என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, December 28, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 7

அடுத்த நாள் வெள்ளி கிழமை, காலைல இருந்து வேலையே ஓடல. அவளுக்கு எப்டி என் நம்பர் கிடைச்சிருக்கும்?. அந்த மெசேஜ் வந்த அப்பறம் 10 தடவைக்கு மேல அந்த நம்பர்க்கு கால் பண்ணிருப்பேன். எல்லா தடவையும் ஒரே அக்கா தான் பேசினாங்க. "உங்கள் கால் அட்டென்ட் பண்ணவில்லை, மீண்டும் முயற்சிக்கவும்" 
அதே கம்ப்யூட்டர் வாய்ஸ். கடுப்பாகி அது கூட சண்ட போட்டுட்டு இருந்தேன். 
"அக்கா அக்கா, ப்ளீஸ்கா, வீணாவ, பேச சொல்லுகா"

வித்யா காலிங்னு வந்தது.
"அண்ணா, வேலை கெடைச்சது சொல்லவே இல்ல பாத்தியா"
"இல்லமா கொஞ்சம் பிஸி அதான்"
"சரி சரி, நேத்து அண்ணி உன் நம்பர் வாங்கினாங்க. அத சொல்ல தான் கூப்டேன். நேத்தே சொல்லணும்ன்னு நெனச்சேன். மறந்திட்டேன்"
"என்ன உன் கிட்ட வாங்கினாளா?"
"ஆமா அண்ணா, பார்கிங்ல என் வண்டி பக்கத்துல நின்னுட்டு இருந்தாங்க. அதான் எனக்கும் புரில என் வண்டிய எப்டி கண்டு புடிச்சாங்கனு"
"நீ தான் புது வண்டி வாங்கிட்டேன்னு ஆர்குட், facebook ல, வளைச்சு வளைச்சு போட்டோ போட்டு இருந்தியே, அத பாத்திருப்பா"
"ஹி ஹி, சரி சரி கிண்டல் பண்ணாத, போன் பண்ணாங்களா?"

அவ கிட்ட என்ன சொல்ல? இல்லன்னு சொல்லி வெச்சிட்டேன். எப்படா சாயங்காலம் வரும்ன்னு காத்திருந்தேன். காதலிச்சா வெயிட் பண்ணி வெயிட் பண்ணியே பாதி வயசு போய்டும் போல. 
என்ன பண்ணேனா? அட என்னங்க இது கூட சொல்லணுமா. மெட்ராஸ்க்கு பஸ் ஏறினேன். எப்பவும் பெங்களூர்ல இருந்து ஒரு 9 இல்ல 10 மணிக்கு பஸ் ஏறினா, விடியும் போது சென்னை வந்திடலாம். அன்னிக்கு அத எல்லாம் கவனிக்கவே இல்ல. 7 மணிக்கே ஏறிட்டேன்.

வழி எல்லாம் கால் பண்ணி பாத்தேன். எடுக்கவே இல்ல ராட்சசி. கடைசியா ஒரு மெசேஜ் அனுப்பினேன். 4 மணிக்கு அசோக் பில்லர் வருவேன்னு. அவள பாத்துட்டே கோயம்புத்தூர்ல இருந்து மெட்ராஸ் வந்தேன். ஆனா அவள பாக்க வரதுக்கு வரும் போது மட்டும் ஏன் டைம் ஓடவே மாட்டேங்குது?.

காலைல பஸ்ஸ விட்டு எறங்கி யோசிச்சேன். அசோக் நகர் பஸ் ஸ்டாப் போய் வெயிட் பண்ணலாமா? சுத்தி பாத்தேன் ஒரு ஆட்டோ இல்ல. பில்லர் மட்டும் அதே கம்பீரத்தோட நின்னுட்டு இருந்தது. சிங்கம் என்ன பாத்து சிரிக்கற மாறி இருந்தது. பஸ் ஸ்டான்ட் குள்ள இருந்து ஒரு உருவம் என்ன பாத்து ஓடி வந்தது. 

அது யாருன்னு பாக்கறக்குள்ள என்ன வந்து கட்டி பிடிச்சது. வீணா தான். அந்த விடிய காலைல, ஊரே தூங்கிட்டு இருக்க டைம்ல எனக்காக வந்திருக்கா. அவ நால என்ன நிமிர்ந்து பாக்க முடில. அவ கண்ல இருந்து தண்ணி கொட்டிட்டு இருந்துது. மெல்ல நிமிர்ந்து என் நெத்தில ஒரு முத்தம் வெச்சா. மார்கழி மாசம் பனில, ஐஸ் கட்டி எடுத்து நெத்தில வெச்சா எப்டி இருக்கும். அப்டி இருந்தது அந்த முதல் முத்தம்,  அந்த முத்தத்துல காமம் இல்ல. அவ என்ன பிரிஞ்ச வேதனை தெரிஞ்சது. அவள கூட்டிட்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டு ரூம்க்கு வந்தேன்.

என் கூட நடந்து வரும் போது என் கைய பிடிச்சுபாளான்னு ஏங்கின காலம் எல்லாம் போய், அதே கை என் கைக்குள்ள அடக்கமா இருந்தது. ஒரு வார்த்தை பேசல ஹாஸ்டல் போற வரைக்கும். 10 மணிக்கு பாக்க வரேன்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

என் வாழ்கையா இது? நெனச்சு பாக்காத விஷயம் எல்லாம் நடக்குதே. 

அவ்ளோ நாள், அவ கூட வண்டில போனதில்ல. என பின்னாடியும் அவ உக்காந்தது இல்ல. வண்டிய உருட்டிட்டே தான் பேசிட்டு போவோம். அந்த ரெண்டு நாள், எல்லாமே தல கீழா மாறிடுச்சு. நான் நிறுத்துன்னு சொன்னா கூட நிறுத்தாத உதடுகள் அந்த ரெண்டு நாள் பேசவே இல்ல. எப்பவும் குறு குறு பார்வை பாத்த அதே கண்கள், தரைய தவிர எங்கயும் பாக்கல. சனிக்கிழமை சாயங்காலம் பீச்ல நடந்த நடை, அவ கைய பிடிச்சிட்டு. எங்க கால் மண்ல பொதஞ்சது. அவ தலை என் நெஞ்சுல பொதஞ்சது. 

"வீணா, ஏன் அழுதுட்டே இருக்க?"
"தெரிலடா... மொதல் முறையா அழுதா சந்தோசமா இருக்கு"

மகாபலிபுரம் வரைக்கும் போனோம் வண்டில. பின்ன உக்காந்துட்டு என் மேல சாஞ்சிட்டு, கட்டி புடிச்சிருந்தா. அவ கைய பாத்துட்டே, அந்த ஸ்பரிசத அனுபவிசிட்டே காஷ்மீர் கூட போய்டலாம். பெருசா பேசல, சின்ன சின்ன உரையாடல் தான். நெறைய பேசுவான்னு நெனச்சிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான்.

என்ன வழி அனுப்ப பஸ் ஸ்டான்ட் வந்தா. பஸ் மெதுவா பஸ் ஸ்டான்ட் விட்டு வெளிய வந்துட்டு இருந்தது. திரும்பி அவள பாத்தேன். அது வரைக்கும் ஐ லவ் யூ சொல்லாத அவ வாய், கை அசச்சிட்டே ஐ லவ் யூ ன்னு முணுமுணுத்தது.

அதுக்கப்பறம் ஒவ்வொரு வாரமும் மெட்ராஸ்ல தான். கொஞ்சம் கொஞ்சமா பழைய படி பேச ஆரம்பிச்சா. 
எப்பவுமே காதலிச்சிட்டே இருக்க முடியுமா? அது மட்டுமே வாழ்க்கை இல்லையே!. அடுத்த கட்டத்துக்கு போச்சு எங்க உறவு. ஒரு பெரிய குழப்பத்தோட.

Thursday, December 23, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 6

அவ கூட பழக ஆரம்பிச்ச அப்பறம், இடைல ஒரு ரெண்டு மூணு நாள் வேலை விஷயமா பெங்களூர், கோயம்புத்தூர்ன்னு போக வேண்டி இருந்தது. ஒன்னு ரெண்டு மாசம் கூடவே இருந்துட்டு ரெண்டு மூணு நாள் பிரியனுமே அப்டின்னு அவ கிட்ட போன் நம்பர் கேட்டேன். ஆமாங்க அதுவரைக்கும் நாங்க போன்ல பேசினதே இல்ல. மொதல்ல ஒரு டைம் கேட்டதுக்கு, போன்ல பேசினா நெறைய நேரம் பேசனும். உன் வேலையும் கெடும் என் வேலையும் கெடும் அப்டினு தர மாட்டேன்னு சொல்லிட்டா. இப்போ தான் வெளியூர் போறோமே அப்டினு நம்பர் கேட்டதுக்கு ஒரு லெக்ச்சர் அடிச்சா பாருங்க.

"வீணா"
"என்ன சொல்லு"
"நாளைக்கு கோயம்புத்தூர் போறேன். போய்ட்டு ரெண்டு மூணு நாள்ல வரேன்"
"சரி போய்ட்டு வா"
"உன் போன் நம்பர்..."
"எதுக்கு?அதான் ரெண்டு மூணு நாள்ல வந்திருவல அப்பறம் என்ன? குட் மார்னிங், குட் நைட், மிஸ் யூ ன்னு ஓவர் மெசேஜ் அனுப்புவ. எதுக்கு அதெல்லாம், போய்ட்டு வந்து எப்பவும் போல அந்த பஸ் ஸ்டாப்ல நில்லு. நானே வந்து பேசறேன்"

சே அசிங்கபடரதே எனக்கு பொழப்பா போச்சு. அது வரைக்கும் என்ன பத்தி அவ என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியவே இல்லங்க. நண்பனா? இல்ல அதுவும் இல்லையா? ஒன்னும் தெரில. 
சொல்ல போனா நானும் அதே லெவல்ல தான் இருந்தேன். அவ அழகா இருக்க நால லவ் பண்றனா? தெரில. மொதல்ல லவ் பண்றனா? ஆனா பசங்கள பொறுத்த வரைக்கும் அழகு மட்டும் லவ்க்கு காரணம் இல்லன்னு அடிச்சி சொல்வேன். அழகுனால ஒரு ஈர்ப்பு வந்தது என்னமோ உண்மை. அவ பண்ற சின்ன சின்ன விஷயம், என்ன அவ கிட்ட கொண்டு போனது உண்மை.

