என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Monday, November 15, 2010

லவ்னா என்னடா

ரெண்டவதோ, மூணாவதோ படிச்சிட்டு இருந்ததா ஞாபகம். அப்போ எங்க அப்பாக்கு கார் மெக்கானிக் ஒருத்தர் நல்ல நண்பர். அதனால அடிக்கடி விதம் விதமா கார் எடுத்துட்டு வருவாரு. பத்தாததுக்கு வீட்ல வேற ரெண்டு டூவீலர் இருந்தது. அதனால தினமும் வேற வேற வண்டில எங்க அப்பா என்ன ஸ்கூல்ல வந்து விடுவாரு. எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது, அன்னைக்கு வரைக்கும்.

ஒரு நாள் மத்யானம் எங்க ஸ்கூல் ஹெட்மிஸ்  என்ன கூப்டாங்க.
"அருண், நாளைக்கு வரும் போது உங்க அப்பாவ கூட்டிட்டு வா"
"சரிங்க மிஸ்".

இது அடிக்கடி நடக்கும். எங்க அப்பாவும், அவங்களும் நல்ல நண்பர்கள். எங்க வீட்டுக்கு எல்லாம் வருவாங்க. நானும் அவங்களுக்கு செல்ல பிள்ளை. அதனால என்னோட பிஞ்சு மனசுக்கு ( சரி சரி சிரிக்காதீங்க, உண்மைலயே பிஞ்சு மனசு தாங்க அப்போ) ஏதும் தப்பா தெரில. எனக்கு நானே சங்கு ஊதரேன்னும் தெரில. 

"டாடி, மிஸ் உங்கள வர சொன்னாங்க"
"எதுக்கு மா?"
"தெரில டாடி, வர சொன்னாங்க, எதுக்குனு தெரியாது"
"டாடிக்கு நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அதனால கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு சொல்லிடு"
"ஓகே டாடி"  

அடுத்த நாள் ஒரு 11 மணி இருக்கும். ப்யூன் வந்து என்னையும், எங்க கிளாஸ் மிஸ் சையும் கூட்டிட்டு வர சொன்னாங்கனு சொன்னாரு.
அங்க போனா, எங்க ஸ்கூல் மிஸ் எல்லாரும் இருக்காங்க. எங்க அப்பா நான் உள்ள வரும் போது ஒரு பார்வை பாத்தாரு பாருங்க, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. 
எங்க கிளாஸ் பொண்ணு ரேவதி அவங்க அப்பா அம்மா கூட அழுதுட்டே நின்னுட்டு இருக்கு.

"இந்த வயசுல என்னடா வேலை செஞ்சிருக்க நீ?" இது  ஹெட்மிஸ்.
"இவன் கிட்ட எல்லாம் பேச கூடாது, விஷம், விஷம், விஷம்(வடிவேலு ஸ்டைல் தாங்க) அப்டினு கொட்டு கொட்டுனு கொட்றாரு எங்க அப்பா. எனக்கு தலையும் புரில வாலும் புரில. அழுதுட்டே நிக்கறேன். ஹெட்மிஸ் வேற பெரம்புல அடிக்கறாங்க. 
 
"நல்ல கண்டிச்சு வைங்கனு" சொலிட்டு எங்க அப்பா போய்ட்டாரு.
எங்க அப்பா இருந்ததால அடிக்காத மிச்ச மிஸ் எல்லாம் ஆள் ஆளுக்கு அடிச்சிட்டு போனாங்க. அப்போ ரெண்டு மிஸ் பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்தது.

"இவன அடிச்சு என்னங்க பண்றது? அவ தான சொல்லிருக்கா?, எவ்ளோ நாள் நோட் பண்ணிருந்தா அவங்க அப்பா கிட்ட போய் சொல்லிருப்பா அவ"
"இவனுக்கு தெரியாம நடந்திருக்குமா மிஸ் நீங்களே சொல்லுங்க"

என்ன நடந்ததுனா,  அந்த பொண்ணு அவ அப்பா கிட்ட, "அப்பா, அருண்னு ஒரு பையன் எங்க கிளாஸ்ல படிக்கறான். அவங்க பெரிய பணக்காரங்க, அவன தினமும் அவங்க அப்பா ஒவ்வொரு  கார்ல  வந்து விடுவாரு. அவன் ரொம்ப நல்லா படிப்பான், எப்பவும் ப்ரஸ்ட் ரேங்க் தான்(நெஜம்மா தாங்க). நான் அவன லவ் பண்றேன், அவன தான் கல்யாணம் பண்ணிப்பேன்" அப்டினு சொல்லிருக்கு.  அதனால தான் அவ்ளோ பெரிய களேபரம். 

அந்த பொண்ணு அந்த வருஷம் தான் ஸ்கூல்ல சேந்தது. ஒரு 5 மாசம் தான்  அவள தெரியும். ஆரம்பத்ல இருந்து, அருண், அது எங்க இருக்கு, இந்த மிஸ் பேர் என்ன, உங்க வீட்ல எத்தன பேர் அப்டினு சம்பந்தமே இல்லாம என்னயே சுத்தி சுத்தி வரும். அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னே தெரியாம வெகுளி பையனா இருந்திருக்கேன்.

