என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, November 11, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 9

எங்களுக்கு செகண்ட் செம் எக்ஸாம் எல்லாம் எங்க சினியர்ஸ்க்கு எக்ஸாம் முடிஞ்சு அவங்க ஊருக்கு போன அப்றம் தான் வரும். அந்த டைம்ல பாய்ஸ் ஹாஸ்டல்ல NCC பொண்ணுங்களுக்கு ஆல் இந்திய லெவல்ல நடக்கற கேம்ப்க்கு குடுத்துருவாங்க. எங்க  சினியர் பொண்ணுங்க தங்கி இருந்த ரூம்ல தான் தங்க வெச்சிருப்பாங்க. இதுல காமெடி என்னன்னா, எங்களுக்கும் ஒரு மேடம் தான் வார்டன். பாவம் அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அந்த ரூம், காலேஜ்ல இருந்து வர வழில தான் இருக்கும். ரூம்கும் ரோடுகும் நடூல குட்டி சுவர்.கழுத கெட்டா அங்க தான இருப்போம்?

எங்க பசங்க எல்லாரும், எக்ஸாம் முடிச்சிட்டு சீக்கரம் வந்திடுவாங்க ( எழுதினா தான லேட் ஆகும்?). பொண்ணுகள கிண்டல் பண்றதுனா என்னனு எனக்கு அப்ப தான் தெரிஞ்சது. (அட நம்புங்க, ஸ்கூல்ல எல்லாம் நான் அப்பிராணி). சாயங்காலம் வரைக்கும் அங்க தான் உக்காந்து இருப்போம். அப்றம் படிப்போம்னு சொல்லமாட்டேன். ஒரே கிண்டல் கேலி தான்.

அந்த ஹாஸ்டல்ல செக்யூரிட்டி அவ்ளோ செக் பண்ண மாட்டாங்க, அதனால ஹாஸ்டல் குள்ளயே பசங்க தம் அடிப்பாங்க. சாப்டுட்டு வரும் போது JP ஒரு தம்ம வெச்சு என்னமோ பண்ணிட்டு இருந்தான்.

"டேய் என்னடா பண்ற? புகையிலை எல்லாம் கொட்டிட்டு இருக்க?"
"பேசாம பாருடா" 
நவீன்ன பாத்து, "என்னடா நீ ரெடி பண்ணிடியா?" கேட்டான். (இந்த நவீன் கூட தான் அந்த மங்களூர் டூர்).
"ஆச்சு மச்சி, இந்தா" என்னமோ கருப்பா ஒரு பொடிய குடுத்தான்.
"என்னடா இது? கஞ்சாவா?"
"எங்கள பாத்தா கஞ்சா அடிக்கற மாறியா இருக்கு? (இல்ல இல்ல விஜய் மல்லையா பார்ட்னர் மாறி இருக்கு), இது தீக்குச்சி மருந்துடா, இத சிகரட்க்கு நடூல வெச்சு, நாங்க அடிக்க ஆரம்பிப்போம், ராபின் வந்து கேப்பான், பாதில அவனுக்கு குடுத்துடுவோம், அவன் வாய் பொகஞ்சிரும். எப்டி நம்ம மாஸ்டர் பிளான்?"  
"உனக்கு ரெண்டு இன்ஜினியரிங் டிகிரி குடுக்கணும்டா, எதாச்சும் ஏடாகூடமா நடந்திர போகுது பாத்து"

ராபின் அப்போ வந்தான். "டேய் தம் இருக்கா" (அடடா பொறி இருக்கானு எலி கேக்குதே).
"உனக்கு இல்லாததா, இந்தா கட் ஆப் போட்டுக்கலாம்" (அடா அடா, பங்கு போட்டு வாழனும்னு, தமிழ்நாடு உங்க கிட்ட தான்டா கத்துக்கணும்)
வாய்ல வெச்சு ரெண்டு இழுப்பு தான் இழுத்தான். மருந்து எரிஞ்சு, அவன் புருவம், தலை முடி கொஞ்சம் எரிஞ்சு, கருப்பு கலர்ல நாமம் போட்ட மாறி ஆய்ட்டான். பாம் வெடிச்ச வடிவேலு மூஞ்சி இருக்குமே, அதே மாறி இருந்தான். அவன பாத்து அழுகறதா சிரிக்கறதா தெரில எனக்கு. JP யும், நவீனும் பொரண்டு பொரண்டு சிரிச்சிட்டு இருந்தாங்க.
ரெடியா தண்ணி, பர்னால் எல்லாம் எடுத்து வெச்சிருந்தாங்க. ஆனா என்ன பண்ண, போன முடி போனது தான?

அவன் முடி எறிஞ்சத கொண்டாடனும்னு ஒரு மனதா முடிவு பண்ணி, அதுக்கான வேலை எல்லாம் செஞ்சுட்டு இருந்தோம். ராபின் கோயம்புத்தூர் தான். கொழு கொழுனு இருப்பான். அவன் ஒரு டவுசர் போட்ருபான் பாருங்க, கிளி பச்சை கலர்ல, அத பாத்து ரெண்டு நாய்க்கு வெறி புடிச்சிருச்சு.மூணு பேருக்கு கண்ணு நொள்ளை ஆய்டுச்சு. அதனால அந்த டவுசர எரிக்கணும்னு முடிவு பண்ணோம். அந்த  டவுசர் தான் மெயின் தீம், அன்னைக்கு கொண்டாட்டத்துக்கு.
ஒரு கம்பு ரெடி பண்ணி, அந்த டவுசர கொடி மாறி கட்டி வெச்சு, அத நட்டு வெச்சிட்டோம்.

