என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, February 17, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 13

இப்போ கால் பண்றாங்களே, என்ன சொல்லி சமாளிக்க?

"ஹலோ"
"எங்க இருக்க? மாலதிய போய் பாத்துட்டு வந்துட்டியா ?"
"ம் பாத்தேன்மா"
"என்னடா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற?"
"நான் வண்டி ஒட்டிட்டு இருக்கேன்மா ஒரு 2 மணி நேரத்ல கூப்டறேன்"
"சரி"

சுனில் ஒரு மாறி பாத்தான்.
"என்னாது 2 மணி நேரத்துல கால் பண்றியா? தம்பி இப்போ தான் ஆம்பூர், ரெண்டு மணி நேரத்துல மிஞ்சி போனா தொப்பூர் போலாம். கொஞ்சம் கூடுதலா மிதிச்சா ஓமலூர். அதுக்கப்றம் 200 கிலோ மீட்டர் போனும் தெரியும்ல"
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். நீ வண்டி ஓட்டு பாத்துக்கலாம்"
வீணா கேட்டா,"என்ன ராகுல் கேட்டாங்க அம்மா?"
"ஒன்னும் பெருசா இல்ல வீணா சமாளிச்சுட்டேன். உங்க வீட்ல என்னன்னு சொல்லி நம்ம விசயத்த சொல்ல போற?"
"தெரில ராகுல், அதான் யோசிச்சிட்டு இருக்கேன். உங்க வீட்ல ஒத்துபாங்கல்ல?"

இத கேக்கும் பொது அவ கண்ல ஒரு ஏக்கம் தெரிஞ்சது. பாவம் ரொம்ப பயந்து போய்டா போல.

"அதெல்லாம் பேசற மாறி பேசிக்கலாம் வீணா, கவலை படாத"
அவள சமாதானம் பண்ண சொன்னேனே தவிர, என்ன பண்ண போறேன்னு சத்தியமா தெரில. 
பாப்போம். 

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பறம் தூங்கிட்டா. வண்டி பர்கூர் கிட்ட போய்ட்டு இருந்தது. 
"சுனில், கிருஷ்ணகிரில நிறுத்து. டீ சாப்டலாம். நான் ஓட்டறேன்"
"பரவால்லடா நீ பின்னாடியே இரு.ஒரு லவ் ஜோடிய பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு"
"ரொம்ப டயலாக் பேசாத. அவ தூங்கிட்டா"
டீ சாப்டும் போது கேட்டான்.
"என்னடா சொல்ல போற வீட்ல? எதாச்சும் பிளான் வெச்சு இருக்கியா? செம கத்து கத்த போறாங்கடா"
"அதுக்கு தான உன்ன கூட கூட்டிட்டு போறேன். நீ இருக்கும் போது அவ்ளோ திட்டு விழுகாது மாப்ள"
"உங்க லவ்க்கு நீங்க அடி வாங்கறீங்களோ இல்லையோ, எங்கள கோத்து விட்டு வேடிக்க பாருங்கடா"
"அந்த அளவு விட்டுடுவோமா பாத்துக்கலாம் மாப்ள"

சாயங்காலம் கோவை ரீச் ஆனோம். வீணாவ கொண்டு போய் அவ வீட்ல விட்டுட்டு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு எங்க வீட்டுக்கு போனோம்.

முதல் முறையா எங்க வீடுக்குள்ள போக எனக்கு பயமா இருந்துச்சு. இவன் வேற உள்ளயே வர மாட்டேங்கறான். இவன வெச்சு கொஞ்ச திட்டுல இருந்து தப்பிச்சுக்கலாம்ன்னு பாத்தா நடக்காது போலயே. 

அப்பா அம்மா ரெண்டு பேரும் டிவி பாத்துட்டு இருந்தாங்க. 

"அம்மா"
"டேய் என்னடா மத்தியானம் தான் பேசின, அதுக்குள்ள வந்து நிக்கற"
"இல்லம்மா அது வந்து"
"எப்படி வந்தீங்க?"
"கார்ல. சுனில்க்கு தெரிஞ்சவங்க கார்"
"கார் ல இவ்ளோ தூரம். என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க.  போய் முகம் கழுவீட்டு வா.. காபி போடறேன்"
"ஹ்ம்ம்"

சுனில் பயத்துல நடுங்கீட்டு இருந்தான்.
காபி வந்தது. நான் பேச்ச ஆரம்பிக்கறது தான் நல்லதுன்னு தோணுச்சு. 

"அம்மா, இவ்ளோ சீக்கிரம் எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிப்பீங்கன்னு தோனல.."
"அட வயசு..."
"இரு இரு, நான் பேசி முடிச்சிடறேன். இத நேர்ல பேசினா தான் நல்லா இருக்கும்ன்னு தான் கிளம்பி வந்தோம். மாலதிய பாத்தேன். நல்ல பொண்ணு தான். உன் செலக்சன் என்னைக்குமே நல்லா தான் இருக்கும்........  ஆனா எனக்கு வேற ஒரு பொண்ண பிடிச்சிருக்கு"

வேகமா சொல்லி முடிச்சிட்டு, என்ன சொல்ல போறாங்களோன்னு பதட்டமா பாத்தேன். 
வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?
  

Thursday, February 10, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 12

என்ன பண்ணன்னு தெரியாத டைம்ல ஒரு பஸ் ஸ்டாப் வரும், அங்க வர பஸ்ல ஏறி போனா டர்னிங் பாயிண்ட்ன்னு விண்ணைத்தாண்டி வருவாயால ஒரு டயலாக் வருமே, அதே மாறி என்ன பண்ணன்னு தெரியாம நின்னுட்டு இருந்தேன். சுனில் கால் பண்ணான்.

"மச்சி எங்க இருக்க?"
"பில்லர் கிட்ட, வீணா கூட பேசிட்டு இருக்கேன்"
"சரி இன்னைக்கு என்ன பிளான்? அவ கூட ஊர் சுத்த போறியா?"
"இல்ல மச்சி, ஏன் கேக்கற?"
"இல்லைடா, நம்ம கைல இன்னைக்கு இன்னோவா இருக்கு. பசங்க எல்லாரும் பிஸி, எவனும் வரலன்னு சொல்லிட்டானுங்க. பாண்டிச்சேரி   போலாமா?"

