என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, November 30, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 11

ரகு ஒரு நாள் ஹாஸ்டல் போன்ல பேசிட்டு இருந்தது கேட்டது. 
"ஆமாடா இங்க மழை எல்லாம் இல்லை, அங்க எப்டி?, ஓ சரி சரி, அப்பறம் அங்க மணி என்னடா?, இங்க மத்யானம் 12 "  
அப்பறம் சத்தமா சிரிச்சிட்டு இருந்தான். நான் கூட நண்பனுக்கு வெளிநாட்டுல எல்லாம் நண்பர்கள் இருக்காங்க போல, பெரிய ஆள் தான்னு நெனச்சிட்டே, "யாருடா நண்பா? எங்க இருந்துடா போன், பாரின்னா?"
"ஹி ஹி, இல்லடா, கோயம்புத்தூர் தான்"

அப்பறம் தான் மேட்டர் தெரிஞ்சது. நாங்க மொதல்ல இருந்த ஹாஸ்டல் போன்ல இன்கமிங் மட்டும் தான் வரும். அவுட்கோய்ங் பண்ண, பட்டன் அழுத்த முடியாது. இப்போ இருக்கற ஹாஸ்டல்ல சாதாரண போன் வெச்சிருந்தாங்க. நம்ம பசங்க விடுவாங்களா? அப்போ நடந்தது தான் மேல சொன்ன உரையாடல். இது கூட பரவால்லங்க, இன்னொருத்தன் வரிசைல உக்காந்திருக்கான். கைல மளிகை கடை லிஸ்ட் மாறி பெரிய லிஸ்ட். எல்லாருக்கும் போன் பண்ணிட்டு தான் வந்தான். அந்த மாசம் போன் பில் மட்டும் 10000 வந்ததா சொன்னாங்க. 

இதுகூட பரவால்ல சின்ன திருட்டு தான். ரொம்ப நாளா ஹாஸ்டல்ல ஒரு  ரூம் மூடியே இருந்தது. எதாச்சும் மூடியே இருந்தா பசங்களுக்கு தான் ஆர்வம் தாங்காதே ( யாராச்சும் டபுள், ட்ரிபில் மீனிங் எல்லாம் எடுத்தா நான் பொறுப்பில்ல பா). பாக்யராஜ் ஒரு படத்ல சைக்கிள் லாக் ஒரே திருகுல தெரப்பாரே, அதே மாறி ஒரே திருகுல அந்த ரூம் பூட்ட தெறந்தான் நம்ம JP. உள்ள அந்த ஹாஸ்டல்ல முன்னாடி தங்கி இருந்த பொண்ணுங்களோட பெட்டி படுக்கை எல்லாம் இருந்தது. அத பாத்துட்டு இது நமக்கு சொந்தம் இல்லனு நம்ம பசங்க எல்லாம் திரும்பி வந்துட்டோம்.

சரி சரி, உங்க எதிர்பார்ப்பை  பொய் ஆக்க விரும்பல.அங்க இருந்த நோட் எல்லாம் பசங்க ராக்கெட் செய்ய கெடச்ச பரிசு மாறி விருப்பப்பட்டு ஏத்துகிட்டாங்க. லைப்பாய், சின்தால்னு லோக்கல் சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்தோம்(யாருப்பா அது குளிக்கற பழக்கம் இருக்கானு கேக்கறது?) அப்போ தான் டவ், இம்பிரியல் லெதர் எல்லாம் போட்டு பழகினோம். ஓல்ட் ஸ்பைஸ் ஷேவிங் லோசன் பாத்த எங்க ஒடம்பு ப்ருட் பாடி ஸ்ப்ரே பாத்துச்சு. என்ன பண்ண நாமளும் பாரின் ரேஞ்சுக்கு எப்போ போறது. நீங்களே சொல்லுங்க. 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்த ரூம்ல அகழ்வாராய்ச்சி நடந்துட்டு இருந்தது. இந்த அரிய பணி தொடங்கி 3 வது நாள் மர்ம முடிச்சு அவிழ்ந்தது. ஒரு புல் ஜின் பாட்டில் கண்டுபுடிக்க பட்டது. அதுக்கப்பறம் நம்ம பொண்ணுங்க சரக்கு அதிகமா அடிச்சா, அவங்க வருங்கால சந்ததிகள் பாதிக்க படும்ன்னு நான் முன்னாடி படிச்ச  ஒரு கட்டுரைய மேற்கோள் காட்டி சொன்னேன். அப்பறம் தாய் குலத்துக்கு ஒரு பிரச்சனைனா பசங்க பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? இந்த பொண்ணுங்கள எப்டி காப்பாத்தறது என்று யோசிச்சு , அந்த சரக்க நாங்களே குடிச்சிடலாம் அப்டின்னு ஒரு மனதா முடிவு பண்ணோம். ( ஒரு சுட்ட சரக்க குடிச்சத எப்டி எல்லாம் மேக் அப் பண்ணுது பாரு அப்டின்னு யாரும் கேக்க கூடாது).

எல்லாம் சுபமா முடிஞ்சது. எக்ஸாம் எல்லாம் முடிச்சு பிரியா விடை குடுத்துட்டு எல்லாரும் கெளம்பினோம். கெளம்பும் போது, அந்த ஹாஸ்டல் ரெண்டு ஆய்டுச்சு. ஒரு அரை இன்ச் அளவுக்கு தரை எல்லாம் கிழிச்சு போட்ட பேப்பர். காட்டு கத்து கத்தி எல்லார் தொண்டையும் காலி. மொதல் வருடம் நடந்தது இதோட முடிஞ்சது. ரொம்ப சந்தோஷ படாதீங்க. இன்னும் 3 வருஷம் இருக்கு.......

