என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Friday, November 19, 2010

தேடினேன் காதலை 1

நண்பர்களே இது அனுபவம் இல்ல கற்பனை. அனுபவம்னு நெனச்சு பின்னூட்டம் போட்டா நான் பொறுப்பில்லிங்கோ.... ஓவர் டு கதை....
---------------------------------------------------------------------------------------------------------------------------------

"டேய், உனக்கு ஒரு பொண்ணு பாத்திருக்கோம்டா, அடுத்த மாசம் பாக்க போறோம்"
"எனக்கு எதுக்குமா இப்போ கல்யாணம்? கொஞ்ச நாள்..."
"மொச புடிக்கற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாது? மூஞ்சி அசடு வழியுது தொடச்சுக்கோ"

உண்மை தாங்க, வாய் மட்டும் தான் வேணாம்னு சொல்லுச்சு. வீட்ல கல்யாண பேச்சு எடுத்தா பொண்ணுங்கள விட பசங்க தான் அதிகமா வெக்க படுவாங்க. இது பஞ்ச் இல்ல, சொந்த அனுபவம்.  அவ போட்டோ கூட இல்ல, குடுக்கலையாம். எனக்கும் ஆசை இருக்காதா? என்ன கட்டிக்க போற பொண்ணு எப்டி இருக்கானு பாக்க?

"சரிமா, போட்டோ தான் இல்ல, எங்க வேலை செய்யறா? பேர் கூட சொல்ல மாட்டியா?"
.....

"சூர்யா" சொல்லும் போது என் உதட்ல சின்ன புன்னகை.
"சூர்யாவா, ஆம்பள பேர் மாறி இருக்கு, சரி பேரா முக்கியம்? அவ ஆம்பள மாறி இல்லாம இருந்த சரி தான். எங்க வேலை செய்யுதுனு அம்மா கிட்ட கேட்டியா?"
"உனக்கு வாய் கொழுப்பு அதிகம்டா, சொல்லவே மாட்டேன்னு சொல்லிடாங்கடா, அப்பறம் தங்கச்சி தான் சொன்னா. V .T .S , சரவணம்பட்டி பிரான்ச்ல வேலை செய்யறா போல"
"அவ்ளோ தூரம் போனுமா? எங்க தங்கி இருக்கா? போட்டோ?"
"அதெல்லாம் எதுமே இல்ல"
"சரி கவலை விடு, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, அண்ணிய கண்டுபுடிச்சிடலாம்"
.....

ரகு சொன்னான் அந்த மாறி பெரிய பெரிய கம்பெனி எல்லாம் அங்க வேலை செய்யற எல்லாத்தோட விவரம் சேத்து டேட்டா பேஸ்ல  வெச்சிருப்பாங்க, போட்டோவும் இருக்கும். அங்க வேலை செய்யற ஒருத்தன கரெக்ட் பண்ணி அத வாங்கலாம்னு ஐடியா குடுத்தான். 

நாளைக்கே அவ போட்டோ கெடைச்சு அடுத்த நாள் கல்யாணம் ஆகர மாறி கனவு எல்லாம் வந்துச்சு. இத்தனை நாளா சேத்து வெச்சிருந்த காதல ஒரு எடத்ல கொட்ட ஒரு வாயப்பு கெடசிட்டா மாறி ஒரு கோட்டை கட்ட ஆரம்பிச்சிருந்தேன். வீட்டுக்கு போற அதே பழைய வழி, பாரின் மாறி தெரிஞ்சது.  

முகம்  தெரியாத சூர்யா கூட, முழு வாழ்வும் வாழ தயாராகி விட்டேன்னு அப்போ தான் எனக்கு தெரிஞ்சது.
.....