அந்த வயசுல என்ன வேலை பாத்திருக்கு பாருங்க. எதுவுமே தெரியாம நான் அடிவாங்கினது தான் மிச்சம். டைட்டானிக்ல மட்டும் இல்ல, எல்லா பக்கமும் பொண்ணுங்க உஷார் தான். அதுக்கு அப்பறம் இப்டி எல்லாம் பண்ண கூடாது அப்டினு ஏகப்பட்ட சொற்பொழிவு.

எல்லாம் முடிஞ்சு அழுதுட்டே கிளாஸ்க்கு போனேன். இந்த  விஷயம் நடந்ததால எந்த கிளாஸ்ம் நடக்கல. 
என் கூட L .K .G ல இருந்து 12 வரைக்கும் படிச்சவன் கார்த்தி. அவன் வந்து கேட்டான்.

"என்னடா ஆச்சு, அடிச்சாங்களா? நீ என்ன பண்ண? எதுக்கு அழுகுற?"

"கார்த்தி, லவ்னா என்ன டா?"


பின் குறிப்பு : 
அந்த பொண்ணு பாவம், அதுக்கப்பறம் ஸ்கூல் விட்டு போய்டுச்சு.
(அந்த பொண்ணோட பேர் மாத்தி இருக்கேன், ஏன்னா இது உண்மை சம்பவம்).

43 comments:

அருண் பிரசாத் said...

அடப்பாவி! முளைக்கவே இல்லை அதுக்குள்ள பொண்ணை கரெக்ட் பண்ணற அளவுக்கு சீன் போட்டு இருக்கியா?

உன்னை சொல்லி தப்பில்லை, எல்லாம் பெயர் ராசி... ஹி ஹி ஹி ... நானும் இப்படி பல மன்மதவிளையாட்டுகளை நடத்தி இருக்கேன்

Arun Prasath said...

@ அருண் பிரசாத் :
பேர் ராசி தான் உண்மைலயே....
இவ்ளோ தெளிவா சொல்லியும் இந்த உலகம் பசங்கள தான் திட்டுது பா.....

AVIS IMMANUEL said...

kelappu da machi...... unna pathi ennakku theriyum da.

Arun Prasath said...

AVIS IMMANUEL : இது ஏதோ உள் குத்து மாறி இருக்கே

ஹரிஸ் Harish said...

அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னே தெரியாம வெகுளி பையனா இருந்திருக்கேன்//
இத நாங்க நம்பனுமா?

Arun Prasath said...

//அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னே தெரியாம வெகுளி பையனா இருந்திருக்கேன்//
இத நாங்க நம்பனுமா?//

அய்யா இது மெய்யாலுமே உண்மைங்க..... என்ன சொன்ன நீங்க நம்புவீங்க?

ஹரிஸ் Harish said...

இப்பவும் நீங்க அப்படியே இல்லயே..?

Arun Prasath said...

இப்பவும் நீங்க அப்படியே இல்லயே..?//

ஆனா அப்போ அப்டி தான் இருந்தேன், சொன்னா நம்பனும்

ஹரிஸ் Harish said...

நம்பீட்டேன்...

Arun Prasath said...

//நம்பீட்டேன்...//
உண்மையா சொன்னா இந்த உலகம் நம்பாது நண்பா....

ஹரிஸ் Harish said...

அட உண்மையிலேயே நம்பீட்டேன் நம்புங்க நண்பா..
//உண்மையா சொன்னா இந்த உலகம் நம்பாது நண்பா....//
இது ரைட்டு..

Arun Prasath said...

//அட உண்மையிலேயே நம்பீட்டேன் நம்புங்க நண்பா..//
அப்போ சரி, வோட் போடுங்க....

ஹரிஸ் Harish said...

போட்டாச்சி..போட்டாச்சி..

Arun Prasath said...

அடடா, புள்ளைக்கு என்ன அறிவு... நன்றி நன்றி

karthikkumar said...

இந்த கடை சிறப்பாக இன்னும் செயல்பட்டு இன்னும் பல மொக்கை போட வாழ்த்துக்கள்

Arun Prasath said...

///இந்த கடை சிறப்பாக இன்னும் செயல்பட்டு இன்னும் பல மொக்கை போட வாழ்த்துக்கள்///
இதுவல்லவா வாழ்த்து... நன்றி நண்பா

செல்வா said...

//அவங்க பெரிய பணக்காரங்க, அவன தினமும் அவங்க அப்பா ஒவ்வொரு கார்ல வந்து விடுவாரு. அவன் ரொம்ப நல்லா படிப்பான், எப்பவும் ப்ரஸ்ட் ரேங்க் தான்(நெஜம்மா தாங்க). //

அட பாவமே , உண்மைலேயே பாவம்க நீங்க ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் மக்கா இது உனக்கே அடுக்குமா... பாவி பாவி...

செல்வா said...