Thursday, November 25, 2010

பாலி பகுதி 5

கடல் வெளையாட்டு எல்லாம் முடிஞ்ச அப்பறம் வினீத் டிரைவர் கிட்ட ஏதோ சொல்லிட்டு இருந்தான். அவனும் சிரிசிட்டே ஓகே ஓகேனு  தலை ஆட்டிட்டு இருந்தான்.
"மச்சான்ஸ் மொதல்ல சாப்ட போறோம் அப்றம் சாயங்காலம் ஆய்டும் போல அந்த எடத்துக்கு போகறக்கு, பாலிலயே நல்ல எடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு டிரைவர் சொன்னான் ஓகே தான?"
"எல்லாம் ஓகே டா, ஆனா நான் மட்டும் தான் எல்லா பக்கமும் டெஸ்ட் பண்ணனுமா? நீயும் வாவேன்" இது நான்.
"அதெல்லாம் ஜம்பமா நான் போறேன்னு சொன்னியே அப்ப யோசிச்சிருக்கணும்"

என்னங்க, நாங்க என்ன பேசறோம்னு தெரில? அதாங்க நேத்து சும்மா பீர் குடிச்சிட்டு இருந்தபோது மசாஜ் பத்தி பேச்சு வந்தது. நான் ஏதோ கேரளா மசாஜ்னு நெனச்சு நான் கண்டிப்பா பண்ணனும்னு வாய் விட்டுட்டேன். அப்பறம் சொல்றாங்க அது கில்மா மசாஜ்னு. வயத்துல லைட்டா பட்டாம்பூச்சி பறந்தது. இவனுங்க யாரும் போனதில்ல, யாருக்கும் எப்டி இருக்கும்னு தெரில. இங்கயும் நான் தான் பலி கடா.

சாப்ட்டு முடிச்ச அப்றம் வண்டி நேரா போன எடம் மசாஜ் செய்யற  எடம். சும்மா சொல்ல கூடாதுங்க, நம்ம ஊர் 5 ஸ்டார் ஹோட்டல் தோத்திரும். அவ்ளோ பெருசு.

"ஏன்டா மசாஜ்னு சொன்னா இது என்னடா ஏதோ பிலிம் ஸ்டுடியோ மாறி இருக்கு"
"எனக்கும் ஒன்னும் தெரிலடா வா போய் பாக்கலாம்"

நீ போ, நான் போன்னு முடிவா எல்லாரும் உள்ள போனோம். போனதும் ஒரு அக்கா வந்து மசாஜ்ஜா அப்டினு கேட்டுட்டு, ஒரு மெனு கார்டு (இதுக்கு கூடவா) குடுத்துச்சு. அதுல ஒன்னு செலக்ட் பண்ணி சொன்னோம். அப்பறம் 200,000 ரூபா ஆகும்னு சொல்லுச்சு 1 மணி நேரத்துக்கு ( பயப்படாதீங்க , இந்தோனேசியா காசு தான், அத பத்தி அப்பறம் சொல்றேன்). சரினு காசு குடுத்துட்டு அப்பறம் ஒன்னு சொல்லுச்சு பாருங்க, எனக்கு மூச்சே நின்னுருச்சு.

"என்னடா சொல்றா அவ?"
"புரில, அங்க பாதி கண்ணாடி இருக்கு பாரு, அதுக்கு பின்னாடி பொண்ணுங்க இருக்காம், யாரு வேணும்னு செலக்ட் பண்ணிக்க சொல்லுச்சு"
"டேய் மச்சி, இன்னும் இந்த தப்பு தான்டா பண்ணல. இது மசாஜ் மாறி தெரிலடா, வேற மாறி இருக்கு"
"எனக்கும் அதே டவுட் தான், காசு குடுத்தாச்சு போய்ட்டு வா"


ஒரு ரெண்டு நிமிஷம் யோசிச்சு பாத்தேன். கண்டிப்பா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. இந்த விசயத்துல நான் பலி ஆகமாட்டேன்னு முடிவு பண்ணி,"இல்ல மச்சான், எனக்கு போ புடிக்கல, பணம் போனா போய்ட்டு போகுது"
தீர்கமா சொன்னத பாத்து ஏதோ சரினு சொல்லிட்டானுங்க. ஆனா ஊருக்கு போறக்கு  முன்னாடி என்ன கிண்டல் பண்ணியே கொன்னுடுவானுங்க. பரவால்ல அத கூட சமாளிச்சுக்கலாம்.


"டேய் பாரு நீ மிஸ் பண்ணிட்ட, என்ன தான் இருக்குனு பாத்துட்டு வந்திருக்கலாம்ல. வாய் மட்டும் காது வரைக்கும் பேசு"
"ஐயோ சாமி இத மிஸ் பண்ணதாவே இருக்கட்டும்டா, இந்தோனேசியா வந்து தான் கற்பு போகணுமா? உன்ன போ சொன்னா போவியா? மாட்ட தான? அதே தான் இங்கயும், மூடிட்டு வா"
இவனுங்க கிண்டல் பண்ணவும் இல்ல. அப்பாடி தப்பிச்சோம்டா சாமி.

அடுத்த நாள் பாலில கடைசி நாள். அடுத்த பதிவுல பாலி பத்தி சில டிப்ஸ் சொல்றேன். 