அடடா இவன் அல்லவா நண்பன். சரியா எப்போ நமக்கு ஹெல்ப் வேணும்ன்னு தெரிஞ்சு வண்டியோட வரான் பாரு.
"மச்சி சூப்பர் டா. நீ அசோக் பில்லர் வா, நான் வெயிட் பண்றேன்"

வீணா அப்போ தான் வண்டி எடுத்துட்டு பக்கத்துல வந்தா.
"எங்க மாலதி? என்ன பலமான யோசனை?"
அவ கிட்ட நடந்தத சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சா.
"சரிவா, என் வண்டிய எங்க ஹாஸ்டல்ல நிறுத்திட்டு வரலாம். நானும் கோயம்புத்தூர் வரேன்"

அடடா வண்டில போறப்ப அடிக்கலாம்ன்னு நெனச்ச ஒரு பீருக்கும் ஆப்பு. 
"அட நீ எதுக்கு வீணா, நானே போய்ட்டு வந்திடறேன். போன் பண்ணி சொல்றேன் என்ன நடந்ததுன்னு"
"அதில்ல, உனக்கு வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடாங்க. எனக்கும் சீக்கிரம் நடந்திடும் , அதனால நானும் எங்க வீட்ல சூட்டோட சூடா சொல்லிடறேன்"

அவ சொல்றதும் சரி தான். தள்ளி போட்டுட்டே போக முடியாது. வண்டிய நிறுத்தீட்டு சுனில்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இவன் கிட்ட என்ன சொல்லி கோயம்புத்தூர் கூட்டிட்டு போலாம்ன்னு யோசிட்டு இருந்தப்ப சுனில் வந்தான்.

"என்னடா தனியா வருவன்னு பாத்தா குடும்பத்தோட வந்திருக்க" "மேடம் ஒன்னும் பயப்படாதீங்க உங்க ஆள பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு சேதாரம் இல்லாம கொண்டு வந்து விட்டுடறேன்" 

என்ன நடந்தது, எங்க போகணும்ன்னு சொல்ல சொல்ல அவன் பாவமா பாத்துட்டு இருந்தான்.

"டேய், உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன். வண்டி இருக்குன்னு சொன்னது குத்தமாடா. போக வர 1000 கிலோமீட்டர். என்ன நெனச்சிட்டு இருக்க?"
"மச்சி, என்ன நடந்ததுன்னு சொன்னேன்ல, வேற வழி இல்லடா. மாத்தி மாத்தி ஒட்டிக்கலாம்"
"அதெல்லாம் எனக்கும் தெரியும். மாலை போட்டு மஞ்ச தண்ணி தெளிச்சு ரெடியா இருக்கடா. என்ன பண்ண,  வா போலாம்"
அவன் போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணான்.

வீணா கேட்டா,"எதாச்சும் தப்பா நெனச்சுக்க போறான் ராகுல், வேற ஐடியா இல்லையா?"
"அட அவன் அப்டி தான் பேசுவான், மனசில ஒன்னும் நெனச்சுக்க மாட்டான். கவலை படாத"
நாங்க ரெண்டு பேரும் பின்னாடி சீட் ல. அவன் கெளம்பினான். 
"என்னடா நண்பா, வண்டில AC இல்லையா? சரி சரி பாட்டாச்சும் போடு"
"எல்லாம் கால கொடுமைடா"

சும்மா நானும் சுனிலும் பேசிட்டு வந்துட்டு இருந்தோம். அவ வெளிய வேடிக்கை பாத்துட்டு இருந்தா. ஸ்ரீபெரும்புதூர் தாண்டி வண்டி பெங்களூர் ஹைவேல பறந்துட்டு இருந்தது. பேசிட்டு இருந்த சுவாரஸ்யம்ல அவ என் தோள்ல சாஞ்சுகிட்டது நான் கவனிக்கவே இல்ல. ஒரு 10 நிமிஷம் கழிச்சு ஒரு சொட்டு கண்ணீர் என் கைல விழுந்தது. 

"ஹே என்னாச்சு? ஏன் அழற?" 
கருமம், பசங்களுக்கு இந்த ஆறுதல் சொல்ற கலை தான் வந்தே தொலையாது. எனக்கும் தான். இப்டியா மொக்கை மாறி கேள்வி கேப்பேன். அவ எழுந்து என்ன மொறச்சு பாத்துட்டு மறுபடியும் என் மடில படுத்துட்டா. ஒரு 5 நிமிஷம் வண்டி முழுக்க மௌனம். 

எந்திரிச்சு, அந்த கலங்கின கண்ல என்ன பாத்து," ஐ லவ் யு"ன்னு சொல்லிட்டு மறுபடியும் படுத்துட்டா. ஒரு செகண்ட், அவ கண்ல தெரிஞ்ச அந்த லவ்வ பாத்ததும் எனக்கு கண்ல தண்ணி வந்திடுச்சு. அப்போ மாலதி சொன்ன வார்த்தைகள் என் மனசில ஓடிட்டு இருந்தது. "பைத்தியமா இருக்கா உன் மேல.மிஸ் பண்ணிடாத".

அப்ப முன்னாடி இருந்து ஒரு சவுண்ட். 
"டேய் இங்க என்ன படமாடா ஓடுது, ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு இருக்கான், இங்க வந்து கொஞ்சிகிட்டு இருக்க. ஆம்பூர் வரப்போகுது, நான் பிரியாணி சாப்ட போறேன். அப்பறம் நீ ஓட்டு"
அடப்பாவி நல்லா லவ் சீன், கெடுத்துட்டான். அவ சாப்பாடு வேணாம்ன்னு சொல்லிட்டா. சாப்டுட்டு மறஞ்சு தம் அடிச்சிட்டே பேசிட்டு இருந்தோம்.

"எதுக்குடா அழுதா அவ வண்டிக்குள்ள?"
"தெரில மச்சி, மாலதியா பாக்க போறேன்ன்னு சொல்லிட்டு போனேன்ல?"
"ஆமா, வீட்ல பேசிருக்காங்கன்னு சொன்ன"
"அவ கூட பேசிட்டு இருந்தத இவ பாத்துடா. ஆன இது வரைக்கும் ஒரு வார்த்தை கேக்கல டா, பத்தாதுக்கு மாலதி கூட இவ வேற ஒரு 15 நிமிஷம் தனியா பேசிட்டு இருந்தா, என்ன பேசினாங்கன்னே தெரில"
"அடப்பாவி, கேக்க வேண்டியது தான"
"தெரிலடா, கேட்டா சொல்லல. மாலதி வந்து, அவ உன்ன ரொம்ப லவ் பண்றா, மிஸ் பண்ணிடாதன்னு சொல்லிட்டு போய்டா. அதுக்குதான் அழறா போல"
"சரி அப்ப இன்னும் கொஞ்ச நேரம் நானே ஓட்டறேன். நீ அவ கூட இரு"
"நண்பேண்டா"

வண்டில ஏறினோம்.
அம்மா கால் பண்ணாங்க.

Friday, February 4, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 11

இந்த மாறி எடத்ல யாரா இருந்தாலும் கோச்சுக்குவாங்க இல்லையா. கண்டபடி திட்டிட்டு போய்டுவாங்க. அது தான் நடக்க போகுதுன்னு எதிர் பாத்து வீணாவ பாத்திட்டு இருந்தேன். அவ அமைதியா கைய கட்டி நின்னுட்டு என்ன பாத்தா ஒரு ரெண்டு செகண்ட். அவ பாத்த பார்வை, தப்பு செய்யறதா இருந்தா கூட தடுத்திடும். கோவம், காதல், ஆசை, எல்லாமும் கலந்த ஒரு பார்வை. எப்பவும் போல என் கண் தாழ்த்து தரைய பாக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பறம் எதிர் பாக்காத ஒன்ன செஞ்சா. இவ மட்டும் தான் இப்டியா? இல்ல எல்லா பொண்ணுங்களும் இப்டியா?

