என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, November 24, 2010

தேடினேன் காதலை 4

"என்ன வித்யா, என்ன ஆச்சுன்னே தெரியல. இந்த செல்வா வேற போன் எடுக்க மாட்டேங்கறான், வேற யாரு அவன் கூட நின்னுட்டு இருந்தாங்க?"
"தெரிலயே, ஒன்னும் ஆகி இருக்காது, நீ கவலை படாத சூர்யா, நான் வேணா செல்வா கிட்ட பேசவா?"
.....
"வித்யா, செல்வா போன் பண்றான்"
.....
"என்ன பண்ணனும்னு சொல்லுங்க அருண்"
"செல்வா, நீங்க அவளுக்கு போன் பண்ணி இந்த வாரம் ஞாயித்துக்கிழமை உங்க ஆபீஸ் டீம்ல எல்லாரும் படத்துக்கு போறோம், அவ கண்டிப்பா வரணும்னு சொல்லிடுங்க. மகாராஜா மல்டிபிளெக்ஸ்னு சொல்லிடுங்க, அப்பறம் வரும் போது அவள பஸ்ல வரசொல்லுங்க, இல்ல நீங்க கூட்டிட்டு வந்திருங்க"
"எல்லாம் ஓகே, வரும் போது நான் ஏன் கூட்டிட்டு வரணும்? அவங்க கிட்டயே வண்டி இருக்கும்னு நெனைக்கறேன்"
"ஹி ஹி, அப்ப தான போகும் போது நான் கூட்டிட்டு போ முடியும்"
"அடா அடா நல்லா தான் பிளான் பண்றீங்க, சரி அங்க போய் என்ன பண்ண?"
"நாளைக்கு சொல்றேன், நீங்க கால் பண்ணி சொல்லிடுங்க"
"இதோ பண்ணிட்டேன்"
....
"என்ன சூர்யா சொன்னான்?"
"இத பத்தி பேசவே முடில வித்யா,  நம்ம டீம் படத்துக்கு போகுதாம் , ஞாயித்துக்கிழமை. அதுக்கு நம்ம ரெண்டு பேரையும் வர சொன்னான், ஹாஸ்டல்ல பிக் பண்ணிக்கிறேன்னு சொன்னான்"
"சரி விடு, இன்னும் ஒரே நாள் தான நடூல இருக்கு, படத்துக்கு போகும் போது கேட்டுக்கலாம்"
....
நான் செல்வா கூட பேசிட்டு இருந்தத விஜய் ஒரு கேள்வி குறி பார்வையால் பாத்துட்டு இருந்தான். 
"என்னடா பண்ண போற?"
"மச்சி அந்த தியேட்டர் போறோம், ஒரு ஷோ டிக்கெட் புல்லா நாமளே புக் பண்றோம். அந்த ஷோக்கு நானும் சூர்யா மட்டும் தான் உள்ள இருப்போம். மத்தவங்க எத்தன பேரோ, அவங்களுக்கு இன்னொரு ஸ்க்ரீன்ல புக் பண்ணிடலாம். 3 மணி நேரம் எந்த இடையூறும் இல்லாம நாங்க பேசிக்கலாம்ல, எப்பூடி?"
"சரி, பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா ஏன் அவ்ளோ தூரம் போகணும்?"
"அந்த தியேட்டர் தான்டா கொஞ்சம் சின்னது, நீ தான் செலவு பண்ணுவேன்னு அடம் புடிக்கறப்ப , அந்த செலவுல கொஞ்சம் கம்மி பண்ணலாம்ல, நண்பனுக்கு இது கூட செய்யலனா எப்டி?"