Wednesday, November 24, 2010

தேடினேன் காதலை 4

"என்ன வித்யா, என்ன ஆச்சுன்னே தெரியல. இந்த செல்வா வேற போன் எடுக்க மாட்டேங்கறான், வேற யாரு அவன் கூட நின்னுட்டு இருந்தாங்க?"
"தெரிலயே, ஒன்னும் ஆகி இருக்காது, நீ கவலை படாத சூர்யா, நான் வேணா செல்வா கிட்ட பேசவா?"
.....
"வித்யா, செல்வா போன் பண்றான்"
.....
"என்ன பண்ணனும்னு சொல்லுங்க அருண்"
"செல்வா, நீங்க அவளுக்கு போன் பண்ணி இந்த வாரம் ஞாயித்துக்கிழமை உங்க ஆபீஸ் டீம்ல எல்லாரும் படத்துக்கு போறோம், அவ கண்டிப்பா வரணும்னு சொல்லிடுங்க. மகாராஜா மல்டிபிளெக்ஸ்னு சொல்லிடுங்க, அப்பறம் வரும் போது அவள பஸ்ல வரசொல்லுங்க, இல்ல நீங்க கூட்டிட்டு வந்திருங்க"
"எல்லாம் ஓகே, வரும் போது நான் ஏன் கூட்டிட்டு வரணும்? அவங்க கிட்டயே வண்டி இருக்கும்னு நெனைக்கறேன்"
"ஹி ஹி, அப்ப தான போகும் போது நான் கூட்டிட்டு போ முடியும்"
"அடா அடா நல்லா தான் பிளான் பண்றீங்க, சரி அங்க போய் என்ன பண்ண?"
"நாளைக்கு சொல்றேன், நீங்க கால் பண்ணி சொல்லிடுங்க"
"இதோ பண்ணிட்டேன்"
....
"என்ன சூர்யா சொன்னான்?"
"இத பத்தி பேசவே முடில வித்யா,  நம்ம டீம் படத்துக்கு போகுதாம் , ஞாயித்துக்கிழமை. அதுக்கு நம்ம ரெண்டு பேரையும் வர சொன்னான், ஹாஸ்டல்ல பிக் பண்ணிக்கிறேன்னு சொன்னான்"
"சரி விடு, இன்னும் ஒரே நாள் தான நடூல இருக்கு, படத்துக்கு போகும் போது கேட்டுக்கலாம்"
....
நான் செல்வா கூட பேசிட்டு இருந்தத விஜய் ஒரு கேள்வி குறி பார்வையால் பாத்துட்டு இருந்தான். 
"என்னடா பண்ண போற?"
"மச்சி அந்த தியேட்டர் போறோம், ஒரு ஷோ டிக்கெட் புல்லா நாமளே புக் பண்றோம். அந்த ஷோக்கு நானும் சூர்யா மட்டும் தான் உள்ள இருப்போம். மத்தவங்க எத்தன பேரோ, அவங்களுக்கு இன்னொரு ஸ்க்ரீன்ல புக் பண்ணிடலாம். 3 மணி நேரம் எந்த இடையூறும் இல்லாம நாங்க பேசிக்கலாம்ல, எப்பூடி?"
"சரி, பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா ஏன் அவ்ளோ தூரம் போகணும்?"
"அந்த தியேட்டர் தான்டா கொஞ்சம் சின்னது, நீ தான் செலவு பண்ணுவேன்னு அடம் புடிக்கறப்ப , அந்த செலவுல கொஞ்சம் கம்மி பண்ணலாம்ல, நண்பனுக்கு இது கூட செய்யலனா எப்டி?"
"டேய் டேய், சொந்த காச போட்டு காதலிங்கடா"
"மச்சி நீயே இப்டி பேசலாமா? உன் லவ்க்கு நான் பண்ணாத உதவியா?, சரி சரி சீக்கிரம் போலாம் வா, டிக்கெட் தீந்திரும்"
"இவன் அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா?இது எங்க போய் முடியும்னு தெரிலயே?"
"கல்யாணத்துல தான்"
.... 
"சூர்யா, வித்யா நீங்க ரெண்டு பேரும் உள்ள போய் உக்காருங்க, நாங்க ஆன்லைன் புக்கிங் பண்ணத மாத்திட்டு வந்திடறோம். ஸ்க்ரீன் 2 "
"தம் அடிக்க போறோம்னு சொல்லிட்டு போங்க செல்வா சார். வா வித்யா போலாம்" 
..
"என்ன சூர்யா இப்போ தான் உள்ள வந்தோம், அதுக்குள்ள செல்வா கூப்டறான்" 
"ஹலோ வித்யா, நான் சொல்றத மட்டும் கேளு பதில் பேசாத. கடைசி ரோல அருண் உக்காந்துட்டு இருக்காரு, இந்த பிளான் எல்லாம் அவங்க தனியா பேச தான். நீ அப்டியே சிக்னல் கெடைக்காத மாறி வெளிய வந்திடு"
"ஓஹோ, ஹலோ, ஹலோ இரு வெளிய வரேன்"
"இரு சூர்யா வரேன்"
....
"ஹலோ சூர்யா வணக்கம்"
என் பேர யாரு சொல்றது? திரும்பி பாத்தேன், மயக்கம் வராத குறை தான். தண்ணி தாகம் எடுத்தா நாக்கு மேல் அண்ணத்துல ஒட்டிக்கும்ல அந்த மாறி ஒட்டிகிச்சு. 
"என்னங்க, நான் எப்டி இங்கனு பாக்கறீங்களா, எல்லாம் நம்ம பிளான் தான், உங்கள தனியா சந்திக்க. ஓவர் அதிர்ச்சி காட்டாதீங்க. இந்தாங்க தண்ணி கொஞ்சம் குடிச்சுகங்க. இந்த படம் முடியற வரைக்கும் ரெண்டு பேருக்கும் நெறைய தேவ படும், எனக்கும் டம் டம் னு தான் அடிக்குது"
பசங்க இவ்ளோ வெளிபடையா கூட பேசுவாங்களா? சரி பாவம் பேசட்டும், எப்டியும் கல்யாணத்துக்கு அப்பறம் நான் தான் பேச போறேன், இப்போ தான் மீட் பண்றோம், இப்பவாச்சும் அவர் பேசட்டும்.
....
அந்த 3 மணி நேரம் எப்டி போச்சுனு தெரில. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரி ப்ரூப் இன்னைக்கு எங்க சந்திப்பு. நான் தான் பேசிட்டே இருந்தேன். அவ கொஞ்சம் தான் பேசினா. லவ் பண்ணா கவிதை எழுதற பசங்கள கண்டபடி திட்டிட்டு இருந்தவன் நான். இனி மேல் என்ன மாறி ஒருத்தன் என்ன திட்ட போறான்.

படம் முடிஞ்சு அதே மஞ்ச கலர் வண்டில, என் பின்னாடி அவ. எங்க பயணம் ஆரம்பிச்சது.
..................................

Tuesday, November 23, 2010

தேடினேன் காதலை 3

"என்ன சூர்யா முடிவு பண்ணிருக்க? அவர் கிட்ட போய் பேச போறியா? இல்ல அவங்க உங்க வீட்டுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ண போறியா?"
"தெரில வித்யா, அத பத்தி தான் நெனச்சிட்டு இருக்கேன், நீயும் இதயே கேக்கற!"
"இந்த டைம்ல அத பத்தி நெனைக்காம வேற எத பத்தி நெனைக்க போற? இன்னும் கொஞ்ச நேரம் தான், உன் ஹீரோ வந்திருவாரு"

 ஆனாலும் இவ பயங்கரமா கிண்டல்  பண்றா. இன்னைக்கும் வருவாரா? பாக்கலாம். என்னென்னமோ நெனச்சிட்டு இருக்கும் போதே என் டீம் மேட் செல்வாவும் அவன் நண்பர்கள் 3  பேரும் ஜன்னல் பக்கத்ல நின்னுட்டு பேசிட்டு இருந்தது கேட்டது.

