என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Friday, October 29, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 6

எப்பவும் காலேஜ் முடிஞ்சதும் நேரா ஹாஸ்டல் மெஸ் போய் டீ சாப்டுட்டு, அங்க பசங்க கூட கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு அப்பறம் ஹாஸ்டல் போவோம். அன்னைக்கும் அதே மாறி, காலேஜ் முடிஞ்சதும் மெஸ்ல டீ சாப்டுட்டு இருந்தோம், நானும் விஜயும்.  அப்போ நரசிம்மா மட்டும் வந்தான்.

நரசிம்மா, வேலூர் பையன். செல்லமா சிம்மா. அவங்க அப்பா சொன்னதுக்கு வேண்டி இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தான், அவனுக்கு ஆனா ஆர்ட்ஸ் படிக்கணும்னு ஆசை. இவனுக்கு DD வந்திருச்சுன்னா, காலேஜ்ஜே குதூகலமாய்டும். DD வந்த அன்னைக்கு கண்டிப்பா சுத்த போவோம். ஒரு தடவ இவன் DDய பேங்க்ல மாத்த முடியாது, பேங்க்லயே பணம் இல்லனு சொல்லிடாங்கனா பாத்துக்கங்க ( கற்பனை இல்லீங்க, நெஜம்மா). 

"என்னடா பசங்க யாரையும் காணோம்? நீ மட்டும் வர" னு விஜய் கேட்டான்.
"நாளைக்கு ரீ எக்ஸாம்ல அதனால படிக்கறேன்னு எல்லாரும் கட், ஹாஸ்டல்ல இருப்பாங்க" 

அட பாவிங்களா, மத்யானம் கட்டா?  அப்போ எல்லாரும் படிச்சு பாஸ் பண்ணிடுவான்களோ? நான் மட்டும் பெயில் ஆய்டா என்ன பண்ண? 
இப்டி நெனச்சிட்டே ஹாஸ்டல் போய்ட்டு இருந்தேன். ஆனா நம்ம பசங்க என் நெனப்ப தவிடு பொடி ஆக்கீடாங்க. ஹாஸ்டல் குள்ள வரும் போது எல்லாரும் செம சந்தோசமா இருந்தாங்க. என்னடா ஆச்சு, எக்ஸாம் கான்செல் பண்ணிட்டாங்களானு JP கிட்ட கேட்டேன்.(அடுத்து இவன பத்தி)

"அதெல்லாம் இல்ல மாப்ள, அன்னிக்கு ________ படம் ஹாஸ்டல்ல பாத்ததுக்கு apology எழுதினோமே, இன்னைக்கு அதெல்லாம் முறி அடிக்கற மாறி நம்ம பசங்க சாதன பண்ணிட்டோம்" 

பக்கி பய புள்ளைங்க, எக்ஸாம் படிக்கறேன்னு லீவ் போட்டுட்டு, எல்லாரும் சேந்து, அதே ஹாஸ்டல் டிவில பிட் படம் போட்டு பாத்திருக்காணுங்க. இத பண்ணிட்டு என்னமோ அக்னி ஏவுகணை விட்டு சாதன பண்ண மாறி பெருமை வேற. எனக்கும் விஜய்கும் என்ன கடுப்புன்னா, எங்கள விட்டுட்டு பாத்துட்டானுங்க தான். ( எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான). அதுக்கப்றம் படம் எப்டினு பேசி செம காமெடி(அதெலாம் சென்சார்).

அதுக்கப்பறம் படிக்க ஆரம்பிச்சிருந்தா கூட apology எழுதிருக்க மாட்டோம்.
நம்ம லீடர் வந்தாரு, கைல கைப்பந்து (volley ball ங்க, நாங்க எல்லாம் ஏதோ சுமாரா வெளாடுவோம்)

"மச்சி, வாங்கடா ஒரு ஒன் ஹவர் விளையாடலாம்"  
எப்டியும் ரகு, விஜய் வர மாட்டாங்க, படிப்பாளிங்க. நான் தான் சிக்குவேன்.

"என்னடா எல்லாம் படிச்சாச்சா, மத்யானம் வேற கட் போட்டு படிச்சிட்ட, நாளைக்கு நீ பாஸ் பண்ணிடுவ, இப்போ தான் நான் புக்கே தொடரேன்"
"ஆமா ஆமா, நாங்க படிச்ச லட்சணம் சகிலா சேச்சி கிட்டையும் அந்த இங்கிலீஷ் பிகர் கிட்டையும் தான் கேக்கணும் (அப்போ ரெண்டு படமா?), கொஞ்ச நேரம் மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்டா அப்றம் படிக்கலாம்" ( ஆமா  இப்போ படிக்க ஆரம்பிச்சாலே வெளங்காது)

அப்போ கூட அவன் பேச்ச கேக்கமா இருந்தா apology  எழுதிருக்க மாட்டோம். என்ன பண்ண சனியன்ன தூக்கி பனியன் குள்ள போட்டுட்டு போனோம் (விஜயும், ரகுவும் வரல).
நல்லா விளையாண்டு முடிச்சிட்டு, செம சத்தமா பேசிட்டு வந்திட்டு இருந்தோம். 

நான் சொன்னேன் "மச்சி வார்டன் வராருடா"
"வந்தா என்ன, நம்ம படம் பாத்தத அவர் கண்டு புடிக்கவே முடியாது"இது JP.
"குட் ஈவ்னிங் சார்" ( எங்க அப்பன் குதிர் குள்ள இல்லையே!)
"ஏன்டா, நாளைக்கு எக்ஸாம் தான, பால்லும் கையுமா இருக்கீங்க"
"இல்ல சார் சும்மா ஒரு கேம் போட்டோம், இப்போ போய் படிக்கணும்" இது சுனில்.
"ஆமா ஆமா, நீ படிக்கற லட்சணம் தான் எனக்கு தெரியுமே" (வார்டன்னும் நெல்லை தான், அதனால சுனில் மேல தனி பாசம்.)
"மொதல் வேலை உன் வீட்டுக்கு கால் பண்ணி சொல்றேன், உங்க பையன் என்ன பண்ணிட்டு  இருக்கான் பாருங்கனு"(இப்போ தெரியுதா பாசம்?)
"எல்லார் வீட்டு நம்பர்ரும், எழுதுங்கடா, நாளைக்கு பரிட்சய வெச்சுட்டு வெளாட்டு கேக்குதா?"
 
ஒரு 2 மணி நேரம் செம திட்டு, அப்பறம் apologyல முடிஞ்சதுனு சொல்லணுமா?
எல்லாம் முடிஞ்சு சாப்டுட்டு  புக் எடுக்கும் போது 10 மணி. நல்லா தான் படிச்சிட்டு படுத்தோம்.

அதுக்கப்றம் நம்ம ஆள் ஒருத்தன் பண்ண காரியம், ரூம் குள்ள எவனுமே தூங்க முடில. என்னவா?........... சொல்றேன்.

Thursday, October 28, 2010

அடுத்த சுற்றுலா: பாலி பகுதி 1

நாம தான் அங்க இங்கனு இல்லாம கண்டபடி ஊர் சுத்தி இருக்கோமே, அடுத்து என்ன போடலாம்னு ஒரே கொழப்பமா இருந்தது. அப்பறம் நம்ம அருண் பிரசாத் அண்ணே அவங்க பாராசூட் அனுபவம் பத்தி எழுதி இருந்தாங்க. அத பாத்த அப்பறம் தான் சரி இத போடலாம்னு முடிவு பண்ணேன். அவர் அனுபவத்த இங்க  படிங்க.
-------------------------------------------------------------------------------------------------------
" மச்சி டீ அடிக்க போலாம் வா" கூப்டது கோகுல்.
" என்னடா திடீர்னு கோயம்புத்தூர் பக்கம்?"
"இல்லடா இன்னும் ரெண்டு வாரத்துல சிங்கப்பூர் போறேன், என்னோட பாஸ்போர்ட் மழைல நெனஞ்சு கொஞ்சம் அழிஞ்சிருச்சு, அது மாத்தணும், அதுக்கு தான் வந்தேன்"  சொல்லிட்டு இருக்கும் போதே அவனுக்கு போன் வந்துச்சு. 

இவன் ஊர் தஞ்சாவூர். பெரிய வியாபார காந்தம் ( அதாங்க Business magnet). இவன் கோயம்புத்தூர்ல காலேஜ் படிச்சான். இவன எப்டி பழக்கம்னு மெதுவா சொல்றேன். ரொம்ப நல்ல பையன். ஆன என்ன விட மொக்கை போடுவான்னா பாத்துக்குங்க. சரி சரி இப்போ அவன் போன்ல என்ன பேசுனான்னு பாக்கலாம். 

"சொல்லு மாப்ள"
.................
"ம்ம், 3 பேர் மட்டுமா? மொக்கையா இருக்குமே? சுனில்ல கேட்டியா?"
.................
"ஆமா, அதும் சரி தான், சரி கோயம்புத்தூர்ல ஒருத்தன் இருக்கான், அவன கேட்டு பாக்கறேன்" ( அவன் என்ன ஓர கண்ல பாத்துட்டு இருந்தான்னு சொல்லணுமா என்ன, அதான் நம்மல கேக்காமயே முடிவு  எடுத்துடுவாய்ங்களே!).