"டேய் டேய், சொந்த காச போட்டு காதலிங்கடா"
"மச்சி நீயே இப்டி பேசலாமா? உன் லவ்க்கு நான் பண்ணாத உதவியா?, சரி சரி சீக்கிரம் போலாம் வா, டிக்கெட் தீந்திரும்"
"இவன் அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா?இது எங்க போய் முடியும்னு தெரிலயே?"
"கல்யாணத்துல தான்"
.... 
"சூர்யா, வித்யா நீங்க ரெண்டு பேரும் உள்ள போய் உக்காருங்க, நாங்க ஆன்லைன் புக்கிங் பண்ணத மாத்திட்டு வந்திடறோம். ஸ்க்ரீன் 2 "
"தம் அடிக்க போறோம்னு சொல்லிட்டு போங்க செல்வா சார். வா வித்யா போலாம்" 
..
"என்ன சூர்யா இப்போ தான் உள்ள வந்தோம், அதுக்குள்ள செல்வா கூப்டறான்" 
"ஹலோ வித்யா, நான் சொல்றத மட்டும் கேளு பதில் பேசாத. கடைசி ரோல அருண் உக்காந்துட்டு இருக்காரு, இந்த பிளான் எல்லாம் அவங்க தனியா பேச தான். நீ அப்டியே சிக்னல் கெடைக்காத மாறி வெளிய வந்திடு"
"ஓஹோ, ஹலோ, ஹலோ இரு வெளிய வரேன்"
"இரு சூர்யா வரேன்"
....
"ஹலோ சூர்யா வணக்கம்"
என் பேர யாரு சொல்றது? திரும்பி பாத்தேன், மயக்கம் வராத குறை தான். தண்ணி தாகம் எடுத்தா நாக்கு மேல் அண்ணத்துல ஒட்டிக்கும்ல அந்த மாறி ஒட்டிகிச்சு. 
"என்னங்க, நான் எப்டி இங்கனு பாக்கறீங்களா, எல்லாம் நம்ம பிளான் தான், உங்கள தனியா சந்திக்க. ஓவர் அதிர்ச்சி காட்டாதீங்க. இந்தாங்க தண்ணி கொஞ்சம் குடிச்சுகங்க. இந்த படம் முடியற வரைக்கும் ரெண்டு பேருக்கும் நெறைய தேவ படும், எனக்கும் டம் டம் னு தான் அடிக்குது"
பசங்க இவ்ளோ வெளிபடையா கூட பேசுவாங்களா? சரி பாவம் பேசட்டும், எப்டியும் கல்யாணத்துக்கு அப்பறம் நான் தான் பேச போறேன், இப்போ தான் மீட் பண்றோம், இப்பவாச்சும் அவர் பேசட்டும்.
....
அந்த 3 மணி நேரம் எப்டி போச்சுனு தெரில. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரி ப்ரூப் இன்னைக்கு எங்க சந்திப்பு. நான் தான் பேசிட்டே இருந்தேன். அவ கொஞ்சம் தான் பேசினா. லவ் பண்ணா கவிதை எழுதற பசங்கள கண்டபடி திட்டிட்டு இருந்தவன் நான். இனி மேல் என்ன மாறி ஒருத்தன் என்ன திட்ட போறான்.