"பாஸ், அவனே தான் பாத்தீங்களா? அதே மஞ்ச கலர் யமஹா"
"ஆமா செல்வா, அவன மாறி தான் இருக்கு"
"நேத்தே வண்டி மேல ஏறி நின்னுட்டு நம்ம கேம்பஸ் குள்ள பாத்துட்டு இருந்தான், என்னனு கேக்க போலாம்னு நெனச்சேன், அதுக்குள்ள எஸ் ஆய்ட்டான். கண்டிப்பா சைட் அடிக்க தான் வந்திருக்கான். லாக் அவுட் பண்ணிட்டு எல்லாரும் வாங்க என்னனு கேட்டுடலாம். இன்னைக்கு ரெண்டு பேர் சிக்கியிருக்காங்க, கைமா பண்ணிடலாம்"

இதெல்லாம் கேட்டதுமே எனக்கு தல சுத்திடுச்சு. செல்வா கிட்ட வேணாம்னு சொல்லலாம்னு எழுந்தேன். அப்ப பாத்துதான் டீம் லீடர் கால் பண்ணனும்? ஐயோ இவனுங்க வேற கெளம்பி போறாங்களே. நம்ம ஆள ஒன்னும் பண்ணாம இருக்கனும் ஆண்டவா.
....
"டேய் அருண், ஆனாலும் மாமனார் வீட்டுக்கு வந்த என்ன இங்க கூட்டிட்டு வந்து கடுப்பு கெளப்பற மச்சி நீ"
"அங்க போய் என்னடா பண்ண போற? எனக்கும் ஒரு மாமனார் கெடைக்கற மாறி இருக்கு, அதுக்கு நீ ஹெல்ப் பண்ணா உன் பேர் சரித்திரத்ல இடம் பெறும் விஜய், கவலை படாத"
"நேத்து நடந்தது எல்லாம் ரகு போன் பண்ணி சொன்னான்,  சேட்ட எல்லாம் பண்ணியாமே? அப்பவே சொன்னான் நீ போன் பண்ணா எடுக்க வேணாம்னு நான் தான் அவன் பேச்ச கேக்காம மாட்டிகிட்டேன்"
"இருடா இன்னும் கொஞ்ச நேரம் தான், இன்னைக்கு எப்டியும் கண்டுபுடிச்சிடலாம்"
"மச்சி அங்க பாருடா, ஒரு 4 பேர் நம்ம பாத்து நடந்து வந்துட்டு இருக்காங்க, இன்னைக்கு கதை கந்தல் தான்"

"ஹலோ, யாருங்க நீங்க, டெய்லி எங்க ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருக்கீங்க, நேத்து நீங்க தான பைக் மேல ஏறி பாத்துட்டு இருந்தீங்க? கேக்க ஆள் இல்லனா என்ன வேணா பண்ணுவீங்களா?"

அவர் கழுத்துல இருந்த ID கார்டு அவருக்கு சூர்யாவ தெரியும்னு காட்டுச்சு. 
"கும்புட போன தெய்வம் குறுக்க வந்த மாறி நீங்க வந்திருக்கீங்க தல"
எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த டைம்ல சிரிச்சது தப்பு தான். ஆனா என்ன பண்ண வந்திருச்சே.

"டேய் என்ன நக்கலா?நான் மரியாதையா தான கேட்டேன்? சிரிக்கற? இந்த ஊர் காரங்களுக்கு குசும்பு அதிகம் தான் டா"

நல்ல வேலை விஜய் இடைல வந்து அடிக்க வந்த அவர தடுத்து நிறுத்தினான்," அறிவு கெட்ட மாடு எப்ப என்ன பண்ணனும்னு கூட தெரியாது உனக்கு" "சாரி பாஸ், தப்பா நெனச்சுக்காதீங்க"

அவன் என்ன மேட்டர்னு அவர் கிட்ட சொல்ல சொல்ல அவர் முகம் தெளிவாச்சு. உஸ்ஸ் தப்பிச்சேன்.

"அட என்ன அருண் நீங்க, இது தான் மேட்டரா, இப்டி ரோடுல நின்னு தேடுனா எப்டி கண்டு புடிக்க முடியும்? எந்த கம்பெனினு தெரியும், அப்றம் என்ன, ID கார்டு பாத்து யாராச்சும் பசங்க கிட்ட கேக்க வேண்டியது தான? லவ்க்கு ஹெல்ப் பண்ணாம நாம எதுக்கு இருக்கோம்? சரி பொண்ணு பேர் என்ன?"
"சூர்யா"
....
"ஐயோ வித்யா அங்க பாரு அருண் கிட்ட செல்வா கோவமா பேசிட்டு இருக்கான், சீக்கரம்வா"
"போறக்குள்ள எதாச்சும் பிரச்சன ஆய்டும், நீ செல்வாக்கு போன் பண்ணு"
....
"குட் சாய்ஸ் பாஸ், நல்ல பொண்ணு"
"என்ன செல்வா சொல்றீங்க, உங்களுக்கு சூர்யாவா தெரியுமா?"
"தெரியுமாவா? என் டீம் மேட் பாஸ், இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும், அந்த பேக்கரில வெயிட் பண்ணலாம், வந்ததும் போய் பேசலாம்"
"இல்ல பாஸ் இன்னைக்கு பேச வேணாம், ப்ரஸ்ட் மீட்டிங் கொஞ்சம் ஞாபகம் இருக்க மாறி இருக்கனும்னு நெனைக்கறேன்"
"என்ன பாஸ் உங்க ஆள் போன் பண்ணுது? இருங்க ஸ்பீக்கர்ல போடறேன்"