"வீணா நீ இன்னைக்கு அழகா இருக்க"
"அப்ப இதுக்கு முன்னாடி அழகா இல்லையா?"
"நான் அப்டி சொல்ல வரல, இன்னைக்கு என்னமோ ஸ்பெஷல்"
"வெவ்வ வெவ்வே"

ஐயோ, இத சொல்லும் போது அவ முகத்த பாக்கணுமே, கொழந்த தனம் பொங்கி வழியும். அப்டியே வாரி அணைச்சுக்கணும் போல இருக்கும். ஆனா முடியாது. எதாச்சும் சின்ன தப்பு பண்ணா, தலைய சாச்சுக்கிட்டு ஒரு பார்வை பாப்பா, என் கண் தன்னால தரைய பாக்கும். நான் பண்றது புடிச்சிருந்தா, என் கிட்ட சொல்ல மாட்டா, ஒரு சின்ன புன்னகை அரும்பும் பாருங்க. அங்கயே நான் போல்ட். 

நாங்க பழக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல, அவ சொன்னா,
"ராகுல், நீ என்ன நெனச்சு என் கூட பழகறன்னு எனக்கு தெரில. ஆனா என்ன இம்ப்ரெஸ் பண்றக்காக நீ ஏதும் பண்ணாத, அதாவது உன்னோட ஒரிஜினல் கேரக்டர் மாறர மாறி எதுவும் பண்ணாத. அப்டி பண்ணா நம்ம நட்பு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்காது"

ஆனா ஒரு பொண்ணுக்காக எந்த அளவு ஒரு பையன் அவன மாத்திக்க முயற்சி பண்றானோ, அந்த அளவுக்கு அவ அவன் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்கான்னு அர்த்தம். யாருக்காக மாத்திக்கிறேன், உனக்காக தான அப்டின்னு ஒரு நெனப்பு வந்துட்டாலே, அவன் அவளுக்காக எதுவும் செய்ய தயார்ன்னு அர்த்தம். அவ அப்டி தான் என்ன மாத்திட்டு இருந்தா, என்ன அறியாமலே. இப்போ சொல்லுங்க, நான் அவள லவ் பண்றேனா இல்லையா?

நினைக்காதது நடந்ததுன்னு சொன்னேன்ல,ஒன்னும் இல்ல. எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சது. வேலை கெடைச்சதுக்கு சந்தோசமா இருக்கவா? இல்ல அவள பிரிய போறேன்னு சோகமா இருக்கவான்னு தெரில. இத அவ கிட்ட சொல்ல, அவ ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருந்தேன். வந்தா.

"வீணா, ஒரு ஹாப்பி நியூஸ்!"
"என்ன? இனி என்ன பாக்க வர மாட்டியா?"
"வெளயாடாத, எனக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சிருச்சு" சொல்லி முடிச்சிட்டு அவ ரியாக்ஸன் பாத்துட்டு இருந்தேன்.
"ஹையோ, சூப்பர் நியூஸ் ராகுல், கலக்கீட்ட" அவ சந்தோசத்த பாத்து எனக்கு சோகமா இருந்தது. நாமளா பிரிய போறோம்ன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லையே. 

"சரி இரு ஒரு ஜெராக்ஸ் எடுக்கணும். நில்லு வந்திடறேன்"
"சரி சரி, சீக்கிரம் வா ட்ரீட் குடு"

சோகமா அந்த கடைக்குள்ள போனேன்.அவ வெளிய நின்னுட்டு இருந்தா. ஜெராக்ஸ் எடுக்க குடுத்துட்டு கடைய வேடிக்கை பாத்துட்டு இருந்தேன். கண்ணாடில அவ தெரிஞ்சா, வெளிய வண்டி கிட்ட நின்னுட்டு. அப்ப பாத்தேன், அவ முகத்ல ஒரு சோகம், ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு பாருங்க அவ கண்ல இருந்து. அவசரமா என்ன பாத்தா. நான் அவள பாக்கலன்னு தெரிஞ்சதும் கண்ண தொடச்சிட்டு, நான் வரத பாத்து சிரிச்சிட்டு இருந்தா.

என்ன சொல்ல, அன்னிக்கு ட்ரீட் போன எடத்ல சர்வ் பண்ண எல்லாரும் அன்னிக்கு தீபாவளி பாத்தாங்க. டிப்ஸ் ஆறா ஓடுச்சு. என் சந்தோசத வார்த்தையால விவரிக்க முடில. முதல் டைம் ஒரு ஜீவன் எனக்காக கண்ணீர் விட்ருக்கு, ஆனா எனக்கு அழுகை வரல சந்தோசம், சந்தோசம்.

அந்த சந்தோசத்தோட கெளம்பி போனேன். ரெண்டு மூணு நாள் புது எடம்ங்கறதால கொஞ்சம் பிஸி. அவ நம்பர் வேற என் கிட்ட இல்லையே. பேசவும் முடில. வியாழன்னு நெனைக்கிறேன். மெட்ராஸ் லேன்ட் லைன் நம்பர்ல இருந்து ஒரு கால். அவ தான்ன்னு நெனச்சிட்டு எடுத்தேன்.என்  நம்பர் அவளுக்கு தெரியாதே?

"ஹலோ"
மௌனம். கட் ஆய்டுச்சு.  

மறுபடியும் கால்.
"ஹலோ, யாரு?"
அந்த பக்கம் சின்ன விசும்பல். கட் ஆய்டுச்சு. 
அந்த விசுமல் போதாதா, அந்த பக்கம் யாருன்னு தெரிய. அப்பறம் ஒரு 2 நிமிஷம் கழிச்சு ஒரு மெசேஜ்.

"I miss you"

அடுத்த நாள் என்ன பண்ணேன்ன்னு சொல்லணுமா என்ன?

Wednesday, December 22, 2010

ஒல்லியா இருக்கறவங்க குண்டாவதற்கு அருமையான ஐடியா - என் அனுபவம்

இத பத்தி சொல்ல நான் போன வாரம் போன பெங்களுரு பயணம் பத்தி சொல்லணும். சனிக்கிழமை காலை ஊர் சுத்த எதுவும் பிளான் இல்லையேன்னு சோகமா டிவி பாத்துட்டு இருந்தேன். அப்போ எங்க UG வாத்தியார் பெனின் கால் பண்ணாரு. எங்க பசங்க கூட அவர் கொஞ்சம் க்லோஸ். நாங்க அவர தலனு தான் கூப்டுவோம். அவர் நார்மலா கூப்டாலே டூர் பிளான் தான். அதனால சந்தோசமா எடுத்தேன்.
"சொல்லுங்க தல, என்ன பிளான்?"
"அடப்பாவி நான் கூப்டாலே பிளான் தானா? சரி உன் நம்பிக்கை எதுக்கு வீண் போகணும். கெளம்பி வா, ப்ரீ தான?"
"ப்ரீ தான் ஆனா எங்க போறோம்?"
"சொன்னா தான் வருவியா? வாடா சொல்றேன்"

பிளான் சொன்னா தானா போவோமா என்ன? கெளம்பி போனேன். அப்பறம் தான் தெரிஞ்சது இனி தான் பிளானே பண்ணனும்ன்னு. அவர் சொன்ன டீடெயில்  இது தான். நாளைக்கு காலைல (ஞாயிறு) பெங்களூர்ல இருக்கனும். இன்னைக்கு ப்ரீ. பெங்களூர் ரூட்ல எங்கயாச்சும் போகணும். கார்ல முடியாது. காசு இல்ல.

என்னென்னமோ யோசிச்சு ஒன்னும் தேரல. கடசில ஹொகேனக்கல்ன்னு நெனச்சோம். ஆனா நைட் எங்க தங்கன்னு தெரில. சரி நாம தான் ஊட்டி போயி நாள் ஆச்சே. ஊட்டி போய், நைட் மைசூர் போய் பெங்களூர் போய்டலாம். இது தான் பிளான்.பஸ்ல.

மதியம் 2 மணி இருக்கும். ஊட்டி பஸ் ஸ்டான்ட் போனோம். அன்னிக்கு பாத்து ஊரே ஊட்டி போகுது போல. 
ஒருத்தன் எழவுக்கு போகணும்ன்னு கெளம்புனா, கருமாதிக்கு தான் போக முடியும். அவ்ளோ கூட்டம். சரின்னு மேட்டுப்பாளையம் போற பஸ்ல ஏறிட்டோம்.

"தல பெங்களூர் போக. மேட்டுப்பாளையம் பஸ் ஏறின ஒரே ஜீவன் நாம தான் தல"
"அட நமக்கு தான் நெறைய டைம் இருக்குடா, ஊட்டி போய்ட்டு ஒரு சுத்து சுத்தீட்டு போலாம்" ஊட்டின்னு சொன்னாலே, எங்களுக்கு புல் அரிக்க ஆரம்பிச்சிடும்.