பக்கத்துக்கு டேபிள்ல இருந்து ஒரு சேர் எடுத்து நாங்க உக்காந்து இருந்த டேபிள்ல போட்டு உக்காந்துட்டா! 
மாலதிய பாத்தா, கைய பெசஞ்சிட்டு திரு திருன்னு முழிச்சிட்டு இருக்கா. இந்த மாறி தர்மசங்கடமான சூழ்நிலைல சத்தியமா எனக்கு என்ன பேசன்னு தெரியாதுங்க. அமைதியா இருந்தேன். வீணாவே பேச ஆரம்பிச்சா. 

"என்ன ராகுல், 10 மணிக்கு என்ன வர சொல்லிட்டு சீக்கிரமே வந்துட போல?"
"இல்ல நா மாலதிய பாக்க வந்தேன். சாரி இன்ட்ரோ குடுக்க மறந்துட்டேன். இது மாலதி, என் அத்தை பொண்ணு" " மாலதி, இது வீணா, என்............ லவ்வர்"

இந்த எடத்ல வீணா வோட எக்ஸ்பிரசன் சொல்லியே ஆகணும். சொல்லி இருக்கேன்ல நிமிசத்துக்கு நூறு பாவனை காட்டுவான்னு.  அத்தை பொண்ணுன்னு சொன்னதும் கண்ல ஒரு கோவமும், பொறாமையும், ஏமாற்றமும் . அப்பறம் இது வீணா என்.. ன்னு சொல்லி இழுத்தப்ப ஒரு எதிர்பார்ப்பு. இந்த எக்ஸ்பிரசன் எல்லாம் பாத்துட்டே வாழ்கைய ஓட்டிடலாம் போலயே. 
சரி சரி, மேட்டர்க்கு வருவோம். அப்பறம் அவள ரசிச்சுக்கலாம். நான் எல்லாத்தையும் சொல்லிடலாம்ன்னு நெனச்சு. அம்மா கால் பண்ணது முதல் இவ லவ் பண்ணத சொன்னது வரைக்கும் எல்லாம் சொல்லிட்டேன். அதுவரைக்கும் மாலதி ஒரு வார்த்தை பேசல. 

"சரி ராகுல் நீ வெளிய இரு நான் மாலதி கிட்ட பேசனும்"
"என்ன பேச போற"
"அத சொல்றதா இருந்தா நீ உள்ளயே உக்காந்து இருக்கலாம்ல, வெளிய இரு"

மறுபடியும் பல்ப். அடுத்த பிறவியில் கண்டிப்பா பொண்ணா பொறந்து நாம பல்ப் குடுக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு, எந்திரிச்சு வெளிய போய்ட்டேன். வேற என்ன பண்ண. அங்க உக்காந்து இருந்தா மாறி மாறி பல்ப் வாங்கிட்டு இருப்பேன். அதுக்கு வெளியவே நிக்கலாம்.

ஒரு அரைமணி நேரம் கழிச்சு வெளில வந்தாங்க. சிரிச்சிட்டே. நான் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தேன். 
மாலதி என்கிட்ட வந்து, "ராகுல், ஒரு ரெண்டு நிமிஷம் உன் கிட்ட பேசலாமா?"
நான் வீணாவ பாத்தேன்.
"அவள பாக்காத, ஒன்னும் சொல்ல மாட்டா, அவ கிட்ட நான் சொல்லிட்டேன்."
 "போய் பேசிட்டு வா, நான் வண்டிய அந்த பக்கம் பார்க் பண்ணி இருக்கேன். எடுத்துட்டு வரேன்" அப்டின்னு சொல்லிட்டு வீணா பாட்டுக்கு போய்டா.

"சொல்லு மாலதி"
"உன்ன மிஸ் பண்ணிட்டேன்னு நெனச்சு வருதபடவா? இல்ல உனக்கு வீணா கெடச்சத நெனச்சு சந்தோஷ படவான்னு எனக்கு தெரில ராகுல்"
ஒரு கேள்வி குறி ஓட அவள பாத்தேன்.
"பைத்தியமா இருக்கா ராகுல், உன் மேல அவ. என்ன பண்ண அவள? இப்டி கூட லவ் பண்ண முடியுமான்னு யோசிக்க வெச்சுட்டா. நீ மட்டும் அவள மிஸ் பண்ணனா, உன்ன மாறி ஒரு பைத்தியக்காரன் உலகத்துலயே கிடையாது. ஷி டிசர்வ்ஸ்  மோர் லவ் ப்ரம் யூ. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்"

அவ சொல்ல சொல்ல கண்ணு கலங்கிடுச்சு. அப்பறமா தான் முக்கியமான மேட்டர் சொன்னா.

"அப்பறம் இன்னொரு விஷயம், நாளைக்கு எங்க அப்பா, அம்மா உங்க வீட்டுக்கு போறாங்க. அதுக்குள்ள நீ கோயம்புத்தூர் போய் உன் லவ் மேட்டர் சொல்லிடு. நான் இன்னைக்கு எங்க வீட்ல பேசி பாக்கறேன்" 
"என்ன சொல்ற? அடப்பாவமே. சரி நீ உங்க வீட்ல போக வேண்டாம்ன்னு சொன்னா போதாதா? நான் எதுக்கு போகணும்? நீ போக வேண்டாம்ன்னு சொல்லிடாலே, போ மாட்டாங்கல?"
"அட லூசு, உங்க வீட்ல எதிர் பாத்துட்டு இருக்க மாட்டாங்களா? உன் மேட்டர் போன்லயும் சொல்ல முடியாது, நேர்ல தான் பேச முடியும். அதான் நைட் கெளம்ப சொன்னேன்"
"ஹ்ம்ம், சரி மாலதி... அப்பறம், வீணா என்ன சொன்னா?"
"அத சொல்ல முடியாது, கேர்ள் திங், சரி நான் கெளம்பறேன், ஆல் தி பெஸ்ட்"

தலை சுத்தீடுச்சு. என்ன பண்ண? இன்னைக்கு சனிகிழமை வேற, பஸ் எல்லாம் கூட்டமா இருக்கும், ட்ரெயின் வாய்ப்பே இல்ல.... என்ன பண்ணலாம்? 

போன் அடிச்சது.

"சுனில் காலிங்"

Friday, January 28, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 10

மாலதி சும்மா தான் சொன்னாளா, இல்ல தெரிஞ்சிகிட்டு சொன்னாளா, ஒன்னும் புரில. சொல்லிட்டு இளக்காரமா ஒரு பார்வை பாத்தா. அதுலயே தெரிஞ்சு போச்சு. நாம தான் இப்போ பொண்ணுங்க பாக்கற பார்வைக்கான அர்த்தம் புரிஞ்சுகரதுல P.hD வாங்கிடோமே. ஆனா அப்போ என்ன ரியாக்சன் குடுக்கறதுனு தான் புரில. மன்மதன் ஜோதிகா மாறி நிமிசத்துக்கு 10 ரியாக்சன் நான் தரத பாத்து அவளே ஆரம்பிச்சா.