"ஹலோ, சொல்லுங்க சூர்யா?"
"செல்வா, எங்க இருக்கீங்க? ரோடுல யார் கூடவோ கோவமா பேசிட்டு இருந்தீங்க? எதாச்சும் பிரச்சனையா?"
"அதெல்லாம் இல்லேங்க, சின்ன மேட்டர் தான், ஒன்னும் பிரச்சனை இல்ல"
"ஓ! யார் அவங்க? போய்டாங்களா?"
"தெரிலங்க, ஒன்னும் சொல்லல....."
....
"என்னடி என்ன சொன்னான்"
"சரியாவே பதில் சொல்லலடி, வா போய் பாக்கலாம்"
....
"என்னங்க தல, இப்டி பதறுது உங்க ஆளு?"
"சே அவ தான் சொன்னாளே, உங்கள பாத்தேன்னு, எதேச்சையா கேட்ருக்கும்"
"யாரு சூர்யாவா? பக்கதுல இடி விழுந்தா கூட அலட்டிக்க மாட்டாங்க? அவங்க குரல்ல பதட்டம் இருந்தது கேட்டீங்களா?"
"அப்போ அவளுக்கு என்ன பத்தி தெரியும் போலயே. என் போட்டோ பாத்திருப்பாளோ?"
"அதெல்லாம் அப்றம் கேட்டுக்குங்க........ தல அங்க பாருங்க அந்த சிகப்பு சுடிதார் தான் சூர்யா"
 
நாங்க நின்னுட்டு இருந்த எடத்ல இருந்து அவள பாக்கலாம் ஆனா  அவளுக்கு தெரியாது. 
 தேவதைக்கு எல்லாம் யாரப்பா வெள்ளை டிரஸ் குடுத்தது? இனிமேல் செகப்பு தான். இவ்ளோ சீக்கரம் உன்ன பாப்பேன்னு நெனைகல சூர்யா. அவ கண்ல ஒரு பயம் தெரிஞ்சது. அது எனக்காக தான் இருக்கனும்னு மனசு முட்டாள் தனமா யோசிச்சிட்டு இருந்தது. இவள காமிச்ச செல்வா என்னோட புது பெஸ்ட் ப்ரண்ட் ஆகிட்டாரு.

சினிமால மட்டும் கதாநாயகிய ஹீரோ பாக்கும் போது ஸ்லோ மோசன்ல காட்றாங்க? நான் அவள பாக்கும் போது மட்டும் பட் னு கிராஸ் பண்ணி போய்டா? வாழ்கைல ஸ்லோ மோசன், ரீவைண்ட் எல்லாம் இருந்தா அவ என்ன கடந்து போற அந்த நொடிய பாஸ் பண்ணி பாத்துட்டே இருக்கலாம்.

"ஹலோ பாஸ், போதும் பாத்தது? எப்போ பேச போறீங்க?"
"அதுக்கு உங்க ஹெல்ப் வேணும் செல்வா"
"சொல்லுங்க செஞ்சிடுவோம்"
.....

Monday, November 22, 2010

தேடினேன் காதலை 2

 "அருண்"
"திருமதி. சூர்யா அருண், பேர் பொருத்தம் நல்லாத் தான்டி இருக்கு"
அவ இந்தப் பேரச் சொன்ன போது என் முகத்துல இழையோடிய வெட்கத்தைப் பார்த்திருப்பாளோ..?
"அதுக்குள்ள கல்யாணமே பண்ணிட்டியா வித்யா நீ? உனக்கு கொழுப்பு அதிகம்டி"
"இவ்ளோ விஷயம் நடந்திருக்கு, என்கிட்ட ஏன்டி சொல்லல, ஆனா நீ அந்த அராத்து பொண்ணுங்க கூட சேந்துட்டு அவன பாத்து சிரிச்ச போது நான் கூட உன்ன தப்பா நெனச்சிட்டேன்"
காது மட்டும் தான் அவ பேசறத கேட்டுட்டு இருந்தது, மனசு போன வாரம் வீட்டுக்கு போயிருந்தப்ப நடந்தத யோசிச்சிட்டு இருந்தது.

இதுவரைக்கும் எத்தனையோ பசங்க போட்டோ பாத்திருக்கேன். கூட வேலை செய்யறவங்க டூர் போன போட்டோ எல்லாம் பாத்திருக்கேன். ஆனா இவன்(இவர்?) போட்டோ பாக்கும் போது மட்டும் சின்ன குறுகுறுப்பு ஏன்?
உன்ன பொண்ணு பாக்க வர போறவர் போட்டோனு அம்மா சொன்னதாலையா?. இல்ல எல்லாமே நல்லதா நடந்தா என் மீதி வாழ்க்கை இவர் கூடத்தான்னு நெனச்சதாலையா? பதில் இல்ல!!
பாத்த உடனயே திரும்பி பாக்க வெக்கற அழகன் எல்லாம் இல்ல. கொஞ்சம் ஒல்லியான தேகம். எங்கயோ ஹில் ஸ்டேஷன் மாறி இருந்த எடத்ல நின்னுட்டு இருக்க மாறி ஒரு போட்டோ. அவர் (அவன்னே சொல்லலாமா?) கிட்ட என்னமோ சின்ன ஈர்ப்பு இருக்க மாறி தான் இருக்கு.

"எத்தன நேரம் அதையே பாப்ப, இன்னும் ஒரு மாசத்துல நேர்லயே பாக்கலாம்"
அம்மா குரல் கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு. நாம என்ன பண்ணாலும் யாராச்சும் பாக்கணும்னு நெனப்போம். ஆனா வெக்க படரத அம்மா பாத்தா கூட கோவம் வருதே ஏன்?

போட்டோல பாத்த அவர , திடிர்னு ஆபீஸ் முடிஞ்சு வரும் போது பைக் மேல நின்னுட்டு எங்க கேம்பஸ் குள்ள எட்டி பாத்துட்டு இருக்கற அந்த போஸ்ல நேர்ல பாத்ததும், என்ன பண்ண? அதான் சிரிச்சிட்டேன்..
.....
"சூர்யா, சூர்யா, சூர்யா... என்னடி பகல் கனவா? டூயட் தான? சரி என்னமோ பண்ணு, ஆனா நான் பேசிட்டு இருக்கும் போதே உனக்கு கனவு வருதுனா, கொஞ்சம் முத்தி போச்சுனு தான் நெனைக்கறேன்"
என்னோட புன்முறுவல் பாத்துட்டே வித்யா பேசிட்டே இருந்தா.
"சரி போட்டோ வெச்சிருக்கியா? அங்க அவன, சாரி சாரி அவர சரியா பாக்கவே இல்லடி"
"அதெல்லாம் இல்ல"
"பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், போட்டோ பாக்காம அவர எப்டி உனக்கு தெரியும்? இப்போ காட்ட போறியா இல்லையா"
அதெப்படி என்னவர் (இது எப்போ) போட்டோ அவ கிட்ட காமிக்க?
"வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன்"
"சும்மா பொய் சொல்லாத, சரி விடு நாளைக்கு எப்டியும் மறுபடியும் வருவாப்ல, அப்ப பாத்துடா போச்சு"
 "அவர் வருவாரா?"
"என்னடி பசங்க பத்தி தெரியாது? கண்டிப்பா வருவாரு"