//"கார்த்தி, லவ்னா என்ன டா?"//

இந்தக் கேள்வியைக் கேட்டதாம் மூலம் பதிவுலக சின்ன பயல்கள் கூட்டத்துல சேர்ந்துட்டீங்க .., அது எங்க இருக்குது அப்படின்னு கேக்காதீங்க .. அதுல நான் மட்டுமே இருந்தேன் ..

Arun Prasath said...

//அவங்க பெரிய பணக்காரங்க, அவன தினமும் அவங்க அப்பா ஒவ்வொரு கார்ல வந்து விடுவாரு. அவன் ரொம்ப நல்லா படிப்பான், எப்பவும் ப்ரஸ்ட் ரேங்க் தான்(நெஜம்மா தாங்க). //

அட பாவமே , உண்மைலேயே பாவம்க நீங்க ..!!//

என்ன பத்தி உண்மைலயே புரிஞ்சு வெச்சது நீங்க தான்...

ஹரிஸ் Harish said...

அதுல நான் மட்டுமே இருந்தேன் ..
//
என்ன செல்வா என்னைய விட்டுட்ட..

Arun Prasath said...

//எலேய் மக்கா இது உனக்கே அடுக்குமா... பாவி பாவி..//

அண்ணே, less tension more பதிவு, more பதிவு less tension

Arun Prasath said...

////"கார்த்தி, லவ்னா என்ன டா?"//

இந்தக் கேள்வியைக் கேட்டதாம் மூலம் பதிவுலக சின்ன பயல்கள் கூட்டத்துல சேர்ந்துட்டீங்க .., அது எங்க இருக்குது அப்படின்னு கேக்காதீங்க .. அதுல நான் மட்டுமே இருந்தேன////

தனியா இருக்க பயமா இருக்குமே, நானும் வரேன்

செல்வா said...

//என்ன செல்வா என்னைய விட்டுட்ட.//

ஆமாம்ல ., சரி நாம இரண்டு பேரும் .. இப்ப இவரோட சேர்ந்து மூணு பேரு ..!!

Arun Prasath said...

//என்ன செல்வா என்னைய விட்டுட்ட.//

ஆமாம்ல ., சரி நாம இரண்டு பேரும் .. இப்ப இவரோட சேர்ந்து மூணு பேரு ..!!//

வாங்க மூணு பேரும் சேந்து ice boy விளையாடலாம்

ஹரிஸ் Harish said...

ice boy யா அப்டின்னா??

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

//எலேய் மக்கா இது உனக்கே அடுக்குமா... பாவி பாவி..//

அண்ணே, less tension more பதிவு, more பதிவு less tension

//

இதென்ன பதுசா இருக்கு..

Arun Prasath said...

//Arun Prasath said...

//எலேய் மக்கா இது உனக்கே அடுக்குமா... பாவி பாவி..//

அண்ணே, less tension more பதிவு, more பதிவு less tension//

இதென்ன பதுசா இருக்கு..//


ஹி ஹி, gentleman ரீமேக்

Arun Prasath said...

//ice boy யா அப்டின்னா??//

நீங்க கொழந்த இல்ல பச்சை புள்ள.... சங்குல பீர் தான் ஊத்தணும்

ஹரிஸ் Harish said...

நீங்க கொழந்த இல்ல பச்சை புள்ள.... // தேங்க்யூ..

Arun Prasath said...

சீக்கரம் பீர் குடிக்க பழகுங்க, அப்றம் ice boy விளையாடலாம்

ஹரிஸ் Harish said...

சரிங்க தல...

Arun Prasath said...

நான் தல இல்ல, செல்வா தான் தல

rockarthik said...

Guys..I am that Karthik..Its true he always get first mark..
Dei I forgot that girl's name da..Is it Shanmuga Priya??
Love la start panni ella visiyam mum appo naan than solli kuduthana?

Arun Prasath said...

ஷண்முக பிரியா இல்ல, டேய் மாடு, நான் தேவ இல்லாமயா பேர் மாத்தி இருக்கேன்.... பப்ளிக்ல சொல்ல கூடாது...

செல்வா said...

// rockarthik said...
Guys..I am that Karthik..Its true he always get first mark..
Dei I forgot that girl's name da..Is it Shanmuga Priya??
Love la start panni ella visiyam mum appo naan than solli kuduthana?//

வாங்க வாங்க ..

Arun Prasath said...

/வாங்க வாங்க ..//
என்ன வாங்க வாங்க, அவன் அவ்ளோ தான் சொல்வான்.... அதுக்கு மேல அவனுக்கே ஞாபகம் இருக்காது

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Arun Prasath said...

//உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...//

வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரபாகரன்.... கண்டிப்பா அடிக்கடி வாங்க...

பனித்துளி சங்கர் said...

மிகவும் எதார்த்தமான நடையில் நேர்த்தியாக ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

Arun Prasath said...

//மிகவும் எதார்த்தமான நடையில் நேர்த்தியாக ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்//

கண்டிப்பா வாங்க... நானும் கண்டிப்பா எழுதறேன்... உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி தல.....

க்ரிஷ் said...

கலக்குற அருண். :-)

Arun Prasath said...

//கலக்குற அருண். :-)//

நன்றி தல :)