என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, November 3, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 8

எப்போ ரிசல்ட் வந்தாலும், இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு புரளி கெளம்பிட்டே இருக்கும். அன்னைக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் வேற த்ரில்லிங்கா நடந்துட்டு இருந்தது. வழக்கம் போல ரிசல்ட்னு சொன்னானுங்க. மேட்ச் பாக்கற ஆசைல ரிசல்ட் பாக்க நான் வரலனு சொல்லிட்டேன்.  அப்போ இன்டர்நெட், செல் எல்லாம் அவ்ளோ ஈசியா கெடைக்காது.  ரிசல்ட் பாக்க கொஞ்ச தூரம் வேற நடந்து போனும். நமக்கு தான் வேலை செய்யறது அலர்ஜி ஆச்சே, அதனால மேட்ச் பாத்துட்டே உக்காந்துட்டேன், கழுத அப்றம் பாத்துக்கலாம்னு. அப்போ தான் ஹரி நான் போறேன்னு கெளம்பினான். அவனுக்கு வெற்றி திலகம் எல்லாம் வெச்சு போய்ட்டு வாடானு எல்லார் நம்பரும் குடுத்து அனுப்பினோம்.

ஹரி, நம்ம பிரகாஷ் கூட ஸ்கூல் படிச்சவன். இவன பத்தி சொல்ல ஆரம்பிச்சா இந்த பதிவு எல்லாம் பத்தாது. காமெடி திலகம் இவன். இவன் பண்ண காமெடி எல்லாம் டைமிங் காமெடி தான். சொல்றது கஷ்டம், ஆனா முடிஞ்சா அப்ப அப்ப சொல்றேன். இவனுக்கு மொதல்ல வெச்ச பேறு நர்ஸ். ஏன்னா, எப்பயும் டாக்டர் பிரகாஷ் கூட சுத்தீட்டு இருப்பான். சொந்த ஊர் கரூர் பக்கத்ல வேலாயுதம்பாளையம்.    

ஹரி ஹாஸ்டல் குள்ள வரும் போது சச்சின் 90 க்கு மேல அடிச்சிருந்தாறு. 
"டேய் என்னடா ஆச்சு, எல்லாரும் பாஸ் தான?"
"ஆமா படிக்காம பிட் படம் பாத்தா எப்டிடா பாஸ் ஆவோம்?" (இவர் இப்டி தான், அடிக்கடி அட்வைஸ் பண்ணுவாரு)
"அப்போ எல்லாரும் கப்பா?"
"ஆமா, ரகு மட்டும் தான் எல்லாமே பாஸ், மத்த எல்லாருமே கப்"
அப்போ சரியா சச்சின் 100, அவர் தனி ஆளா 100 அடிச்சிட்டாரு, அந்த ரீ எக்ஸாம்ல எங்க ரூம் பசங்க எல்லாத்தோட மார்க் சேத்தாலும் 100 வரல. 
"மச்சி, எனக்கு அந்த எக்ஸாம்ல 8 மார்க் தான் போட்ருக்காங்கடா" இது நான்.
"ஆமா எக்ஸாம் ஹால் குள்ள அர மணி நேரம் தான எழுதின, அதுக்கு ஏத்த மாறி தான் மார்க் வரும்"
"ஏன்டா நிமிசத்துக்கு ஒரு மார்க் போட்டு 30 போட்ருக்க கூடாது?"
நான் என்னங்க தப்பா கேட்டேன்? எல்லாரும் என்ன அடிக்க வந்துட்டாங்க,ஒரு வழியா சமாளிச்சு, "மச்சி நம்ம லீடர் பாவம் டா, நமக்கே இவ்ளோ கம்மியா மார்க் வந்திருக்குன்னா, அவன் இங்கிலீஷ் கூட பாஸ் ஆக மாட்டேன்னு சொன்னனே, வா அவன பாத்துட்டு வரலாம் "
பரிவாரம் சூழ லீடர் ரூம் க்கு ஒப்பாரி வெக்க கெளம்பினோம்.