"டேய் என்னடா ரகு இப்டி கவுத்துட்ட"
"நான் என்ன பண்ண, உனக்காக செலவழிச்சு ஒருத்தன கரெக்ட் பண்ணேன். அந்த பொண்ணு மெட்ராஸ்ல இருந்து மாற்றல் ஆகி வந்திருக்கு, அதனால எந்த விவரமும் இல்ல. மெயில் அட்ரஸ் இருக்கே, மெயில் பண்ணு"
"இல்லடா, அது நல்லா இருக்காது. ஆர்குட், பேஸ் புக், எதிலும் அவ இல்ல. ஒரே ஐடியா தான்.ஆனா அது நீ இல்லாம முடியாதுடா"
.....

"நான் கூட, ஏதோ முக்கியமான வேலைனு நெனச்சு தான், பெர்மிசன் போட்டுட்டு வந்தேன், இங்க வந்து இப்டி மண்ட காய விடறயே நண்பா"
"டேய் தேடறதே பொழப்பா வெச்சு தேடணும், அப்ப தான் கெடைக்கும்"
"உன் காதலுக்கு நீ மட்டும் தேடணும், என் உயிரை ஏன்டா வாங்கற? இப்போ என்ன பண்ண சொல்ற?"
"அந்த ஆபீஸ் முடிஞ்சு எல்லாரும் வருவாங்க, அப்போ சூர்யா அப்டிங்கற பேருக்கு ஏத்த பொண்ணு இருக்கானு பாரு, இருந்தா போய் பேரு கேட்டு பாப்போம்"
"____________________"
"ப்ரீயா விடு, வாடா ஆபீஸ் விட்டுடாங்க" (இன்னைக்கு என்னவளை கண்டுபுடிச்சே ஆகணும்)....
"என்னடா பண்ண சொல்ற?, அந்த கேம்பஸ்ல நெறைய கம்பெனி இருக்கு, எதுல இருந்து வெளிய வராங்கனு  எப்டிடா தெரியும்?"
"ஆமாடா நீ சொல்றது சரி தான், வண்டிய புடிச்சுக்க, நான் மேல ஏறி பாக்கறேன், செவதுக்கு அந்த பக்கம் தெரியுதா பாக்கறேன்"
"டேய் டேய் கீழ எறங்குடா கொரங்கு, பாரு பொண்ணுங்க எல்லாம் சிரிக்குது, மச்சி வாட்ச் மேன் வர மாறி இருக்குடா, வா எஸ் ஆய்டலாம்"
.....

ஒன்னும் தேறல. ஈவ் டீசிங் பண்ற மாறி கேவலமா பாத்ததும், நாங்க பண்ண கொரங்கு சேட்டைய பாத்து பொண்ணுங்க சிரிச்சது தான் மிச்சம். பத்தாததுக்கு இவன வேற வெறி ஏத்திட்டேன். இனிமேல் கூட வர வேற எவனாச்ச ஏமாத்தனும். என்ன ஆனாலும் அவள கண்டுபுடிக்காம ஓய மாட்டேன்.

51 comments:

நாகராஜசோழன் MA said...

சொந்த அனுபவமோ இல்ல வாடகை அனுபவமோ நல்லாத்தான் இருக்கு.

நாகராஜசோழன் MA said...

சரி சரி எப்போ கல்யாணம்?

Arun Prasath said...

//சொந்த அனுபவமோ இல்ல வாடகை அனுபவமோ நல்லாத்தான் இருக்கு.//

வாடகை எல்லாம் இல்ல தல.... என் சொந்த மூளைல ராத்திரி பகலா யோசிச்சு எழுதினேன் தெரியுமா...... நெஜம்மா :)


//சரி சரி எப்போ கல்யாணம்?//

நான் நல்லா இருக்கறது புடிக்கல

நாகராஜசோழன் MA said...

அது CTS தானே?

Arun Prasath said...

//அது CTS தானே?//

இத நான் கேட்டேனா? அதன் கற்பனைனு சொல்லிட்டனே

krish said...

Maddy story superrrrr...

Arun Prasath said...

