என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, February 17, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 13

இப்போ கால் பண்றாங்களே, என்ன சொல்லி சமாளிக்க?

"ஹலோ"
"எங்க இருக்க? மாலதிய போய் பாத்துட்டு வந்துட்டியா ?"
"ம் பாத்தேன்மா"
"என்னடா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற?"
"நான் வண்டி ஒட்டிட்டு இருக்கேன்மா ஒரு 2 மணி நேரத்ல கூப்டறேன்"
"சரி"

சுனில் ஒரு மாறி பாத்தான்.
"என்னாது 2 மணி நேரத்துல கால் பண்றியா? தம்பி இப்போ தான் ஆம்பூர், ரெண்டு மணி நேரத்துல மிஞ்சி போனா தொப்பூர் போலாம். கொஞ்சம் கூடுதலா மிதிச்சா ஓமலூர். அதுக்கப்றம் 200 கிலோ மீட்டர் போனும் தெரியும்ல"
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். நீ வண்டி ஓட்டு பாத்துக்கலாம்"
வீணா கேட்டா,"என்ன ராகுல் கேட்டாங்க அம்மா?"
"ஒன்னும் பெருசா இல்ல வீணா சமாளிச்சுட்டேன். உங்க வீட்ல என்னன்னு சொல்லி நம்ம விசயத்த சொல்ல போற?"
"தெரில ராகுல், அதான் யோசிச்சிட்டு இருக்கேன். உங்க வீட்ல ஒத்துபாங்கல்ல?"

இத கேக்கும் பொது அவ கண்ல ஒரு ஏக்கம் தெரிஞ்சது. பாவம் ரொம்ப பயந்து போய்டா போல.

"அதெல்லாம் பேசற மாறி பேசிக்கலாம் வீணா, கவலை படாத"
அவள சமாதானம் பண்ண சொன்னேனே தவிர, என்ன பண்ண போறேன்னு சத்தியமா தெரில. 
பாப்போம். 

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பறம் தூங்கிட்டா. வண்டி பர்கூர் கிட்ட போய்ட்டு இருந்தது. 
"சுனில், கிருஷ்ணகிரில நிறுத்து. டீ சாப்டலாம். நான் ஓட்டறேன்"
"பரவால்லடா நீ பின்னாடியே இரு.ஒரு லவ் ஜோடிய பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு"
"ரொம்ப டயலாக் பேசாத. அவ தூங்கிட்டா"
டீ சாப்டும் போது கேட்டான்.
"என்னடா சொல்ல போற வீட்ல? எதாச்சும் பிளான் வெச்சு இருக்கியா? செம கத்து கத்த போறாங்கடா"
"அதுக்கு தான உன்ன கூட கூட்டிட்டு போறேன். நீ இருக்கும் போது அவ்ளோ திட்டு விழுகாது மாப்ள"
"உங்க லவ்க்கு நீங்க அடி வாங்கறீங்களோ இல்லையோ, எங்கள கோத்து விட்டு வேடிக்க பாருங்கடா"
"அந்த அளவு விட்டுடுவோமா பாத்துக்கலாம் மாப்ள"

சாயங்காலம் கோவை ரீச் ஆனோம். வீணாவ கொண்டு போய் அவ வீட்ல விட்டுட்டு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு எங்க வீட்டுக்கு போனோம்.

முதல் முறையா எங்க வீடுக்குள்ள போக எனக்கு பயமா இருந்துச்சு. இவன் வேற உள்ளயே வர மாட்டேங்கறான். இவன வெச்சு கொஞ்ச திட்டுல இருந்து தப்பிச்சுக்கலாம்ன்னு பாத்தா நடக்காது போலயே. 

அப்பா அம்மா ரெண்டு பேரும் டிவி பாத்துட்டு இருந்தாங்க. 