"சரி சரி ஓவர்ரா டென்ஷன் ஆகாத, உன் ஆள் பேரு என்ன?"
"வீணா... உனக்கு எப்டி?..."
"இதுக்கு என்ன டிடெக்டிவ் ஏஜென்ஸி வெச்சா கண்டுபுடிக்கணும்? ஒரு நாள் காலைல ராகவன் காலனி பஸ் ஸ்டாப் வழியா போனா போதாது? நான் அந்த வழியா தான் ஆபீஸ் போவேன். ஒரு நாள் தனியா நின்னுட்டு நகம் கடிச்சிட்டு இருப்ப, இன்னொரு நாள் ஒரு பொண்ணு கூட நின்னுட்டு வாய்ல இருக்கற பல்ல பூரா காட்டிட்டு இருப்ப"

பொண்ணுங்க கிட்ட பல்பு வாங்கறதே எனக்கு வேலை. இருந்தாலும் அழகான பொண்ணுங்க கிண்டல் பண்ணா கூட அழகா தான் இருக்கு.

"சரி மாலதி, இந்த விசயத்த எப்டி வீட்ல சொல்ல போறேன்ன்னு கவலை பட்டுட்டு இருந்தேன். நமக்கு கல்யாணம் பேசினது கூட ஒரு வகைல நல்லது தான். இத சாக்கா வெச்சு ஓபன் பண்ணிடலாம். எதாச்சும் ஐடியா குடேன் வீட்ல இந்த மேட்டர் ஓபன் பண்ண?"
"என்ன என்னனு நெனச்ச. இங்க பாரு ராகுல், சில விஷயங்கள் சொல்ல முடியாது. அவங்க அவங்க புரிஞ்சுகிட்டா உண்டு. உன் லவ் மேட்டர்ல என்னால ஹெல்ப் பண்ண முடியாது."
"என்ன சொல்ல வர? எனக்கு நேரடியா பேசினாலே புரியாது, இதுல பொடி வெச்சு வேற பேசினா எப்டி புரியும்?. நீ  ஹெல்ப் பண்ணறதும் பண்ணாததும் உன் இஷ்டம். ஆனா சொல்றத தெளிவா சொல்லு"

ஒரு ரெண்டு நிமிஷம் ரோடுல போற வர வண்டிய பாத்துட்டு இருந்தா. எனக்கு ஒரு எழவும் புரில.

"ஹலோ, மேடம். என்ன?"
"பச், ஒன்னும் இல்ல"
"எதையோ மறைக்கற மாறி இருக்கு. சொல்ல வரத தெளிவா சொல்லுமா ப்ளீஸ்"
"சரி என் மனசுல இருக்கறத நான் சொல்லிடறேன். என்ன நீ தப்பா நெனச்சாலும் பரவால்ல....."

"...... ஐ வாஸ் இன் லவ் வித் யூ"

இந்த மாறி முக்கியமா எதாச்சும் சொல்லணும்னா இவளுங்க தமிழ்ல சொல்ல மாட்டாங்க. கண்டிப்பா பீட்டர் தான். அப்போ தான் எதாச்சும் பிரச்சன வந்துச்சுனா, 
" அச்சோ நான் அப்டி மீன் பண்ணல, நீ தான் தப்பா புரிஞ்சுட்ட"ன்னு சொல்ல வேண்டியது.

இவ வேற தனியா ஒரு குண்ட தூக்கி போடறா. வாஸ் இன் லவ்வாம். இதுக்கு என்ன அர்த்தம். இப்போ புரியுது ஆம்பளைங்க 40 வயசுக்கு மேல ஏன் சொட்ட விழுகுதுன்னு. பிச்சுக்க வெச்சிட்டு தான் மறு வேலை பாப்பாங்க.

"என்ன மாலதி சொல்லற?"
"நான் என தெலுங்குல யா சொன்னேன்? யூ ஹியர்ட் வாட் ஐ செட்"
"இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்ன்னு எதிர் பாக்கற மாலதி"
"தெரில ராகுல், உன்ன எனக்கு மொதல்ல இருந்தே ரொம்ப பிடிக்கும். நான் எப்டியாச்சும் சொல்லிடனும்ன்னு எவ்ளவோ முயற்சி பண்ணி இருக்கேன். உன் மர மண்டைக்கு எப்பவுமே ஏறினது இல்ல. நீ சென்னைல தான் இருக்கன்னு எப்பவோ தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷ பட்டேன். எப்டியும் உன்ன பாத்து சொல்லிடனும்ன்னு. ஆனா அன்னைக்கு உன்ன அந்த பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணோட பாத்ததும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரில. நீ லவ் பண்றியான்னும் தெரில. இப்போ உங்கிட்ட ஒன்னு சொல்லணும்ன்னு சொல்லி திரு திருன்னு முழிச்சப்ப தான் தெளிவா தெரிஞ்சது. இதெல்லாம் நான் உங்கிட்ட ஏன் சொல்றேன்னு கூட எனக்கு தெரில. நான் சொல்றத மொதலயே சொல்லிருக்கணும், இப்போ என்ன பண்ணன்னு எனக்கு தெரில"

"எனக்கு என்ன ரியாக்ட் பண்ணன்னே தெரில மாலதி"
"இன்னைக்கு நான் ரெட் கலர் போட்டுட்டு வந்ததே உனக்கு பிடிக்கும்ன்னு தான் "

அவ இத சொல்லி முடிக்கவும் வீணா எங்க டேபிள் கிட்ட வரவும் சரியா இருந்தது.

அப்பறம் என்ன நடந்ததா? அட போங்க பாஸ்.....

Thursday, January 13, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 9

"அதில்லம்மா ஒரு சின்ன வேலை அதான் கிளம்பிட்டு இருக்கேன்"
"சரி வீட்ல சொல்லிட்டு போக வேண்டியது தான"
"ஆபீஸ்ல இருந்து கெளம்பும் போது தான் தெரிஞ்சதுமா, அதான்"
"சரி இழுக்காத, இதுக்கெல்லாம் சேத்து ஒருத்தி வருவா, அப்ப என்ன பண்ண போறன்னு பாரு"

ஒரு செகண்ட், அம்மா கிட்ட வீணா பத்தி சொல்லிடலாமான்னு பாத்தேன், அப்பறம் போன்ல பேசறது சரி வராதுன்னு விட்டுட்டேன்.

"சரிம்மா என்ன சர்ப்ரைஸ்?"
"போன வாரம் உங்க மாமா வீட்டுக்கு வந்து இருந்தாருடா, உனக்கும் மாலதிக்கும் பேசி முடிச்சிருக்கோம், நாளைக்கு அவள போய் பாரு. பேசு, அப்பறம் ஆக வேண்டியத பாக்கலாம்"

எனக்கு மயக்கம் வராத குறை. எனக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேக்கல. கோவம். எரிச்சல். யார கேட்டு முடிவு பண்ணாங்க. அவ கிட்ட என் நம்பர் குடுத்தது பத்தியும், நாளைக்கு அவளே கூப்டுவானும் சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு ஒன்னுமே மண்டைல ஏறல. மனசு புல்லா வீணா வீணா தான். ஒரு வழியா பேசிட்டு வெச்சேன்.