போன் வெச்சுட்டு என்ன ஒரு பார்வை பாத்தான் பாருங்க, காதலி கூட காதலன அப்டி பாத்திருக்க மாட்டா.

" டேய் பாலி போலாம் வா" ( என்னது என்ன பலி குடுக்க போறியா?). 
தம்  அடிச்சு உங்களுக்கு புரை ஏறிருக்கா? அன்னைக்கு எனக்கு ஏறுச்சு.
"என்னாது? அடப்பாவி, நான் தான் அந்த கோயம்புத்தூர்ல இருக்கறவனா?(இப்போ தான் கண்டுபுடிச்சியா?), சிங்கப்பூர்னு சொன்ன?"
"ஆமாடா, நான் சிங்கப்பூர் போறேன், ரெண்டு நாள் கழிச்சு, நானும் சுரேஷும், அங்க இருந்து பாலி வந்திடுவோம்,  அப்பறம்  வினீத் ஆஸ்திரேலியால இருக்கான்ல அவனும் வந்திடுவான், நீ மெட்ராஸ்ல இருந்து நேரா பாலி வந்துடு,"
என்ன தல சுத்துதா? என்னோட நெலமைய யோசிச்சு பாருங்க. 
"அது எங்கடா இருக்கு?"
"இந்தோனேசியா மச்சி"
நான் யோசிச்சிட்டு இருந்தேன். "போலாமா? ஆபீஸ்ல லீவ் தருவாங்களா?" 
அவன் போன் பண்ணத நான் பாக்காம போய்ட்டேன். 

"ஆமாடா, ம்ம், சென்னைல இருந்து சீப் டிக்கெட் பாரு" ( இன்னும் யோசிகல இர்ர்ருங்கடா!!!!)
...............
"அதெல்லாம் அவன் தனியா வந்திடுவான்" ( நான் எப்போடா சொன்னேன்?)
...............
"ரைட், நீ எனக்கு அனுப்பீடு, நான் அவன் கிட்ட சொல்லிடறேன்"

இப்போ பாத்த பார்வை கொஞ்சம் வேற மாறி இருந்தது.(என்னமோ இடிக்குதே)

"மச்சி, டிக்கெட் ஓகே, 20 k வருது ( 20000 ங்க ), நான் போட சொல்லிட்டேன்" 
( ஓ, ஸ்பான்சர்ரா? அப்போ ஓகே!!!) 
" நீ மெதுவா குடு "( அப்போ குடுக்கணுமா, கிழிஞ்சது)
"மாப்ள, டிக்கெட்டே 20 னா, செலவு எல்லாம் கைய கடிக்கும்டா"
"என்னடா, நீயா பேசற, நாம என்னைக்குடா காச பத்தி கவலை பட்டு இருக்கோம்? அதும் இல்லாம டூர்னு சொன்னதும் என்ன ஏதுனு கேக்காம  நீ வர வேணாமா? 
(ரைட்டு டா, கம்பளி எல்லாம் ரெடியா வெச்சுக்குட்டு, போத்த ஆள தேடறீங்க, சிக்கீட்டேன்).

நான் போறேன்னு தெரிஞ்சதும் ஏகபட்ட கால். அதுல ஒன்னு சுனில்.
"என்னடா பாலி போற போல"
"அத ஏன்டா கேக்கற, லைட்டா யோசிச்சேன், போலாமானு, அதுக்குள்ள டிக்கெட் போட்டு அனுப்பீட்டாங்க, என்ன பண்ண சொல்லு?"
" ஹா, ஹா என்ன கூப்டாங்க, நான் தப்பிச்சிடேன், நீ  சிக்கீட்ட"
"சின்னதா ஆசை, அத யூஸ் பண்ணிடாங்க. பொது வாழ்க்கைல இதெல்லாம் சந்திச்சு தான ஆகணும்"
"இதெல்லாம் நல்லா பேசு, ஆபீஸ்ல லீவ் சொல்லிடியா?"
"ம்ம் ஆச்சுடா, குடுத்துடாங்க"
"சரி, பாலினு நெட்ல தேடி பாத்தேன், என்னடா ஒரே கில்பான்ஸ்சா இருக்கு ஊரு?, நீ பாத்தியா?"
"இல்ல மச்சி, என்ன போட்ருக்காங்க"
"எல்லாம் உனக்கு ஒத்துவராதேடா?" ( அதெப்படி நீ முடிவு பண்ண?)
"என்னனு சொல்லு"
"மசாஜ் பத்தி தான் பாதி வெப்சைட்" 
(உடனே கூகிள் ஓபன் பண்ணி பாலினு டைப் பண்ணாதீங்க!!!!)
"அப்டியா? பாக்கலியேடா"
"நீ அங்க போய் எப்டியும் பராக்கு தான் பாக்க போற, எதுக்கு அவ்ளோ செலவு" ( பராக்கு பாக்கறதுக்கு பதிலா அவன் சொன்ன லைன் வேற, இது பப்ளிக் இல்லையா, சொல்ல முடில.)
"டேய் என்ன பாப்பானு நெனச்சியா? போயிட்டு வந்து சொல்றேன் என்ன நடந்ததுனு" 
"கிழிஞ்சது, நீ கடசில பாதர் ஆப் பாரின் கன்ட்ரி ஆக போற"
"என்னடா அப்டியும் பேசற இப்டியும் பேசற?"
"என்ன பேசுனாலும் நீ பராக்கு பாக்கறது தான் நடக்க போகுது, அப்பறம் என்ன?"
"அண்ணே, எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர ஒரு கலக்கு கலக்கணும், நாம யாருனு காட்டணும்"
"ஆமா ஆமா, காக்க காக்க பாண்டியா பாரு நீ, உன்ன எல்லாம் வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போய்டும், எப்ப கெளம்பற?"
"அடுத்த வாரம் புதன் கிழமை, மெட்ராஸ் ரூம்க்கு வந்துட்டு தான் போனும்" ( ஊட்டில காலேஜ் முடிஞ்சதும் பசங்க எல்லாரும் மெட்ராஸ்ல தான் ரூம் எடுத்து தங்கி இருக்காங்க, எல்லாரும் அங்க தான் வேலை, எப்ப போனாலும் அங்க தான்).
"சரி வா"

எப்டி போனேன், என்ன நடந்தது? கொஞ்சம் காத்திருங்கோ!!!!!

Wednesday, October 27, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 5

எக்ஸாம் டைம்னு ஒன்னு வந்தது. அப்போ அடிக்கடி கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆய்டுச்சுன்னு புரளி கெளம்பும். ஒன்னு ரெண்டு டைம்னா பரவால்ல. எல்லா எக்ஸாம்கும் ஆளாளுக்கு ஒரு பேப்பர்ர வெச்சு படிச்சிட்டு இருந்தத பாத்து செம கடுப்பு பசங்களுக்கு.
" என்னடா ஒவ்வொருத்தன் ஒரு பேப்பர் குடுக்கறானுங்க" இது விஜய்.
"இப்டி இருந்தா வேலைக்கு ஆகாது மச்சி, நாமலும் ஒரு பேப்பர் ரீலிஸ் பண்ணனும், அப்போ தான் நம்மளையும் 4 பேர் மதிப்பாங்க"  இந்த அரிய தத்துவத்த உதிர்த்தவன் ரகு.

அவனோட ஐடியாவ பாக்கறக்கு முன்னாடி அவன பத்தி பாக்கலாம். இவனுக்கும் கோவை மாநகரம் தான் சொந்த ஊர். நானும் இவனும் 4  வருசமா ரூம் மேட்ஸ். நல்லா படிப்பான் ( இவனும், விஜய்யும் தான் படிப்ஸ், ஆனா எப்டி எங்க கூட சேந்தாங்கனு தெரில). நல்ல வேலையா இவன் மெக்கானிக்கல், இவன் கிட்ட படிக்க வர்ற பசங்கள இவன் கொட்றத பாத்தா எனக்கு கதி   கலங்கும் ( நம்ம லீடர் சுனில்லும் சேத்து தான் ). ஆனா சில நேரத்துல டெக்னிகல்  ஐடியா எல்லாம் சொல்லி அசத்துவான்.   அப்பறம் முக்கியமா இவன் ஒரு காதல் மன்னன் ( அப்பாடி என்னடா நம்ம பதிவு ஒண்ணுல கூட லவ் வரலயேனு பாத்தேன்).

"நான் புக்க பொரட்டுரேன், நீ  ஸ்டாப் சொல்லு, அந்த பேஜ்ல ஒரு கொஸ்டீன் எடுத்துடலாம், இதே மாறி 5 கொஸ்டீன் எடுக்கலாம், அப்பறம் அத சர்க்குலேசன் விட்டுடலாம்"  இது தான் அவனோட ஐடியா.
இப்படியாக எல்லா எக்ஸாம்கும் நாங்க ஒரு பேப்பர் செட் பண்ணிட்டு இருந்தோம். இதுல உச்சகட்ட காமெடி என்னன்னா, நாங்க செட் பண்ண பேப்பர்ர என் ஸ்கூல் நண்பன் ஒருத்தன்  கோயம்புத்தூர்ல இருந்து கால் பண்ணி பேப்பர் அவுட்டானு சொல்லி என்கிட்டயே சொன்னான் பாருங்க.           