ஐயோ என்ன இது நான் இப்போ வெக்க படறதா, சிரிக்கறதா? எந்த உணர்ச்சி என்ன ஆக்கிரமிச்சு இருக்குனே தெரிலயே. இப்ப நான் என்ன ரியாக்சன் தர? குழப்பம்?!!!!! 
யாரு பாத்தாலும் கவலைபடாம, என்ன தேடி நடு ரோட்ல பைக் மேல நின்னு தேடிட்டு இருக்கறத பாக்கும் போது, அவர் என் மனசுக்கு பக்கம் வந்தது என்னமோ நிஜம் தான்

ஒன்னு மட்டும் உறுதி, அவர் பின்னாடியே போக நான் தயார். 

கல்யாணம் பண்ணாம வாழ்க்கை நடத்த முடியாதா? யார் தயவும் இல்லாம கடைசி வரைக்கும் இருக்க போறேன்.இப்டி ஓவர் முற்போக்கு சிந்தனை எல்லாம் என்கிட்ட இருந்து பெட்டி படுக்கை எல்லாம் கட்டிட்டு போய்டுச்சு.

இரு இரு, ஆமா ஏன் அவர் என்ன பாத்தும் பாக்காத மாறி இருந்தாரு? என் போட்டோ பாத்ததில்ல? அப்போ தான் ஞாபகம் வந்தது, அம்மா நல்ல போட்டோ குடுத்துட்டு போக சொன்னதும், கெளம்பற அவசரத்ல சுத்தமா மறந்து போனதும். 
இப்போ என்ன பண்ண? நாளைக்கு அவர பாத்ததும் சொல்லிடுவோமோ நான் தான் சூர்யானு? அவர் என்ன தான் தேடி வந்திருக்காருனு தெரிலயே! இல்ல அம்மாக்கு போட்டோ அனுப்பி வெச்சிடலாமா? வேணாம் கொஞ்ச நாள் அலைய விட்டு பாக்கலாம்?


Friday, November 19, 2010

தேடினேன் காதலை 1

நண்பர்களே இது அனுபவம் இல்ல கற்பனை. அனுபவம்னு நெனச்சு பின்னூட்டம் போட்டா நான் பொறுப்பில்லிங்கோ.... ஓவர் டு கதை....
---------------------------------------------------------------------------------------------------------------------------------

"டேய், உனக்கு ஒரு பொண்ணு பாத்திருக்கோம்டா, அடுத்த மாசம் பாக்க போறோம்"
"எனக்கு எதுக்குமா இப்போ கல்யாணம்? கொஞ்ச நாள்..."
"மொச புடிக்கற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாது? மூஞ்சி அசடு வழியுது தொடச்சுக்கோ"

உண்மை தாங்க, வாய் மட்டும் தான் வேணாம்னு சொல்லுச்சு. வீட்ல கல்யாண பேச்சு எடுத்தா பொண்ணுங்கள விட பசங்க தான் அதிகமா வெக்க படுவாங்க. இது பஞ்ச் இல்ல, சொந்த அனுபவம்.  அவ போட்டோ கூட இல்ல, குடுக்கலையாம். எனக்கும் ஆசை இருக்காதா? என்ன கட்டிக்க போற பொண்ணு எப்டி இருக்கானு பாக்க?

"சரிமா, போட்டோ தான் இல்ல, எங்க வேலை செய்யறா? பேர் கூட சொல்ல மாட்டியா?"
.....

"சூர்யா" சொல்லும் போது என் உதட்ல சின்ன புன்னகை.
"சூர்யாவா, ஆம்பள பேர் மாறி இருக்கு, சரி பேரா முக்கியம்? அவ ஆம்பள மாறி இல்லாம இருந்த சரி தான். எங்க வேலை செய்யுதுனு அம்மா கிட்ட கேட்டியா?"
"உனக்கு வாய் கொழுப்பு அதிகம்டா, சொல்லவே மாட்டேன்னு சொல்லிடாங்கடா, அப்பறம் தங்கச்சி தான் சொன்னா. V .T .S , சரவணம்பட்டி பிரான்ச்ல வேலை செய்யறா போல"
"அவ்ளோ தூரம் போனுமா? எங்க தங்கி இருக்கா? போட்டோ?"
"அதெல்லாம் எதுமே இல்ல"
"சரி கவலை விடு, என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, அண்ணிய கண்டுபுடிச்சிடலாம்"
.....

ரகு சொன்னான் அந்த மாறி பெரிய பெரிய கம்பெனி எல்லாம் அங்க வேலை செய்யற எல்லாத்தோட விவரம் சேத்து டேட்டா பேஸ்ல  வெச்சிருப்பாங்க, போட்டோவும் இருக்கும். அங்க வேலை செய்யற ஒருத்தன கரெக்ட் பண்ணி அத வாங்கலாம்னு ஐடியா குடுத்தான். 

நாளைக்கே அவ போட்டோ கெடைச்சு அடுத்த நாள் கல்யாணம் ஆகர மாறி கனவு எல்லாம் வந்துச்சு. இத்தனை நாளா சேத்து வெச்சிருந்த காதல ஒரு எடத்ல கொட்ட ஒரு வாயப்பு கெடசிட்டா மாறி ஒரு கோட்டை கட்ட ஆரம்பிச்சிருந்தேன். வீட்டுக்கு போற அதே பழைய வழி, பாரின் மாறி தெரிஞ்சது.  

முகம்  தெரியாத சூர்யா கூட, முழு வாழ்வும் வாழ தயாராகி விட்டேன்னு அப்போ தான் எனக்கு தெரிஞ்சது.
.....

"டேய் என்னடா ரகு இப்டி கவுத்துட்ட"
"நான் என்ன பண்ண, உனக்காக செலவழிச்சு ஒருத்தன கரெக்ட் பண்ணேன். அந்த பொண்ணு மெட்ராஸ்ல இருந்து மாற்றல் ஆகி வந்திருக்கு, அதனால எந்த விவரமும் இல்ல. மெயில் அட்ரஸ் இருக்கே, மெயில் பண்ணு"
"இல்லடா, அது நல்லா இருக்காது. ஆர்குட், பேஸ் புக், எதிலும் அவ இல்ல. ஒரே ஐடியா தான்.ஆனா அது நீ இல்லாம முடியாதுடா"
.....

