என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, November 30, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 11

ரகு ஒரு நாள் ஹாஸ்டல் போன்ல பேசிட்டு இருந்தது கேட்டது. 
"ஆமாடா இங்க மழை எல்லாம் இல்லை, அங்க எப்டி?, ஓ சரி சரி, அப்பறம் அங்க மணி என்னடா?, இங்க மத்யானம் 12 "  
அப்பறம் சத்தமா சிரிச்சிட்டு இருந்தான். நான் கூட நண்பனுக்கு வெளிநாட்டுல எல்லாம் நண்பர்கள் இருக்காங்க போல, பெரிய ஆள் தான்னு நெனச்சிட்டே, "யாருடா நண்பா? எங்க இருந்துடா போன், பாரின்னா?"
"ஹி ஹி, இல்லடா, கோயம்புத்தூர் தான்"

அப்பறம் தான் மேட்டர் தெரிஞ்சது. நாங்க மொதல்ல இருந்த ஹாஸ்டல் போன்ல இன்கமிங் மட்டும் தான் வரும். அவுட்கோய்ங் பண்ண, பட்டன் அழுத்த முடியாது. இப்போ இருக்கற ஹாஸ்டல்ல சாதாரண போன் வெச்சிருந்தாங்க. நம்ம பசங்க விடுவாங்களா? அப்போ நடந்தது தான் மேல சொன்ன உரையாடல். இது கூட பரவால்லங்க, இன்னொருத்தன் வரிசைல உக்காந்திருக்கான். கைல மளிகை கடை லிஸ்ட் மாறி பெரிய லிஸ்ட். எல்லாருக்கும் போன் பண்ணிட்டு தான் வந்தான். அந்த மாசம் போன் பில் மட்டும் 10000 வந்ததா சொன்னாங்க. 

இதுகூட பரவால்ல சின்ன திருட்டு தான். ரொம்ப நாளா ஹாஸ்டல்ல ஒரு  ரூம் மூடியே இருந்தது. எதாச்சும் மூடியே இருந்தா பசங்களுக்கு தான் ஆர்வம் தாங்காதே ( யாராச்சும் டபுள், ட்ரிபில் மீனிங் எல்லாம் எடுத்தா நான் பொறுப்பில்ல பா). பாக்யராஜ் ஒரு படத்ல சைக்கிள் லாக் ஒரே திருகுல தெரப்பாரே, அதே மாறி ஒரே திருகுல அந்த ரூம் பூட்ட தெறந்தான் நம்ம JP. உள்ள அந்த ஹாஸ்டல்ல முன்னாடி தங்கி இருந்த பொண்ணுங்களோட பெட்டி படுக்கை எல்லாம் இருந்தது. அத பாத்துட்டு இது நமக்கு சொந்தம் இல்லனு நம்ம பசங்க எல்லாம் திரும்பி வந்துட்டோம்.

சரி சரி, உங்க எதிர்பார்ப்பை  பொய் ஆக்க விரும்பல.அங்க இருந்த நோட் எல்லாம் பசங்க ராக்கெட் செய்ய கெடச்ச பரிசு மாறி விருப்பப்பட்டு ஏத்துகிட்டாங்க. லைப்பாய், சின்தால்னு லோக்கல் சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்தோம்(யாருப்பா அது குளிக்கற பழக்கம் இருக்கானு கேக்கறது?) அப்போ தான் டவ், இம்பிரியல் லெதர் எல்லாம் போட்டு பழகினோம். ஓல்ட் ஸ்பைஸ் ஷேவிங் லோசன் பாத்த எங்க ஒடம்பு ப்ருட் பாடி ஸ்ப்ரே பாத்துச்சு. என்ன பண்ண நாமளும் பாரின் ரேஞ்சுக்கு எப்போ போறது. நீங்களே சொல்லுங்க. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்த ரூம்ல அகழ்வாராய்ச்சி நடந்துட்டு இருந்தது. இந்த அரிய பணி தொடங்கி 3 வது நாள் மர்ம முடிச்சு அவிழ்ந்தது. ஒரு புல் ஜின் பாட்டில் கண்டுபுடிக்க பட்டது. அதுக்கப்பறம் நம்ம பொண்ணுங்க சரக்கு அதிகமா அடிச்சா, அவங்க வருங்கால சந்ததிகள் பாதிக்க படும்ன்னு நான் முன்னாடி படிச்ச  ஒரு கட்டுரைய மேற்கோள் காட்டி சொன்னேன். அப்பறம் தாய் குலத்துக்கு ஒரு பிரச்சனைனா பசங்க பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? இந்த பொண்ணுங்கள எப்டி காப்பாத்தறது என்று யோசிச்சு , அந்த சரக்க நாங்களே குடிச்சிடலாம் அப்டின்னு ஒரு மனதா முடிவு பண்ணோம். ( ஒரு சுட்ட சரக்க குடிச்சத எப்டி எல்லாம் மேக் அப் பண்ணுது பாரு அப்டின்னு யாரும் கேக்க கூடாது).