எப்பவுமே கோயம்புத்தூர்ல ஊட்டி பஸ் கூட்டமாத்தான் இருக்கும். அந்த மாதிரி டைம்ல மேட்டுப்பாளையம் போய்டா, அடிக்கடி 50 , 100 ருபாய்க்கு வாடகை கார் இருக்கும். ஈசியா போய்டலாம். அன்னிக்கும் அதே மாறி ஒரு சுமோ கெடைச்சது. ஏறி உக்காந்ததும், அதுல சின்ன டிவி மாட்டி இருந்தாங்க, அதுல காமெடி ஓடிட்டு இருந்தது. என்ன தெரியுமா? மொத்த டயலாக்,
"யாரு தன்ராஜா, நான் ராமசாமி பேசறேன்"

எனக்கு நம்ம பன்னிகுட்டி தான் ஞாபகம் வந்தாரு. சிரிப்பே அடக்க முடில. அவர் கூட எனக்கு ரொம்ப புடிக்கும் போலன்னு நெனச்சிடாறு. அப்பறம் பதிவுலகம் பத்தியும், வேற சில விஷயம் பத்தியும் பேசிட்டு ஊட்டி வந்தோம். மணி 6 இருக்கும்.
"தல பெங்களூர்க்கு 9 30 க்கு SETC பஸ் இருக்கு புக் பண்ணிடலாமா?"
"ஆமாடா, 9 30 னா செரியா 12 , 1 மணிக்கு முதுமலை போகும். நம்ம மக்களை கண் குளிர பாத்துட்டு போலாம்"
"ஹி ஹி சரி தல" புக் பண்ணிட்டோம். மக்கள்ன்னு நாங்க சொன்னது காட்டு விலங்குகள். எங்களுக்கு அதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம். 

"என்ன தான் இருந்தாலும் ஊட்டி வந்து ஏறங்கினதும் மைன்ட் டப்ன்னு ரிலாக்ஸ் ஆகுது கவனிசீங்களா"
"ஆமாடா.. கண்டிப்பா...அதுக்கு தான வரது?"
"ம்ம் ஆமா தல,  நல்ல குளிர் இல்ல?, 3 மணி நேரம் இருக்கு. அப்டியே ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்"

ஊட்டி கமர்சியல் ரோடு. எல்லா கடைக்கும் போனோம். ஒன்னும்  வாங்கல. சும்மா குளிர அனுபவிக்க தான். சாப்டுட்டு பஸ் ஏற வந்தோம். ஒரு அருமையான பஸ் நின்னுட்டு இருந்தது. இந்தியன்ல வர 3 ஸ்டார் பஸ் தோத்து போய்டும். கண்டக்டர் கதவுக்கு முட்டு குடுத்து நின்னுட்டு இருந்தாரு. அவர் நிக்கற ஸ்டைல்ல பாத்து சந்தேகமா டிக்கெட் குடுத்தோம். டிக்கெட் எல்லாம் பாத்துட்டு உள்ள போக சொல்லிட்டு கொஞ்சம் நகந்து நின்னாரு பாருங்க, கதவு தானா மூடிகிச்சு. இது தான் தானியங்கி கதவு போலன்னு நெனச்சிட்டு உக்காந்தோம்.

"தல, கொண்டு போய் சேப்பாரா? எனக்கு டவுட் தான்"
"அடப்பாவி, வாய கழுவு" கரெக்ட்டா டிரைவர் பஸ்ச ஸ்டார்ட் பண்ணாரு. 
"என்ன தல எலி கத்தற மாறி சத்தம் வருது?"
திடிர்ன்னு எங்க காலுக்கு அடில நிலநடுக்கம் மாறி ஒரு சத்தம். பயந்து கால தூக்கி சீட் ல வெச்சிட்டோம். பாத்தா டிரைவர் கியர் மாத்தி இருக்காரு. இன்னைக்கு தூங்கின மாறி தான்னு நெனச்சிட்டு பேசிட்டே வந்தோம். 

முதுமலை வந்துச்சு. செக் போஸ்ட்ல கார்ட் தூங்கிட்டு இருந்தாரு. அவர அடிக்காத குறையா எழுப்பி, அப்பறம் பஸ் காட்டுகுள்ள போக ஆரம்பிச்சது. ( இப்போ நைட் 9 ல இருந்து காலைல 6 வரைக்கும் காட்டுக்குள்ள தனியார் வண்டி எதையும் விடறதில்ல. பஸ் மட்டும் தான்). 

கண் குளிர சில பல யானைகள், காட்டு எருமை, மிளா, மான், எல்லாம் பாத்துட்டு தூங்கலாம்ன்னு கண்ண மூடினோம். நறுக்ன்னு ஒரு கடி கழுத்துல. சரமாரி தாக்குதல். லைட் போட சொல்லி எந்திரிச்சு பாத்தா. 10 மூட்ட பூச்சி இருக்கும். எல்லாம் கட்டெறும்பு சைஸ். எல்லாம் ஓடிடுச்சு. அப்பறம் எங்க தூங்க?கடி வாங்கறதும், புடிக்கறதும், அடிக்கரதுமா நைட் புல்லா போய்டுச்சு. ஒரு அரை லிட்டர் ரத்தம் போயிருக்கும் போல. இதுக்கு நடூல பஸ் வேற. நம்ம ஊர் விவசாய ட்ராக்டர் கூட அவ்ளோ சத்தம் வராதுங்க. சாமி ஒரு வழியா காலைல 6 மணிக்கு பெங்களூர் வந்தோம். எங்கள கூட்டிட்டு போக வந்த எங்க நண்பர் எங்கள பாத்ததும் கேட்டாரு,

"டேய் அருண், போன டைம் பாத்தத விட நல்லா குண்டாய்ட டா. முகம் எல்லாம் சதை போட்டு இருக்கு"
எங்களுக்கு  தான தெரியும் அது சதை இல்ல. கடின்னு.

பின் குறிப்பு : இப்போ புரிஞ்சதா? சீக்கிரம் குண்டாகனும்னா SETC ல போங்க நண்பர்களே....

Tuesday, December 21, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 5

நான் அவளயே வெச்ச கண் வாங்காம பாத்துட்டு இருந்தேன். அவளும் என்ன பாத்து தான் நடந்து வந்துட்டு இருந்தா. என்ன நடக்க போகுதோ ஆண்டவா. ஒரு நிமிஷம், நான் அந்த நொடி வரைக்கும் நாத்திகன், ஏன் ஆண்டவானு சொன்னேன்? பிரச்சன வந்தா தான் அப்டி சொல்வோமா? சரி சரி இத பத்தி அப்பறம் பேசலாம், இதோ பக்கத்துல வந்துட்டா. உங்க இதயம் துடிச்சு உங்க காதுக்கு கேட்ருக்கா? எனக்கு அப்போ கேட்டுச்சு. அட பயம்ங்க.

"என்ன சார், உங்க பேர் கூட எனக்கு தெரியாது. ரெண்டு மூணு நாளா உங்கள நீங்க கண்ணாடில பாத்தத விட என்ன தான் அதிகமா பாத்திருப்பீங்க போல? நேரடியா கேக்கறேன். எனக்கு சுத்தி வளைக்க தெரியாது. are you in love with me?"

சத்யமா அத நான் எதிர் பாக்கவே இல்ல. சம்பிரதயமா என்ன வேணும் உங்களுக்கு? ஏன் என் பின்னாடி வரீங்க? இந்த மாறி கேள்விய தான் எதிர் பாத்து அதுக்கு பதில் சொல்ல தயார் ஆய்ட்டு இருந்தேன். அவ மேல இருந்த ஈர்ப்பு எல்லாம் ஒரு சின்ன ஆசைய மாறின நேரம் அதுதான். நான் என்ன பதில் சொல்ல போறேன்னு வித்யா என்னையே பாத்துட்டு இருந்தா.

"லவ்வா? அதெல்லாம் பெரிய வார்த்தைங்க. உங்க பேர் கூட எனக்கு தெரியாது. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் நான் உங்க பின்னாடி வரது. லவ்ன்னு நெனச்சு எல்லாம் வரலீங்க. ஏதோ ஒரு ஈர்ப்பு.அவ்ளோதான். உங்க கூட பேசனும், பழகனும்னு தோணுச்சு அவ்ளோ தான்"
"அப்டியா............." சின்ன தடுமாற்றம் அவ கண்ல. "யோசிச்சு சொல்றேன்"
சொல்லிட்டு கெளம்பிட்டா.

எனக்கு ஒன்னும் புரில, அவ்ளோ தானா, அவ எபிசொட் என் வாழ்க்கைல முடிஞ்சதா? வித்யா வா பாத்தா அவ சிரிச்சிட்டு இருக்கா. ஒன்னுமே புரில.

"என்ன வித்யா இப்டி சொல்லிட்டு போய்டா. நான் பேசினது தப்பா? இனி பேச மாட்டாளா?"
"மக்கு, மக்கு. நீ சொன்னதும் அவ முகத்த பாத்தியா? அவ அத எதிர் பாக்கல. நீ லவ் பண்றன்னு சொல்வனு தான் எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா. அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு எஸ் ஆய்டா. அவ சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கு அர்த்தம் ஓகே "
அப்போ தான் எனக்கு புரிஞ்சது. கூடவே வழிஞ்சது.

ஆய்த எழுத்துல ஈஷா தியோல் சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும் வித்யாசம் இருக்கு. ஈஷா சொன்னது ஓகே. த்ரிஷா சொன்னது இது வேலைக்கு ஆகாது வேற ஆள பாரு. அட சாமி பொண்ணுங்க அகராதிய புரிஞ்சுகறது கஷ்டம்.