சுனில், விஜய், நான், ரகு, பிரகாஷ்(இன்னும் இன்ட்ரோ குடுக்காத ரெண்டு மூணு பேர் ஒரே ரூம்ல தான் படிப்போம் ). நாங்க பண்ற அழிச்சாட்டியத்த பாத்துட்டு உங்க கூட இருந்தா படிக்க முடியாதுடானு சுனில் மட்டும் வேற ரூம்க்கு போய்ட்டான் ( தனியா படிச்சா இவரு ஸ்டேட்ல மொதல் ரேங்க் வாங்கிடுவாரு பாரு). அங்க தான் பிரச்சன ஆரம்பம். கடைசி எக்ஸாம்ல  கொஸ்டீன் பேப்பர் கண்டிப்பா அவுட்னு எனக்கும் ரகுகும் எங்க நண்பர்கள் கோயம்புத்தூர்ல இருந்து கால் பண்ணி சொன்னாங்க. நாங்களும் கண்டிப்பா அவுட் தான்னு அதே பேப்பர்ர எல்லாத்துக்கும் குடுத்து படிக்க சொல்லிட்டோம். சுனில் அவன் ரூம்க்கு போய்டதால அவன சுத்தமா மறந்துட்டோம். (லீடர்ர மறந்தது தப்பு தாங்க).

கடசில எக்ஸாம்ல பாத்தா 2 மார்க் கொஸ்டீன் கூட அவுட் ஆன பேப்பர்ல இருந்து தான் வந்தது. 100 வாங்க கூடாதுன்னு நான் ஒரே 2 மார்க் மட்டும் எழுதல.
"98 வரும்டா, அது எப்டி மாப்ள, அதே கொஸ்டீன் கேட்டாங்க?" 
"டேய் மரமண்ட, அவங்க அதே கொஸ்டீன் கேக்கலடா, அவங்க கேட்ட கொஸ்டீன் தான் அவுட் ஆய்டுச்சு" ( நாம கொஞ்சம் ட்யூப் லைட் தான).
எல்லாரும்  சந்தோசமா வந்துட்டு இருந்தோம். 

சுனில் ஏதோ கோவமா நரசிம்மா (இவன பத்தி அடுத்து) கிட்ட கத்தீட்டு இருந்தான்.
" அது எப்டிடா என்ன மட்டும் மறந்தீங்க?" 
"இல்ல மச்சி ஏதோ தெரியாம நடந்திருச்சு.."
நாங்க அங்க வந்ததும் சண்ட கொஞ்சம் முத்திடுச்சு. எங்க மேல  தப்பு, அதனால அமைதியா அவன சமாதான படுத்தி கெளம்பி ஊருக்கு போய்டோம். ஆனாலும் பையன் பயங்கர கோவத்ல இருந்தான்.( பின்ன எல்லாரும் 95, அவன் மட்டும் கப் வாங்குனா எப்டி இருக்கும்? ).

அடுத்த நாள் பேப்பர்ல ஒரு நியூஸ், " கொஸ்டீன் அவுட் ஆனதால ரீ எக்ஸாம்னு". எல்லா பசங்களுக்கும் துக்கம். நாங்க மட்டும் சண்ட ஓஞ்சிடும்னு  சந்தோஷ பட்டோம் (கழுத எக்ஸாம்ம கண்டு பயபடுறதெல்லாம் சின்ன கொழந்த பண்றது). அந்த எக்ஸாம்க்கு முந்தின நாள் தான் அடுத்த மன்னிப்பு கடிதத்துக்கான கதை களம்.






Tuesday, October 26, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 4

எங்க ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் போற வழி எல்லாம் வயல்வெளி. மலை பகுதில வயல் எப்டி இருக்கும்னு உங்களால கற்பனை பண்ண முடியும்னு நெனைக்கறேன். நாங்க காலேஜ்ல சேந்தது தெரியாம அந்த வயல்ல காரட் போட்ருந்தாங்க. அந்த செடிய அப்டி ஒரு ஆட்டு, இப்டி ஒரு ஆட்டு, கைல காரட். அந்த காரட் மண்ண கழுவி கழுவியே எங்க ஹாஸ்டல் வாஷ் பேசின், பிரவுன் கலர் ஆய்டுச்சு. பொருத்து பொருத்து பாத்தாங்க அந்த வயலுக்கு சொந்தகாரங்க. பின்ன, காட்டு பன்னி காரட்ட தின்னத விட ஹாஸ்டல் பன்னிங்க அதிகமா தின்னா அவங்க என்ன பண்ணுவாங்க?. அடுத்த மகசூல் முள்ளங்கி போட்டுடாங்க. அப்பறம் என்ன பண்ண, அப்போ தான் நான் முள்ளங்கி சாப்ட்டு பழகினேன். என்ன தான் இருந்தாலும் ஓசில வருதுனா பினாயில் கூட டேஸ்டா தான் இருக்கும் போல.


இப்டி திருட்டும் தின்பண்டமுமா எங்க மொதல் வருஷம் போய்ட்டு இருந்தது. அட இத சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இந்த மேட்டர் சொல்ல எங்க ஹாஸ்டல் எப்டி இருக்குனு சொல்லணும். பூமராங் (boomerang )இருக்குல்ல அதே மாறி தான் எங்க ஹாஸ்டல் இருக்கும். பூமராங் ஓட ஒரு சைடுல தான் என்ட்ரி. இன்னொரு சைடு அடச்சிருக்கும், அந்த சைடு தான் எங்க பசங்க ரூம். ரெண்டு ரூம் எதிர் எதிர்ல. பூமராங் ஓட நடூல டிவி ரூம். அந்த டிவி ரூம் க்கு நேர் எதிர்ல வார்டன் ரூம். அதனால வார்டன் ரூம் இருக்குற எடத்ல இருந்து ரெண்டு பக்கம் பாத்தாலும் தெரியாது. அது தான் எங்களுக்கு ரொம்ப வசதி.


வெள்ளிகிழமை, இல்ல சனிக்கிழமை எல்லா பசங்களும் வார்டன் தூங்குன அப்பறம் டிவி ரூம்க்கு போவோம். வார்டன் தூங்கிட்டாரானு பாக்கற வேலை பிரகாஷ்க்கு. எல்லாரும் டிவி ரூம்ல அசெம்பிள் ஆகறக்குள்ள இவன பத்தி பாத்துடலாம். எதாச்சும் பிரசன்ன வந்தா, எல்லாரும் உக்காந்து ஆள் ஆளுக்கு ஒரு ஐடியா சொல்லிட்டு இருப்போம். அப்போ பையன் ஒரு ஐடியா சொல்வான் பாருங்க, அப்பிடி யாருமே யோசிக்க முடியாது. அந்த மாறி ஒரு சூப்பர் ஐடியா சொல்லுவான். அவன் சொல்ற மேட்டர் 90 % ஓகே ஆய்டும். ஆனா வித்யாசமா எல்லா விசயத்தையும் பாத்து பாத்து, கடசில ரொம்ப வித்யாசமா பாக்க ஆரம்பிச்சிட்டான். அதனால இவன் பேறு நெகடிவ். இன்னொரு பிரபலமான பேறு டாக்டர் பிரகாஷ் (இதுக்கு விளக்கம் தேவைப்படாதுனு நினைக்கறேன்). சொந்த ஊர் கரூர் பக்கதுல வேலாயுதம்பாளையம்.


இங்கிலீஷ் படத்ல எல்லாம் வருமே, அந்த மாறி வார்டன் ரூம்ல லைட் ஆப் ஆனப்பறம், அந்த எடத்ல இருந்து நம்ம பிரகாஷ் டார்ச் லைட் அடிப்பாரு. உடனே ஒருத்தர் ஒருத்தரா போய்டுவோம். போய் டிஸ்கவரி சேனல் பாப்போம்னு சொன்னா நம்பவா போறீங்க. மிட் நைட் மசாலா தான். ரொம்ப எதிர் பாத்துட்டு போனா, மிஞ்சி போனா கட்டிபுடி கட்டிப்புடிடா ஓடிட்டு இருக்கும். ஒரு ஒன்னு ரெண்டு மாசம் இதே மாறி நல்லா தான் போய்ட்டு இருந்தது. அன்னைக்கும் நல்லா தான் போயிருக்கும். நம்ம பிரகாஷ் வித்யாசமா யோசிக்காம இருந்தா.


அன்னைக்கு தலைவர், "டிஸ்கோ ராமா, டிஸ்கோ கிருஷ்ணா, டிஸ்கோ ஸ்ரீராமா" சூப்பர்ரா பாடிட்டு இருந்தாரு. வார்டன் ரூம்ல அவர் எந்திரிக்கற மாறி சவுண்ட் கேட்டுது. எல்லாரும் தெரிச்சிட்டோம். ரூம் குள்ள போய் அமைதியா இருந்தோம்.

"ஏன்டா இப்டி பயந்து சாகறீங்க, அதும் இல்லாம இப்டி பண்ணா தான் மாட்டிப்போம். இப்போ பார் நான் எதார்த்தமா வார்டன் ரூம்ம கிராஸ் பண்ணி அந்த பக்கம் போய்ட்டு வரேன். அப்போ தான் நம்ம மேல தப்பு இல்லாத மாறி இருக்கும்" சொன்னது யார்னு சொல்ல தேவை இல்ல.