"அம்மா"
"டேய் என்னடா மத்தியானம் தான் பேசின, அதுக்குள்ள வந்து நிக்கற"
"இல்லம்மா அது வந்து"
"எப்படி வந்தீங்க?"
"கார்ல. சுனில்க்கு தெரிஞ்சவங்க கார்"
"கார் ல இவ்ளோ தூரம். என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க.  போய் முகம் கழுவீட்டு வா.. காபி போடறேன்"
"ஹ்ம்ம்"

சுனில் பயத்துல நடுங்கீட்டு இருந்தான்.
காபி வந்தது. நான் பேச்ச ஆரம்பிக்கறது தான் நல்லதுன்னு தோணுச்சு. 

"அம்மா, இவ்ளோ சீக்கிரம் எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிப்பீங்கன்னு தோனல.."
"அட வயசு..."
"இரு இரு, நான் பேசி முடிச்சிடறேன். இத நேர்ல பேசினா தான் நல்லா இருக்கும்ன்னு தான் கிளம்பி வந்தோம். மாலதிய பாத்தேன். நல்ல பொண்ணு தான். உன் செலக்சன் என்னைக்குமே நல்லா தான் இருக்கும்........  ஆனா எனக்கு வேற ஒரு பொண்ண பிடிச்சிருக்கு"

வேகமா சொல்லி முடிச்சிட்டு, என்ன சொல்ல போறாங்களோன்னு பதட்டமா பாத்தேன். 
வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?
  

Thursday, February 10, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 12

என்ன பண்ணன்னு தெரியாத டைம்ல ஒரு பஸ் ஸ்டாப் வரும், அங்க வர பஸ்ல ஏறி போனா டர்னிங் பாயிண்ட்ன்னு விண்ணைத்தாண்டி வருவாயால ஒரு டயலாக் வருமே, அதே மாறி என்ன பண்ணன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன். சுனில் கால் பண்ணான்.

"மச்சி எங்க இருக்க?"
"பில்லர் கிட்ட, வீணா கூட பேசிட்டு இருக்கேன்"
"சரி இன்னைக்கு என்ன பிளான்? அவ கூட ஊர் சுத்த போறியா?"
"இல்ல மச்சி, ஏன் கேக்கற?"
"இல்லைடா, நம்ம கைல இன்னைக்கு இன்னோவா இருக்கு. பசங்க எல்லாரும் பிஸி, எவனும் வரலன்னு சொல்லிட்டானுங்க. பாண்டிச்சேரி   போலாமா?"

அடடா இவன் அல்லவா நண்பன். சரியா எப்போ நமக்கு ஹெல்ப் வேணும்ன்னு தெரிஞ்சு வண்டியோட வரான் பாரு.
"மச்சி சூப்பர் டா. நீ அசோக் பில்லர் வா, நான் வெயிட் பண்றேன்"

வீணா அப்போ தான் வண்டி எடுத்துட்டு பக்கத்துல வந்தா.
"எங்க மாலதி? என்ன பலமான யோசனை?"
அவ கிட்ட நடந்தத சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சா.
"சரிவா, என் வண்டிய எங்க ஹாஸ்டல்ல நிறுத்திட்டு வரலாம். நானும் கோயம்புத்தூர் வரேன்"

அடடா வண்டில போறப்ப அடிக்கலாம்ன்னு நெனச்ச ஒரு பீருக்கும் ஆப்பு. 
"அட நீ எதுக்கு வீணா, நானே போய்ட்டு வந்திடறேன். போன் பண்ணி சொல்றேன் என்ன நடந்ததுன்னு"
"அதில்ல, உனக்கு வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடாங்க. எனக்கும் சீக்கிரம் நடந்திடும் , அதனால நானும் எங்க வீட்ல சூட்டோட சூடா சொல்லிடறேன்"

அவ சொல்றதும் சரி தான். தள்ளி போட்டுட்டே போக முடியாது. வண்டிய நிறுத்தீட்டு சுனில்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இவன் கிட்ட என்ன சொல்லி கோயம்புத்தூர் கூட்டிட்டு போலாம்ன்னு யோசிட்டு இருந்தப்ப சுனில் வந்தான்.