அன்னிக்கு நான் பறக்காத குறை தான்.இமய மலை சைடு எல்லாம் போனேன். அன்னில இருந்து எப்படா அடுத்த நாள் வரும்ன்னு  காத்திருக்க ஆரம்பிச்சேன். காலைல சீக்கிரம் எந்திரிக்க முடியாத ஆளா நீங்க? லவ் பண்ணுங்க, 5 மணிக்கு எந்திரிச்சிடலாம். கூடவே டெய்லி குளிச்சு, நல்லா புள்ள இமேஜ் வர வெக்க ட்ரை பண்ணுவீங்க. இதெல்லாம் நானும் பண்ணேன்.அனுபவம் தான். அடுத்த நாள் காலைல அதே பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன். வந்தா.
கொஞ்சம் சிரிச்ச முகமாத்தான் இருந்தா. அப்பா தப்பிச்சேன்.

"சொல்லுங்க. என்ன பேசனும்"
"என்ன பேசனுமா? இதுக்கெல்லாம் நோட்ஸ் எடுத்துட்டா வருவாங்க? மொதல்ல சாரி. நான் பின்னாடி வந்தது உங்களுக்கு எரிச்சலா இருந்தா. அப்பறம் ஒரு வேண்டுகோள். நீங்க வாங்கனு கூப்ட எனக்கு கஷ்டமா இருக்கு"
"எனக்கும் தான். நீ வா னே கூப்டுங்க. எரிச்சல் எல்லாம் இல்ல, கொஞ்சம் பயமா இருந்தது. அப்பறம் உங்களால எனக்கு எந்த பிரச்சனயும் வராதுனு தெரிஞ்ச அப்றம் தான் இப்போ உங்க கூட பேசிட்டு இருக்கேன் "
"தேங்க்ஸ் .நானும் மரியாதை எதிர் பாக்கல.நீ வா னே கூப்டு. அப்பறம் என் பேர் ராகுல்"
"என் பேர் வீணா"

அவ்ளோ தான் அப்போ பேசினோம். லேட் ஆச்சுனு போய்டா. ரூம்க்கு போய் சாயங்காலம் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.சாயங்காலம் அவ ஆபீஸ் போனேன். அவ ஆபீஸ்ல இருந்து, அசோக் பில்லர் ஹாட் சிப்ஸ் வரைக்கும் பேசிட்டே நடந்து வந்தோம். தூரம் தெரில. அங்க ஒரு காபி. அப்றம் அங்க இருந்து கெளம்பி போய்டா . காலைல ஒரு அரை மணி நேரம். சாயங்காலம் ஒரு 2 மணி நேரம். அவ்ளோ தான். 

அப்போ தான் சொன்னா, நான் அவ பின்னாடி வந்தது அவளுக்கு நல்லா தெரியும்ன்னும், மெட்ராஸ் பஸ்ல ஏறினத தான் அவ எதிர்பாகலன்னும்  சொன்னா. ஆனா அந்த நொடி அவ மனசுல நான் எங்க இருக்கேன்ன்னு கண்டுபுடிக்க முடில.

காலைல எப்போ வரும்ன்னு சாயங்காலமும், சாயங்காலம் எப்போ வரும்ன்னு  காலைலயும் காத்திருக்க ஆரம்பிச்சேன். காத்திருப்பு அப்டினா என்னன்னு உண்மையா தெரிஞ்சது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாசம் அது தான். சில நேரம் வண்டி இல்லாம நடந்து வருவா. ஒரு கைல குடை. இன்னொரு பக்கம் நான். அவ கைய புடிச்சிட்டு நடக்க முடியாதான்னு அப்போ எல்லாம் ஏங்கிருக்கேன்.

நெறையா பேசினோம். என் கூட இருக்கோமே அப்டிங்கறதுக்காக அவ பேசிட்டே இருந்தா. பேசும் போது எல்லாம் கூடவே இருப்பாளே அப்டிங்கறதுக்காக அவ பேசறத கேக்க ஆரம்பிச்சேன். சுருக்கமா சொல்ல போனா அவ கூடவே இருக்கனும்ன்னு தோன ஆரம்பிச்சது.

நெனச்சது எல்லாம் நடந்திருமா?

Wednesday, December 15, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 4

பஸ் விட்டு இறங்கியதும் சுனில் நின்னுட்டு இருந்தான். அவன் இந்த மாசம் தான் வேலைய விட்டுட்டு சிவில் சர்வீஸ் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருந்தான்.

"ரகு கால் பண்ணிருந்தான். உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம்?"
"ஏன் நாங்க எல்லாம் லவ் பண்ண கூடாதா?"
"என்ன சொன்னாலும் கேக்க மாட்ட, எந்த பொண்ணு? என்ன பண்ணனும்ன்னு சொல்லி தொல"
"அதோ பஸ்ல இருந்து வண்டி எறக்கிட்டு இருக்காங்களே, அங்க நிக்கறா பாரு"
"சரி போய் பேசு. இல்ல எப்டியும் பெட்ரோல் காலி பண்ணி தான் ஏத்திருப்பாங்க, பெட்ரோல் போட தள்ளிட்டு தான் போவா. அப்போ போய் ஹெல்ப் பண்ற மாறி பேசிடு"
"இல்லடா, இப்பவே பேசிட்டோம்னா, அவ பின்னாடி போய் எங்க தங்கி இருக்கான்னு தெரிஞ்சுக்க முடியாது. அங்க போய் பேசிடலாம்"

அவ வண்டிய தள்ளிட்டு போய் பெட்ரோல் போட்டுட்டு கிண்டி ரோடுல கெளம்பினா. இரண்டாவது பின்தொடரல் அரங்கேறிக்கொண்டு இருந்தது.

"கண்டிப்பா அவ பின்னாடி நீ சுத்தறது தெரிஞ்சிருக்கும்டா, நேரா போலீஸ் ஸ்டேஷன் போய்ட போறா"
"டேய் அப்டி பண்ணற மாறி இருந்தா, கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கலாம், அது வேற வழி. கண்டிப்பா கம்ப்ளைன்ட் தான் பண்ணும்னா, ரோட்டுல எத்தன போலீஸ் இருக்காங்க, அவங்க கிட்டயே பண்ணலாம்ல"
"என்னமோ எனக்கு ஒரே படபடப்பா இருக்குடா"
"நீ இந்த மாறி பின்னாடி போறதுக்கு புதுசு தம்பி. நாங்க எல்லாம் பின்னாடி போறதுல P.hD வாங்கிருக்கோம்"

அசோக் நகர் ராகவன் காலனில  ஒரு வீடுக்குள்ள போனா. நாங்க பக்கத்துல இருந்த பஸ் ஸ்டாப்ல பராக்கு பாத்துட்டு இருந்தோம். வெளிய இருந்து பாக்க ஹாஸ்டல் மாறி இல்ல, பேயிங் கெஸ்ட் வீடு மாறி இருந்தது.

"சரி வீடு தான் தெரிஞ்சிபோச்சுல்ல, வா போலாம். படிக்கணும்"
"இன்னைக்கு நீ சிவில் சர்வீஸ் படிக்க போறதில்ல, இந்த சிவிலியன்க்கு ஹெல்ப் பண்ண போற"
"தம்பி அதுக்கு வேற ஆள பாரு"
"இன்னைக்கு உனக்கு என்விரான்மெண்டல் ஸ்டடீஸ் டா.  நீ என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன். வீணா பேசிட்டு இருக்காத. அவ வேலைக்கு போறாளா, படிக்கறாளா,  இதெல்லாம் தெரியாம நாம போகறதில்ல"
"டேய் டேய், ஏன்டா லவ் பண்றேன்னு இருக்கறவன் எல்லாத்தையும் டார்ச்சர் பண்ற.  எவ்ளோ நேரம் ஆகுமோ தெரிலயே"
"என்னடா இதுக்கே இப்டி சொல்ற, 15 நாள் நானும் ரகுவும்  வெயிட் பண்ணோம், இதுக்கு அப்பறம், அவள பாத்து பேசனும். திருப்பி பேசற வரைக்கும் வெயிட் பண்ணனும். அப்பறம் எனக்கு அவள புடிச்சு, அவளுக்கும் என்ன புடிச்சிருந்தா லவ் பண்ண வெயிட் பண்ணனும். வீட்ல சம்மதம் வாங்க வெயிட் பண்ணனும். இன்னும் எத்தனையோ இருக்கு. நீ இதுக்கே இப்டி சொல்ற?"
"அடப்பாவி கல்யாணம் பண்ற அளவுக்கு போய்ட்ட"
"டேய்..."
"என்ன தத்துவம் சொல்ல போறியா?"
"ஆமா, ஏன் வேணாமா?"
"வேணாம்னு சொன்னா கேக்கவா போற? சொல்லு"
"கண்ணதாசன் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா"
"தெரியும்ன்னு சொன்னாலும் விட மாட்ட, தெரியாதுன்னு சொன்னாலும் விட மாட்ட, சொல்லி தான் தொலையேன்"
"ராமனுக்கு சீதை மாறி எனக்கு ஒரு தேவதை கெடச்சா, கம்பன் கூட போட்டி போடுவேன்னு சொன்னாரு"
"அந்த தேவதை தான் இவங்களா? கிழிஞ்சது"

அந்த பஸ் ஸ்டாப்லயே தவமா கெடந்தோம். 100 பஸ் தாண்டி போயிருக்கும். 4 மணி நேரம் கழிச்சு , சுத்தி இருக்கற காச் மூச் சத்தம் எல்லாம் டப்ன்னு அமைதி ஆனா மாறி ஒரு பீல். புயலுக்கு பின்னே அமைதி, ஆனா இவ வரும் போது அந்த ஏரியாவே அமைதி ஆன மாறி இருந்துச்சு. அவ கிட்ட கரெக்ட்டா 16 செட் டிரஸ் தான் இருக்கும் போல. மொதல் டைம் பாத்த அதே செகப்பு சுடிதார். 16 நாள் கழிச்சு போட்ருக்கா. ஒரு வேலை எனக்கு புடிச்சதுன்னு தெரிஞ்சிருக்குமோ?