//Maddy story superrrrr...//

நெஜமாவா? நன்றி தல

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//அது CTS தானே?//

இத நான் கேட்டேனா? அதன் கற்பனைனு சொல்லிட்டனே//


சரி விடுங்க! எப்பவாவது சரவணம்பட்டியில் ஈவ் டீசிங்கில் இளைஞர் கைதுன்னு வந்தா அது நீங்க இல்லைனு நெனைசிக்கிறேன்?!

ப.செல்வக்குமார் said...

உங்க கதை நல்லாத்தான் இருக்கு .. அதிலும் இந்த வரிகள்

///இத்தனை நாளா சேத்து வெச்சிருந்த காதல ஒரு எடத்ல கொட்ட ஒரு வாயப்பு கெடசிட்டா மாறி ஒரு கோட்டை கட்ட ஆரம்பிச்சிருந்தேன்.//

உண்மைலேயே நல்லா இருக்கு ..

Arun Prasath said...

//சரி விடுங்க! எப்பவாவது சரவணம்பட்டியில் ஈவ் டீசிங்கில் இளைஞர் கைதுன்னு வந்தா அது நீங்க இல்லைனு நெனைசிக்கிறேன்?!//

அட கஷ்ட காலமே.... அடுத்த கதை களம் காஷ்மீர் தான்

Arun Prasath said...

//உங்க கதை நல்லாத்தான் இருக்கு .. அதிலும் இந்த வரிகள்

///இத்தனை நாளா சேத்து வெச்சிருந்த காதல ஒரு எடத்ல கொட்ட ஒரு வாயப்பு கெடசிட்டா மாறி ஒரு கோட்டை கட்ட ஆரம்பிச்சிருந்தேன்.//

உண்மைலேயே நல்லா இருக்கு ..//

உங்க உண்மையான கமெண்ட்க்கு நன்றி செல்வா... எதாச்சு தப்பு இருந்தா சொல்லுங்க, நான் கதை எழுதினது இல்ல, ஏதோ சின்ன ஆசை....

ப.செல்வக்குமார் said...

///"டேய் தேடறதே பொழப்பா வெச்சு தேடணும், அப்ப தான் கெடைக்கும்///

google ல தேடுனீங்களா..?

Arun Prasath said...

//google ல தேடுனீங்களா..?//

ஆர்குட். பேஸ் புக் ட்ரை பண்ணி பாத்தேன், கூகிள்ல தேடலாமா என்ன?

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

//google ல தேடுனீங்களா..?//

ஆர்குட். பேஸ் புக் ட்ரை பண்ணி பாத்தேன், கூகிள்ல தேடலாமா என்ன?//

ஏர்வாடி எங்கிருக்குன்னு தானே தேடறீங்க ரெண்டு பேரும்?

ப.செல்வக்குமார் said...

//உங்க உண்மையான கமெண்ட்க்கு நன்றி செல்வா... எதாச்சு தப்பு இருந்தா சொல்லுங்க, நான் கதை எழுதினது இல்ல, ஏதோ சின்ன ஆசை....

///

என் மெயில்ல சாட்டிங் வாங்க..!!

Arun Prasath said...

//ஏர்வாடி எங்கிருக்குன்னு தானே தேடறீங்க ரெண்டு பேரும்?//

M.L.A சார்க்கு சொல்லி வெச்சிருந்த கள்ள ஒட்டு கமிட்டிய கலைச்சிட்டு பா, அய்யா சரி இல்ல

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//உங்க கதை நல்லாத்தான் இருக்கு .. அதிலும் இந்த வரிகள்

///இத்தனை நாளா சேத்து வெச்சிருந்த காதல ஒரு எடத்ல கொட்ட ஒரு வாயப்பு கெடசிட்டா மாறி ஒரு கோட்டை கட்ட ஆரம்பிச்சிருந்தேன்.//

உண்மைலேயே நல்லா இருக்கு ..//

உங்க உண்மையான கமெண்ட்க்கு நன்றி செல்வா... எதாச்சு தப்பு இருந்தா சொல்லுங்க, நான் கதை எழுதினது இல்ல, ஏதோ சின்ன ஆசை....//

கதை எழுத நான் சொல்லித்தரேன். ஆனா பின்நவீனத்துவ கதை தான். பரவாயில்லையா??