"என்னடா தனியா வருவன்னு பாத்தா குடும்பத்தோட வந்திருக்க" "மேடம் ஒன்னும் பயப்படாதீங்க உங்க ஆள பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு சேதாரம் இல்லாம கொண்டு வந்து விட்டுடறேன்" 

என்ன நடந்தது, எங்க போகணும்ன்னு சொல்ல சொல்ல அவன் பாவமா பாத்துட்டு இருந்தான்.

"டேய், உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன். வண்டி இருக்குன்னு சொன்னது குத்தமாடா. போக வர 1000 கிலோமீட்டர். என்ன நெனச்சிட்டு இருக்க?"
"மச்சி, என்ன நடந்ததுன்னு சொன்னேன்ல, வேற வழி இல்லடா. மாத்தி மாத்தி ஒட்டிக்கலாம்"
"அதெல்லாம் எனக்கும் தெரியும். மாலை போட்டு மஞ்ச தண்ணி தெளிச்சு ரெடியா இருக்கடா. என்ன பண்ண,  வா போலாம்"
அவன் போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணான்.

வீணா கேட்டா,"எதாச்சும் தப்பா நெனச்சுக்க போறான் ராகுல், வேற ஐடியா இல்லையா?"
"அட அவன் அப்டி தான் பேசுவான், மனசில ஒன்னும் நெனச்சுக்க மாட்டான். கவலை படாத"
நாங்க ரெண்டு பேரும் பின்னாடி சீட் ல. அவன் கெளம்பினான். 
"என்னடா நண்பா, வண்டில AC இல்லையா? சரி சரி பாட்டாச்சும் போடு"
"எல்லாம் கால கொடுமைடா"

சும்மா நானும் சுனிலும் பேசிட்டு வந்துட்டு இருந்தோம். அவ வெளிய வேடிக்கை பாத்துட்டு இருந்தா. ஸ்ரீபெரும்புதூர் தாண்டி வண்டி பெங்களூர் ஹைவேல பறந்துட்டு இருந்தது. பேசிட்டு இருந்த சுவாரஸ்யம்ல அவ என் தோள்ல சாஞ்சுகிட்டது நான் கவனிக்கவே இல்ல. ஒரு 10 நிமிஷம் கழிச்சு ஒரு சொட்டு கண்ணீர் என் கைல விழுந்தது. 

"ஹே என்னாச்சு? ஏன் அழற?" 
கருமம், பசங்களுக்கு இந்த ஆறுதல் சொல்ற கலை தான் வந்தே தொலையாது. எனக்கும் தான். இப்டியா மொக்கை மாறி கேள்வி கேப்பேன். அவ எழுந்து என்ன மொறச்சு பாத்துட்டு மறுபடியும் என் மடில படுத்துட்டா. ஒரு 5 நிமிஷம் வண்டி முழுக்க மௌனம். 

எந்திரிச்சு, அந்த கலங்கின கண்ல என்ன பாத்து," ஐ லவ் யு"ன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துட்டா. ஒரு செகண்ட், அவ கண்ல தெரிஞ்ச அந்த லவ்வ பாத்ததும் எனக்கு கண்ல தண்ணி வந்திடுச்சு. அப்போ மாலதி சொன்ன வார்த்தைகள் என் மனசில ஓடிட்டு இருந்தது. "பைத்தியமா இருக்கா உன் மேல.மிஸ் பண்ணிடாத".

அப்ப முன்னாடி இருந்து ஒரு சவுண்ட். 
"டேய் இங்க என்ன படமாடா ஓடுது, ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு இருக்கான், இங்க வந்து கொஞ்சிகிட்டு இருக்க. ஆம்பூர் வரப்போகுது, நான் பிரியாணி சாப்ட போறேன். அப்பறம் நீ ஓட்டு"
அடப்பாவி நல்லா லவ் சீன், கெடுத்துட்டான். அவ சாப்பாடு வேணாம்ன்னு சொல்லிட்டா. சாப்டுட்டு மறஞ்சு தம் அடிச்சிட்டே பேசிட்டு இருந்தோம்.

