொண்ணுங்க பேக்ல போடறது. ரூம் குள்ள வந்த கரபான்பூச்சி புடிக்கறது, இந்த மாறி வேலை எல்லாம் இவன நம்பி குடுக்கலாம். இவனோட பட்ட பேறு நாகை சுருளி. அதுக்கு காரணம் அவன் ஹேர் ஸ்டைல். அன்னிக்கு என்ன நடந்ததுனு சொல்றக்கு முன்னாடி எங்க ரூம் எப்டி இருக்கும்னு சொல்லிடறேன்.

எங்க ஹாஸ்டல் ரூம் எல்லாம் ஆரம்பிக்கரகுள்ள முடிஞ்சிடும். அவ்ளோ பெருசு. ரூம் க்கு 4 பேர் இருக்கனும், அது தான் ரூல்ஸ். ஆனா நாங்க 6 பேர் இருப்போம். ரெண்டு டபுள் காட் பெட் போட்ருபாங்க. அத சேத்தி போட்டுட்டா 6 பேர் ஈசியா படுத்துக்கலாம்.   பரீட்சை நேரத்ல எடம் அதிகமா வேணும்னு ரெண்டு கட்டிலும் பிரிச்சு போட்டுடுவோம். அன்னைக்கும் அப்டி தான் போட்டு இருந்தோம்.

நானும் JP யும் கீழ படுத்திருந்தோம். எங்களுக்கு மேல ஒருத்தன். என் ஊர்காரன். திருவாளர் மோகன்ராம். apology  எழுதின பசங்கள்ள ஒருத்தன். அவன் மெத்தைய சூடா இருக்கனும்னு, பாலிதீன் கவர் கூட பிரிக்காம போட்ருபான். 4 மணி இருக்கும்.

"டேய் JP ஜன்னல மூடு டா, மழை பேயுது போல, சாரல் கால்ல அடிக்குது"
"ஒன்னும் இல்ல, எனக்கு அடிக்கல, உனக்கு மட்டும் எப்டி அடிக்கும்?"

இப்பவே தெரிஞ்சிருக்குமே என்ன விஷயம் னு.

"டேய், டேய் JP எந்திரிடா, மோகன் மேல இருந்து சுச்சு போய்ட்டான்."
அடிச்சு புடிச்சு எந்திரிச்சு பாத்தா, ஆனந்தமா தூங்கிட்டு இருக்கான்.

"டேய், எந்திரிடா" " சுச்சு போய்ட்டு தூக்காத பாரு, மாப்ள, ஒரு எத்து எத்துடா"

எந்திரிச்சு மணி பாத்தான், "6 மணிக்கு தான் எழுப்ப சொன்னேன், இப்போ எதுக்குடா எழுப்பி விட்டீங்க?" அப்டினு கேட்டான் பாருங்க, செம கடுப்பு எனக்கும் JP கும். படிச்சிட்டு இருந்த எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தாங்க.
JP சொன்னான், ஒரு மாஸ்டர் பீஸ் டயலாக், " நான் உன்ன எழுப்ப சொல்லவே இல்லையே, நீ எதுக்குடா பன்னீர் தெளிச்சு எங்கள எழுப்பின?" 

அவனுக்கு புரியவே இல்ல, அப்பறம் ஈரத்த பாத்துட்டு சொன்னான்," ஐயோ! மச்சி கெட்ட கனவுடா, வார்டன் எங்க அப்பா கிட்ட போன் பண்ணி சொல்லிடறாரு, அவரும் என்கிட்ட  apology எழுதி கேக்கற மாறி, செமையா பயந்துட்டேன்டா"

அவன நெனச்சு அழுகறதா, சிரிக்கவா? நீங்களே சொல்லுங்க!!!! அவன் அப்பா அவன் கிட்ட apology கேக்கற அளவுக்கு பயந்திருக்கான்.

நல்ல வேலை வடக்க சூலம்னு  நானும் JPயும் இந்த பக்கம் தல வெச்சு படுத்தோம், அந்த பக்கம் தல வெச்சிருந்தா, என்ன ஆயிருக்கும்? ஜலக்கீரீடை தான்.

அதுக்கப்பறம் எங்க தூங்க, படிக்க!!! நாங்க குளிச்சு, எங்க மெத்தைய தொவச்சு, 8 மணி ஆய்டுச்சு. பரீட்சை எழுதும் போதே தெரியும் கப் னு.

இது எல்லாத்தையும் விட பெரிய அதிர்ச்சி, ரிசல்ட் வந்த போது தான்!!!!

5 comments:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ரிசல்ட் எப்படின்னு கடைசி வரையும் சொல்லலயே.

பாஸ் தானே??

நல்ல இடுகை. வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

:)

தலைக்கு வந்தது காலோட போச்சு

Arun Prasath said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்):
அதுக்கு தான் அடுத்த பதிவு நண்பரே!! அடிக்கடி வந்து படிங்க.... நன்றி

@அருண் பிரசாத் : ஹா ஹா ஹா!!! ஆமா....

நிலாமதி said...

அட டா ....பன்னீர் எல்லாம் தெளிச்சு எழுப்புவீங்க்களா?..இந்த வய்சிலுமா?

Arun Prasath said...

நிலாமதி : ஹம்.. எல்லாம் நேரம்ங்க நிலாமதி.... இதுக்கு வயசு வித்யாசம் எல்லாம் இல்லீங்க....