எப்பவும் சென்னை வரும் போது தலைய சுத்தி, வயதுக்குள்ள பட்டாம்பூச்சி பறந்துட்டு இருக்கற மாறி ஒரு உணர்வு இருந்துட்டே இருக்கும், வீணாவ பாக்க போறோம்ன்னு. இப்போ அதே பட்டாம்பூச்சி வயத்துல புளிய கரைச்சிட்டு போய்டுச்சு. வீணா கிட்ட சொல்லுவோமான்னு யோசிச்சு, வேணாம்ன்னு விட்டுட்டேன். எது நடந்தாலும் விடிஞ்சதுக்கு அப்பறம் சொல்லிக்கலாம். பாவம் , நாளைக்கு என்ன பாக்க போறேன்ங்கற சந்தோஷதுல, அவ இன்னைக்கு நைட் கொஞ்சம் நிம்மதியா தூங்கட்டும்.

காலைல ஒரு 7 30 க்கு மாலதி கால் பண்ணா. இங்க மாலதி பத்தி சொல்லணும். ரெண்டு பேருக்கும் பெரிய பழக்கம் இல்ல. சும்மா பாத்தா, நலம் விசாரிப்புகள் மட்டும் தான் நடக்கும். அதுவும் அவள பாத்து 3 இல்ல 4 வருசத்துக்கு மேல இருக்கும். கோயம்புத்தூர்ல அவ படிச்சிட்டு இருந்தப்ப பாத்தது. இப்போ தான், அதுவும் இந்த பீலிங் ஓட பாக்க போறேன். 9 மணி அதே பில்லர் ஹாட் சிப்ஸ்க்கு வர சொன்னா. வாழ்க்கைல நல்ல விஷயம், நேர் எதிரான விஷயம் எல்லாமே ஒரே எடத்துல தான் நடக்கும் கவனிச்சி இருக்கீங்களா? எனக்கும் அப்டியே தான். 

இந்த மீட்டிங்க்கு முன்னாடி,  வீணாவோட சிரிச்ச முகத்த பாக்கணும்ன்னு தோணுச்சு, ஏன்னா இது தெரிஞ்ச அப்பறம் எப்டி ரியாக்ட் பண்ணுவான்னு தெரில. அவள அதே பஸ் ஸ்டாப்ல போய் பாத்தேன். தூங்கி எழுந்த உடனே பல்லு வெளக்காம, குளிக்காம எப்டி தான் இவ இவ்ளோ அழகா இருக்காளோ. நாம தான் பரதேசி மாறி இருப்போம். 

அந்த கண்ல சத்யமா என்னமோ இருக்குங்க.  பேசும் போது கண்ண சுருக்கி, விரிச்சு, யப்பா யப்பா. அதான் பசங்க நார்மல்லா லவ் பண்ணும் போது அதிகமா பேசறதே இல்ல போல. இவ பண்ற ஜாலங்கள்ல மெய் மறந்து எங்க பேச? 
அவ கிளம்பி இன்னும் 2 மணி நேரத்ல வரேன்ன்னு சொல்லிட்டு போனா. 

அந்த கேப்ல மாலதிய பாக்க போய்ட்டு வந்திடலாம்.

எப்பவும் போல நான் தான் வெயிட் பண்ணேன். எல்லா பொண்ணுங்களும் இப்டி தானோ? ஒரு சந்தேகம், எங்கயாச்சும் பொண்ணுங்க வெயிட் பண்ணி யாராச்சும் பாத்திருக்கீங்களா? கஷ்டம் தான். எல்லாம் நம்ம நேரம். அதோ அவ வரா.

என் நேரம் இவளும் செகப்பு கலர் சுடி. வீணா மட்டும் பாத்தா, அவ்ளோ தான். எனக்கும், மாலதிக்கும் பொறந்த கொழந்தைக்கு பேர் வெச்சி, காது குத்தர அளவுக்கு போய்டுவா.

"ஹாய் ராகுல்"
"வா மாலதி எப்டி இருக்க?"
 எப்பவும் போல நலம் விசாரிப்புகள். 

கொஞ்சம் பாலிஷ் ஆய்டா. அட சும்மா பாத்தேன்ங்க. லவ் பண்ணா சைட் அடிக்க கூடாதா என்ன? சரி அத விடுங்க. பேசிகிட்டே இருந்தா, வேலை மெட்ராஸ், இத்யாதி இத்யாதி....

"மாலதி ஒரு நிமிஷம், ஒன்னு சொல்லணும் உன்கிட்ட"

கைல இருந்த காபி கிளாஸ்ஸ கலக்கிட்டே ஆரம்பிச்சேன். எப்டி எடுத்துப்பாளோ தெரியாது. 

"என்ன யூ ஆர் இன் லவ், அவ்ளோ தான"

என் கை காபி கலக்குவதை நிறுத்தியது, என் இதயம் ஒரு நிமிஷம் துடிக்க நிறுத்தியது, என் மூளை சிந்திக்க நிறுத்தியது. என் கண் ஆச்சர்யத்தில் விரிந்தது. 
இவளுக்கு எப்டி????


Tuesday, January 11, 2011

2010 - சில சந்தோசங்கள்

எல்லாரும் திரும்பி பாக்கிறேன்னு எழுதினாங்க. ஆனா நான் திரும்பி பாத்தா ஜன்னல் தான் தெரிஞ்சது. ஹி ஹி அதனால தான் டாபிக் மாத்திட்டேன். இந்த தொடர் பதிவு எழுத அழைத்த அன்பு, பாசம், வீரம், பொறுமை, அழகு எல்லாம் நிறைந்த அருண் அவர்கள் ( ஹி ஹி, நம்ம பேரு இவருக்கு இருக்கறதுல எவ்ளோ நன்மை இருக்கு பாருங்க) வாழ்க. ஒன்னும் பெருசா படிப்பினயோ, வாழ்க்கை பாடத்தையோ கத்து குடுகலங்க இந்த 2010 . ஆனா அலுங்காம வந்து கஷ்டத்த கூட தராம போய்டுச்சு. அதானங்க ரொம்ப முக்கியம். 

நான் ப்ளாக் ஆரம்பிச்ச வருஷம், வேலை கெடச்ச வருஷம்ன்னு அருண் அண்ணன் மொக்க போட்ட மாறி நான் போட விரும்பல (யாராச்சும் உண்மைய சொல்லணும்ல). அதனால நான் ரசிச்ச சில நேரங்கள், மனிதர்கள்  பத்தி சொல்றேன். ( வாடா, நெனச்சேன்... ரெண்டு மூணு பொம்பள புள்ளைங்க பேரு வருமே, அத சொல்லாட்டி தூக்கம் வராதுல ).