வலைல மீன் மாட்ற மாறி இவனே போய் மாட்டி, இவனே டிவி பாத்துட்டு இருந்தோம்னு ஒளறி, அடுத்த மன்னிப்பு கடிதம் எழுதினோம். பின்ன ராத்திரி 3 மணிக்கு பேய் மாறி இவன் நடந்து போனா சந்தேகம் வராதா? இத்தனைக்கும் அவர் சுச்சு போக எந்திருச்சிருக்காரு (அவரே சிரிசிட்டே சொல்லிட்டு இருந்தாரு,"நீங்களே மாட்டீங்களேடா" ) .


ஜாலியாவே போய்ட்டு இருந்தா லைப் போர் அடிச்சிறாதா? (apology எழுதறது என்னடா ஜாலினு கேக்கறீங்களா? அது அப்டி தான்.) சின்ன சின்ன சண்ட எங்களுக்குள்ளும் வந்தது.

  

Monday, October 25, 2010

மங்களூர் நிறைவு பகுதி


காலைல சீக்கரமா எழுந்தாச்சு, நாங்க தங்கி இருந்த எடத்ல இருந்து மங்களூர் 40 km தான். அங்க போய் காலைல சாப்டுக்கலாம்னு கெளம்பி போய்டோம். ரோடு கொஞ்சம் மோசமா இருந்தது. அதும் இல்லாம நடூல நின்னு நின்னு போட்டோ வேற எடுத்துட்டே போனோம். இல்லனா நாங்க மங்களூர் போனதுக்கு சாட்சி இல்லல (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே). அதனால மங்களூர் போனப்ப மணி 8க்கு மேல ஆய்டுச்சு. எல்லாருக்கும் செம பசி. ஹோட்டல் தேடி சுத்தீட்டு இருந்தோம். 

" மச்சி வண்டிய நிறுத்து, பின்னாடி அவங்கள காணோம்"  தீனா கத்தினான்.
"எங்கடா இதனை நேரம் பின்னாடி தான வந்தாங்க? சரி இரு வந்த வழிலயே போய் பாக்கலாம்"
"அதோ அங்க நிக்கறாங்க பாருடா"
நாங்க திரும்பி வர்றது கூட தெரியாம கை காட்டி பேசிட்டு இருந்தாங்க. நான் கூட ஏதோ ஹோட்டல் தான் இருக்கு போலனு பக்கத்ல போய் பாத்தா, 2 , 3 பொண்ணுங்க நடந்து வந்துட்டு இருந்தாங்க. அவங்க பாத்து மெய் மறந்து சைட் அடிச்சிட்டு இருக்குதுங்க பக்கி பயலுங்க. 
" நாதாரி, பசிக்குதுனு ஹோட்டல் தேடி அலைஞ்சிட்டு இருந்தா, இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா" வாய் தான் திட்டிட்டு இருந்தது, நானும் சைட் தான் அடிச்சிட்டு இருந்தேன். 
" ஆமா ஆமா, இவரு புத்தர் ஓட ஒன்னு விட்ட சகல, பொண்ணுகள பாக்கவே மாட்டாரு, பாரு பேசிட்டே எங்க பாத்துட்டு இருக்கான்னு. நண்பா, இந்த மாறி அழகான பொண்ணுங்கள பாத்து அவங்க அழக ஆராதிக்கணும். அப்போ பசி தெரியாது" இது நவீன். ( என்ன அறிவு புள்ளைக்கு)
"சரி சரி மானத்த வாங்காத, அழகா தான் இருக்காங்க, வா போலாம், பசிக்குது".
நல்லா சாப்டுட்டு, மங்களூர்ல பீச்க்கு போய்ட்டு, வர்ற வழில நேத்து பாக்காத பேகல் போர்ட் பாத்துட்டு கெளம்பினோம்.    

வழி எல்லாம் பச்சை பசேல்னு அழகா இருந்தது. அத பாத்துட்டே வண்டி 100ல போனதையோ, ஒரு வளைவு வந்ததையோ நான் கவனிக்கல. கிட்ட போனப்பறம் பாத்தா, நல்ல  வளைவு. நாம ஊர் ரோடு பத்தி தான் தெரியுமே. ரோடு கிட்டதட்ட 1 அடி உயரம். கீழ அந்த வேகத்ல ஏறக்குனா தூக்கி வீசிடும். நானும் முடிஞ்ச அளவுக்கு படுத்து திருப்புனேன். வண்டி படுக்கவே இல்ல. நான் கிட்ட தட்ட வண்டிய அமுக்கி படுத்து, ரோடு ஓரத்துல போய்  ரொம்ப கஷ்டப்பட்டு திருப்பிட்டேன். 

கொஞ்ச தூரம் போய் டீ சாப்டும் போது இத நவீன் கிட்ட பயத்தோட சொல்லிடு இருக்கேன். தீனா சொன்னான், " அட நீ  படுக்க ட்ரை பண்ணிட்டு இருந்தியா? சொல்லணும்ல, நான் கூட வண்டி தான் சாயுதுன்னு எதிர் பக்கம் அமுக்கிட்டு இருந்தேன்". எனக்கு மூஞ்சில ஈ ஆடல. நவீன்னும் மைனாவும் விழுந்து விழுந்து சிரிக்கறானுங்க.  பரதேசி நான் வலது பக்கம் படுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன், இவன் பின்னாடி உக்காந்து இடது பக்கம் சாஞ்சுட்டு இருந்திருக்கான். வண்டி ஓட்டும் போது பின்னாடி உக்காந்து வர்றவங்க, வண்டி படுத்து திரும்பும் போது வண்டி கூடவே படுக்கணும். வண்டி ஓட்டறவனுக்கு  தெரியும் எவ்ளோ படுக்கணும்னு. அப்டி பண்ணலனா என்னக்கு ஆனது மாறி தான் ஆகும். நடந்ததுக்கு அப்றம் அவன திட்டி என்ன பண்ண?

மங்களூர்ல ஒரு பாம்பு மியுசியம் இருக்கு. காலைல 10 மணிக்கு தான் தெரப்பாங்க. அத விட்டா பீச் நல்லா இருக்கும். நாங்க போன போது நல்ல மழை காலம். அதனால கடல் ரொம்ப ஆக்ரோசமா இருந்தது. பாக்கவே பயமா இருந்தது. திரும்பி அதே வழில தான் கண்ணூர் போனும். போற வழில முன்னாடி சொன்ன மாறி பேகல் போர்ட். கண்ணூர்லும் பீச் இருக்கு. கண்ணூர்ல இருந்து கோயம்புத்தூர் போற வழில மாஹி பீச்க்கு போலாம். கண்ணூர் மாஹி 35 km. ரோடு சுமாரா இருக்கும். நம்ம ECR  மாறியே சைடுல பீச் வரும். இது WCR. அப்பறம் கோழிகோடு போனும். மாஹில இருந்து 60 km. அங்க இருந்து பாலக்காடு வழியா கோயம்புத்தூர் 190 km. ஆக மொத்தம் மங்களூர்ல இருந்து கோயம்புத்தூர் 420 km. பாலக்காடு கோயம்புத்தூர் ரோடு மகா மோசமா இருக்கும் பாத்து வண்டி ஓட்டுங்க. 

எப்பவும் ஒரு டூர் முடியும் போது, கடைசி 40 km. ஓட்டவே முடியாது. செம மொக்கையா இருக்கும். அப்பவும் அப்டி தான் இருந்தது. பத்தாததுக்கு போலீஸ் வேற தமிழ்நாடு எல்லைல நிறுத்துனாங்க. ஓசி வண்டி, அதனால வண்டி நம்பர் தெரில. ஒரு வழியா பேசி சமாளிச்சிட்டு இருக்கும் போது, நவீன் எதுக்கோ சிரிச்சிட்டு இருந்தான். ஏட்டு எதுக்குப்பா சிரிக்கறனு கேட்டுட்டு இருந்தாரு. அவன் ஒன்னும் இல்ல சார் அப்டினு சொல்லிட்டு இருந்தான். அவங்க போக சொன்னதும் வழில கேட்டேன் "எதுக்குடா சிரிச்ச?"   " ஒன்னும் இல்ல மச்சி, 3 நாளா ஒரே டூர்ல இருக்கோமா, சரியா பல்லு தேய்கல, அவர் வேற குடிச்சிருக்கேனா பாக்க ஊத சொன்னாரு, ரொம்ப கப் அடிச்சு அவர் மயக்கம் போட்டுட்டாருனா என்ன பண்ண? அதான் சிரிச்சேன்"

ஒரு வழியா சிரிச்சுட்டே கோயம்புத்தூர் வந்தோம்.

பின் குறிப்பு : 3 நாளா நிக்காம 1000 km ஓடிருக்கு வண்டி. ரெண்டு வண்டிலும் செம சத்தம். அடுத்த நாள் மைனா சொன்னான். நாம போனதுக்கு வண்டிக்காரன் 1000 ரூபா செலவழிச்சு இருக்கான்டானு. விடு மச்சி நம்ம ஊர் சுத்த அவன் நம்ம தத்து எடுத்துட்டான்னு நெனச்சுக்கலாம். (இருந்தாலும் அவனுக்கு காசு குடுத்துட்டோம், நாங்க ரொம்ப நல்லவங்கல?) 