ஈக்காடுதாங்கல் பக்கத்துல ஒலிம்பியா டெக் பார்க்குள்ள போனா.

"ஏன்டா நின்னுட்ட உள்ள போ"
"என்னாது, நாதாரி அது சாப்ட்வேர் கம்பெனி. பப்ளிக் டாய்லட்ன்னு நெனச்சியா. உன் மூஞ்சிய பாத்தா 4 நாள் குளிக்காத மாறி இருக்கு. வேலைக்கு தான போயிருக்கா? எப்டியும் வருவா. அதும் இல்லாம வித்யா இங்க தான் வேலை செய்யறா அவ கிட்ட பேசலாம் ரூம்கு போய்"
"ஐயோ வித்யாவா, அவ சரியான அன்பு தொல்லை டா. வீட்டுக்கு வா அண்ணா, அண்ணானு டார்ச்சர் பண்ணிடுவாளே"
"உனக்கு வேற வழி இல்ல தம்பி"

கொஞ்சம் மனச திட படுத்தீட்டு அவளுக்கு கால் பண்ணேன். அவ கூட பேசி 3 மாசத்துக்கு மேல இருக்கும். செம திட்டு திட்டுவா.
"ஹலோ வித்யா, எப்டி இருக்க?"
"எனக்கு எதுக்கு கால் பண்ண. என் நம்பர் இப்ப தான் கெடச்சதா"
"அதெல்லாம் இல்ல வித்யா, நீ பிஸியா இருப்ப, நான் மெட்ராஸ் வந்தேன்...."
"என்னது மெட்ராஸ் வந்தியா? இன்னைக்கு நைட் எங்க வீட்ல தான் அண்ணா சாப்பாடு.. கண்டிப்பா..."
"இரு இரு வரேன், எனக்கு ஒரு ஹெல்ப்..."
"வரேன்னு சொல்லு அப்போ தான் பண்ணுவேன்"

அவ கிட்ட சொல்லி புரிய வெக்கரகுள்ள தாவு தீந்திருச்சு. நான்  வண்டி அடையாளம் சொன்ன அப்றம், பார்கிங் பண்ற எடத்ல பாத்துட்டு வித்யா சொன்னா, அவ வேற கம்பெனின்னு. அவ 11 மணிக்கு தான் ஆபீஸ் போனான்னு தெரிஞ்சப்பறம், 8 மணி நேரம் கழிச்சு, அங்க வர சொன்னா வித்யா. அவங்க எல்லாம் 8 மணி நேரம் தான் வேலை செய்வாங்க போலயே. நமக்கு என்ன. நான் 6 மணிக்கே ஆஜர்.
வித்யா 6 30 க்கு வந்தா.

"அண்ணா, இந்த மாதிரி வேலை இருந்தா தான் என்ன கூப்டுவ இல்ல"
"அதெல்லாம் இல்லமா...."
"நீ பேசாத, சரி 7 மணிக்கு மேல தான வர சொன்னேன், இப்போவே வந்திட்ட? அவ்ளோ அவசரமா அண்ணிய பாக்க?, வண்டி இன்னும் அங்க தான் இருக்கு.

கொஞ்ச நேரம் நின்னு பேசிட்டு இருந்தோம். மறுபடியும் ஏரியா நிசப்தம் ஆச்சு. இந்த தடவ அவ என்ன கடந்து போகல. எனக்கு முன்னாடி வண்டிய நிறுத்தீட்டு என்ன பாத்து ஒரு நக்கலா சிரி
ச்சிட்டே வந்தா. 

எனக்கு சப்த நாடியும் அடங்கிருச்சு......

Monday, December 13, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 3

"ரகு, அங்க பாரு, வந்துட்டாடா"
அன்னிக்கு வெளிர் மஞ்ச கலர் சுடிதார். ஒரே நொடி, பட்னு கடந்து போய்ட்டா. ஆனா அந்த நொடி, இன்னிக்கும் ஞாபகம் இருக்கு. எதையோ நெனச்சு மனசுக்குள்ள சிரிச்சிட்டு இருந்திருப்பா போல, புன்னகை ததும்பும் முகம். (ஒரு வேளை என்ன பத்தியா இருக்குமோ?). எங்கள கடந்து போகும் போது பாத்தா மாதிரி இருந்துச்சே! பாத்திருப்பாளோ? .
 "என்னடா இன்னைக்கு வேற வண்டில வந்திருக்கா!"

அப்போ தான் அத கவனிச்சேன். சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா? அத மொதல்ல பாக்கவே இல்ல நான். அன்னிக்கு ஸ்கூட்டில வந்தா.

"ராகுல், டேய் ராகுல்"
சாமி தரிசனம் பண்ணிட்டு இருக்கும் போது யாருடா அது நந்தி மாறி,"என்னடா"
"ராகுல், அந்த வண்டிய வேற யாரோ ஓட்டிட்டு வராங்க பாருடா!"
"அவங்க அப்பா மாறி இருக்கு. என்னடா இப்டி நம்மல அடிக்கற மாறி பாக்கறாரு?"
"டேய் எரும மாடு. உனக்கு புடிச்ச பொண்ணு தான். அதுக்குனு இப்டியா வெச்ச கண்ணு வாங்காம பாப்ப?அதான்"

அவர் முகத்த பாக்கணுமே. எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடித்தது அப்டினு கேள்வி பட்டு இருக்கேன், அன்னிக்கு தான் பாத்தேன். அவ வண்டிய ஓட்டிட்டு வருவா, வெளிய வரும் போது பேசிடலாம் அப்டினு நெனச்சிட்டு இருந்தேனே. இப்டி நம்ம கனவு கோட்டைய கலச்சிட்டாரே.  இன்னும் கொஞ்ச நேரம் அங்க நின்னுட்டு இருந்தோம், அடி வாங்கிடுவோம்னு தெளிவா தெரிஞ்சது. என் வண்டி அன்னிக்கு தான் டாப் ஸ்பீட் போச்சு.

"நண்பா, என்னடா இப்டி சொதப்பிடுச்சு, சரி என்ன ஆபீஸ்ல விட்டுடு. சாயங்காலம் பாத்துக்கலாம், என்ன வந்து 5 மணிக்கு பிக் பண்ணிக்க. சாயங்காலம் கொஞ்சம்  மறஞ்சு நிப்போம். இன்னைக்கு அவ  வீட்டயாச்சும் கண்டுபுடிச்சிடலாம் கவலைபடாத"

காத்திருப்பது அப்டினா என்னனு அன்னிக்கு தான் தெரிஞ்சது. நொடி முள் எது, நிமிட முள் எதுன்னு கொழப்பமா இருந்தது. என்னங்க கொஞ்சம் அதிகமா இருக்கா? அப்டி தான் எனக்கும் தோணுச்சு. ஆனா என்ன பண்ண, கொஞ்சம் கூட நேரம் நகரவே இல்ல. 4 மணிக்கே ரகு ஆபீஸ் போய் நின்னேன். அவன கூட்டிட்டு 5 மணிக்கெல்லாம் அதே எடத்ல ஆஜர். கொஞ்சம் மறஞ்சு நின்னுகிட்டோம். 

"மச்சி ஒரு வேளை அவ வராம அவங்க அப்பா மட்டும் வந்தா என்ன பண்ண?"
"அத நான் யோசிச்சிட்டேன், ரெண்டு ஹெல்மெட் கொண்டு வந்திருக்கேன். ரெண்டு பேரும் போட்டுட்டு அவர் பின்னாடி போய் வீட்ட கண்டுபுடிக்காம வர்றதில்ல"
"அப்போ இன்னிக்கு களி திங்கறது உறுதி" 

" மச்சி அவ தான் ஓட்டிட்டு வரா, பின்னாடி யாருடா?"
"எத்தன கேள்விடா கேப்ப? நானும் உன் கூட தான இருக்கேன். அவ அண்ணன் இல்ல தம்பியா இருக்கும். உனக்கு எதிரிகள் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதுடா" 

வண்டி எடுத்துட்டு வெளிய வர்ற வரைக்கும் வெயிட் பண்ணோம்.அவ கூட வந்த பையன் ஸ்கூட்டிலயும், அவ சர்வீஸ் விட்ட வண்டிலையும் கெளம்பினாங்க. காந்திபுரம் பிரைவேட் பஸ் ஸ்டான்ட் போனாங்க.

"ரகு, என்னடா அவ ஊருக்கு போகறாளா, இல்ல அவன் போறானா. ரெண்டு வண்டில வேற வந்திருக்காங்க. ஒன்னும் புரிலடா"
"இங்கயே நில்லு வந்திடறேன்"

அவங்க நிக்கற பஸ் பக்கதுல போய் யார் கிட்டயோ பேசிட்டு இருந்தான். 

"மச்சி அது மெட்ராஸ் பஸ். அவ கூட வந்தது அவ தம்பி. அவ தான் போறா. அந்த கண்டக்டர் கிட்ட பேசும் போது அவளும் அவ தம்பியும் பேசிட்டு இருந்தத கேட்டேன். அப்பறம் வண்டி பஸ்ல ஏத்தி விட போறாங்கன்னு நெனைக்கறேன். அவ தம்பி பெட்ரோல் மொத்தமா எடுத்திடணும்னு பேசிட்டு இருந்தான்"
"என்னடா சொல்ற? அப்போ அவ போறாளா?"
ஒரே நிமிஷம் தான்.