படம் முடிஞ்சு அதே மஞ்ச கலர் வண்டில, என் பின்னாடி அவ. எங்க பயணம் ஆரம்பிச்சது.
..................................

45 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது தொடர் கதையா? பர்ஸ்ட்ல இருந்து படிச்சிட்டு வரேன்....

Arun Prasath said...

கடைசி பார்ட்ல வந்து கேக்கற கேள்வியா இது ராமசாமி அண்ணே

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!

Arun Prasath said...

ராமசாமி அண்ணனுகே வடை... ஹி ஹி ஹி

ப.செல்வக்குமார் said...

//"டேய் டேய், சொந்த காச போட்டு காதலிங்கடா"///
ஹி ஹி ஹி ..

Arun Prasath said...

சிரிகரத பாத்தா என்னமோ நடந்திருக்கும் போலயே....

ப.செல்வக்குமார் said...

//தண்ணி தாகம் எடுத்தா நாக்கு மேல் அண்ணத்துல ஒட்டிக்கும்ல அந்த மாறி ஒட்டிகிச்சு.
///

இது நல்ல எடுத்துக்காட்டு ..!!

Arun Prasath said...

ஹி ஹி புரியணும்ல தம்பி

ப.செல்வக்குமார் said...

//பசங்க இவ்ளோ வெளிபடையா கூட பேசுவாங்களா? சரி பாவம் பேசட்டும், எப்டியும் கல்யாணத்துக்கு அப்பறம் நான் தான் பேச போறேன், இப்போ தான் மீட் பண்றோம், இப்பவாச்சும் அவர் பேசட்டும்.//

அட அட ., எப்புடியெல்லாம் எழுதுறாங்க ..!!

Arun Prasath said...

//அட அட ., எப்புடியெல்லாம் எழுதுறாங்க ..!!//

நல்லா இருக்குன்னு சொல்றியா இல்ல மொக்கைன்னு சொல்றியா?

இம்சைஅரசன் பாபு.. said...

அப்படா ஒரு வழியா கதை முடிஞ்சுது .............

Arun Prasath said...

//அப்படா ஒரு வழியா கதை முடிஞ்சுது .............//

ரொம்ப ஆசபடதீங்க, இதே மாறி இன்னும் பல தீம் இருக்கு, எல்லாத்தையும் பதிவெழுதி கொலை பண்ணாம விட மாட்டேன்

ஹரிஸ் said...

//லவ் பண்ணா கவிதை எழுதற பசங்கள கண்டபடி திட்டிட்டு இருந்தவன் நான். இனி மேல் என்ன மாறி ஒருத்தன் என்ன திட்ட போறான்.
//

நம்மள மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போல இருக்கே...

Arun Prasath said...

நம்மள மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போல இருக்கே...//

எல்லாருமே அப்டி தான்ன்னு நெனைக்கறேன்

நாகராஜசோழன் MA said...

சூப்பரா இருக்கு. அடுத்த பாகம் எப்போ அருண்?

நாகராஜசோழன் MA said...

//மகாராஜா மல்டிபிளெக்ஸ்னு சொல்லிடுங்க///

உனக்கு வேற இடமே கிடைக்கலியா?

karthikkumar said...

ஹி ஹி, அப்ப தான போகும் போது நான் கூட்டிட்டு போ முடியும்//
நல்லாவே வழியுறீங்க

karthikkumar said...

அந்த தியேட்டர் தான்டா கொஞ்சம் சின்னது, நீ தான் செலவு பண்ணுவேன்னு அடம் புடிக்கறப்ப , அந்த செலவுல கொஞ்சம் கம்மி பண்ணலாம்ல, நண்பனுக்கு இது கூட செய்யலனா எப்டி?///
நல்ல நண்பன் அந்த நண்பன கொஞ்சம் இங்க அனுப்பி வைங்க

karthikkumar said...

சம்பவம் நல்லா போகுது keep it up

Arun Prasath said...

//மகாராஜா மல்டிபிளெக்ஸ்னு சொல்லிடுங்க///

உனக்கு வேற இடமே கிடைக்கலியா?////

அது ஏன்னு காரணம் சொல்லிட்டோம்ல


//சூப்பரா இருக்கு. அடுத்த பாகம் எப்போ அருண்?//

இது தான் கடைசி பார்ட் தல

Arun Prasath said...

//நல்லாவே வழியுறீங்க//

அது நான் இல்லபா, இந்த கற்பனை கதை ஹீரோ

//நல்ல நண்பன் அந்த நண்பன கொஞ்சம் இங்க அனுப்பி வைங்க//

ஹி ஹி முடியாது அவன் எங்களுக்கு சொந்தம்

TERROR-PANDIYAN(VAS) said...

//"டேய் டேய், சொந்த காச போட்டு காதலிங்கடா"//

நல்லா காதலிக்கறிங்கடா...

எஸ்.கே said...

அழகாக கதை முடிந்துள்ளது! நன்றாக இருந்தது!

Arun Prasath said...