Arun Prasath said...

//என் மெயில்ல சாட்டிங் வாங்க..!!//

request அனுபிருகேன் பாருங்க

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

//ஏர்வாடி எங்கிருக்குன்னு தானே தேடறீங்க ரெண்டு பேரும்?//

M.L.A சார்க்கு சொல்லி வெச்சிருந்த கள்ள ஒட்டு கமிட்டிய கலைச்சிட்டு பா, அய்யா சரி இல்ல//

அப்படியெல்லாம் பண்ண வேண்டாம். நம்ம கமிட்டி தான் நமக்கு முக்கியம்.

அருண் பிரசாத் said...

இது கதைதான்

நம்பிட்டேன்

Arun Prasath said...

//இது கதைதான்

நம்பிட்டேன்//

என்ன சொன்னாலும் பய புள்ளைங்க நம்ப மாட்டேங்குதே...

Arun Prasath said...

//கதை எழுத நான் சொல்லித்தரேன். ஆனா பின்நவீனத்துவ கதை தான். பரவாயில்லையா??//

அப்டினா என்ன சோழரே

Arun Prasath said...

//அப்படியெல்லாம் பண்ண வேண்டாம். நம்ம கமிட்டி தான் நமக்கு முக்கியம்.//

அந்த பயம் இருக்கட்டும்

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//கதை எழுத நான் சொல்லித்தரேன். ஆனா பின்நவீனத்துவ கதை தான். பரவாயில்லையா??//

அப்டினா என்ன சோழரே//


மொதல்ல இத போய் படிய்யா. அப்புறம் நல்ல நெலமையில இருந்தா எனக்கு தகவல் கொடு. அப்பாலிக்கா வந்து பார்க்கிறேன்.

rockarthik said...

Andha CTS ponnuku than kalyanam aaiduche..vera figure try panlam maple

Arun Prasath said...

//Andha CTS ponnuku than kalyanam aaiduche..vera figure try panlam maple///

டேய் இது கற்பனை டா... சொன்ன நம்புங்க

ப.செல்வக்குமார் said...

// rockarthik said...
Andha CTS ponnuku than kalyanam aaiduche..vera figure try panlam மாப்ளே///


இது உண்மைக்கதை போலேயே ..!!

Arun Prasath said...

//மொதல்ல இத போய் படிய்யா. அப்புறம் நல்ல நெலமையில இருந்தா எனக்கு தகவல் கொடு. அப்பாலிக்கா வந்து பார்க்கிறேன்.//

இந்த வெளையாட்டுக்கு நான் வரல

Arun Prasath said...

//இது உண்மைக்கதை போலேயே ..!!//

சொன்ன நம்ப மாடீங்களே... எப்டியோ போங்க

நாகராஜசோழன் MA said...

//rockarthik said...

Andha CTS ponnuku than kalyanam aaiduche..vera figure try panlam maple//

அருண் இப்போ என்ன சொல்லரே?

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

//மொதல்ல இத போய் படிய்யா. அப்புறம் நல்ல நெலமையில இருந்தா எனக்கு தகவல் கொடு. அப்பாலிக்கா வந்து பார்க்கிறேன்.//

இந்த வெளையாட்டுக்கு நான் வரல//

பின்நவீனத்துவம்னா சும்மாவா?

Arun Prasath said...

//அருண் இப்போ என்ன சொல்லரே?//

அது வேற கதை சோழரே.... அத தனியா அப்டேட் பண்றேன்... ஆனா இது அது இல்ல..... அண்ணன் சொன்னா நம்பனும்

Arun Prasath said...