எல்லாம் சுபமா முடிஞ்சது. எக்ஸாம் எல்லாம் முடிச்சு பிரியா விடை குடுத்துட்டு எல்லாரும் கெளம்பினோம். கெளம்பும் போது, அந்த ஹாஸ்டல் ரெண்டு ஆய்டுச்சு. ஒரு அரை இன்ச் அளவுக்கு தரை எல்லாம் கிழிச்சு போட்ட பேப்பர். காட்டு கத்து கத்தி எல்லார் தொண்டையும் காலி. மொதல் வருடம் நடந்தது இதோட முடிஞ்சது. ரொம்ப சந்தோஷ படாதீங்க. இன்னும் 3 வருஷம் இருக்கு.......

74 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவினங்களா... பொணணுஙக ரூம தொறந்து ஆராய்ச்சி பண்ண சான்ஸ் கெடைச்சும், வெறும் சோப்பும், சென்ட்டும், தண்ணியும்தானா அடிச்சீங்க?

Arun Prasath said...

என்ன பண்ண ராமசாமி அண்ணே, அது தான எங்களுக்கு தெரியும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட போங்கப்பா... எவ கிட்டேயாவது போயி, அந்த ரூம்ல இருந்து முககியமான மேட்டரு ஒன்னு கெடச்சிருக்குன்னு நூல் விட்டு, என்னென்னமோ பண்ணியிருக்லாம்!

Arun Prasath said...

இதுக்கு தான் ஒரு ராமசாமி அண்ணன் வேணும்...

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

kudikaara paavi

Arun Prasath said...

@அருண் பிரசாத்

மிக்க நன்றி தல... பாத்தேன்...

Arun Prasath said...

kudikaara paavi//

நன்றி நன்றி.... இதுதான் உண்மையான வாழ்த்து.... ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

சரி.. சரி.. பினாத்தினது போதும்..
என்னமோ சொல்லுறேன்னு சொன்னியே.. அதச் சொல்லு..

Arun Prasath said...

சரி.. சரி.. பினாத்தினது போதும்..
என்னமோ சொல்லுறேன்னு சொன்னியே.. அதச் சொல்லு..///

அப்டி ஒன்னும் நான் சொல்லவே இல்லையே

ஹரிஸ் said...

நல்லாருக்கு பாஸ்...
எல்லாம் சுபமா முடிஞ்சது.//

அப்பாடா...

ரொம்ப சந்தோஷ படாதீங்க. இன்னும் 3 வருஷம் இருக்கு......//

ஐயையோ...

Arun Prasath said...

@ஹரிஸ் :
எல்லார் உயிரையும் வாங்காம விட மாட்டேன்

தமிழ்த்தோட்டம் said...

ரொம்ப அருமையா இருக்கு

எஸ்.கே said...

நல்லா சுவாரசியமா எழுதறீங்க!

Arun Prasath said...

@தமிழ்த்தோட்டம்
ரொம்ப அருமையா இருக்கு//

மொதல் தடவ வரீங்க போல? அடிக்கடி வாங்க... வாழ்த்துக்கு நன்றி...

Arun Prasath said...

@எஸ்.கே
//நல்லா சுவாரசியமா எழுதறீங்க!//

ரொம்ப நன்றி சார்

இம்சைஅரசன் பாபு.. said...

நல்லா தான் கதை எழுதுகிறான் ............சூப்பர் மக்கா

Arun Prasath said...

நல்லா தான் கதை எழுதுகிறான் ............சூப்பர் மக்கா//

நன்றி தல....
எப்பயும் நீங்க லேட் தான்...

வைகை said...

அவசரத்துல ஓட்டு மட்டும் போட்டு கருத்து சொல்லாம போயிட்டேன்!! அது என்ன "ஜின்"னா "பண்"ணா மிச்சம் எதுவும் இருக்கா?!!!

Arun Prasath said...

அவசரத்துல ஓட்டு மட்டும் போட்டு கருத்து சொல்லாம போயிட்டேன்!! அது என்ன "ஜின்"னா "பண்"ணா மிச்சம் எதுவும் இருக்கா?!!!////

பன் வேணா வாங்கி தரேன்... ஜின் எல்லாம் கெடைக்காது

நாகராஜசோழன் MA said...

