"அருண்"
"திருமதி. சூர்யா அருண், பேர் பொருத்தம் நல்லாத் தான்டி இருக்கு"
அவ இந்தப் பேரச் சொன்ன போது என் முகத்துல இழையோடிய வெட்கத்தைப் பார்த்திருப்பாளோ..?
"அதுக்குள்ள கல்யாணமே பண்ணிட்டியா வித்யா நீ? உனக்கு கொழுப்பு அதிகம்டி"
"இவ்ளோ விஷயம் நடந்திருக்கு, என்கிட்ட ஏன்டி சொல்லல, ஆனா நீ அந்த அராத்து பொண்ணுங்க கூட சேந்துட்டு அவன பாத்து சிரிச்ச போது நான் கூட உன்ன தப்பா நெனச்சிட்டேன்"
காது மட்டும் தான் அவ பேசறத கேட்டுட்டு இருந்தது, மனசு போன வாரம் வீட்டுக்கு போயிருந்தப்ப நடந்தத யோசிச்சிட்டு இருந்தது.
இதுவரைக்கும் எத்தனையோ பசங்க போட்டோ பாத்திருக்கேன். கூட வேலை செய்யறவங்க டூர் போன போட்டோ எல்லாம் பாத்திருக்கேன். ஆனா இவன்(இவர்?) போட்டோ பாக்கும் போது மட்டும் சின்ன குறுகுறுப்பு ஏன்?
உன்ன பொண்ணு பாக்க வர போறவர் போட்டோனு அம்மா சொன்னதாலையா?. இல்ல எல்லாமே நல்லதா நடந்தா என் மீதி வாழ்க்கை இவர் கூடத்தான்னு நெனச்சதாலையா? பதில் இல்ல!!
பாத்த உடனயே திரும்பி பாக்க வெக்கற அழகன் எல்லாம் இல்ல. கொஞ்சம் ஒல்லியான தேகம். எங்கயோ ஹில் ஸ்டேஷன் மாறி இருந்த எடத்ல நின்னுட்டு இருக்க மாறி ஒரு போட்டோ. அவர் (அவன்னே சொல்லலாமா?) கிட்ட என்னமோ சின்ன ஈர்ப்பு இருக்க மாறி தான் இருக்கு.
"எத்தன நேரம் அதையே பாப்ப, இன்னும் ஒரு மாசத்துல நேர்லயே பாக்கலாம்"
அம்மா குரல் கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு. நாம என்ன பண்ணாலும் யாராச்சும் பாக்கணும்னு நெனப்போம். ஆனா வெக்க படரத அம்மா பாத்தா கூட கோவம் வருதே ஏன்?
போட்டோல பாத்த அவர , திடிர்னு ஆபீஸ் முடிஞ்சு வரும் போது பைக் மேல நின்னுட்டு எங்க கேம்பஸ் குள்ள எட்டி பாத்துட்டு இருக்கற அந்த போஸ்ல நேர்ல பாத்ததும், என்ன பண்ண? அதான் சிரிச்சிட்டேன்..
.....
"சூர்யா, சூர்யா, சூர்யா... என்னடி பகல் கனவா? டூயட் தான? சரி என்னமோ பண்ணு, ஆனா நான் பேசிட்டு இருக்கும் போதே உனக்கு கனவு வருதுனா, கொஞ்சம் முத்தி போச்சுனு தான் நெனைக்கறேன்"
என்னோட புன்முறுவல் பாத்துட்டே வித்யா பேசிட்டே இருந்தா.
"சரி போட்டோ வெச்சிருக்கியா? அங்க அவன, சாரி சாரி அவர சரியா பாக்கவே இல்லடி"
"அதெல்லாம் இல்ல"
"பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், போட்டோ பாக்காம அவர எப்டி உனக்கு தெரியும்? இப்போ காட்ட போறியா இல்லையா"
அதெப்படி என்னவர் (இது எப்போ) போட்டோ அவ கிட்ட காமிக்க?
"வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன்"
"சும்மா பொய் சொல்லாத, சரி விடு நாளைக்கு எப்டியும் மறுபடியும் வருவாப்ல, அப்ப பாத்துடா போச்சு"
"அவர் வருவாரா?"
"என்னடி பசங்க பத்தி தெரியாது? கண்டிப்பா வருவாரு"
ஐயோ என்ன இது நான் இப்போ வெக்க படறதா, சிரிக்கறதா? எந்த உணர்ச்சி என்ன ஆக்கிரமிச்சு இருக்குனே தெரிலயே. இப்ப நான் என்ன ரியாக்சன் தர? குழப்பம்?!!!!!
யாரு பாத்தாலும் கவலைபடாம, என்ன தேடி நடு ரோட்ல பைக் மேல நின்னு தேடிட்டு இருக்கறத பாக்கும் போது, அவர் என் மனசுக்கு பக்கம் வந்தது என்னமோ நிஜம் தான்
ஒன்னு மட்டும் உறுதி, அவர் பின்னாடியே போக நான் தயார்.
கல்யாணம் பண்ணாம வாழ்க்கை நடத்த முடியாதா? யார் தயவும் இல்லாம கடைசி வரைக்கும் இருக்க போறேன்.இப்டி ஓவர் முற்போக்கு சிந்தனை எல்லாம் என்கிட்ட இருந்து பெட்டி படுக்கை எல்லாம் கட்டிட்டு போய்டுச்சு.
இரு இரு, ஆமா ஏன் அவர் என்ன பாத்தும் பாக்காத மாறி இருந்தாரு? என் போட்டோ பாத்ததில்ல? அப்போ தான் ஞாபகம் வந்தது, அம்மா நல்ல போட்டோ குடுத்துட்டு போக சொன்னதும், கெளம்பற அவசரத்ல சுத்தமா மறந்து போனதும்.
இப்போ என்ன பண்ண? நாளைக்கு அவர பாத்ததும் சொல்லிடுவோமோ நான் தான் சூர்யானு? அவர் என்ன தான் தேடி வந்திருக்காருனு தெரிலயே! இல்ல அம்மாக்கு போட்டோ அனுப்பி வெச்சிடலாமா? வேணாம் கொஞ்ச நாள் அலைய விட்டு பாக்கலாம்?
27 comments:
வடை எனக்கே ..!
இவரு வடை வேட்டைக்கு முடிவே இல்லையா
நல்லாத்தாங்க போயிட்டு இருக்கு ., தொடருங்க ..! எனக்கு வடை கிடைச்சுதே ..!!
கதை நல்லா போகுதா? இல்ல உனக்கு வடை கெடச்சது நல்லா போகுதா?
நல்லாத் தேடுங்க...
கண்டிப்பா கெடைக்கும்
நல்ல தான் போகுது கதை ............முடிவை பார்போம் .........
//நல்ல தான் போகுது கதை ............முடிவை பார்போம் ........//
நன்றி தல..... இன்னும் முடிவு யோசிகல, பாப்போம்...
இதுவரைக்கும் எத்தனையோ பசங்க போட்டோ பாத்திருக்கேன். கூட வேலை செய்யறவங்க டூர் போன போட்டோ எல்லாம் பாத்திருக்கேன். ஆனா இவன்(இவர்?) போட்டோ பாக்கும் போது மட்டும் சின்ன குறுகுறுப்பு ஏன்/// ஏன்னா t shirt போட்ட குடுகுடுப்ப காரன் மாதிரி இருக்கீங்கல்ல அதான்
வேணாம் கொஞ்ச நாள் அலைய விட்டு பாக்கலாம்?//
இந்த பொம்பளைகளே இப்படிதான் குத்துங்க எசமா குத்துங்க
போன பதிவில் என் கேள்விகளுக்கு பதில் சொல்லவும்
//ஏன்னா t shirt போட்ட குடுகுடுப்ப காரன் மாதிரி இருக்கீங்கல்ல அதான///
சூர்யா என்ன போட்டோ பாத்தான்னு எனக்கே தெரியாது, உங்களுக்கு எப்டி தெரிஞ்சது?