ரொம்ப முக்கியமான நிமிடம் - தல சச்சின் 200 * அடிச்ச நிமிடம்

ஆபீஸ்ல இருந்த நேரத்த வெறுத்த நிமிடம். தல ஆடின அழக பாக்க முடியலேன்னு தான். ஆனா ஆபீஸ் சீட் நுனில உக்காந்திருந்தேன். அடிச்சதும் செம சந்தோசம். சுத்தி இருந்த வெள்ள காரன் எல்லாம் ஒரு மாறி பாக்கறான். அதுவாங்க முக்கியம், தல சரித்திரம் படைச்சு இருக்கு, இவனுங்க கெட
க்கறாங்க.
ஹி ஹி ஆனா  இன்னும் ஒரு 50 அடிச்சு 250 * போட்ருந்தா நல்லா தான் இருக்கும் இல்ல. இன்னும் 10 வருஷம் ஆடுங்க தல. எவன் என்ன சொல்றான்னு பாக்கலாம்.
இப்படிக்கு நீங்க அவுட் ஆனதும் டிவி சேனல் மாற்றுவோர் சங்கம்.

கமான் வெல்த் தங்கங்கள்

ஆஸ்திரேலியாக்கு பின்னாடி இரண்டாம் இடம் கெடச்சது பெரிய சந்தோசம் பாருங்க. இந்த இங்கிலீஷ்காரங்க, அதாங்க இங்கிலாந்து பயபுள்ளைங்க 3 வது இடம். ஹப்பா என்ன சந்தோசம். அப்டியே ஒலிம்பிக்ல ஒரு 10 , 15 வாங்குங்கப்பா. இதான் ஒவ்வொரு இந்தியனின் கனவு. 
  

ரொம்ப வருஷம் கழிச்சு ரசிச்சு பாத்த படம் - விண்ணை தாண்டி வருவாயா

ஒரு காதல் கதைய இதுக்கு மேல அழகா எவனாலயும் சொல்ல முடியாது, இது என் கருத்து. கூடவே தல மியூசிக் வேற. கேக்கணுமா. அணு அணுவா ரசிச்சு பாத்தேன். 

"இப்போ என்ன சொல்ல வர ஜெஸ்ஸி"
"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு கார்த்திக், ஆனா இது எனக்கு வேணாம், புரியுதா, புரியுதாடா"
ஹம்ம், நீங்க சொல்றது எல்லாம் புரிஞ்சா தான் ஆம்பளைங்க பாதி பேரு லூசு ஆகாம இருப்பாங்களே. 

அப்பறம் மன்னிப்பாயா பாட்டு, இப்போ கேட்டாலும் ஒரு சிலிர்ப்பு, யப்பா என்ன வரிகள் ஒவ்வொன்னும். 
"மேலும் மேலும் உருகி உருகி, உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்" கிளாஸ்... வேற என்ன சொல்ல. லவ் பண்ணா இப்டி உருகி உருகி பண்ணனும். என்ன சொல்றீங்க?

ரசித்த பெண்கள் ( வா வா, இதுக்கு தான் வைடிங்)
சமந்தா ருத் பிரபு


"நந்தினி ஹீரோயின் நீ தான், ஒத்துக்க மாட்டன்னு தெரியும். டிரஸ்ட் மீ, நீ தான் பண்ணனும்"
விண்ணைத்தாண்டி வருவாயால சிம்பு கேப்பாரு, சமந்தா கிட்ட, அப்போ ஒரு சிணுங்கல் சிணுங்கி, 
"ஹே, யாரு கிட்ட கேக்கணும் சொல்லு" அப்டின்னு சொல்வாங்க பாருங்க, அப்போ முடிவு பண்ணோம் அடுத்த மன்றம் சமந்தாவுக்கே அப்டினு. ஹி ஹி ஆமாங்க என்ன மாறியே இன்னும் கொஞ்சம் பேரு சுத்தீட்டு இருக்காங்க மெட்ராஸ்ல. ரசிச்ச பண்களின் டாப் இவங்க தான்.

சாய்னா நெக்வால்


நல்ல திறமைங்க அக்கா கிட்ட, சாரி தங்கச்சி கிட்ட. ஆனா இவங்கள அக்கான்னு பெருமையா சொல்லலாம். நாம எல்லாம் பொட்டி தட்டிட்டு இருக்கோம், இவங்க பாருங்க கமான் வெல்த்ல தங்கம், ஹாங் காங்ல தங்கம். தங்க மங்கை. கலக்கிட்டு இருக்காங்க.  ஒலிம்பிக்ல அடுத்த தடவ மெடல் வாங்கிடுங்க அக்கா. ப்ளீஸ்.
 
இன்னும் இருக்காங்க, இதுக்கு மேல சொன்னா அடி தான் விழும். அதனால என் உரையை, அதாவது பதிவை முடிக்கிறேன்.

அரசியல் நிமிடங்கள், இன்னும் பல பல சொல்லிட்டே போலாம், ஆனா இப்போ போட்டு இருக்கறது தான் டாப் ஆப் தி லிஸ்ட். 

இது போக என் வாழ்க்கைல சொல்ற மாறி ஒன்னும் நடக்கலங்க, உங்கள போலவே நானும் 115 கோடில ஒருத்தன். அவ்ளோ தான். 

தொடர் பதிவுனா, யாரச்சையும் தொடர சொல்லணும்ல. நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். வாங்க பங்காளி.

படங்கள் நன்றி -Galata.com 

Friday, January 7, 2011

எனக்கு பிடித்த 10 பெண்குரல் பாடல்கள் - தொடர் பதிவு

 எனக்கு பிடித்த 10 பெண் குரல் பாடல்கள் பத்தி எழுத சுபத்ரா பேசுகிறேன் சுபத்ரா அழைத்து (மிரட்டி) இருந்தாங்க. ( அவங்க மட்டும் பேசவேண்டியது தான, நம்ம வேற பேச சொல்லிட்டு ). நமக்கு பிடித்த 10 பெண்கள்ன்னா இஷ்டத்துக்கு 10 பதிவு எழுதலாம். ஆனா இவங்க பாடிய பாட்டு மட்டும் தான் எழுதனுமாம். என்ன கொடுமை சரவணன் இது. அதனால் எனக்கு பிடித்த நடிகைகள் பாடிய (வாயசைத்த) பாடல்கள் சிலத சொல்றேன்.

காலேஜ் டைம்ல ஜோ வோட ரசிகன் நான். மன்றம் எல்லாம் வெச்சிருந்தேன் ஹி ஹி. அதனால மொதல் மூணு பாடல்கள் அவங்களுக்கே. தமிழில் வாலியில் அறிமுகமாகி இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் (அப்போ நான் பாப்பா :) ). இப்போ நடிகாதனால கொஞ்சம் வருத்தம்.