அருண் பொண்ணுக ரூம்ல நிஜமாலுமே இந்த பொருட்களை மட்டும் தான் எடுத்தீங்களா? உண்மைய சொல்லணும்.

Arun Prasath said...

அருண் பொண்ணுக ரூம்ல நிஜமாலுமே இந்த பொருட்களை மட்டும் தான் எடுத்தீங்களா? உண்மைய சொல்லணும்.///

என்ன சொன்னாலும் எதாச்சும் அதிகமா எதிர் பாக்கறதே வேலையா போச்சு உங்களுக்கு.....

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

அருண் பொண்ணுக ரூம்ல நிஜமாலுமே இந்த பொருட்களை மட்டும் தான் எடுத்தீங்களா? உண்மைய சொல்லணும்.///

என்ன சொன்னாலும் எதாச்சும் அதிகமா எதிர் பாக்கறதே வேலையா போச்சு உங்களுக்கு.....//

ஏம்ப்பா ஒரு டவுட் கேட்கக்கூடாதா? நம்ம பன்னிக்குட்டி மாம்சும் தான் கேட்டாரு?

Arun Prasath said...

//ஏம்ப்பா ஒரு டவுட் கேட்கக்கூடாதா? நம்ம பன்னிக்குட்டி மாம்சும் தான் கேட்டாரு?//

கேக்கலாம், ஆனா சாட்ல கேக்கலாம்.....

நாகராஜசோழன் MA said...

// Arun Prasath said...

//ஏம்ப்பா ஒரு டவுட் கேட்கக்கூடாதா? நம்ம பன்னிக்குட்டி மாம்சும் தான் கேட்டாரு?//

கேக்கலாம், ஆனா சாட்ல கேக்கலாம்.....//

ha ha ha... சாட்ல கேட்ட நம்ம மக்களுக்கு எப்படி தெரியும்?

Arun Prasath said...

//ha ha ha... சாட்ல கேட்ட நம்ம மக்களுக்கு எப்படி தெரியும்?//

எடுத்த விசெயம் எல்லாம் சொன்னா சென்சார் பண்ணிடுவாங்களே.. அப்பறம் 18 + போடனும்

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

//ha ha ha... சாட்ல கேட்ட நம்ம மக்களுக்கு எப்படி தெரியும்?//

எடுத்த விசெயம் எல்லாம் சொன்னா சென்சார் பண்ணிடுவாங்களே.. அப்பறம் 18 + போடனும்//

கரெக்டு. நான் நெனச்சது நடந்திருக்கு. பன்னிக்குட்டி மாம்ஸ் இங்க வாங்க. நாம் இதை பேசி தீர்க்கலாம்.

Arun Prasath said...

கரெக்டு. நான் நெனச்சது நடந்திருக்கு. பன்னிக்குட்டி மாம்ஸ் இங்க வாங்க. நாம் இதை பேசி தீர்க்கலாம்.//

ஆனா எடுத்தத எல்லாம் வெச்சுட்டோம்... (நம்பவா போறீங்க? ஆனா வெச்சது உண்மை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//Arun Prasath said...

//ha ha ha... சாட்ல கேட்ட நம்ம மக்களுக்கு எப்படி தெரியும்?//

எடுத்த விசெயம் எல்லாம் சொன்னா சென்சார் பண்ணிடுவாங்களே.. அப்பறம் 18 + போடனும்//

கரெக்டு. நான் நெனச்சது நடந்திருக்கு. பன்னிக்குட்டி மாம்ஸ் இங்க வாங்க. நாம் இதை பேசி தீர்க்கலாம்.////

படுவா இவனுங்க என்ன எடுத்திருப்பானுங்கன்னு தெரியாதா? ஏதாவது கிழிஞ்ச அண்டர்வேரா (இதுக்கு 18+ தேவையில்ல) இருக்கும், கருமம், இதெல்லாம் ஒரு பிரச்சன இதுக்கு ஒரு பஞ்சாயத்து வேற?

Arun Prasath said...

படுவா இவனுங்க என்ன எடுத்திருப்பானுங்கன்னு தெரியாதா? ஏதாவது கிழிஞ்ச அண்டர்வேரா (இதுக்கு 18+ தேவையில்ல) இருக்கும், கருமம், இதெல்லாம் ஒரு பிரச்சன இதுக்கு ஒரு பஞ்சாயத்து வேற?///

M.L.A
அய்யா. தொப்பி தொப்பி...... ஆனா அன்டர்வேர் எல்லாம் இல்ல.....