Sunday, October 24, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 3

"என்னடா ஆச்சு? எல்லாரும் இப்டி கப்பல் கவுந்த மாறி உக்காந்துட்டு இருக்கீங்க?" பெட்டிய கீழ வெச்சுட்டே கேட்டேன், எல்லாரும் ஏதோ சீரியஸ்யா  பேசிட்டு இருந்தத நிறுத்தீட்டு என்ன பாத்தாங்க. "நீ ஏன்டா இப்போ வந்த?" (என்ன ஒரு வரவேற்பு?) எப்பவும் திங்ககிழமை காலைல தான வருவ?" கேட்டது விஜய். கேட்ட போது அவன் என்ன ஏதோ பாவமா பாத்தான். என்னடா ஆச்சுனு கேட்டேன். அந்த விசயத்த அவன் யோசிச்சு சொல்றக்குள்ள விஜய்ய பத்தி பாத்துடலாம்.

இவனும் நானும் 4 வருசமா கிளாஸ்ல பக்கத்துல தான் உக்காந்திருந்தோம். இவனுக்கு கோவம் வந்ததுன்னா என்ன பண்ணரானே தெரியாது. எதிரி இவன அடிக்க, இவன எதிரி அடிக்க ஒரே பிரசன்ன தான் போங்க. சும்மா ஒரு வார்த்தை அழகுக்கு தான் சொன்னேன் சண்டனு வந்துருச்சுன்னா சும்மா பொரட்டி பொரட்டி  எடுத்திருவான். நான் வேற ரொம்ப சாதுவா!! இவன் அடிக்கறத பாத்து எனக்கு பாவமா இருக்கும். இவனுக்கு அடிக்கடி கோவம் வரும், ஆனா பாசக்கார பையன். எப்பவும் பசங்க தம் அடிப்பாங்கன்னு  தொவைக்க போட்ட சட்ட ஜோப்ல மினிமம் 10  ரூபா இருக்கும். கொஞ்சம் லக் இருந்தா 100 ,500 கூட கெடைக்கும். அவ்ளோ மறதி பையனுக்கு. சொந்த ஊர் கரூர் பரமத்தி.

"நீ திங்ககிழமை தான் வருவனு உன்ன போட்டு குடுத்துட்டோம்டா"
"என்ன மச்சி சொல்ற என்ன விஷயம்?"
மேட்டர் கொஞ்சம் சீரியஸ், பய புள்ளைங்க சீப்பா கெடைக்குதுனு அப்போ ரிலீஸ் ஆனா ஒரு படத்தோட CDய  ஹாஸ்டல் டிவில போட்டு பாத்துட்டு இருந்திருக்காங்க ( என்ன ஒரு தைரியம்). அது கூட பரவால்லீங்க, வார்டன் வந்து பக்கதுல நிக்கறது கூட தெரியாம சீரியஸ்யா பாத்துட்டு இருந்திருக்காங்க. அப்டியே கொத்தோட அமுக்கிட்டு போய்ட்டாரு. எங்க ரூம் பசங்க எல்லாருக்கும் என்குயரி வார்டன் ரூம்ல. வார்டன் வேற எங்க EEE வாத்தியார். வார்டனுக்கும்  பசங்களுக்கும் நடந்த உரையாடல்......

"யாருடா வயர்ர சொருகுனது?"
"நான் தான் சார்!" இது பிரகாஷ் (இவன பத்தி அப்பறம்).
"யாருடா டிவிய போட்டது?", "யாருடா எல்லாருக்கும் சொன்னது?" "யாருடா CD பிளேயர்ய ON பண்ணது?" இப்டி சரமாரியா கேள்வி மேல கேள்வி கேட்டு பசங்கள நிலைகுலைய வெச்சிருக்காரு.
"சரி யாருடா CD வாங்கிட்டு வந்தது?" (ஏன் உங்களுக்கும் வேணுமா?)

"அருண் சார்" இத அவன் சொன்னபோது என் நெலமைய யோசிச்சு பாருங்க, நொங்கு தின்னது ஒருத்தன், மாட்டிகிட்டது நானு.

"யாருடா அவன்? கூட்டிட்டு வா அவன"
"சார் அவன் கோயம்புத்தூர் போயிருக்கான் சார், திங்ககிழமை தான் வருவான்" (அதனால தான என் பேர போட்டு குடுத்திருக்காணுங்க).
இப்போ தானடா வீட்ல இருந்து வந்தேன், அதுக்குள்ள மறுபடியும் தொரத்தி விட்டுடுவாங்கலோ?,  
"அதெல்லாம் சரிடா, வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிருக்கலாம்ல" ( அப்போ ஏது செல்போன் ). "யார் கிட்டயும் நம்பர் இல்லடா, நீ கோயம்புத்தூர் போய்ட்டனு சொன்னதும், நாளைக்கு விசாரிச்சுக்கலாம் அப்டினு சொல்லிடாரு, நீ என்னடானா இப்போவே வந்து நிக்கற, அதுக்குள்ள எதாச்சும் ஐடியா பண்ணலாம்னு நெனச்சு பேசிட்டு இருந்தோம்,  சரி நாளைக்கு நைட் வரைக்கும் அவர் கண்ல பட்டுடாத""
என்ன கொடுமை சரவணன் சார் இது"
  
"டேய் மாப்ள உங்க ரூம் பசங்கள வார்டன் கூப்டாரு டா" பக்கத்துக்கு ரூம் பையன் வந்து சொன்னது தான் தெரியும். நான் கட்டிலுக்கு அடில போய்டேன், மறுபடியும் வெளிய வந்து," மச்சி இந்த பிரச்சன முடிஞ்சதும் கண்டிப்பா ரூம்ம சுத்தம் பண்ணிடுவோம்டா, அடில நாத்தம் தாங்கல, இது மாறி டைம்ல ஒளிய எடம் வேணும்ல" சொன்னதும் எல்லாரும் சிரிச்சிட்டானுங்க. "ஆமாடா இந்த வாழ்வா சாவா டைம்லும் உனக்கு காமெடி கேக்குதாடா, மூடிட்டு படு, இல்லனா கட்டில்கு மேல கூட படுக்க முடியாது".

அவங்க திரும்பி வர்றவரைக்கும் லப் டப் னு அடிச்சிட்டு இருந்தது,  அவுங்க வரும் போது சிரிசிட்டே வந்தாங்க, அப்போ தான் எனக்கு உயிரே வந்ததுனு சொல்லி தெரிய வேண்டியது இல்ல. "என்ன மச்சி சல்ப்பியா?", "ஆமாடா, ஒரு மன்னிப்பு கடிதம் (apology letter) எழுதி குடுத்துட்டு போ சொல்லிட்டாரு" "அப்பாடி தப்பிச்சோம், லெட்டர் தான"னு எழுதிட்டு இருந்தாங்க. 

அப்போ தெரியாது, இந்த லெட்டர் தான் பல லெட்டர்க்கு முன்னோடினு.

தொடரும்....

Saturday, October 23, 2010

மங்களூர் பகுதி 3


என்ன தான் நாங்க 10 மணிக்கு எந்திரிக்கற பசங்களா இருந்தாலும், டூர் அப்டினு வந்துட்டா, என்ன சொன்னாலும் செய்வோம். அதனால அன்னைக்கும் சீக்கரமே எந்திரிச்சாச்சு. காலைல எழுந்து கெளம்பும் போது நவீன்கும் மைனாகும் சண்ட. சப்ப மேட்டர், வண்டி யார் ஓட்டறது அப்டினு தான். டூர் போனா நான் தான் எப்பயும் வண்டி ஓட்டுவேன், அன்னைக்கும் ஒரு வண்டி எனக்கு, இன்னொரு வண்டிக்கு தான் சண்ட. பாதி பாதி ஓடுங்கடானு எல்லாம் சொல்லி பாத்தாச்சு, மொதல யாரு எடுக்கறதுனு தான சண்டையே. என்னமோ பேசினானுங்க அப்பறம் நவீன் தான் வண்டிய எடுத்தான். அதுக்கப்பறம் அவனுங்க ரெண்டு பேரும் தான் கடைசி வரைக்கும் ஏதோ காதலர்கள் மாறி வண்டிய விட்டு எறங்கவே இல்ல. எப்டியோ நல்லா இருந்தா சரி தான்னு விட்டுட்டேன்.

ஊட்டில இருந்து ஒரு 8 மணிக்கு சாப்ட்டுட்டு கெளம்பினோம். பைக்காரா வழியா கூடலூர் ரோடுல போய்ட்டு இருந்தோம். என் வாழ்க்கைலயே ரொம்ப அனுபவிச்சு பைக் ஓட்டுனது அந்த 50 km தான். லேசா பனி, கொஞ்சமா மழை, அதாவது சாரல், கொஞ்சம் குளிர், இப்போ நெனச்சாலும் அந்த நொடி நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு. (லவ்வர் கூட போயிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்!!! ஹம்ம், பின்னாடி பாத்தா தீனா, ஈ ஈ னு இளிக்கறான். நான் என் விதிய நொந்துட்டு பேசாம இயற்கைய மட்டும் ரசிச்சிட்டு வந்துட்டேன்).