"எதுக்குடா அழுதா அவ வண்டிக்குள்ள?"
"தெரில மச்சி, மாலதியா பாக்க போறேன்ன்னு சொல்லிட்டு போனேன்ல?"
"ஆமா, வீட்ல பேசிருக்காங்கன்னு சொன்ன"
"அவ கூட பேசிட்டு இருந்தத இவ பாத்துடா. ஆன இது வரைக்கும் ஒரு வார்த்தை கேக்கல டா, பத்தாதுக்கு மாலதி கூட இவ வேற ஒரு 15 நிமிஷம் தனியா பேசிட்டு இருந்தா, என்ன பேசினாங்கன்னே தெரில"
"அடப்பாவி, கேக்க வேண்டியது தான"
"தெரிலடா, கேட்டா சொல்லல. மாலதி வந்து, அவ உன்ன ரொம்ப லவ் பண்றா, மிஸ் பண்ணிடாதன்னு சொல்லிட்டு போய்டா. அதுக்குதான் அழறா போல"
"சரி அப்ப இன்னும் கொஞ்ச நேரம் நானே ஓட்டறேன். நீ அவ கூட இரு"
"நண்பேண்டா"

வண்டில ஏறினோம்.
அம்மா கால் பண்ணாங்க.

Friday, February 4, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 11

இந்த மாறி எடத்ல யாரா இருந்தாலும் கோச்சுக்குவாங்க இல்லையா. கண்டபடி திட்டிட்டு போய்டுவாங்க. அது தான் நடக்க போகுதுன்னு எதிர் பாத்து வீணாவ பாத்திட்டு இருந்தேன். அவ அமைதியா கைய கட்டி நின்னுட்டு என்ன பாத்தா ஒரு ரெண்டு செகண்ட். அவ பாத்த பார்வை, தப்பு செய்யறதா இருந்தா கூட தடுத்திடும். கோவம், காதல், ஆசை, எல்லாமும் கலந்த ஒரு பார்வை. எப்பவும் போல என் கண் தாழ்த்து தரைய பாக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பறம் எதிர் பாக்காத ஒன்ன செஞ்சா. இவ மட்டும் தான் இப்டியா? இல்ல எல்லா பொண்ணுங்களும் இப்டியா?

பக்கத்துக்கு டேபிள்ல இருந்து ஒரு சேர் எடுத்து நாங்க உக்காந்து இருந்த டேபிள்ல போட்டு உக்காந்துட்டா! 
மாலதிய பாத்தா, கைய பெசஞ்சிட்டு திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கா. இந்த மாறி தர்மசங்கடமான சூழ்நிலைல சத்தியமா எனக்கு என்ன பேசன்னு தெரியாதுங்க. அமைதியா இருந்தேன். வீணாவே பேச ஆரம்பிச்சா. 

"என்ன ராகுல், 10 மணிக்கு என்ன வர சொல்லிட்டு சீக்கிரமே வந்துட போல?"
"இல்ல நா மாலதிய பாக்க வந்தேன். சாரி இன்ட்ரோ குடுக்க மறந்துட்டேன். இது மாலதி, என் அத்தை பொண்ணு" " மாலதி, இது வீணா, என்............ லவ்வர்"

இந்த எடத்ல வீணா வோட எக்ஸ்பிரசன் சொல்லியே ஆகணும். சொல்லி இருக்கேன்ல நிமிசத்துக்கு நூறு பாவனை காட்டுவான்னு.  அத்தை பொண்ணுன்னு சொன்னதும் கண்ல ஒரு கோவமும், பொறாமையும், ஏமாற்றமும் . அப்பறம் இது வீணா என்.. ன்னு சொல்லி இழுத்தப்ப ஒரு எதிர்பார்ப்பு. இந்த எக்ஸ்பிரசன் எல்லாம் பாத்துட்டே வாழ்கைய ஓட்டிடலாம் போலயே. 
சரி சரி, மேட்டர்க்கு வருவோம். அப்பறம் அவள ரசிச்சுக்கலாம். நான் எல்லாத்தையும் சொல்லிடலாம்ன்னு நெனச்சு. அம்மா கால் பண்ணது முதல் இவ லவ் பண்ணத சொன்னது வரைக்கும் எல்லாம் சொல்லிட்டேன். அதுவரைக்கும் மாலதி ஒரு வார்த்தை பேசல. 