அங்க போனா லீடர்க்கு அவங்க ரூம் பசங்க பொது மாத்து போட்டுட்டு இருந்தாங்க.
"என்ன மச்சி ஆச்சு, வொய் நோண்டிங் சாம்பு மவன்?"
"சாம்பு மவனா இவன்?, எல்லா எக்ஸாம்லயும் பாஸ் பண்ணிட்டான் டா" அவன் ரூம் பையன் ஜெப குமார் சொன்னதும்,  காதுல எங்களுக்கு ஈயத்த காசி ஊத்துன மாறி இருந்தது.

நம்ம நண்பர் ஒருத்தன், பெயில் ஆய்டா சோகமா இருக்கும், அவனே எல்லாதையும் பாஸ் பண்ணி, நாம அரியர் வெச்சா அது ரொம்ப சோகம் இல்ல? (இது 3 idiots டயலாக், சிங்க் ஆய்டுச்சு).
"குல துரோகினு முத்திரை குத்தி அவன ஒதுக்கி வைங்க, அவன் கூட ஆறும் பேச கூடாது, ஆறும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, இது தான் டா தீர்ப்பு" ஹரி தீர்ப்பு சொன்னான்.

தீர்ப்ப எல்லாரும் தீவிரமா கடைபிடிச்சது எல்லாம் ரெண்டு நாள் தான்.ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? கொஞ்ச நாள் கழிச்சு ஒன்னா சேந்துட்டோம்.

எங்க டிகிரியவே கேள்வி குறி ஆக்குன செகண்ட் செம் எக்ஸாம் வந்துச்சு அடுத்து....

12 comments:

Unknown said...

சுவரஸ்யமா இருக்கு தம்பி ...

Arun Prasath said...

@ கே.ஆர்.பி.செந்தில் : மிக்க நன்றி அண்ணா.... அடிக்கடி வாங்க...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சொன்ன மாதிரியே அடுத்த பதிவுல முடிவ சொல்லிட்டீங்களே,

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நீங்கள் தொடர் கதை எழுதாலாம். ஒவ்வொரு பதிவிலும் எல்லோரையும் எதிர்ப்பார்க்க வைக்கிறீர்கள்.

Arun Prasath said...

//சொன்ன மாதிரியே அடுத்த பதிவுல முடிவ சொல்லிட்டீங்களே,//

சொல்றத தான் செய்வோம் நாங்க!!

//உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. //
நன்றி நன்றி...

//நீங்கள் தொடர் கதை எழுதாலாம். ஒவ்வொரு பதிவிலும் எல்லோரையும் எதிர்ப்பார்க்க வைக்கிறீர்கள்.//

ஐயோ நான் அவ்ளோ பெரிய எழுத்தாளர் எல்லாம் இல்லீங்க....
வாழ்த்துக்கு மிக்க நன்றி...... இன்னும் நெறையா இருக்கு, எல்லாதையும் எழுதறேன், படிக்க முயற்சி பண்ணுங்க...

அருண் பிரசாத் said...

அப்போ உருப்படியா ஒண்ணும் பண்ணல?

Arun Prasath said...

@ அருண் பிரசாத் : அப்படி பண்ணி இருந்த தான், நாம உருப்பட்டு இருப்போமே.

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பனித்துளி சங்கர் said...

மிகவும் நேர்த்தியான எழுத்து நடையில் கல்லுரி நினைவுகளை அழகாக ரசிக்கும் வகையில் பதிவு செய்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்!

Arun Prasath said...

@ all
உங்களுக்கும் உங்க நண்பர்கள் உறவினர்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.....

//மிகவும் நேர்த்தியான எழுத்து நடையில் கல்லுரி நினைவுகளை அழகாக ரசிக்கும் வகையில் பதிவு செய்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்//

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!! அடிக்கடி வாங்க.....

rockarthik said...

da unnoda blog padicha modern Tamil proverbs repository e vechirlam pola.."ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா" nice one

Arun Prasath said...

rockarthik : ஹி ஹி, தேங்க்ஸ் டா...