ப.செல்வக்குமார் said...

//அந்த மாசம் போன் பில் மட்டும் 10000 வந்ததா சொன்னாங்க.
//

நீங்க எவ்வளவு போன் பண்ணுனீங்க ..?

Arun Prasath said...

நீங்க எவ்வளவு போன் பண்ணுனீங்க ..?//

எல்லாருக்கும் ஒரு பிரச்சனை, உனக்கு ஒன்னு

அன்பரசன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிங்களா... பொணணுஙக ரூம தொறந்து ஆராய்ச்சி பண்ண சான்ஸ் கெடைச்சும், வெறும் சோப்பும், சென்ட்டும், தண்ணியும்தானா அடிச்சீங்க?//

நல்ல பசங்களா இருந்துருக்கீங்களே என்ன மாதிரியே....

Arun Prasath said...

நல்ல பசங்களா இருந்துருக்கீங்களே என்ன மாதிரியே....///

நம்ம யாரையும் நம்ப மாட்டாங்க... என்ன உலகம் இது

அன்பரசன் said...

//Arun Prasath said...

நல்ல பசங்களா இருந்துருக்கீங்களே என்ன மாதிரியே....///

நம்ம யாரையும் நம்ப மாட்டாங்க... என்ன உலகம் இது//

:(

Arun Prasath said...

சரி சரி, நல்லவங்களுக்கு காலம் வரும்

அன்பரசன் said...

//Arun Prasath said...

சரி சரி, நல்லவங்களுக்கு காலம் வரும்//

Ok Ok

ப.செல்வக்குமார் said...

//என்ன பண்ண நாமளும் பாரின் ரேஞ்சுக்கு எப்போ போறது. நீங்களே சொல்லுங்க. //

அதானே .,!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
படுவா இவனுங்க என்ன எடுத்திருப்பானுங்கன்னு தெரியாதா? ஏதாவது கிழிஞ்ச அண்டர்வேரா (இதுக்கு 18+ தேவையில்ல) இருக்கும், கருமம், இதெல்லாம் ஒரு பிரச்சன இதுக்கு ஒரு பஞ்சாயத்து வேற?///

M.L.A
அய்யா. தொப்பி தொப்பி...... ஆனா அன்டர்வேர் எல்லாம் இல்ல.....//////

உண்மையச் சொல்லிடுவேன், ப்ளாக் நாறிடுமேன்னு பாக்குறேன், சரி பொழச்சிப் போ!

ப.செல்வக்குமார் said...

// இந்த பொண்ணுங்கள எப்டி காப்பாத்தறது என்று யோசிச்சு , அந்த சரக்க நாங்களே குடிச்சிடலாம் அப்டின்னு ஒரு மனதா முடிவு பண்ணோம். ( ஒரு சுட்ட சரக்க குடிச்சத எப்டி எல்லாம் மேக் அப் பண்ணுது பாரு அப்டின்னு யாரும் கேக்க கூடாது).//

அட அட , எவ்ளோ நல்லவர் நீங்க .!!

Arun Prasath said...

உண்மையச் சொல்லிடுவேன், ப்ளாக் நாறிடுமேன்னு பாக்குறேன், சரி பொழச்சிப் போ!///

தம்பி பாவம் இல்ல ராமசாமி அண்ணே.....

Arun Prasath said...

அட அட , எவ்ளோ நல்லவர் நீங்க .!!//

உனக்கு மட்டும் தான் செல்வா தெரிஞ்சிருக்கு

karthikkumar said...

வந்துட்டேன்

Arun Prasath said...

வாங்க பங்காளி

karthikkumar said...

எங்க சண்ட சண்ட

karthikkumar said...

தாச்சும் மூடியே இருந்தா பசங்களுக்கு தான் ஆர்வம் தாங்காதே///
ச்சி கெட்ட பசங்க

karthikkumar said...

இந்த சம்பவத்துல நீங்க எந்த எடத்துலயும் பல்பு வாங்குனத தெரியலையே

ப.செல்வக்குமார் said...

48

ப.செல்வக்குமார் said...

49

ப.செல்வக்குமார் said...

50

ப.செல்வக்குமார் said...

வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் ..!!

Arun Prasath said...

//எங்க சண்ட சண்ட//

எங்கயும் இல்ல...

//ச்சி கெட்ட பசங்க//

அதான் சொன்னேனே நான் நல்லவன்னு

//இந்த சம்பவத்துல நீங்க எந்த எடத்துலயும் பல்பு வாங்குனத தெரியலையே//

அதுல உனக்கு என்ன பா ஆர்வம்

Arun Prasath said...

வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் ..!!//சொந்த வடை தின்பதை பதிவுலகம் ஆதரிகாது, அதனால வடை உனக்கே

karthikkumar said...

Arun Prasath said...
வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் ..!!//சொந்த வடை தின்பதை பதிவுலகம் ஆதரிகாது, அதனால வடை உனக்கே///

தத்துவம் நெம்பர் 10254

Arun Prasath said...

//தத்துவம் நெம்பர் 10254//

கணக்கு தப்பு, ரெண்டு விட்டுடீங்க பங்காளி

karthikkumar said...

Arun Prasath said...

//இந்த சம்பவத்துல நீங்க எந்த எடத்துலயும் பல்பு வாங்குனத தெரியலையே//

அதுல உனக்கு என்ன பா ஆர்வம்////

என்னப்பா பொசுக்குன்னு இப்படி பேசிட்ட? நம்ம மன்ன மாத்தனுமே நம்ம மக்கள மாத்தனுமே அப்படின்னு பேராசபட்டு சொன்னா....

Arun Prasath said...

அது பேராசை இல்ல நண்பா பிரயாசை...

karthikkumar said...

Arun Prasath said...
அது பேராசை இல்ல நண்பா பிரயாசை///

உங்க குடும்பத்துல யாராவது வாத்தியாரா? இல்ல உங்க பக்கத்துக்கு வீட்ல எதிர் வீட்ல யாராவது வாத்தி இருக்காங்களா

வெறும்பய said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு...

Arun Prasath said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு...//

நன்றி தல..... என்ன லேட்

வினோ said...

கலக்கல் அனுபவமா இருக்கு.. நீங்க கோவையில எங்க தல...

பதிவுலகில் பாபு said...

அருண்.. செமயா இருக்குங்களே உங்க அனுபவம்..

தொடருங்கள்.. இனி வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..

Arun Prasath said...

//கலக்கல் அனுபவமா இருக்கு.. நீங்க கோவையில எங்க தல...//

அட நீங்களும் நம்ம ஊரா? நான் பீளமேடு

Arun Prasath said...

//அருண்.. செமயா இருக்குங்களே உங்க அனுபவம்..

தொடருங்கள்.. இனி வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..//

ஹி ஹி நன்றி தல.... அடிக்கடி வாங்க...

anu said...

Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article

Arun Prasath said...

மொதல் டைம் வரீங்க போல? வந்ததுக்கும், 7 8 டைம் வாழ்துனதுக்கும் நன்றி அனு :)
அடிக்கடி வாங்க

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையா இருக்குங்க. உங்க அனுபவமும் அதை நீங்க சொல்லியிருக்கற விதமும்.. இத்தனை எபிசோட் ஓடிருச்சா.. தெரியவேயில்லை... இனி ரெகுலரா வர்ரேன்...

Arun Prasath said...

//அருமையா இருக்குங்க. உங்க அனுபவமும் அதை நீங்க சொல்லியிருக்கற விதமும்.. இத்தனை எபிசோட் ஓடிருச்சா.. தெரியவேயில்லை... இனி ரெகுலரா வர்ரேன்... //

ஹி ஹி நன்றி, கண்டிப்பா வாங்க...

ம.தி.சுதா said...

தங்கள் பதிவு ரசிக்க வைக்கிறது

வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

Arun Prasath said...

தங்கள் பதிவு ரசிக்க வைக்கிறது

வாழ்த்துக்கள்...//


ரொம்ப நன்றி அண்ணே... அடிகடி வாங்க

ஜீ... said...

Nice :-)

Arun Prasath said...

நன்றி ஜீ அவர்களே, அடிக்கடி வாங்க

சுபத்ரா said...

//அப்பறம் தாய் குலத்துக்கு ஒரு பிரச்சனைனா பசங்க பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? இந்த பொண்ணுங்கள எப்டி காப்பாத்தறது என்று யோசிச்சு , அந்த சரக்க நாங்களே குடிச்சிடலாம் அப்டின்னு ஒரு மனதா முடிவு பண்ணோம்//

அதுசரி. எங்க நாங்களும் பங்குக்கு வந்துட்டா உங்களுக்குக் கிடைக்காதேனு ஒரு நல்ல(?) எண்ணம்.. அப்படித் தான?

Arun Prasath said...

அதுசரி. எங்க நாங்களும் பங்குக்கு வந்துட்டா உங்களுக்குக் கிடைக்காதேனு ஒரு நல்ல(?) எண்ணம்.. அப்படித் தான?///

நல்லது செஞ்சா புடிக்காதே..