கூடலூர் வந்துட்டு, தம் அடிச்சிட்டு வழி கேட்டுட்டு, சுல்தான் பத்தேரி அப்டினு ஒரு ஊருக்கு போய்ட்டு இருந்தோம். என்னனே தெரிலங்க, தமிழ்நாடு தாண்டி கேரளா போனது தான் தெரியும். மழை மழை தான். நேத்து மாறியே உள்ளாடை எல்லாம் நெனஞ்சிருச்சு. என்ன பண்ண இன்னைக்கு எப்டியும் இன்னும் 300 km போனுமே மங்களூர்க்கு. அப்டியே ஓட்டிட்டு போனோம். நடூல ஓட்டிட்டே இருக்கும் போது காஞ்சிரும். மறுபடியும் பேய் மழை, இப்டியே நின்னு நின்னு கண்ணூர் போறக்கே 5 மணி ஆய்டுச்சு.

கூடலூர்ல இருந்து சுல்தான் பத்தேரி 60  km, நாங்க போன போது ரோடு அருமையா இருந்தது, அருமையான காட்டு பாதை. பச்சை பசேல்னு இருந்தது.  சுல்தான் பத்தேரி ல இருந்து மானந்தவாடி போனும், அது 40 km. புதுசா போனா வழி கொஞ்சம் குழப்பமா இருக்கும். ஒரு ரெண்டு மூணு பேர் கிட்ட கேட்டுகங்க. அங்க இருந்து ஒரே ரோடு தான் கண்ணூர் வரைக்கும். மானந்தவாடில இருந்து கண்ணூர் 95  km.  இந்த ரோடும் நல்லா இருக்கும். அனுபவிச்சு வண்டி ஓட்டலாம். 

கண்ணூர்ல இருந்து கேரளா பார்டர் ஒரு 140  km .வெஸ்ட் கோஸ்ட் ரோடுல தான் போகணும், ரோடு கொஞ்சம் மோசம் தான். போற வழில பேகல் போர்ட் ( Bekal  fort ) னு ஒரு கோட்டை இருக்கு. பாம்பே படத்ல உயிரே உயிரே பாட்டு வரும்ல அந்த பாட்டு எடுத்த எடம் இது தான். அருமையா இருக்கும். ஆனா சாயங்காலம் 5  30  வரைக்கும் தான் உள்ள போக முடியும். நாங்க கண்ணூர் வரக்கே 5  மணி, அதனால காசர்காட் ( இது தான் கேரளா, கர்நாடகா பார்டர் ) போய் ரூம் எடுத்தோம். இந்த வழில கண்ணூர்ர விட்டா  காசர்காட்ல தான் தங்க முடியும். இத விட்டா மங்களூர் தான். கொஞ்சம் காசு அதிகம் செலவு ஆகும் மங்களூர்ல தங்குனா.


கண்ணூர்ல இருந்து கெளம்பி காசர்காட்போய் ரூம் போட்டோம். ரொம்ப எதிர் பாக்காதீங்க, ஒன்னும் நடக்கல. ரொம்ப லேட் ஆனதால சரக்கு கெடைக்கல. இழுத்து போ(பொ)த்தீட்டு தூங்கிட்டோம். எனக்கு ஒரு டவுட், 10 மணிக்கு மேல, ஒரு 4 பசங்க ஹோட்டல்ல ரூம் போட்டா அந்த ஹோட்டல்ல இருக்கறவங்க எங்கள தீவிரவாதி மாறி பாக்கறாங்களே ஏன்? நான் ரொம்ப சாதுங்க, என்ன ஏன் அவங்க டெரரிஸ்ட் மாறி பாத்தாங்கனு தெரில....

சரி இனி அடுத்த எபிசொட்ல மிச்சம்....


Wednesday, October 20, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 2

ஊட்டி காலேஜ்ல சேந்ததுல ஒரு நல்ல விஷயம்   என்னனு கேட்டா, அது நம்ம நண்பர்கள் தாங்க. ( படிப்புனு நீங்க கேக்கறது காதுல விழுகுது, என்ன பாஸ் ப்ரீயா  விடுங்க )
மின்னலே படம் பாத்துட்டு  இந்த காலேஜ் எடுத்த பசங்க எல்லாம் ஒன்னு கூடிட்டோம்.

என் நண்பன் ஒருத்தன் அவன் காலேஜ் வந்தப்ப என்ன நடந்ததுனு சொன்னத நான் இங்க சொல்லியே ஆகணும். 
" காலேஜ் கேட்ல இருந்து காலேஜ் குள்ள போறவரைக்கும் வேடிக்க பாத்துட்டே வந்தேன்டா, அப்போ ஒரு பில்டிங்க பாத்தேன், ஏதோ காலேஜ் ஸ்போர்ட்ஸ் ஹால்ஆ இருக்கும்னு நெனச்சேன் மச்சி, கடசில கேட்டா, அது தான் காலேஜ் மெயின் பில்டிங்னு சொல்லிட்டாங்க, அப்போ என் மூஞ்சில வழிஞ்ச வழிசல் வெச்சு ஒரு பில்டிங்கே கட்டலாம்"      
 இந்த டயலாக் சொன்னவன் சுனில்.

ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தோசம் என்னனா சேலம் காலேஜ்க்கு இது பரவால்ல. சரி என்ன பண்ண, உலைல போட்டாச்சு, வெந்து தான ஆகணும்?. ஆனா இந்த கஷ்டம் எல்லாம் பசங்க ஒன்னா சேந்ததும் காணாம போச்சு. இனி மேல் நாங்க ஹாஸ்டல்ல பண்ண அழிச்சாட்டியம் எல்லாம் ஒன்னு ஒன்னா சொல்றேன்.

பசங்க ஒன்னா சேந்ததும் மொதல்ல ஒரு லீடர் வேணும்ல. அப்படி லீடர் ஆனவன் சுனில். பையனுக்கு நெல்லை தான் சொந்த ஊர். தமிழ் பசங்க எதிரியான மலையாள பசங்கள கவுக்க இவன் போட்டு குடுத்த சில ஐடியா பாத்து, அடடா புள்ளைக்கு என்னா அறிவுனு அவன லீடர் ஆகிட்டோம்.  இந்த பய செம சோம்பேறி, 5 அடி தூரத்துல போன் அடிச்சா எட்டி எடுக்க மாட்டான் ( என்ன விட சோம்பேறினா பாத்துக்கங்க). அதனால நொந்து போய் இவன லீடர் போஸ்ட்ல இருந்து ஏறக்கிடோம். இப்போ ஹரி தான் லீடர். ( இவன பத்தி அப்பறம் பாப்போம்) .

எங்க ஹாஸ்டல்ல மலையாள பசங்களோட சண்ட வந்த மொதல் விஷயம் டிவி.....அவன் எப்படி மலையாள சேனல் பாக்கலாம், இவன் எப்படி தமிழ் சேனல் பாக்கலாம்னு ஒரே சண்ட. அப்போ இருந்த கடுப்புல எங்க பசங்க நைட் ரூம்ல பல திட்டம் போட்டோம். (ஆமா பெரிய 5 ஆண்டு திட்டம்னு நீங்க சொல்றது காதுல விழுகுது). 

 அவனுங்க ரூம் மேல கல் எரியறது தான் மொதல் பிளான், ஆனா கண்டிப்பா மாட்டிப்போம்(எங்க ஹாஸ்டல்ல அப்படி கட்டி இருப்பாங்க) அதனால அந்த பிளான் நடக்கல, அவனுங்க வெச்சிருக்க ஷாம்பூ, சோப்பு எல்லாம் எடுத்து வாஷ் பேசின் கழுவ வெச்சிடலாம், இல்லைன்னா ________ல  ஊத்திடலாம் ( எப்டி எல்லாம் மூளை வேலை செஞ்சிருக்கு பாருங்க), இது எல்லாதையும் விட சுனில் ஒரு ஐடியா சொன்னான் பாருங்க, அதுல தான் எல்லாரும்  புல் அரிச்சு போய் அவன லீடர் ஆக்குனோம்.

" மச்சி, எல்லாரும் தூங்குன அப்பறம், ஒரு 3 இல்ல 4 மணிக்கு ரெண்டு ரெண்டு பேரா போய் அவங்க ரூம் வாசல்ல நின்னு சுச்சு போய்டலாம், பசங்க நாத்ததுல செத்திருவாங்க" இது எப்டி இருக்கு. எல்லா பசங்க மூஞ்சில ஒரு சந்தோசம், ஐடியா கெடச்சிருச்சுனு.    அப்பறம் அந்த ஐடியா செயல் படுத்த நாள் குறிச்சோம். யார் யார் எத்தன மணிக்கு போகணும், எந்த ரூம்க்கு போகணும், போய்ட்டு அவங்க அவங்க ரூம்க்கு வரணும், எல்லாம் பிளான் பண்ணி தெளிவா பேசி வெச்சாச்சு. எல்லாரும் 3 மணி வரைக்கும் முழிச்சு இருக்க ரூம்ல சீட்டு கச்சேரி தான். எனக்கு நடுக்கத்துல அப்பவே சுச்சு வந்திருச்சு ( குளிர்ல இல்லீங்க பயத்ல). யாரும் நைட் 11 க்கு மேல   சுச்சு போக கூடாதுனு லீடர் ஆர்டர் வேற. மணி 12 இருக்கும். வெளிய கொஞ்சம் சத்தம் கேட்டுச்சு.