//நல்லா காதலிக்கறிங்கடா...//

ஹி ஹி... இது வாழ்த்தா சாபமா தெரிலயே

Arun Prasath said...
This comment has been removed by the author.
TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஹி ஹி... இது வாழ்த்தா சாபமா தெரிலயே//

என்னாது வாழ்த்தா?? ஒரு மூனு பேர கொஞ்ச நாள நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்... நீ, ஹரிஸ் அப்புறம் இந்த இங்கிலிபிஷ்ல பெயர் வச்சிட்டு அலையர பய (Karthikumar). கையில சிக்கர அன்னைக்கு கும்மிடரேன் இரு... :))))

என்ஜாய்ட!!

Arun Prasath said...

///என்னாது வாழ்த்தா?? ஒரு மூனு பேர கொஞ்ச நாள நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்... நீ, ஹரிஸ் அப்புறம் இந்த இங்கிலிபிஷ்ல பெயர் வச்சிட்டு அலையர பய (Karthikumar). கையில சிக்கர அன்னைக்கு கும்மிடரேன் இரு... :))))

என்ஜாய்ட!!///

வோய் டென்ஷன். தம்பி பாவம்ல

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
என்னாது வாழ்த்தா?? ஒரு மூனு பேர கொஞ்ச நாள நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்... நீ, ஹரிஸ் அப்புறம் இந்த இங்கிலிபிஷ்ல பெயர் வச்சிட்டு அலையர பய (Karthikumar). கையில சிக்கர அன்னைக்கு கும்மிடரேன் இரு... :))))//
டெரர் மச்சி உமக்கு குடுப்பனை இல்லையா. அதான் இப்படி வயிதெரிச்சல் புடிச்சி பேசுறீங்க. இதெல்லாம் கூட மன்னிச்சு விட்ரலாம். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில :))) இப்படி வாய் கிழிய சிரிகிரீர்ல.
ஏன் இப்படி

karthikkumar said...

@ teror கையில சிக்கர அன்னைக்கு கும்மிடரேன் இரு... :))))///
பாப்போம் பாப்போம்

Arun Prasath said...

//டெரர் மச்சி உமக்கு குடுப்பனை இல்லையா. அதான் இப்படி வயிதெரிச்சல் புடிச்சி பேசுறீங்க. இதெல்லாம் கூட மன்னிச்சு விட்ரலாம். எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில :))) இப்படி வாய் கிழிய சிரிகிரீர்ல.
ஏன் இப்படி///

இதை நான் கண்டபடி வழி மொழிகிறேன்....... ஆமோதிக்கிறேன்

Arun Prasath said...

//பாப்போம் பாப்போம்//

ஆமா பாப்போம் பாப்போம்... (அப்பாடி செட் சேந்திருச்சு, இனி தனியா போக வேண்டியது இல்ல)

Arun Prasath said...

// அழகாக கதை முடிந்துள்ளது! நன்றாக இருந்தது!//

இத நீங்களாச்சும் கதைன்னு ஒத்துக்கிட்டீங்களே

TERROR-PANDIYAN(VAS) said...

@karthikumar

//டெரர் மச்சி உமக்கு குடுப்பனை இல்லையா. அதான் இப்படி வயிதெரிச்சல் புடிச்சி பேசுறீங்க. //

அட மானம் கெட்ட நாசகார பயலே!!! கடைசில சந்தோஷ்மா இருடா (என்ஜாய்டா) சொல்லி இருக்கது உன் கன்ணுக்கு தெரியலையா?? இங்கிலிபிஷ்ல பேரு வச்சி இருக்க இங்கிலிபிஷ் புரியலையா??

//எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில :))) இப்படி வாய் கிழிய சிரிகிரீர்ல.
ஏன் இப்படி//

கடைசில Smiley போட்ட ஜாலியா கமெண்ட் அடிக்கிறேன்... இல்லைன உன் சங்கை கடிக்கிறேன் அர்த்தம் ... :)

இருடி.. நீ உன் ஆள்கூட இருக்க போட்டோ ப்ளாக்ல போடறேன்... அப்பொதான் அடங்குவ... :))

Arun Prasath said...

