என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Friday, November 12, 2010

பாலி பகுதி 4

அவனுங்க குடுத்த சூட்ட போட்டுட்டு வந்தேன். ரெண்டு பேர் வந்து நாங்க தான் உங்க கூட வரபோறோம்னு சொல்லிட்டு ஆக்ஸிசன் சிலிண்டர் எப்டி யூஸ் பண்ணும்னு சொல்லி குடுத்தாங்க. நான் கூட ஏதோ பிரச்சன வந்தா அத எடுக்கணும் போல இருக்குனு நெனச்சேன். எனக்கு நீச்சல் தெரியுமானு அவன் கேட்டான்.

"எதுக்கு மச்சான் நீச்சல் தெரியுமானு கேக்கறான்? டேய் எதாச்சும் வம்புல மாட்டி விட்டுடாதீங்கடா, எனக்கு தண்ணில கண்டம்னு கடலைமுடி ஜோசியர் சொல்லிருகாறு"
"சும்மா ஓவர் சீன் போடாதடா, சும்மா எதாச்சும் பிரச்சனனா நீயா நீந்துவியா, இல்ல ஹெல்ப் பண்ணனுமானு தெரியனும்ல அதுக்கு தான் கேட்டான்"
"உங்கள நம்பி தான்டா போறேன்" எனக்கு பாராசூட்ல போனது நல்லா இருந்தது, அதனால வேற ஏதும் அதிகமா கேள்வி கேக்கல. என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு போனேன்.

என்ன மட்டும் தனியா நடு கடல்க்கு போட்ல கூட்டிட்டு போனாங்க. போகும் போது போட் ஓட்றவன் கிட்ட கேட்டேன், எங்க போறோம்னு. அவன் சொன்னதுலயே எனக்கு புரிஞ்ச ஒரே வார்த்தை "ஸ்கூபா டைவிங்". எனக்கு மூச்சே நின்னுருச்சு. எனக்கு நீச்சல் தெரியாதுனு கெஞ்சி பாத்தேன், கதறி பாத்தேன்.

அவன் "நோ ப்ராப்ளம், வி வில் டேக் கேர், வி ஆர் தேர் பார் யு".
"நீ இருப்படா நான் இருப்பனா?"   
"வாட் வாட்"
"நத்திங் ஆபீசர்,  யு ப்ரோசீட் ஆபீசர்"

 பேசிட்டே இருக்கேன், சுத்தி பாத்தா யாருமே இல்ல. இரு வரேன்னு சொல்லிட்டு கடல்ல குதிச்சான். என்னனு கேட்டா, எதாச்சும் பிரச்சன இருக்கானு பாத்துட்டு வர போயிருக்கான்னு இன்னொருத்தன் சொன்னான். நான் பேய் அறஞ்ச மாறி உக்காந்து இருந்தேன். அவன் கேமரா ரெடி பண்ணிட்டு இருக்கான். கடல் குள்ள போட்டோ எடுக்கற கேமராவாம்.

நான் செத்துட்டா, இந்தா போட்டோவயே ப்ரேம் பண்ணி மாட்டுங்கடா. இன்னைக்கு ஜல சமாதி தான், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு மனச தேத்திகிட்டேன். ஆனா எத்தன நேரத்துக்கு தான் நான் பயபடாத மாறி நடிக்க?

திடிர்னு சிலிண்டர் மாட்டி விட்டு கடல்ல குதிக்க சொன்னாங்க.
கண்ணாடி மாட்டிகிட்டு, கடல் குள்ள தலை மட்டும் கொண்டு போய், மூச்சு விட முடியுதானு பாக்க சொன்னான். அதெல்லாம் நல்ல தான் இருந்தது. கடல்குள்ள போக முன்னாடி எடுத்த போட்டோ கீழ.
என்னடா சிரிக்கற மாறி இருக்கேன்னு பாக்காதீங்க, கண் மூடி இருக்க நால பயம் தெரில
சின்ன புள்ளைய கை புடிச்சு கூட்டிட்டு போற மாறி நீந்தி ஒருத்தன் கூட்டிட்டு போனான். கடல் குள்ள போனது தான் தெரியும். மொதல் டைம் வாய்லயே மூச்சு விடணுமா, அது சுத்தமா வரல. அந்த கண்ணாடி மூக்க மூடிருக்கும், மூக்குல மூச்சு விட முடியாது, வாய்ல தான் இழுக்கணும், விடணும். ஒரு 10 செகண்ட் சுத்தமா முடில, கண்ண கட்டுது, காது அடைக்குது.  இந்தியால செத்து போன கொள்ளு பாட்டி, இந்தோனேசியால தெரியறாங்க. வைரமுத்து சார் எழுதினாரே, வயிற்றுகும் தொண்டைக்கும் நடூல உருண்டை உருளுதுனு, அன்னைக்கு  தான் அந்த உருண்டை என்னனு எனக்கு தெரிஞ்சது . 