1 . காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்....
படம் - பூவெல்லாம் உன் வாசம்
வரிகள் - வைரமுத்து 
இசை - வித்யாசாகர் 
பாடியவர் - சாதனா சர்கம் (இவங்க எனக்கு பிடித்த பாடகி.. யப்பா என்ன குரல்..)
பிடித்த லைன் - புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை. ( தெரியவே தெரியாது, தெரிஞ்சாதான் உசார் ஆகிடலாமே)

2 . மன்மதனே நீ கலைஞன் தான்...
படம் - மன்மதன் 
வரிகள் - சிநேகன் 
இசை - யுவன் 
பாடியவர் - மறுபடியும் சாதனா சர்கம்
பிடித்த லைன் -  அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள் (கொல்?)

3 . ஒன்றா ரெண்டா ஆசைகள்..
படம் - காக்க காக்க (இன்னொரு ரொம்ப புடிச்ச பாட்டு உயிரின் உயிரே...., ஆல் டைம்)
வரிகள் - தாமரை ( இவங்க தான்னு நெனைக்கறேன்)
இசை - ஹாரிஸ்
பாடியவர் - பாம்பே ஜெயஸ்ரீ (!)
பிடித்த லைன் - கண்களை நேராய் பார்த்து பேசும் உன் இனிய கண்ணியம் பிடிக்குதே ( அடடா அக்காவுக்கு என்ன அறிவு )


அடுத்து கன்னடத்து குயில் (பைங்கிளி தான் சொல்லிட்டாங்களே) திவ்யா ஸ்பந்தனா, அதாங்க நம்ம குத்து ரம்யா. பொல்லாதவன்ல மயங்கினேன், வாரணம் ஆயிரம்ல ரசித்தேன். மன்றம் சென்னைல இயங்கிட்டு இருக்கு 

4 . அனல் மேலே பனித்துளி...
படம் - வாரணம் ஆயிரம் 
வரிகள் - தாமரை 
இசை - ஹாரிஸ் 
பாடியவர் - சுதா ரகுநாதன்
பிடித்த லைன் - உனது இரு விழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே (அப்பறம் அடி விழுந்திருக்கும்)

5 . நிபுனா நிபுனா என் நிபுனா
படம் - குத்து 
வரிகள் - சத்யமா தெரில 
இசை - ஸ்ரீகாந்த் தேவா 
பாடியவர் - மறுபடியும்,மறுபடியும் சாதனா சர்கம்
பிடித்த லைன் -உன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன், 
நீயும் எனகென பிறந்ததை உணர்ந்தேன். (இன்னும் எத்தன நாளைக்கு இதே டயலாக் இருக்குமோ?)


யப்பா இப்போ தான் 5 முடிஞ்சிருக்கா? இன்னும் பாதி தூரம் இருக்கு போலயே.. 
ஹுஸ் அப்பா,முடியல... தொடர் பதிவு ஆரம்பித்து எல்லாரையும் டரியல் ஆக்கும் அருண் அண்ணன் ஒழிக..

அடுத்து க்யூட் பொண்ணு சமந்தா ருத் பிரபு. நம்ம பாணா காத்தாடில நடிசாப்ல.. செம க்யூட் இல்லங்க? தற்போது அதிகம் சைட் அடிக்க பட்டு கொண்டு இருப்பவர்.  மன்றம் வேலை நடந்துட்டு இருக்கு.

6 .  என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது...
படம் - பாணா காத்தாடி 
வரிகள் - நா. முத்துக்குமார்
இசை - யுவன் 
பாடியவர் - மறுபடியும்,மறுபடியும் மறுபடியும் சாதனா சர்கம் ( ஹி ஹி )
பிடித்த லைன் - என்ன அதை இதயம் கேட்டது.... காதல் என உயிரும் சொன்னது அன்பே... ( சொல்லும் சொல்லும், அப்பறம் கொல்லும் கொல்லும்)


மாஸ்கோவின் காவிரில இருந்து பாட்டு போடமுடிலன்னு வருத்தம் தான்...என்ன பண்ண...

அடுத்து நான் குழந்தையா இருகச்சே பிடித்த நடிகை ரேவதி அக்கா. அவங்களுக்காக ரெண்டு பாட்டு.

7 . நேற்று இல்லாத மாற்றம்..
படம் - புதிய முகம் 
வரிகள் - வைரமுத்து 
இசை - இசைப்புயல்  
பாடியவர் - சுஜாதா 
பிடித்த லைன் - இதுதான் காதல் என்பதா,இளமை பொங்கி விட்டதா  இதயம் சிந்தி விட்டதா  (எந்த சொல்ல, எல்லாம் விதி.. அனுபவி)
 
 8. வான் மேகம், பூ பூவாய் தூவும்.
படம் - புன்னகை மன்னன்
இசை -  இசைஞானி
இந்த படத்ல ரொம்ப பிடிச்ச பாட்டு இது இல்ல, அதுக்காக இசைஞானி பாட்ட விட முடியுமா? அதுக்காக தான் இந்த பாட்டு.

அப்பறம் எல்லாத்தும் சொல்லிட்டு தல இசைல பாட்டு சொல்லனா அப்பறம் என்ன ரசிகன் நான்? அதுக்காக ரெண்டு பாட்டு.

9 .  மருதாணி மருதாணி
படம் - சக்கரகட்டி 
இசை - இசைப்புயல்
வரிகள் - நா.முத்துக்குமார் 
பாடியவர் - மதுஸ்ரீ
பிடிச்ச லைன் - காதலி கை நகம் எல்லாம், பொக்கிஷம் போலே அவன்  சேமிப்பான் ( ஹி ஹி என்னத்த சொல்ல, நல்லா இரு )10 . தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை.
படம் - மிஸ்டர். ரோமியோ 
இசை - இசைப்புயல் 
வரிகள் - வைரமுத்து 
பாடியவர் - சங்கீதா
பிடிச்ச லைன் - தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை.. (இப்போ தான் ரொம்ப சரியா சொல்லிருக்காறு)

அப்பறம் அனுஷ்கா ஷெட்டி ரொம்ப புடிக்கும். அவங்க பாட்டு தான் போட முடில, (எதுவும் இல்ல). ஒரு படம் ஆச்சும் போடறேன்.
 

அப்பாடி முடிச்சிட்டேன். எல்லாரும் பிடிச்ச பாடல்கள் தான எழுத சொல்றாங்க. எனக்கு பிடிக்காத 10 பாடல்கள் பத்தி எழுத நம்ம அருண் அண்ணனை அழைக்கிறேன் (நாங்க வித்யாசமா யோசிப்போம்). அவர் எழுதாட்டி, அவர் கூட ஆறும் பேச கூடாது, ஆறும் பழக கூடாது, ஆறும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, ஆறும் அவர் ப்ளாக் பக்கம் போக கூடாது. இது சொம்போட இருக்கற நாட்டாமை பன்னிக்குட்டி அண்ணன் சொன்ன தீர்ப்பு.