//இருடி.. நீ உன் ஆள்கூட இருக்க போட்டோ ப்ளாக்ல போடறேன்... அப்பொதான் அடங்குவ... :))//

இது நான் இல்லையே

TERROR-PANDIYAN(VAS) said...

@Arunprasath

//இதை நான் கண்டபடி வழி மொழிகிறேன்....... ஆமோதிக்கிறேன்//

இந்தாடா!!! என்ன சவுண்டு சாஸ்த்தியா இருக்கு??

//ஆமா பாப்போம் பாப்போம்... (அப்பாடி செட் சேந்திருச்சு, இனி தனியா போக வேண்டியது இல்ல)//

ஆமாம் பெரிய ஷேவிங் செட்டு... போ... போய் சத்தம் இல்லாம லவ் பண்ணுங்க... ராஸ்கல்ஸ்... :))

Arun Prasath said...

//இந்தாடா!!! என்ன சவுண்டு சாஸ்த்தியா இருக்கு??//

கொஞ்சம் கம்மி பண்ணிகிறேன்

//ஆமாம் பெரிய ஷேவிங் செட்டு//

இது ரொம்ப பழைய டயலாக்

Arun Prasath said...

கொஞ்சம் ஆணி வந்திடறேன்

வெறும்பய said...

ஒரு வழியா தேடுனது கிடச்சுது போல.. நடத்து ராசா நடத்து...,

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
இருடி.. நீ உன் ஆள்கூட இருக்க போட்டோ ப்ளாக்ல போடறேன்... அப்பொதான் அடங்குவ... :)///
சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது மச்சி

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikumar

//சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது மச்சி//

பழமொழிய தலைகீழா சொல்லுது பாரு... :)))

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@Karthikumar

//சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது மச்சி//

பழமொழிய தலைகீழா சொல்லுது பாரு... :)))///

நீர் நேரா படிய்யா. :)))))

ராம்குமார் - அமுதன் said...

/*ஹி ஹி, அப்ப தான போகும் போது நான் கூட்டிட்டு போ முடியும்*/

Athu epadi da Sunil Friends ellarum ore maathiri yosikkureenga ???

Kandippa karpanai illa da.... Nee panniruppa... Kandippa panniruppa....

Arun Prasath said...

நீயும் நம்பலையா? சரி அடுத்த கதைலயாசும் நம்பறியா பாக்கலாம்

அப்பாவி தங்கமணி said...

//தேவதைக்கு எல்லாம் யாரப்பா வெள்ளை டிரஸ் குடுத்தது? இனிமேல் செகப்பு தான்//
சிகப்பு ரெம்ப பிடிச்ச கலரோ... அந்த கதைலயும் சிகப்பு சுடிதார் இதுலயுமா...ம்ம்...ம்ம்...ஒகே ஒகே...

//நான் தான் பேசிட்டே இருந்தேன். அவ கொஞ்சம் தான் பேசினா//
கல்யாணம் ஆனப்புறம் தலை கீழ்... இந்த ரங்கமணிக பேசறதுக்கு காசு கேக்காத குறை தான்... கஷ்டம் டா சாமி... அனுபவத்தில் கண்ட உண்மை...

Arun Prasath said...

சிகப்பு ரெம்ப பிடிச்ச கலரோ... அந்த கதைலயும் சிகப்பு சுடிதார் இதுலயுமா...ம்ம்...ம்ம்...ஒகே ஒகே...//


ஆமாங்க.... ரொம்ப புடிக்கும் அதும் நம்ம ஆள் போட்டா தனி கிக் தான
//கல்யாணம் ஆனப்புறம் தலை கீழ்... இந்த ரங்கமணிக பேசறதுக்கு காசு கேக்காத குறை தான்... கஷ்டம் டா சாமி... அனுபவத்தில் கண்ட உண்மை...//

ஹா ஹா.... அனுபவத்திற்கு தலை வணங்குகிறேன்