என்னனு பாத்தா மிச்ச தமிழ் பசங்க எல்லாம் மலையாள பசங்களோட சமாதானமா போய்டலாம்னு, எங்கள கேக்காம முடிவு பண்ணி எங்களோட மிக பெரிய பிளான்ன சொதப்பிட்டாங்க. அத செயல் படுத்த முடிலயேனு எல்லாருக்கும் வருத்தம். அப்பறம் என்ன பண்ண?
இப்போ எங்களுக்குள்ள சண்ட, யாரு மொதல்ல பாத்ரூம் போகறதுனு. ஒரு வழியா வந்து படுத்தோம். 

இது தான் சொதப்பல் ப்ளான்ஸ் எல்லாத்துக்கும் ஆரம்பம்.  இதுக்கு அப்பறம் அந்த சனி, ஞாயிறு நான் ஊருக்கு போய்ட்டேன். ஊருக்கு போய்ட்டு ஞாயிறு மாலை ரூம்க்கு போனா, எல்லாரும் கன்னத்துல கை வெச்சு கப்பல் கவுந்த மாறி இருந்தாங்க. என்னடானு கேட்டதுக்கு அவனுங்க சொன்னத கேட்ட எனக்கு மயக்கமே வந்திருச்சு.

தொடரும்...

 

மங்களூர் பகுதி 2



இந்த பதிவோட முக்கிய நோக்கமே டூர் பத்தி பேசறது. எப்படி  போகணும், ரோடு எல்லாம் எப்படி  இருக்கும்றது தான். அதனால இந்த கதைக்கு நடுல இப்டி கலர் மாத்தி எழுதிருக்க எடம் எல்லாம் வழி பத்தி எழுதி இருப்பேன்.. இதை விட்டுட்டு படிச்சாலும் கதை புரியும்.... 

அடுத்த பிரச்சனை பணம், ATM சென்டர்ல போய் என் கார்ட போட்டேன், அது காரி மூஞ்சில துப்பிடுச்சு, மினிமம் balance கூட இல்லடானு சொல்லி தொரத்தி விட்டுருச்சு. 
நவீன் கிட்ட சொன்னேன், '' மச்சி பணம் இல்லடா", 
"ஒன்னும் கவலை படாதடா (அம்பானி கசின் பிரதர் இவரு), தீனாக்கு சம்பளம் போட்ருக்காங்க, விடு பாத்துக்கலாம்' ... (பய புள்ள, நேத்து தான் காசு இல்லைங்கற காரணத்துக்காக தம்ம விட போறேன்னு சொன்னானே , இப்போ செல்வ செழிப்பு மாறி பேசறானேனு  பாத்தேன்). 

"சரி அத விடு, ஊட்டி போறோம்னு சொல்லி தான  கூட்டிட்டு போறோம், எப்படிடா மங்களூர்னு சொல்றது" அதுக்கு நவீன் ஒரு சிரிப்பு சிரிச்சான் பாருங்க, நம்ம தலைவர் வில்லனா வரும் போது சிரிப்பாரே அது மாறி. எனக்கு அப்பவே வயித்த கலக்குச்சு, சரி நடக்கறது நடக்கட்டும்னு விட்டுட்டேன்.

எப்படியோ டீ, தம் எல்லாம் அடிச்சிட்டு கெளம்பிட்டோம். 
துடியலூர்ல  பெட்ரோல் போடும் போது நானே மைனா கிட்ட வாய் விட்டு மாட்டிகிட்டேன் .  
" அண்ணே டாங்க் புல் பண்ணுங்க", இது நான்.
"ஊட்டிகு எதுக்கு டா  டாங்க் புல் பண்ற" இது மைனா, (ஐயோ மாடிகிட்டேனே, தவள, தவள )
அப்பறம் என்ன பண்ண, மங்களூர் போற பிளான் பத்தி சொல்லிட்டேன். ஏதோ பையன் நல்ல மூட் ல இருந்தான், அதனால தப்பிச்சேன். தீனா கிட்ட போட்டு குடுத்துடாதனு சொன்னதுக்கு, '' அவன் கிட்ட எப்போடா சொல்ல போறீங்க?"
" இப்போவே சொல்லிட்டா அவனுக்கு ஆபீஸ் பக்கம் தான், அப்டியே ஓடிருவான், அதனால ஊட்டி போய் சொல்லலாம், அப்போ தான் கூட வருவான், அதும் இல்லாம டூர்க்கு  அவன் தான் காசு குடுக்கணும்" னு சொன்னேன். அப்பறம் தான் ஒத்துக்கிட்டான். ( கிரேட் எஸ்கேப் )

ஊட்டி போறதுக்கு மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கு. அதுல 14  வது வளைவு ஜங்ஷன் பேறு காட்டேரி ஜங்ஷன். நாங்க காலேஜ் சேந்த போது மேட்டுபாளையம் ஊட்டி ரோடு மகா மோசம், அதனால 14 வளைவுல இருந்து  காட்டேரி ஜங்ஷன் வழியா போய்டுவோம். ரோடு நல்லா இருக்கும். ஊட்டி போறவங்க ஒரு சேஞ்சுகு அந்த ரோடு வழியா போய் பாருங்க, அழகா இருக்கும். 1 km தான் சுத்து. வழி- காட்டேரி ஜங்ஷன் - காட்டேரி கிராமம் - பாலாடா - எள்ளநல்லி - ஊட்டி.

   கூடலூர் போய் ரூம் எடுத்துக்கலாம்னு நானும் நவீன்னும் பிளான் பண்ணோம் . ஊட்டி போக சாயங்காலம் ஆய்டுச்சு, அப்போ ஊட்டில ஒரு மழை அடிச்சது  பாருங்க, உள்ளாடை எல்லாம் நனைஞ்சு, அந்த குளிர்ல  நனைஞ்ச கோழி மாறி ஆய்டோம். மழை விட நைட் ஆய்டுச்சு. இனி கூடலூர் போனா ரூம் எடுக்கறது கஷ்டம்னு ஊட்டிலயே ரூம் போட்டுட்டோம். மழைல நனைஞ்சு ஊட்டில ரூம் எடுத்தா என்ன பண்ணுவோமோ அத  தான் பண்ணோம். ( அட டாஸ்மாக் தான் ).

ரெண்டு ரவுண்டு போனதும் தீனா கிட்ட மெதுவா சொன்னோம், மங்களூர் பிளான் பத்தி, அவனுக்கு அடிச்ச போதை பாதி ஏறங்கிடுச்சு. பேஸ்து மாறி பாத்தான், ஒரு கொல வெறி அவன் கண் ல பாத்தேன். ஒரு டயலாக் சொன்னான் பாருங்க, '' என்னை  வேலைய விட்டு தூக்கறதுல  உங்களுக்கு என்னடா சந்தோசம்? "  

அப்பறம் அவன எப்டியோ சமாதான படுத்தி சாப்ட கூட்டிட்டு போனோம். எங்க மேல இருந்த கடுப்புல சர்வர் கிட்ட சண்ட போட்டான். ஒன்னும் மேட்டர் இல்ல, ஆம்லேட்ல  உப்பு போடல, அதான் பிரச்சனை. அத நாங்க பேசி தீத்துட்டு பாத்தா இவன காணோம். வெளிய இவரு ஆம்லேட் போட்டுட்டு இருக்காரு. எல்லாம் முடிஞ்சு அவனுக்கு லிம்கா வாங்கி குடுத்துட்டு ரூம்க்கு  வந்து படுத்தோம். காலைல சீக்கரமா எந்திரிக்கணும்னு அலாரம் எல்லாம் வெச்சிட்டு படுத்தாச்சு.

இப்போ நெறைய போடாச்சு, இனி அடுத்த பதிவுல..

பின் குறிப்பு : 
நீங்க கேக்கலாம், மங்களூர் போக எதுக்கு ஊட்டி போனீங்கனு. 
நாங்க எந்த டூர் போனாலும் ஆரம்பம் ஊட்டில இருக்கும், இல்ல முடிவு ஊட்டில இருக்கும். அங்க 4  வருஷம் படிச்சதால ஒரு ஈர்ப்பு ஊட்டி மேல. 

Tuesday, October 19, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 1

ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ்ல சேர வெயிட் பண்ணிட்டு இருந்த டைம். நான் வாங்குன மார்க்குக்கு கண்டிப்பா கோயம்புத்தூர்ல காசு குடுக்காம சீட் நகினு தெரியும் (எவ்ளோ மார்க்னு கேக்க கூடாது).

சேலம் ல, சீட் கெடச்சது, அந்த காலேஜ்அ பத்தி தெரியாம அந்த சீட்ட பெரிய ________ மாறி எடுத்துட்டு, அங்க போனேன். பஸ்ல போகும் போது நான் கண்ட கனவெல்லாம் சொன்னா, நம்ம அப்துல் கலாம் அய்யா ரொம்ப சந்தோஷபடுவாரு... நாம தான் கோழி முட்டை வாங்கறக்கு  முன்னாடியே கோழி பண்ணை வெச்சு, அம்பானி கூட மீட்டிங் ல பேசற மாறி யோசிப்போமே..... 