//பின்நவீனத்துவம்னா சும்மாவா?//

அப்டியே இருந்துட்டு போட்டும்

Arun Prasath said...

//Andha CTS ponnuku than kalyanam aaiduche..vera figure try panlam maple//

இவன உள்ள விட்டது தப்பா போச்சே... நம்ம ரகசியம் எல்லாம் சொல்லிடுவான் போலயே

vidya said...

அண்ணா நீ தேடிட்டு இருந்த அந்த பொண்ணோட கதை தானே !!!சூப்பரா இருக்கு !!!

நாகராஜசோழன் MA said...

/ Arun Prasath said...

//அருண் இப்போ என்ன சொல்லரே?//

அது வேற கதை சோழரே.... அத தனியா அப்டேட் பண்றேன்... ஆனா இது அது இல்ல..... அண்ணன் சொன்னா நம்பனும்//

சரி நம்பிட்டேன்!

Arun Prasath said...

//அண்ணா நீ தேடிட்டு இருந்த அந்த பொண்ணோட கதை தானே !!!சூப்பரா இருக்கு !!!//

நீயுமா? தூக்கி வளத்த என் அன்பு தங்கச்சி.... இப்டி கால வாரி விடரயே

Arun Prasath said...

//சரி நம்பிட்டேன்!//

நம்பிட்டேன்னு சட்ட சபைல அறிக்கை விட்டா தான் உங்களுக்கு வோட்டு

ஹரிஸ் said...

அனுபவம்னு நெனச்சு பின்னூட்டம் போட்டா நான் பொறுப்பில்லிங்கோ.... //
but உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

Arun Prasath said...

//but உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..//

உங்களுகாச்சும் உண்மை தெரிஞ்சதே

vidya said...

சரி சரி நான் உன்னை நம்பறேன்

ஹரிஸ் said...

கடைசி பேரா சூப்பர் நண்பா...

Arun Prasath said...

//சரி சரி நான் உன்னை நம்பறேன்//

இது தான் நல்ல புள்ளைக்கு அழகு


//கடைசி பேரா சூப்பர் நண்பா...//

ரொம்ப நன்றி நண்பா.... அங்க தான் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு..... அடுத்த பார்ட்ல சொல்றேன்....

Anonymous said...

இது உங்க சொந்த அனுபவமா?
கண்டுபிடிச்சுட்டீங்கனா ட்ரீட் உண்டா?

Arun Prasath said...

//இது உங்க சொந்த அனுபவமா?
கண்டுபிடிச்சுட்டீங்கனா ட்ரீட் உண்டா?//

உங்களுக்காக தான் அந்த மொதல் பாரா எழுதிருக்கேன்.... இது சத்யமா கற்பனைங்க..... (ஆனா உண்மை சம்பவம் இனொன்னு இருக்கு.... அத மெதுவா சொல்றேன்)

இம்சைஅரசன் பாபு.. said...

சரி கண்டு புடிச்சிய இல்லையா ?
ஒபெனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லைப்பா?

பதிவுலகில் பாபு said...

ம்ம்.. உங்க கதை நல்லாதான் இருக்கு..

நீங்க கற்பனைனு சொல்றதை நானும் நம்பிட்டேன்..
:-)

karthikkumar said...

படிச்சிட்டு வரேன்

karthikkumar said...

வீட்டுக்கு போற அதே பழைய வழி, பாரின் மாறி தெரிஞ்சது. ////
அந்த மொட்டகாட்டுல இருக்குற ஒத்தையடி பாதைதானே. அது பாரின் ரேஞ்சா அட ராமா

karthikkumar said...

மீ தி 50

karthikkumar said...

இது தொடர்பதிவா அப்டின்னா சீக்கிரம் எழுதுங்க பங்கு. நீங்க மொக்கையானத ரசிச்சு படிக்கணும்