"சரி ராகுல் நீ வெளிய இரு நான் மாலதி கிட்ட பேசனும்"
"என்ன பேச போற"
"அத சொல்றதா இருந்தா நீ உள்ளயே உக்காந்து இருக்கலாம்ல, வெளிய இரு"

மறுபடியும் பல்ப். அடுத்த பிறவியில் கண்டிப்பா பொண்ணா பொறந்து நாம பல்ப் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு, எந்திரிச்சு வெளிய போய்ட்டேன். வேற என்ன பண்ண. அங்க உக்காந்து இருந்தா மாறி மாறி பல்ப் வாங்கிட்டு இருப்பேன். அதுக்கு வெளியவே நிக்கலாம்.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு வெளில வந்தாங்க. சிரிச்சிட்டே. நான் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தேன். 
மாலதி என்கிட்ட வந்து, "ராகுல், ஒரு ரெண்டு நிமிஷம் உன் கிட்ட பேசலாமா?"
நான் வீணாவ பாத்தேன்.
"அவள பாக்காத, ஒன்னும் சொல்ல மாட்டா, அவ கிட்ட நான் சொல்லிட்டேன்."
 "போய் பேசிட்டு வா, நான் வண்டிய அந்த பக்கம் பார்க் பண்ணி இருக்கேன். எடுத்துட்டு வரேன்" அப்டின்னு சொல்லிட்டு வீணா பாட்டுக்கு போய்டா.

"சொல்லு மாலதி"
"உன்ன மிஸ் பண்ணிட்டேன்னு நெனச்சு வருதபடவா? இல்ல உனக்கு வீணா கெடச்சத நெனச்சு சந்தோஷ படவான்னு எனக்கு தெரில ராகுல்"
ஒரு கேள்வி குறி ஓட அவள பாத்தேன்.
"பைத்தியமா இருக்கா ராகுல், உன் மேல அவ. என்ன பண்ண அவள? இப்டி கூட லவ் பண்ண முடியுமான்னு யோசிக்க வெச்சுட்டா. நீ மட்டும் அவள மிஸ் பண்ணனா, உன்ன மாறி ஒரு பைத்தியக்காரன் உலகத்துலயே கிடையாது. ஷி டிசர்வ்ஸ்  மோர் லவ் ப்ரம் யூ. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்"

அவ சொல்ல சொல்ல கண்ணு கலங்கிடுச்சு. அப்பறமா தான் முக்கியமான மேட்டர் சொன்னா.

"அப்பறம் இன்னொரு விஷயம், நாளைக்கு எங்க அப்பா, அம்மா உங்க வீட்டுக்கு போறாங்க. அதுக்குள்ள நீ கோயம்புத்தூர் போய் உன் லவ் மேட்டர் சொல்லிடு. நான் இன்னைக்கு எங்க வீட்ல பேசி பாக்கறேன்" 
"என்ன சொல்ற? அடப்பாவமே. சரி நீ உங்க வீட்ல போக வேண்டாம்ன்னு சொன்னா போதாதா? நான் எதுக்கு போகணும்? நீ போக வேண்டாம்ன்னு சொல்லிடாலே, போ மாட்டாங்கல?"
"அட லூசு, உங்க வீட்ல எதிர் பாத்துட்டு இருக்க மாட்டாங்களா? உன் மேட்டர் போன்லயும் சொல்ல முடியாது, நேர்ல தான் பேச முடியும். அதான் நைட் கெளம்ப சொன்னேன்"
"ஹ்ம்ம், சரி மாலதி... அப்பறம், வீணா என்ன சொன்னா?"
"அத சொல்ல முடியாது, கேர்ள் திங், சரி நான் கெளம்பறேன், ஆல் தி பெஸ்ட்"

தலை சுத்தீடுச்சு. என்ன பண்ண? இன்னைக்கு சனிகிழமை வேற, பஸ் எல்லாம் கூட்டமா இருக்கும், ட்ரெயின் வாய்ப்பே இல்ல.... என்ன பண்ணலாம்? 

போன் அடிச்சது.

"சுனில் காலிங்"