படங்கள் நன்றி - India Glitz
                                  Kollywood today


Thursday, January 6, 2011

அது ஒரு காதல் காலம் பகுதி 8

என்ன தான் லவ் பண்ணாலும், பொண்ணுங்க பொண்ணுங்க தான். அவங்க பேசிக் குணாதிசயங்கள் சிலது மாறவே மாறாது. "2 வருசத்துக்கு முன்னாடி, நான் சமைச்ச ஆம்லேட்ல உப்பு இல்லன்னு நீங்க சண்ட போடீங்கள்ள", அப்டினு சொன்னா நாம என்ன பாஸ் பண்ண. எல்லா விசயமும் எப்டி தான் ஞாபகம் இருக்குதோ?. என்ன பண்ண இவளும் அப்டி தான்.

"டாய் நான் தான் இங்க குத்து கல்லு மாறி உக்காந்து இருக்கேனே, அங்க என்ன பார்வை"
"இல்ல, அது வந்து, ஒன்னும் இல்ல வீணா, சும்மா பாத்தேன்" (மாட்டிகிட்டேன்)
"யார பாத்த உண்மைய சொல்லு, அந்த செகப்பு சுடி தான, யாரு செகப்பு போட்டாலும் பின்னாடியே போய்டுவியே"
"அதெல்லாம் இல்ல வீணா, நாம லவ் பண்ண ஆரம்பிச்ச அப்பறம் நான் யாரையுமே பாக்கறதில்ல"
"பொய் சொன்னா பொருந்த சொல்லணும்,  ரெண்டு மாசம் முன்னாடி, cafe day ல, அங்க கவுன்ட்டர்ல நிக்கற பொண்ணு கிட்ட வழிஞ்சிட்டு இருந்தியே.. நான் பாத்தேன்"
(என்ன சொன்னாலும் மாட்டிப்பேன், எனக்கு அங்க போனதாவே ஞாபகம் இல்லையே!)

அப்பறம் என்ன நடந்ததா? அட போங்க.... சண்டை தான்... ஊடல் இல்லாம காதலா? ஆனா கண்டிப்பா ஒவ்வொரு சண்டைக்கு அப்பறம் லவ் அதிகமான மாறி ஒரு பீல். 
ஆனா சில விஷயங்கள்ல அவ சராசரி பொண்ணு இல்லன்னு காட்டுவா. லவ் பண்ணா அடிக்கடி லவ் யூ சொல்லணும், நேரம் காலம் இல்லாம பேசனும் அப்டிங்கறது எழுதபடாத விதி இல்லையா. நானும் அப்டி தான் நெனச்சிட்டு இருந்தேன். அன்னிக்கு வரைக்கும்...

"என்ன வீணா, ரெண்டு நாளா சரியாவே பேசல?"
"வேலை இருக்குடா"
"என்ன விட வேலை தான் முக்கியமா உனக்கு?"
"அப்டி இல்ல, ஒரு நிமிஷம் இரு..."
"பாரு மறுபடியும், நான் சொல்றத கவனிக்கறதே இல்ல நீ!"
"எத்தன டைம் சொல்றது உனக்கு, அறிவில்ல? நான் தான் வேலை இருக்குன்னு சொல்றேன்ல, புரியாம வழிஞ்சிட்டு இருக்க? உங்கிட்ட பேசவா இல்ல வேலை செய்யவா சொல்லு? லவ் பண்ணறேன், உண்மை தான், அதுக்காக எப்பவுமே கொஞ்சி கிட்டே இருக்க முடியுமா? ரெண்டு நாள் பேசாட்டி ஒன்னும் செத்து போய்ட மாட்டேன். போன் கட் பண்ணு"

ரெண்டு நாள் பேச மாட்டான்னு நெனைகரீங்களா? ஆபீஸ் டைம் முடிஞ்சு 5 நிமிஷம் தான்.... 
வீணா காலிங் ....
"சொல்லு"
"என்னடா கோவமா?"
"இல்ல சந்தோசம், எனக்கு வேலை இருக்கு, போன் பேச நேரம் இல்ல"

எத்தன நேரம் இந்த ரோசம் இருக்கும்ன்னு நெனைகறீங்க?.. அதாங்க எனக்கு டவுட், இதுவே நான் சண்ட போட்டு இருந்தேன்னு வைங்க, அவள சமாதானம் பண்ற குள்ள அடுத்த உலக போர் வந்திடும். ஆனா அவ சண்ட போட்டா, 5 நிமிஷம் தாங்காது. உடனே நான் சமாதனம் ஆய்டுவேன். என்னனே தெரிலங்க...

"இல்லைடா எப்பவுமே கொஞ்சிகிட்டே இருக்க முடியுமா செல்லம். நீயும் முக்கியம், வேலையும் முக்கியம் இல்லையா"
"சரி இப்போ என்னாங்கற?"
"என்ன சொன்னா சமாதானம் ஆவன்னு எனக்கு தெரியும்..... என்ன ரெடியா?"
"வேணாம் போ"
"என் செல்லம் இல்ல....."
"இல்ல"
 அதுக்கப்பறம் சொல்லறதில்ல... நீங்களே யோசிச்சுகங்க....

 அப்பறம், முக்கியமா அவ தந்த முதல் முத்தம்.  விடிய காலைல, யப்பா இப்போ நெனைச்சாலும் எப்டி தான் தைரியம் வந்ததோன்னு யோசிப்பேன். ஒரு தடவ அவ கிட்ட கேட்டேன். அவ சொன்ன பதில், எனக்கும் கிஸ் பண்ணனும் போல இருந்தது.

"தெரிலடா, உன்னோட மெசேஜ் பாத்தேன். எப்டியும் நீ வந்து எங்க ரூம் பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்ல நிப்பனு தெரியும். இங்கயே பாத்துக்கலாம்ன்னு நெனச்சிட்டு தான் படுத்தேன். எப்போ எழுந்தேன், எப்போ அங்க வந்தேன்.. எதுமே ஞாபகம் இல்ல, என்ன நெனச்சு முத்தம் தந்தேன், சத்யமா ஞாபகம் இல்லடா.... எல்லாம் உன்னால தான்"
அவ கண்ல ஒரு வெக்கம், ஒரு குறுகுறுப்பு....  

இந்த வாரம் எங்க எல்லாம் போலாம்ன்னு பிளான் பண்ணிட்டே பெங்களூர்ல இருந்து  மெட்ராஸ் பஸ் ஏறினேன். அம்மா கால் பண்ணாங்க. வழக்கமான விசாரிப்புகள்.அப்பறமா...

"சரி, இந்த வாரம் ப்ரீயா தான இருக்க, எடுதுவும் வேலை இல்ல தான?"
"இல்லமா சொல்லு"
"மெட்ராஸ் வரைக்கும் போய்ட்டு வந்திடு, உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் "
"சர்ப்ரைஸ்சா, நான் அங்க தான் போய்ட்டு இருக்கேன்" (ஓட்ட வாய்)
"எதுக்குடா, பெங்களூர்ல வேலைன்னு சொல்லிட்டு இன்னும் ஊர் சுத்தீட்டு தீன் இருக்கியா? இன்னும் பொறுப்பு வரல உனக்கு"
.... 
....... சில்வண்டு சிக்கிடுச்சு......