"ரகு, அந்த பஸ்ல டிக்கெட் இருக்கா கேளேன்"
"தம்பி, நீ என்ன யோசிக்கறனு தெரியுது. இதுவரைக்கும் வந்தது ஓகே. ஆனா நீ  பண்றது டூ மச் டா"
"தெரியுது மச்சி, ஆனா என் உள் மனசு ஏதோ சொல்லுது டா"
"சரி, உனக்கு தெரியாதது இல்ல.என்னமோ பண்ணு. வீட்ல என்ன சொல்ல போற"
"இருக்கவே இருக்கு இன்டெர்வியு. இப்போ தான் கால் பண்ணாங்க. நாளைக்கு இன்டெர்வியு, இப்போவே போகணும்னு சொல்லிடலாம்"
"அடப்பாவி, கிரிமினலா தான் பிளான் பண்ற"
"சரி வா, ATM வரைக்கும் போய்ட்டு, சாப்டுட்டு வரலாம்"
"ATM எதுக்கு டா, உனக்கு தான் அக்கௌன்ட் எங்கயும் இல்லையே"
"உன்கிட்ட இருக்கே, இன்னைக்கு உனக்கு சம்பள நாள் வேற"
"வந்து தொல"

பணம் எடுத்துட்டு வந்த போது, அவ தம்பி வண்டிய பஸ்ல ஏத்திட்டு இருந்தான். இவ கூட நின்னு பாத்துட்டு இருந்தா. கண்டிப்பா போணுமா? நான் யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டா? கண்டிப்பா அதான் சொல்ல போறா. ரெண்டு மனசு. என்ன முடிவு எடுத்தேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல.ரகு டிக்கெட் எடுத்துட்டு வந்து குடுத்தான். 

"மச்சி, எனக்கு ஆம்பள கொழந்த பொறந்தா..."
"இதுக்கு மேல எதாச்சும் சொன்ன, கொன்னுடுவேன் உன்ன, பரதேசி. ஏன்டா 3 மணி நேரம் போற பஸ்லயே போர் அடிக்குது அப்டி இப்டினு சீன் போடுவ, இப்போ அவ்ளோ தூரம் எப்டிடா போவ?"
"மச்சி, கார்த்திக் ஜெஸ்ஸிய தேடி ஆலப்புழா போனாரே. சூர்யா மேக்னாவ தேடி U.S வரைக்கும் போனாரே. போகும் போது அவங்க லவ்வர் பத்தி நெனச்சு பாத்துட்டு தான் போயிருப்பாங்க. அவங்க அவ்ளோ தூரம் நெனச்சு பாத்துட்டே போகும் போது, நான் அவள நேர்ல பாத்துட்டே இந்த 10 மணி நேரம் போக முடியாது?"
"வாய் கிழிய பேசு. இதோட 2500 ரூபா வாங்கிருக்க. கம்னாட்டி வேலை கெடச்சதும் பெரிய பார்ட்டி வெக்கிற. சரி நான் கெளம்பறேன் பாத்து போ"
"இருடா உனக்கு இன்னும் வேலை இருக்கு. சுனில்க்கு கால் பண்ணி கோயம்பேடு வந்து கூட்டிட்டு போக சொல்லிடு. அப்பறம் அவ தம்பி பின்னாடி போய்.."
"சொல்லாத செஞ்சு தொலைகிறேன்"

பஸ்ல அவ சீட்க்கு ரெண்டு சீட் பின்னாடி நான்.பேசலாமானு யோசிச்சேன். சக பயணிகள் என்ன சாகடிசிட்டாங்கனா என்ன பண்ண?காலைல போய் பேசிக்கலாம்னு விட்டுட்டேன். அன்னிக்கு நைட் சிவராத்திரி. 
ஹ்ம்ம, அவள பாத்துட்டே இருந்த அந்த நைட், என்ன என்ன எண்ணம் தோணுச்சுன்னு வார்த்தையால விவரிக்க முடில.காலைல போய் என்ன நடக்கும், என்ன பண்ண போறோம். ஒன்னும் தெரில. என்ன பாத்தா மாறியோ, நான்னு ஒருத்தன் இருக்க மாறியோ அவ காமிச்சிக்கவே இல்ல. அன்னிக்கு பொழுது ஒரே கொழப்பதோட விடிஞ்சது.

மெட்ராஸ் வந்துச்சு. கூடவே என் வாழ்கைல வசந்தமும்.

Tuesday, December 7, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 2

"TN37 BL 1415"
"TN37 , கோயம்புத்தூர் நார்த்தா மச்சி?"
"இல்ல ரகு, சவுத், பீளமேடு தான்"
"ரொம்ப வசதியாப் போச்சு, பக்கம் தான். வண்டிய பாத்தா புது வண்டி மாறி தான் இருக்கு. இப்போ நேரா RTO ஆபீஸ் போறோம்"
"அத தான் ரகு நானும் சொன்னேன்"
"குறுக்க பேசாதடா அவசரத்துல பொறந்தவனே"
"சரி சொல்லு"

செம ஐடியா, அவன் சொன்னது. எல்லா RTO ஆபீஸ்லயும் இப்போ என்ன நம்பர் ஓடிட்டு இருக்குனு எழுதி போட்ருப்பாங்க. அத வெச்சு  நம்ம ஆள் வண்டி எத்தன நாள் முன்னாடி வாங்கினதுனு கண்டுபுடிச்சிடலாம்னு சொன்னான். பீளமேடு ஆபீஸ்ல இருந்து ஒரு நாளைக்கு எப்டியும் 150 வண்டி ரெஜிஸ்டர் ஆகும். கணக்கு பண்ணி பாத்தா புடிச்சிடலாம்னு சொன்னான்.

"அது சரிடா, எத்தன நாள் முன்னாடி வாங்கினதுனு தெரிஞ்சு என்ன பண்ண?"
"கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?, மொதல்ல அங்க போலாம்வா, போய்ட்டு சொல்றேன்"

வழி எல்லாம் யோசிச்சிட்டே வந்தேன், அத வெச்சு என்ன பண்ணனு. ஒன்னும் தோணல. மறுபடியும் கேட்டா திட்டுவான். சரி எப்டியும் இன்னும் 10 நிமிசத்துல தெரிஞ்சிரும். 

"ராகுல், போய் பாத்துட்டு வா, உள்ள போனதும் ஸ்லேட்ல எழுதி போட்ருபாங்க" 
"ஹம்ம்"

"இன்னைக்கு TN37 BL 3140"
"ரைட் தோரயமா பாத்தா 2000 வண்டி, 15 நாள் இருக்கும்ல"
"ஆமா"
"சரி, கவனமா கேளு, சுசுகி ஷோரூம் கோயம்புத்தூர்ல ரெண்டு தான் இருக்கு. இந்த RTO ல   ரெஜிஸ்டர் ஆயிருக்குன்னா, கண்டிப்பா லக்ஷ்மிமில் ஷோரூம்ல தான் எடுத்திருப்பாங்க. இன்னொரு ஷோரூம் ரொம்ப தூரம் சரியா?"
"டேய் எப்டிடா இப்டி எல்லாம்? உன்ன மாறி ஒரு அறிவாளி இல்லாம இந்த உலகம் என்னடா செய்யும்?"
"எல்லாம் தானா வருதுடா. அதும் நண்பன் சுத்தற பொண்ணுனா இன்னும் மூளை சுறுசுறுப்பா வேலை செய்யுது"

இப்போ அவன் சொன்னது தான் கொஞ்சம் கஷ்டம். புது வண்டினா எப்டியும் 1 மாசத்துக்குள்ள சர்வீஸ் விடணும். அதுவும் காலைல 8 30 குள்ள விட்டாதான் பண்ணி தருவாங்க. சாயங்காலம் தருவாங்கனு சொன்னான். 

"அதனால நீ என்ன பண்ற!, காலைல நாளைல இருந்து 8 மணில இருந்து 9 வரைக்கும் அங்க நிக்கற. ஒரு நாள் கண்டிப்பா வரும். அன்னைக்கு சாயங்காலம் போய் பேசிக்கலாம். என்ன சொல்ற"
"எல்லாம் சரிடா, ஒரு வேலை இன்னொரு ஷோரூம் போய்டானா?"
"கண்டிப்பா அந்த  ஷோரூம் தான்டா. எனக்கு என்னமோ உள் மனசு சொல்லுது"
"அப்பறம் நண்பா, காலைல சீக்கிரம் அலாரம் வெச்சு என்ன எழுப்பி விட்டுடு, அண்ணனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆய்டுச்சு"
"நெனச்சேன், என்னடா இன்னும் ஆப்பு வரலயேனு. நீங்க லவ் பண்ணா, நீங்க அலஞ்சு திரியரீங்களோ இல்லையோ, எங்கள நாய் மாறி சுத்த வைங்கடா"
"என்னடா ரொம்ப அனுபவிச்ச மாறி பேசற?"
"அத விடு, உண்மைலயே போய் நிக்க போறியா? மச்சி, லவ்  பண்றியா?"

"லவ்னு சொல்ல முடியாதுடா, இன்னும் பேச கூட இல்ல. ஆனா சைட் அடிக்கும் போது ரெண்டு மூணு பேர கொஞ்சம் உத்து பாப்போமே, அழகு சிலைன்னு கமெண்ட் வருமே. மனசுக்கு புடிச்சா தான அந்த கமெண்ட் வரும்? அந்த மாறினு வெச்சுக்க. ஒரு ஸ்ட்ராங் ஈர்ப்பு அவ மேல"
"நடத்துடா. நாளைக்கு காலைல ரெடியா இரு"

வைகறை யாமம் துயில் எழுடா நாயே, பேயேனு எல்லாம் அம்மா சொல்லிருக்காங்க. அப்போ எல்லாம் துயில் எழாத நான். லக்ஷ்மிமில்  பேக்கரிலயே பழியா கெடந்தேன். நல்ல வேலை நண்பன் கூட இருந்ததால டைம் ஓடிடுச்சு. அவன் தான் வெறி ஆகிட்டு இருந்தான்.
நல்ல வேலை 1 வார காலம் இடைவிடாத காத்திருப்பு பலன் குடுத்தது. 

அவள் வரும் வழி தெரிஞ்சது. கூடவே சனி வந்தது.