"லீடர், நீங்க வந்து தான் நம்ம கட்சி கொடி ஏத்தணும், நம்ம கொடி பட்டொளி வீசி பறக்கணும்"
"ஹா ஹா ஹா, மச்சி செம காமெடிடா, கேமரா எடுத்துட்டு வரேன், போட்டோ எடுத்து வைக்கணும் இத எல்லாம்."

ஹாஸ்டல் பசங்க எல்லாம் சுத்தி உக்கார வெச்சு, பரேட் எல்லாம் நடத்தி, மிட்டாய் குடுத்து செம ஜாலியா இருந்ததுங்க. அன்னைக்கு மாறி நாங்க யாருமே சிரிச்சதே இல்ல. இத படிக்க மொக்கையா இருக்கா தெரில, ஆனா எழுதும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடில. இத படிக்கற எங்க பசங்களுக்கும் அப்டி தான் இருக்கும்னு நெனைக்கறேன்.

மொதல் வருஷ அனுபவங்கள் அடுத்த பகுதில முற்றும்னு நெனைக்கறேன், பாக்கலாம்.

15 comments:

Mithra said...

Hahaha.. i enjoyed alot arun... i cud understand how u guys enjoyed... i like this post...sooper ......

Arun Prasath said...

@ Mithra : நன்றி நன்றி நன்றி.......

பாரத்... பாரதி... said...

எழுத்துக்கள் வசப்படுகிறது.
தொடர்ந்து கலக்குங்க..

ப.செல்வக்குமார் said...

//எங்க பசங்க எல்லாரும், எக்ஸாம் முடிச்சிட்டு சீக்கரம் வந்திடுவாங்க ( எழுதினா தான லேட் ஆகும்?)//

இப்படியா உண்மையா பேசுறது ..?!

ப.செல்வக்குமார் said...

//(அட நம்புங்க, ஸ்கூல்ல எல்லாம் நான் அப்பிராணி).//

அப்பிராணினா என்னங்க , சாம்பிராணியா...?

ப.செல்வக்குமார் said...

//பாதில அவனுக்கு குடுத்துடுவோம், அவன் வாய் பொகஞ்சிரும். எப்டி நம்ம மாஸ்டர் பிளான்?" //

உண்மையான பொறியியல் வல்லுனர்ங்க ..!!

ப.செல்வக்குமார் said...

//இத படிக்க மொக்கையா இருக்கா தெரில, ஆனா எழுதும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடில. இத படிக்கற எங்க பசங்களுக்கும் அப்டி தான் இருக்கும்னு நெனைக்கறேன்.//

நானும் கற்பனை பண்ணி பார்த்தேன் சிரிப்பத்தாங்க இருக்கு ..!! அதிலும் வடிவேலு மாதிரி அவரு முகம் ஆனது செம ..!!

கே.ஆர்.பி.செந்தில் said...

தொடருங்கள் அருண் ...

Arun Prasath said...

//எழுத்துக்கள் வசப்படுகிறது.
தொடர்ந்து கலக்குங்க..//

@ பாரத்... பாரதி... : அட நமக்கு இப்டி ஒரு விசிறியா... வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி......அடிகடி வாங்க

Arun Prasath said...

Blogger@ ப.செல்வக்குமார் :

//எங்க பசங்க எல்லாரும், எக்ஸாம் முடிச்சிட்டு சீக்கரம் வந்திடுவாங்க ( எழுதினா தான லேட் ஆகும்?)//

இப்படியா உண்மையா பேசுறது ..?!//

உண்மைய தவிர எனக்கு ஏதும் பேச தெரியாதே


/(அட நம்புங்க, ஸ்கூல்ல எல்லாம் நான் அப்பிராணி).//

அப்பிராணினா என்னங்க , சாம்பிராணியா...?//

அட அது ஒரு பிராணிங்க...


//பாதில அவனுக்கு குடுத்துடுவோம், அவன் வாய் பொகஞ்சிரும். எப்டி நம்ம மாஸ்டர் பிளான்?" //

உண்மையான பொறியியல் வல்லுனர்ங்க ..!!


இது 2 டிகிரி பெறுமே


//இத படிக்க மொக்கையா இருக்கா தெரில, ஆனா எழுதும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடில. இத படிக்கற எங்க பசங்களுக்கும் அப்டி தான் இருக்கும்னு நெனைக்கறேன்.//

நானும் கற்பனை பண்ணி பார்த்தேன் சிரிப்பத்தாங்க இருக்கு ..!! அதிலும் வடிவேலு மாதிரி அவரு முகம் ஆனது செம ..!!//


மிக்க நன்றி தல....

Arun Prasath said...

@ கே.ஆர்.பி.செந்தில் :

தொடருங்கள் அருண் ...//


கண்டிப்பா தல....

அருண் பிரசாத் said...

வால் பையனா இருப்ப போல...

நல்லா இருந்துச்சுப்பா... கற்பனை பண்ணிபார்த்தா காமெடியா தான் இருக்குது

Arun Prasath said...

என்ன பண்ண கூடவே பொறந்தது தல....
நன்றி தல....

rockarthik said...

adangokkamakka...yaarun ivanuga kitta cutoff vaangakoodathu paa..

Arun Prasath said...

rockarthik : கவலை படாத மச்சி, உனக்கு அப்டி பண்ணுவேனா