//இந்த பொம்பளைகளே இப்படிதான் குத்துங்க எசமா குத்துங்க//
இந்த வெளையாட்டுக்கு நான் வரல?
//இது தொடர்பதிவா அப்டின்னா சீக்கிரம் எழுதுங்க பங்கு. நீங்க மொக்கையானத ரசிச்சு படிக்கணும்//
நண்பரே இது கற்பனை... என்னால எல்லாம் மொக்கை ஆக முடியாது...என்ன வில்லத்தனம்.
//அந்த மொட்டகாட்டுல இருக்குற ஒத்தையடி பாதைதானே. அது பாரின் ரேஞ்சா அட ராமா///
அதெல்லாம் இபோ பெரிய ரோடு ஆய்டுச்சு
பதில் போதுமா? ரெண்டு நாலா இந்த பக்கம் வரல. அதான்.....
பதில் போதுமா? ரெண்டு நாலா இந்த பக்கம் வரல. அதான்....//
ரெண்டு நாலா அந்த காலேஜ் வாசல்ல புள்ளைக்கிட்ட நீர் அடி வாங்குன மேட்டரெல்லாம் எமக்கு வந்திருச்சி
//பதில் போதுமா? ரெண்டு நாலா இந்த பக்கம் வரல. அதான்....//
ரெண்டு நாலா அந்த காலேஜ் வாசல்ல புள்ளைக்கிட்ட நீர் அடி வாங்குன மேட்டரெல்லாம் எமக்கு வந்திருச்சி//
அது மின்னல்ன்னு நெனச்சேன்.. பிளாஷ் போட்டு எடுத்திருப்பாங்க போலயே... BBC எல்லாம் வரலயே
Arun Prasath said...
//பதில் போதுமா? ரெண்டு நாலா இந்த பக்கம் வரல. அதான்....//
ரெண்டு நாலா அந்த காலேஜ் வாசல்ல புள்ளைக்கிட்ட நீர் அடி வாங்குன மேட்டரெல்லாம் எமக்கு வந்திருச்சி//
அது மின்னல்ன்னு நெனச்சேன்.. பிளாஷ் போட்டு எடுத்திருப்பாங்க போலயே... BBC எல்லாம் வரலயே///
நம்ம ரேஞ்சுக்கு லோக்கல் டிவி தான் பங்கு. சரி பங்கு கொஞ்சம் ஆணி இருக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
வி வில் மீட்
வில் மீட்
மீட்
//நம்ம ரேஞ்சுக்கு லோக்கல் டிவி தான் பங்கு. சரி பங்கு கொஞ்சம் ஆணி இருக்கு நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
வி வில் மீட்
வில் மீட்
மீட்//
ஒழுங்கா ஆணி புடிங்கிட்டு வாங்க
flow நல்லா இருக்குதுப்பா... continue பண்ணு
//flow நல்லா இருக்குதுப்பா... continue பண்ணு//
கண்டிப்பா, உங்க எல்லாரையும் டார்சர் பண்ணாம விட மாட்டேன்
நல்லாருக்கு நண்பா...தொடருங்கள்..
//நல்லாருக்கு நண்பா...தொடருங்கள்..//
நன்றி தல.. கண்டிப்பா
சீக்கிரம் சொல்லு மக்கா.
//சீக்கிரம் சொல்லு மக்கா.//
அடுத்த பார்ட் போடாச்சு... நீங்க மட்டும் ஜோதி கதை மெதுவா தான சொன்னீங்க, அதே பழக்கம் following
முதல் பாகத்தை விட இந்தப் பாகம் நல்லா இருந்ததுங்க..
சூப்பர்..
அப்டியே அடுத்த பார்ட் படிச்சிட்டு சொல்லுங்க
Post a Comment