Monday, December 6, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 1

"என்ன தனியா விட்டுட்டு போய்டாத"
"சே அதெல்லாம் இல்ல, எங்கயும் போக மாட்டேன். கொஞ்ச நேரம் கவலை படாம இரு"
"எனக்கு என்னமோ நீ கூடவே இருக்கனும் போல இருக்கு. இங்க கூடவே இருக்க சம்மதிப்பாங்களா?"
"இது என்ன வெளிநாடா? பிரசவம் போது கூடவே இருக்க?நமக்கு இது முதல் குழந்தை. நல்ல படி தான் நடக்கும் சரியா?"
"இல்ல எனக்கு பயமா இருக்குடா"
"அட லூசு பையா, பிரசவம் எனக்கு தான? நான் பயப்படனும், நீ சமாதான படுத்தனும். அது தான் எல்லா பக்கமும் நடக்கும். இங்க என்னடானா?"
"சிரிக்காத வீணா, எனக்கு எப்டி இருக்குனு எனக்கு தான் தெரியும்"
"உனக்கு எப்பவும் எப்டி இருக்கும்னு எனக்கு தெரியும், கவலை படாம இரு. நான் பக்கதுல இல்லன்னு தம் அடிக்க போன, கொன்னுடுவேன் உன்ன"

வீணா சொல்றது சரி தான். நான் ஏன் இப்டி பயப்படறேன்?அவளே சாதாரண மாத்தான் இருக்கா. டாக்டர் கூட ஒண்ணும் பிரச்சன இல்லனு சொல்றாரு, அப்டியும் மனசு கேக்கமாட்டேங்குது. நான் ஏன் இப்டி பயப்படறேன். 

எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்னு விவேக் சொல்லுவாரே? அதுக்கு சரியான உதாரணம் நான் தாங்க. என் பேரு ராகுல். கோயம்புத்தூர் தான் சொந்த ஊர். ஜாலி அப்டிங்கற வார்த்தையே எனக்கு தான் கண்டுபுடிச்ச மாறி ஜாலியா இருந்தவன் நான். படிச்சு முடிச்சிட்டு வேலை கெடைக்காம சுத்தீட்டு இருந்த காலம். 2 வருஷம் முன்னாடி, KFC எங்க ஊர்ல ஓபன் பண்ண டைம். என் நண்பன் ரகு அங்க கூட்டிட்டு போனான்.

"டேய் ரகு,  கைய எடுடா, இருக்கறதே ஒரே லெக் பீஸ் தான், அது எனக்கு தான்.  காசு குடுத்து வாங்கினவன் தான் சாப்டனும்"
"தம்பி, காசு குடுத்தது நானு, அத ஞாபகம் வெச்சுக்க"
"நான் சொன்னது, கவுன்ட்டர்ல குடுத்து வாங்கினது"
"இப்போ என் கிட்ட சண்ட போடு. அங்க அந்த பொண்ணு கிட்ட ரெண்டு லெக் பீஸ் போட சொல்ல வேண்டியது தான, பொண்ண பாத்தா பேச தோணாதே?"
"சே பாவம் டா, எவ்ளோ பேருக்கு அந்த பொண்ணும் லெக் பீஸ் குடுக்கும், கோழிக்கு இருக்கறதே ரெண்டு கால் தான். நீதான் பெரிய விஞ்ஞானி ஆச்சே, 4 ,5 கால் இருக்க மாறி ஒரு கோழி கண்டுபுடி"
"பேசிகிட்டே பீஸ்ல கை வெக்காத, எடு"
"என்ன நண்பா, தனி ஒருவனுக்கு பீஸ் இல்லேனா ஜகத்தினை அழித்திடுவோம்னு சொல்லிருக்காங்க"
"டேய் பொது எடத்துக்கு வந்து இப்டியா கத்துவ? அங்க பாரு எல்லாரும் நம்மள பாத்து சிரிச்சிட்டு இருக்காங்க"

அப்போ தான் அவள பாத்தேன், பளீர் செகப்பு சுடிதார். வாய்ல கை வெச்சிக்கிட்டு, என்ன பாத்து அப்டி சிரிச்சிட்டு இருந்தா! நான் பாக்கறது தெரிஞ்சதும் சிரிப்ப அடக்க பாத்து, அது முடியாம, மொகம் எல்லாம் செவந்து போய், அந்த கணம் அவ முகம் காட்டுன உணர்சிகள், என்னால விவரிக்க முடில, ஆனா அப்டியே ஞாபகம் இருக்கு. யாரையும் அவ்ளோ நேரம் பாத்துட்டு இருக்கனும்னு தோணினது இல்ல. அவளையே பாத்துட்டு இருந்தத பாத்துட்டு லைட்டா மொச்சிட்டு குனிஞ்சுகிட்டா. அப்டியும் அவ முகத்தில சிரிப்பு இருந்தது தெரிஞ்சது. 

அவள பாத்துட்டு இருந்த கேப்ல இவன் எல்லா பீஸ்சையும் தின்னுட்டான்.
"அடப்பாவி எல்லாதையும் காலி பண்ணிட்ட "
"ஆமா, நீ அங்கயே பாத்துட்டு இருந்த, நான் என்ன பண்ண? அங்க என்ன படமா தெரியுது"
"இல்லைடா அவ என்ன பாத்து சிரிச்சிட்டு இருந்தா. அழகா இருந்தது, அதான் பாத்துட்டு இருந்தேன்"
"ஊரே சிரிச்சதே, உன் கூட வந்து எனக்கும் மானக்கேடு, சரி எந்த பொண்ணு?"
"அதான்டா அந்த செகப்பு சுடிதார்"
"எங்கடா யாரையும் காணோம்?"  

இவன் கூட பேசிட்டு இருந்த டைம்ல போய்ட்டாங்க போலயே. ஹோட்டல் விட்டு வெளிய போய்ட்டு இருந்தா. பாத்துட்டேன். கதவு மூடும் போது என்ன பாத்து, கீழ குனிஞ்சு சிரிச்சா பாருங்க, அடா அடா, அந்த சிரிப்ப பாக்கறதுக்கே எத்தன தடவ வேணாலும் மானம் கெடலாம். 
"ரகு, அதோ வெளிய போறா பாரு, அவ தான்"
"என்னடா போயிட்டு இருக்கானு சொல்லிட்டு இருக்க? போய் பேசு"
"என்னன்னு பேச? முன்ன பின்ன தெரியாதே?"
"ரெண்டு லெக் பீஸ் இருக்கானு கேளு... யார்ரா இவன்.  தெரியாத பொண்ணு கிட்ட பேச கிளாஸ் எடுக்க சொல்வ போலயே. தெரியாத பொண்ணு தான் டா, கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்ச பொண்ணா ஆகும்,  சீக்கிரம் போடா"

போனேன். என்ன பேசனு தெரியாமலயே போனேன். போய் என்ன பண்ண? ஈவ் டீசிங்னு சொல்லிட்டானா? பாத்ததும் காதல்னு சினிமா தனமா எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா அவ சிரிச்சது, வெளிய போகும் போது குனிஞ்சு சிரிச்சிட்டு, ஒரு பார்வை பாத்தது, அதுவே போதும், ஒரு ஈர்ப்பு அவ மேல. என்ன தான் நடக்குது பாக்கலாமேனு போனேன். ஆனா, வெளிய போனதும் தெரிஞ்சது, ஒரு 20 அடி கேப்ல ஒரு வண்டில போய்ட்டு இருந்தா. அவ கூட வந்தவங்க யாருமே காணோம். கரெக்ட்டா ரகு வெளிய வந்தான்.

"என்ன ஆச்சுடா?"
"அதோ அந்த வண்டி தான். போய்டா வெளிய வரும் போதே"
"அந்த ஊதா பூ கலர் வண்டியா? "Suzuki Access" தான, நம்பர் பாத்தியா"
"பாத்தேன், அத வெச்சு என்ன பண்ண? RTO ஆபீஸ் போய் கேக்கலாம்னு சொல்றியோ?"
"சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய்டடா நீ, அங்க யாரு உன் சொந்தகாரனா உக்காந்துட்டு இருக்கான்? நீ போய் நம்பர் சொன்னதும் அட்ரெஸ் சொல்ல? நீ நம்பர் சொல்லு நான் ஒரு ஐடியா சொல்றேன்"
"TN37 BL 1415"

அவன் சொன்னா ஐடியா என்னன்னா.... அப்பறம் சொல்றேன்......