இந்த களேபரம் எல்லாம் முடிஞ்சு கண்ணு தெளிவா தெரியவே ஒரு 20 செகண்ட் ஆய்டுச்சு. அதுக்கு அப்பறம்  தாங்க அந்த கடலின் அழகே எனக்கு தெரிஞ்சது. சும்மா சொல்ல கூடாதுங்க, அந்த அழகா பாக்க, கஷ்டபடலாம் தப்பில்ல. ஒரு அரை மணி நேரம் கடல் குள்ள இருந்தேன். மறக்கவே முடியாதுங்க. சுத்தியும் கலர் கலர் மீன், பாறை, பாசி, கடல் தாவரம், சுத்தமா ஒரு புது அனுபவம். அங்க நெறையா பேர் மீன்க்கு சாப்பாடு போட்டு பழக்கி இருப்பாங்க போல. மனுசங்கள பாத்தா எல்லாம் பக்கத்ல வருதுங்க. மீன நம்ம  தொரத்தறது போய், அது நம்ம தொரத்துது. அதுல ஒரு மீன் என் கைய கடிச்சிடுச்சு.  நம்ம ஊர் தெப்பகுளம், ஆத்து மீன்கள் கிட்ட கடிபட்ட எனக்கு, இந்த கடி நல்லாவே இருந்தது. கிராமத்து சைடுல மீன் கடி வாங்கிட்டே குளிச்ச எல்லாருக்கும் நான் சொல்றது புரியும். சில போட்டோ கீழ.
பயபடாத மாறி நடிப்பு தான்
தண்ணீரை காதலிக்கும்... பின்னாடி நான் தான்

என்னை கடித்த மீன்


மொதல் டைம் சிலிண்டர் மாட்டினது நால, எவ்ளோ வேகமா மூச்சு விடணும்னு தெரில, அதனால நான் கொண்டு போன சிலிண்டர் சீக்கரம் தீந்திருச்சு ( பயத்ல உறிஞ்சி தள்ளிட்டேன்). இல்லனா இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம். அப்றம் மேல வந்து கரைக்கு கூட்டிட்டு வந்தாங்க. 

"என்னடா எப்டி இருந்தது?"
மறக்க முடியாத அனுபவம், அதனால யாரையும் திட்டல.
"மச்சி, சூப்பர்டா, இப்டினு தெரிஞ்சிருந்தா, பயபடாம போயிருக்கலாம்"
"சரி விடு, அடுத்து எங்க போறோம்னு ஞாபகம் இருக்கா?"

எப்டி இல்லாம போகும், நானே இல்ல வாய் விட்டு மாட்டிட்டேன், என்ன நடக்க போகுதோ?

17 comments:

அருண் பிரசாத் said...

செம கலக்கல் போஸ்ட்

நல்லா காமெடியாவும் இருந்துச்சிப்பா

Arun Prasath said...

உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி நன்றி! :)

THOPPITHOPPI said...

புகைப்படங்களுடம்ன் அருமை

Arun Prasath said...

@THOPPITHOPPI : வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சங்கவி said...

புகைப்படமும் சொன்னவிதமும் அருமை...

Arun Prasath said...

மிக்க நன்றி சங்கவி.. :)

நாகராஜசோழன் MA said...

மச்சி உன்னோட எழுத்து நடை சூப்பர் பா!

ப.செல்வக்குமார் said...

//"எதுக்கு மச்சான் நீச்சல் தெரியுமானு கேக்கறான்? டேய் எதாச்சும் வம்புல மாட்டி விட்டுடாதீங்கடா, எனக்கு தண்ணில கண்டம்னு கடலைமுடி ஜோசியர் சொல்லிருகாறு"//

அது என்னங்க , கடலை முடி ஜோசியர் ..?

ப.செல்வக்குமார் said...

//நான் செத்துட்டா, இந்தா போட்டோவயே ப்ரேம் பண்ணி மாட்டுங்கடா. இன்னைக்கு ஜல சமாதி தான், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு மனச தேத்திகிட்டேன்//

உண்மைலேயே நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ங்க ..!!

ப.செல்வக்குமார் said...

படங்கள் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க .. !!

Arun Prasath said...

//மச்சி உன்னோட எழுத்து நடை சூப்பர் பா!//
ச.ம.உ அவர்கள் வாயால் வாழ்த்து பெற்றது, குடிமகனுக்கு பெரும் பேறு
நன்றி நன்றி

Arun Prasath said...

//அது என்னங்க , கடலை முடி ஜோசியர் ..?//
அது எப்டிங்க கரெக்ட்டா எதாச்சும் ஒரு லைன்ன புடிச்சுகறீங்க??

//உண்மைலேயே நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ங்க ..!!//

எது ஏதோ உள் குத்து தான்

//உண்மைலேயே நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ங்க ..!!//

ரொம்ப தேங்க்ஸ் பா

அன்பரசன் said...

Nice experience..

Arun Prasath said...

@அன்பரசன் : வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மங்குனி அமைச்சர் said...

10 செகண்ட் சுத்தமா முடில, கண்ண கட்டுது, காது அடைக்குது. இந்தியால செத்து போன கொள்ளு பாட்டி,////

எல்லாம் ஜஸ்ட்டு மிஸ் பண்ணிடுராணுக ?

நல்ல எழுத்து ஸ்டைல் ........

Arun Prasath said...

மிக்க நன்றி அமைச்சரே

Geetha M said...

நல்ல நகைச்சுவையான பதிவு..வாழ்த்துகள்