ஆனா அந்த காலேஜ் போனா நடந்ததே வேற, பஸ்ச விட்டு  இறங்கி பாத்தா, என் கனவ கலைச்சது மட்டும் இல்லாம அதுல புல்டோசர் வெச்சு நசுக்கிடாங்க..... காலேஜ் பில்டிங் பாத்து அப்டியே ஷாக் ஆய்ட்டேன் ( வடிவேலு ஸ்டைல் ).... நான் EEE , அந்த லேப் குள்ள பழைய டயர், drum எல்லாம் அடுக்கி வெச்சிருந்தாங்க... அப்டியே கோயம்புத்தூர் க்கு பஸ் ஏறி, அந்த காலேஜ் இருந்த திசைல திரும்பி கூட பாக்கல.... பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி, இல்ல இல்ல பஸ் ஏறி வந்துட்டேன்..

அப்பறம் மறு கலந்தாய்வு  ( அதாங்க re counselling ), ல எனக்கு ஊட்டி ல சீட்னு முடிவு பண்ணிடாங்க ( கசாப்பு கடைல ஆட்ட கேட்டுட்டா வெட்றாங்க? )... அப்போ மின்னலே படம் வந்த டைம், அதுல ஊட்டில காலேஜ்னு சொல்வாங்களே, நானும் அந்த காலேஜ்அ பாத்து மெரண்டு போய் அத செலக்ட் பண்ணேன்...ஏன் நா ஊட்டில இருந்ததே ஒரே காலேஜ் தான்...  எனக்கு இதுலயும் ஆப்பு னு தெரியாம, சந்தோசமா கோயம்புத்தூர்க்கு ட்ரெயின் ஏறினேன்  ( re - counselling  சென்னைல)... ஆனா இப்போவே சின்னதா ஒரு டவுட் இருந்தது, நாம வாங்கின மார்க்குக்கு அவ்ளோ சூப்பர் காலேஜ் கெடைக்குமானு...        

ரெண்டு நாள் கழிச்சு அப்பா கூட ஊட்டி போனேன்... ஆசையா மினி பஸ்ச விட்டு கீழ குதிச்சேன்... அப்பறம் தான் தெரியும், மின்னலே படம் பாத்து நான் மட்டும் இல்ல நெறைய பேர் அங்க சேந்திருக்காங்கனு ... 

விதி வலியது...

தொடரும்...

பின் குறிப்பு : 
மொதல்ல தாங்க அந்த காலேஜ் பில்டிங் எல்லாம் கம்மியா இருந்தது, இப்போ, பய புள்ளைங்க வளைச்சு  வளைச்சு பில்டிங் கட்டி பட்டய கிளப்பிட்டாங்க...
அதும் இல்லாம  நாங்க சேந்தப்ப பில்டிங் தான் ஒரே குறை, மிச்ச படி காலேஜ் சூப்பர்.... 

மங்களூர் பகுதி 1

என்னடா, டூர்னு போட்டுட்டு மங்களூர போட்ருகான்னு பாக்கறீங்களா, நாங்க போனது, ஊட்டி வழியா... அத பத்தி விலாவரியா பாப்போம்...

எப்டியும் பாதி பேர் என்னோட சுய விபரத்த படிக்காம தான் இத படிச்சிட்டு இருப்பீங்க, அதனால ஒரு சுய  விளம்பரம்...
என் பேர் அருண், நான் கோயம்புத்தூர்ல தான் ஸ்கூல் படிச்சேன், வளந்தேன், உருண்டேன், இன்னும் எவ்ளோ டேன் இருக்கோ அவ்ளோவும் இந்த அழகான ஊர்ல தான் ( உடனே மத்த ஊர் எல்லாம் அழகு இல்லையானு கேக்க கூடாது ).... எல்லா ஊரும் அழகு தான?..... இப்போ இங்க தான் வேலையும்....

சரி இப்போ, சும்மா அங்க போனோம், இங்க போனோம் , அது நல்லா இருந்தது, இது நல்லா இருந்தது அப்டி சொல்லிட்டே இருந்தா மொக்கை தான் மிஞ்சும்..... அதனால, அந்த டூர்ல நடந்த சில பிரச்சனைகள், காமெடிகள் இதெல்லாம் சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் னு தோணுது... வேணாம்னா சொல்லிடுங்க.....

அப்பறம் இன்னொரு முக்கியமான மேட்டர்... நான் போன டூர் எல்லாமே பசங்க கூட                  ( கல்யாணம் ஆகாதவங்கனு சொல்ல வந்தேன் )... தண்ணி, சைட் ( மனசுக்கு புடிச்ச பொண்ண ஜஸ்ட் பாக்கறது மட்டும் தான், வேற ஏதும் இல்லீங்க ),  தம் எல்லாம் சகஜமா வரும் புடிக்கலனா சொல்லிடுங்க...திட்டிட போறீங்க.... நான் குழந்த பையன்....

சரி சரி கோச்சுகாதீங்க, விஷயத்துக்கு வரேன் மங்களூர் பிளான் எப்டி ஆரம்பிச்சதுனா, 2008 ஆகஸ்ட் மாசம்னு நெனைக்கறேன்.... அப்போ நமக்கு வேலை இல்ல, வெட்டி தான்.... ஒரு வெள்ளி கிழமை காலைல என் நண்பன் ரூம் க்கு போனேன், அந்த ரூம்ல மொத்தம் 3 பேர், ( என் நண்பர்கள் பத்தி விளக்கமா அடுத்தடுத்து சொல்றேன், இப்போ பேர் மட்டும்)... மைனா ( ஒரிஜினல் பேர் கண்ணன் ), நவீன் ( இவனோட பட்ட பேர சொல்ல முடியாது, கொஞ்சம் பப்ளிக்...) , அப்பறம் தீனா (  மைனா  கூட ரூம் ல தங்கி இருந்ததால தெரியும்), மைனா , நான் , நவீன் எல்லாரும் ஊட்டி ல காலேஜ் மேட்ஸ்....

நான் ரூம் குள்ள போறப்ப, மைனா வும் நவீன் உம், தீனா கிட்ட என்னமோ போலாம் டா, ஒரே நாள் ல வந்திடலாம், ஒரு நாள் மட்டும் வேலைக்கு போகாத னு சொலிட்டு இருந்தாங்க.... நான் போனதும் அவங்களுக்கு குஷி,

"வாடா, எப்டியும் நீ வருவனு தெரியும் ( வெட்டி பையன் தானே ), இன்னைக்கு நானும், மைனா வும் வேலைக்கு கட், ரெண்டு பேரும் தல வலி னு லீவ் போடாச்சு,  ஊட்டி போலாம் னு பிளான், இவன வர சொல்லி கேட்டுட்டு இருந்தோம், கரெக்ட்ஆ நீ வர, போலாம் தான" இது நவீன்.....

தீனா சொன்னான், "இல்லடா கண்டிப்பா போனும்"னு, அப்பவே தெரியும், அவன் வந்திடுவான்னு..... 4  பேர் ஓகே.... இப்போ அடுத்த பிரச்சன, வண்டி இல்ல ( நாங்க பஸ்ல எல்லாம் போறது இல்லீங்க ), ( அப்போ என்கிட்ட வண்டி இல்ல ).... நான் என் மாமா கிட்ட கேட்டு ஒரு வண்டி ரெடி பண்ணிட்டேன் ( நான் மாமா கிட்ட பேசிட்டு இருந்த டைம்ல தீனா வரேன்னு ஒத்துக்கிட்டான் ).

மைனா, அவன் நண்பன் (அவன் பேரும் அருண் தான் ) கிட்ட கெஞ்சிட்டு இருந்தான், கடசில, "மச்சான் ஓகேடா, வண்டி ரெடி, சர்வீஸ் விடணுமாம், 200 km மேல ஓட்ட வேணாம்"  னு சொன்னான்.

நான், "அவ்ளோ கூட ஓடாது டா, ஊட்டி தான ( ஊட்டி கோயம்புத்தூர் ல இருந்து 88 km )  நாளைக்கு காலைல வண்டி திருப்பி குடுத்துடலாம் (சனி கிழமை காலைல)" னு ஒரு பிட்அ போட்டேன்....
நானும் நவீன் உம் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டோம், எங்க ரெண்டு  பேருக்கு தான் தெரியும், எப்டியும் 800 km  வண்டி ஓடும்னு.....

அடுத்தடுத்து என்ன நடந்ததுனு அடுத்த எபிசொட்ல சொல்றேன்.... அப்டியே சில படங்களை சேக்க முடிஞ்சா சேக்கறேன்....

சுற்றுலா இனிதே ஆரம்பம்....

எல்லாருக்கும் வணக்கம்...
எத்தன பேர் இதெல்லாம் படிப்பீங்கனு தெரிலங்க...
சும்மா எதாச்சும் ஆரம்பிக்கணும்னு தோணுச்சு...
கதை, கவிதை, கட்டுரை, இதெல்லாம் எனக்கு வராது ( தப்பிச்சோம்னு நெனச்சீங்க தான? )...
சும்மா நான் கொஞ்சம் அதிகமா ஊர் சுத்துவேன், சும்மா நான் போய்ட்டு வந்த டூர் பத்தி எல்லாம் சொன்னா யாரசுக்கும் உபயோகமா இருக்குமேனு இத தொடங்கினேன்...
யாரவது ஒருத்தருக்கு உபயோகமா இருந்தாலும் ஓகே தான்.....