"நான் கூட, ஏதோ முக்கியமான வேலைனு நெனச்சு தான், பெர்மிசன் போட்டுட்டு வந்தேன், இங்க வந்து இப்டி மண்ட காய விடறயே நண்பா"
"டேய் தேடறதே பொழப்பா வெச்சு தேடணும், அப்ப தான் கெடைக்கும்"
"உன் காதலுக்கு நீ மட்டும் தேடணும், என் உயிரை ஏன்டா வாங்கற? இப்போ என்ன பண்ண சொல்ற?"
"அந்த ஆபீஸ் முடிஞ்சு எல்லாரும் வருவாங்க, அப்போ சூர்யா அப்டிங்கற பேருக்கு ஏத்த பொண்ணு இருக்கானு பாரு, இருந்தா போய் பேரு கேட்டு பாப்போம்"
"____________________"
"ப்ரீயா விடு, வாடா ஆபீஸ் விட்டுடாங்க" (இன்னைக்கு என்னவளை கண்டுபுடிச்சே ஆகணும்)....
"என்னடா பண்ண சொல்ற?, அந்த கேம்பஸ்ல நெறைய கம்பெனி இருக்கு, எதுல இருந்து வெளிய வராங்கனு  எப்டிடா தெரியும்?"
"ஆமாடா நீ சொல்றது சரி தான், வண்டிய புடிச்சுக்க, நான் மேல ஏறி பாக்கறேன், செவதுக்கு அந்த பக்கம் தெரியுதா பாக்கறேன்"
"டேய் டேய் கீழ எறங்குடா கொரங்கு, பாரு பொண்ணுங்க எல்லாம் சிரிக்குது, மச்சி வாட்ச் மேன் வர மாறி இருக்குடா, வா எஸ் ஆய்டலாம்"
.....

ஒன்னும் தேறல. ஈவ் டீசிங் பண்ற மாறி கேவலமா பாத்ததும், நாங்க பண்ண கொரங்கு சேட்டைய பாத்து பொண்ணுங்க சிரிச்சது தான் மிச்சம். பத்தாததுக்கு இவன வேற வெறி ஏத்திட்டேன். இனிமேல் கூட வர வேற எவனாச்ச ஏமாத்தனும். என்ன ஆனாலும் அவள கண்டுபுடிக்காம ஓய மாட்டேன்.

Thursday, November 18, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 10

நாங்க தங்கி இருந்த ஹாஸ்டல் ரொம்ப பழைய கட்டிடம். அப்ப அப்ப பேய் கதை எல்லாம் உலா வரும். அத நாங்க யூஸ் பண்ணிட்டோம்.

பிரகாஷ் சொன்னான் "மச்சி, நாம எந்த ஹாஸ்டல் போனாலும் அந்த ஹாஸ்டல நாம ஆளனும், நாம இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியனும்"(அப்போ காக்க காக்க படம் வந்த புதுசு).
"என்னடா திடிர்னு தத்துவம் அப்டிங்கற பேர்ல சினிமா டயலாக் எல்லாம் சொல்லிட்டு இருக்க" 
"இல்லைடா, நேத்து பசங்க பேய் கதை பேசிட்டு இருந்தாங்க, இன்னைக்கு நைட் நாமளே பேய் வேஷம் போட்டுட்டு எல்லாரையும் பயமுறுத்தலாமா?"
எல்லாருக்கும் பல்பு எரிஞ்சது.

ஆபரேஷன் பேய் நடந்தது. JP தான் இதுக்கு சரியான ஆள்னு அவனுக்கு மூஞ்சி எல்லாம் திருநீறு அப்பி,  பெருசா பொட்டு வெச்சு, முள்ளும் மலரும் படத்ல தலைவர் போத்தி இருப்பாரே அந்த கருப்பு சால்வை, அத முக்காடு போட்டு, அவன் மூஞ்சில அடிக்கற மாறி டார்ச் அவன் கைல குடுத்தாச்சு.

"யார் ரூம்க்குடா போக?"
"மலையாள பசங்க ரூம்க்கு போடா, அவங்க தைரியத்த பாக்கலாம்"

அவன லைட் ஆப் பண்ணிட்டு பாத்தா, மேக்கப் போட்ட எங்களுக்கே பயமா இருந்துச்சு. இன்னைக்கு ஏதோ ஏழரை நடக்க போகுதுனு அப்பவே உள் மனசு சொல்லுச்சு. அவன் போன அப்பறம் ஒரு 5 நிமிஷம் கழிச்சு, ஐயோனு ஒரு சத்தம். நாங்க எல்லாரும் ஓடி போய் பாத்தா, ஒரு மலையாள பையன், கட்டில்ல குப்புற படுத்துட்டு இருக்கான். JP பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கான். அந்த பையன தொட்டா, ஒடம்பெல்லாம் நடுங்கீட்டு இருக்கு வேற. அந்த பாதி ராத்திரில அவன தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனது தான் மிச்சம். செமையா பயந்துட்டான். பாவம் ரெண்டு மூணு எக்ஸாம் எங்க புண்ணியத்துல அவன் எழுதல. வெயிட் வெயிட், எக்ஸாம் எழுதலனு சொல்லும் போது இன்னொன்னு ஞாபகம் வருது.

இந்த மேட்டர்க்கு அப்பறம் தான் நாங்க எக்ஸாம்க்கு ஸ்கூட் (அதாங்க கட்) விடற கலாச்சாரத்தை கொண்டு வந்தோம். இத ஆரம்பிச்சு வெச்சது நவீன். எங்களுக்குள்ள யாரு எக்ஸாம் முடிச்சிட்டு மொதல் ரூம்க்கு வரோம்னு ஒரு போட்டி இருக்கும்.(இதுங்கெல்லாம் வெளங்கவானு நீங்க நெனைக்கறது புரிது). அன்னைக்கு 1 மணி நேரத்துக்குள்ள ஒரு பரிட்சை எழுதீட்டு (கணக்குனு நெனைக்கறேன்) வேக வேகமா ஹாஸ்டல் போனேன், நான் தான் மொதல் இன்னைக்குனு நெனச்சிட்டே. நவீன் சிரிசிட்டே நின்னுடு இருந்தான் (வட போச்சே).