Thursday, December 2, 2010

பாலி இறுதி பகுதி

அந்த ஊர் பணத்த பத்தி சொல்றன்னு சொல்லி இருந்தேனே. என்னடா வாழ்க்கை இது, நாம எப்போ லட்சங்கள் கோடிகள்ல பேசறதுனு எப்பவாச்சும் சலிச்சிக்கிட்டு இருக்கீங்களா? உங்களுக்கு கரெக்டான எடம் பாலி தாங்க. நம்ம ஊர்ல ஒரு ருபாய் அவங்க ஊர்ல 250 ரூபா, அதாவது இந்தோனேசியன் ருபியாஹ். ரொம்ப சந்தோசமா லட்சங்கள், பல லட்சங்கள் இதுல தான் நாங்க செலவு பண்ணதே. இது புரியரக்கு ஒரு சம்பவம் சொல்றேன். 
தேடி கண்டுபுடிச்சு ஒரு இந்தியன் ஹோட்டல் போனோம். பேறு மும்தாஜ் ( ஹி ஹி )

கோகுல் கேட்டான்"என்னடா ஆர்டர் பண்ணலாம்?"
"மச்சி ஹோட்டல் பாத்தா ஏதோ 5 ஸ்டார் ரேஞ்சுல இருக்குடா, போட்டு தீட்டிட போறாங்க டா" இது நான்.
"மச்சி அதெல்லாம் பாத்துக்கலாம், மெனு கார்டு பாரு, எல்லாம் சீப் தான், ஒரு பீர் 40,000 தான்"
"அப்டியா பரவாலடா, சீப் தான்... எனக்கு மொதல்ல ரெண்டு பீர்"
"பறக்காத ஒன்னு ஒன்னா சொல்லு. சரி வெள்ளகாரங்க எல்லாம் நம்ம ஊர் சாப்பாட்ட சாப்ட முடியாம சாப்டுட்டு இருக்காங்க பாரு, அவங்களுக்கு வெறுப்பேத்தர மாறி எதாச்சும் சாப்டலாமா"
"உன் வயத்துக்கு சாப்டுடா அவனுங்க என்ன சாப்டா உனக்கு என்ன, எனக்கு மசால் தோசை"

"தோசை நல்லா தான்டா இருக்கு. அதுவும் கொரோனா பீர், மசால் தோசை, செம கூட்டு, பில் தர சொல்லு"

"நான் தான் சொன்னேன்ல மச்சி, அவ்ளோ காஸ்ட்லி இல்லனு, பாரு 4  லட்சம் தான் வந்திருக்கு"
"அட, சரி டிப்ஸ் எவ்ளோ குடுக்கலாம், 50,000 ?"
"சே, அவன் பாவம்டா, விழுந்து விழுந்து கவனிச்சான், 1 லட்சம் குடுத்திரு, நாமலும் 1 லட்சம் குடுத்தோம்னு வரலாறு சொல்லட்டும்"
"ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் டா, ஹி ஹி"
"செலவு பண்ணனும்னா இங்க தான் டா வரணும்"

அங்க இருக்கற வரைக்கும் ரொம்ப அனுபவிச்சு செலவு பண்ணோம். போன் ரீசார்ஜ் பண்ண 50,000 , இல்ல லட்சம் தான். தம் வாங்கினா 10,000 . ஒரே காமெடி தான் போங்க. 
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், நம்ம ஊருல அந்த காசு கெடைக்கறது கஷ்டம். USD எடுத்துட்டு போகணும். அதே மாறி வரும் போது அவங்க காசு அங்கயே மாதிக்கங்க. இந்தியா வந்தா வாங்க மாட்டாங்க.  அப்றம் அங்க பணம் மாத்தும் போது எச்சரிக்கையா இருக்கனும். ஏமாத்திடுவாங்க.

எத மிஸ் பண்ணாலும் அந்த பீச் விளையாட்ட மட்டும் விட்டுடாதீங்க. மசாஜ் போறது கொஞ்சம் பாத்து போகணும். காசு புடிங்கிடு வாங்கலாம். நம்ம ஊரு கேரளா மசாஜ் போலாம் அதுக்கு. சிங்கராஜா அப்டினு ஒரு ஊர். அங்க ஒரு கோவில் ரொம்ப நல்லா இருந்தது. எல்லாம் நம்ம கோவில் மாறி இருக்கு. சோழர்கள் அந்த ஊர ஆண்டது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அந்த பிரதிபலிப்பு நல்லாவே தெரியும். 

இன்னொரு முக்கியமான விஷயம், விசா வாங்க காசு குடுக்கணும்(25USD னு நெனைக்கறேன்) அதே மாறி திரும்பி போகும் போதும் காசு கட்டணும். அதே 25USD . மொத்ததுல மிஸ் பண்ண கூடாத எடம் பாலி. ஒரு ஆளுக்கு டிக்கெட் எல்லாம் சேத்து 3 நாள்  தங்க 30,000 ல இருந்து 40,000 ஆகலாம்.(இது நம்ம ஊர் மதிப்பு).

திரும்பி வரும் போது, தாய்லாந்து போய்டும் வரலாம். அங்க போகவும் விசா தேவை இல்ல. அங்க எறங்கி வாங்கிக்கலாம். என்ன கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.
என்ன தான் டூர் போய்ட்டு வந்தாலும், மெட்ராஸ் வந்ததும், 
"அண்ணாதே எங்க போனும்? ஆட்டோ வேணுமா?" இத கேட்டதும் சின்ன சிரிப்பு வந்தது உண்மை.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா? 

Tuesday, November 30, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 11

ரகு ஒரு நாள் ஹாஸ்டல் போன்ல பேசிட்டு இருந்தது கேட்டது. 
"ஆமாடா இங்க மழை எல்லாம் இல்லை, அங்க எப்டி?, ஓ சரி சரி, அப்பறம் அங்க மணி என்னடா?, இங்க மத்யானம் 12 "  
அப்பறம் சத்தமா சிரிச்சிட்டு இருந்தான். நான் கூட நண்பனுக்கு வெளிநாட்டுல எல்லாம் நண்பர்கள் இருக்காங்க போல, பெரிய ஆள் தான்னு நெனச்சிட்டே, "யாருடா நண்பா? எங்க இருந்துடா போன், பாரின்னா?"
"ஹி ஹி, இல்லடா, கோயம்புத்தூர் தான்"

அப்பறம் தான் மேட்டர் தெரிஞ்சது. நாங்க மொதல்ல இருந்த ஹாஸ்டல் போன்ல இன்கமிங் மட்டும் தான் வரும். அவுட்கோய்ங் பண்ண, பட்டன் அழுத்த முடியாது. இப்போ இருக்கற ஹாஸ்டல்ல சாதாரண போன் வெச்சிருந்தாங்க. நம்ம பசங்க விடுவாங்களா? அப்போ நடந்தது தான் மேல சொன்ன உரையாடல். இது கூட பரவால்லங்க, இன்னொருத்தன் வரிசைல உக்காந்திருக்கான். கைல மளிகை கடை லிஸ்ட் மாறி பெரிய லிஸ்ட். எல்லாருக்கும் போன் பண்ணிட்டு தான் வந்தான். அந்த மாசம் போன் பில் மட்டும் 10000 வந்ததா சொன்னாங்க. 

இதுகூட பரவால்ல சின்ன திருட்டு தான். ரொம்ப நாளா ஹாஸ்டல்ல ஒரு  ரூம் மூடியே இருந்தது. எதாச்சும் மூடியே இருந்தா பசங்களுக்கு தான் ஆர்வம் தாங்காதே ( யாராச்சும் டபுள், ட்ரிபில் மீனிங் எல்லாம் எடுத்தா நான் பொறுப்பில்ல பா). பாக்யராஜ் ஒரு படத்ல சைக்கிள் லாக் ஒரே திருகுல தெரப்பாரே, அதே மாறி ஒரே திருகுல அந்த ரூம் பூட்ட தெறந்தான் நம்ம JP. உள்ள அந்த ஹாஸ்டல்ல முன்னாடி தங்கி இருந்த பொண்ணுங்களோட பெட்டி படுக்கை எல்லாம் இருந்தது. அத பாத்துட்டு இது நமக்கு சொந்தம் இல்லனு நம்ம பசங்க எல்லாம் திரும்பி வந்துட்டோம்.

சரி சரி, உங்க எதிர்பார்ப்பை  பொய் ஆக்க விரும்பல.அங்க இருந்த நோட் எல்லாம் பசங்க ராக்கெட் செய்ய கெடச்ச பரிசு மாறி விருப்பப்பட்டு ஏத்துகிட்டாங்க. லைப்பாய், சின்தால்னு லோக்கல் சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்தோம்(யாருப்பா அது குளிக்கற பழக்கம் இருக்கானு கேக்கறது?) அப்போ தான் டவ், இம்பிரியல் லெதர் எல்லாம் போட்டு பழகினோம். ஓல்ட் ஸ்பைஸ் ஷேவிங் லோசன் பாத்த எங்க ஒடம்பு ப்ருட் பாடி ஸ்ப்ரே பாத்துச்சு. என்ன பண்ண நாமளும் பாரின் ரேஞ்சுக்கு எப்போ போறது. நீங்களே சொல்லுங்க. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்த ரூம்ல அகழ்வாராய்ச்சி நடந்துட்டு இருந்தது. இந்த அரிய பணி தொடங்கி 3 வது நாள் மர்ம முடிச்சு அவிழ்ந்தது. ஒரு புல் ஜின் பாட்டில் கண்டுபுடிக்க பட்டது. அதுக்கப்பறம் நம்ம பொண்ணுங்க சரக்கு அதிகமா அடிச்சா, அவங்க வருங்கால சந்ததிகள் பாதிக்க படும்ன்னு நான் முன்னாடி படிச்ச  ஒரு கட்டுரைய மேற்கோள் காட்டி சொன்னேன். அப்பறம் தாய் குலத்துக்கு ஒரு பிரச்சனைனா பசங்க பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? இந்த பொண்ணுங்கள எப்டி காப்பாத்தறது என்று யோசிச்சு , அந்த சரக்க நாங்களே குடிச்சிடலாம் அப்டின்னு ஒரு மனதா முடிவு பண்ணோம். ( ஒரு சுட்ட சரக்க குடிச்சத எப்டி எல்லாம் மேக் அப் பண்ணுது பாரு அப்டின்னு யாரும் கேக்க கூடாது).

எல்லாம் சுபமா முடிஞ்சது. எக்ஸாம் எல்லாம் முடிச்சு பிரியா விடை குடுத்துட்டு எல்லாரும் கெளம்பினோம். கெளம்பும் போது, அந்த ஹாஸ்டல் ரெண்டு ஆய்டுச்சு. ஒரு அரை இன்ச் அளவுக்கு தரை எல்லாம் கிழிச்சு போட்ட பேப்பர். காட்டு கத்து கத்தி எல்லார் தொண்டையும் காலி. மொதல் வருடம் நடந்தது இதோட முடிஞ்சது. ரொம்ப சந்தோஷ படாதீங்க. இன்னும் 3 வருஷம் இருக்கு.......