"அடப்
பாவி, இன்னைக்கு நான் தான்னு நெனச்சேன், எப்டி மச்சி அதுக்குள்ள வந்த?"
"போனா தான வர்ரக்கு, இன்னைக்கு ஸ்கூட் டா, பேய் வேசம் போட ஹெல்ப் பண்ணிட்டு இருந்தேனா சுத்தமா படிக்கல, அப்பறம் போய் 3 மணி நேரம் எதுக்கு வேஸ்ட் பண்ண? அந்த டைம்ல அடுத்த எக்ஸாம்க்கு படிக்கலாமே, நாளைக்கு எனக்கு ப்ரஸ்ட் செம் அரியர் இருக்கு" (எப்டி எக்ஸாம் போகாதத மேக் அப் பண்ணுது பாரு பக்கி
)

"அதாச்சும் ஒழுங்கா பண்ணு "

அடுத்த எக்ஸாம் முடிஞ்ச அப்பறம் அதே எடத்ல நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்.
"என்னடா, போன எக்ஸாம் கட் போட்டு இந்த எக்ஸாம்க்கு படிச்ச? தேறுமா?"
அவன் சோகமா ஒரு பார்வை பாத்தான். பக்கத்ல நின்னுட்டு இருந்த சிம்மா தான் பதில் சொன்னான்.
"அது ஒன்னும் இல்ல மாப்ள, இந்த எக்ஸாம்க்கு படிக்க போன எக்ஸாம் லீவ் போட்டானா, போன எக்ஸாம் போகாத சோகத்துல இந்த எக்ஸாம்க்கும் போகல"

இவன நெனச்சு அழுகவா சிரிகவாங்க? நீங்களே சொல்லுங்க?

Wednesday, November 17, 2010

எனக்கு பிடித்த டாப் 10 தலைவர் படங்கள் - தொடர் பதிவு

தலைவர் தலைவர்னே சொல்லி பழகிடுச்சுங்க. அதான் பேர் சொல்ல வரல. இன்ப அதிர்ச்சியா என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த இம்சை அரசன் பாபு அவர்களுக்கு நன்றி. எழுத சொல்லி டெரர் ஆகிய அருண் பிரசாத் அண்ணனுக்கு ஸ்பெஷல் "டீ" பார்சல் ( ஆர்யாஸ்ல வாங்குங்கப்பா, இல்லனா அவர் நானே போடுறேன்னு கெளம்பிடுவாரு )


எல்லாரும் எனக்கு பிடிச்ச எல்லா படத்தையும் சொல்லிடாங்க, அதையே சொன்னா மொக்கையா இருக்கும். ஆனா பாட்ஷா மட்டும் எப்பயுமே மொதல் தான். அத மட்டும் விட்டு கொடுக்க முடியாது.

1 . பாட்ஷா

அந்த சண்ட காட்சில, தலைவர் கண்ண, க்லோஸ் அப் காட்டுவாங்களே, அப்பா.... வாய்பே இல்ல. கண்ல தெரியற கோவம் செமையா இருக்கும்ல? இந்த காட்சி பாக்கறக்காக பல முறை படம்  பாத்திருக்கேன். CD வாங்கி அந்த CD ஓட்ட ஆகர வர பாத்தா படம் இது. எல்லாருக்கும் ஆல் டைம் புடிச்ச படம், எனக்கும் தான்.

2 . மூன்று முகம்
 

"கண்ணா, இந்த அலெக்ஸ் பாண்டியன் பேர கேட்டா, வயத்துல இருக்க கொழந்த ஒரு கைல அது வாய மூடிட்டு, இன்னொரு கைல அவங்க அம்மா வாய மூடும்". டெரர் காட்சில தலைவர் கண்ல கோவம் தெறிக்கும், ரொமான்ஸ் காட்சில காதலும், காமமும். இதுல அலெக்ஸ் பாண்டியனின் ஒரு  பையன் பேறு "அருண்". ஹி ஹி, ஒரு அல்ப சந்தோசம் தான். 

3 . நெற்றிக்கண்
ப்ளே பாய் (இல்லனா ப்ளே அங்கிள், ஏதோ ஒன்னு) ரோல்ல பட்டய கெளப்பி இருப்பாரு. மகன் ரோல்ல விட அப்பா ரோல் தான் சூப்பர். சில காட்சில நம்ம வெக்க பட வெச்சிடுவாரு. ஆனா சரிதாவ மகன் வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போது அந்த தவிப்பு தவிப்பாரே, மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம, கலக்கல் பா.

4 . 16 வயதினிலே

"ஹீரோ, வில்லன் இந்த ரெண்டு ரோல்ல உங்களுக்கு கஷ்டமான ரோல் எது". ஒரு முறை தலைவர் கிட்ட கேட்ட கேள்வி. 
"கண்டிப்பா ஹீரோ தாங்க கஷ்டம். நம்ம பாடி லாங்குவேஜ், முகம் எல்லாம் வில்லன்க்கு தான் ஒத்து வரும். நெஜத்துல நாம எல்லாம் வில்லன் தான" இது அவர் பதில்.
அந்த நெஜ வில்லன காட்டுன படம். இன்னமும் கூட "இது எப்டி இருக்கு" கேட்டுட்டு தான இருக்கோம்?.

5 .இளமை ஊஞ்சலாடுகிறது
கண்ணாடி கூட தலைவர்க்கு சூப்பர் பா. கமல், தலைவர் நடிச்ச படத்துல, நினைத்தாலே இனிக்கும் அடுத்து எனக்கு புடிச்ச படம். முக்கோண காதல் கதை தான். "என்னடி மீனாச்சி"பாட்டு மறக்க முடியுமா?

6 . ப்ரியா 
பாம்பு கூட தலைவர பாத்தீங்களா. சுஜாதா சார் கதைல தலைவர் பின்னிருப்பாறு. பாட்டு எல்லாம் கலக்கல். ஸ்ரீதேவி கூட ஜோடி தான் இல்ல, பாட்டாச்சும் வெச்சாங்களே. சிங்கப்பூர் அம்மிணி கூட நல்ல ஜோடி தான்.  

7 . முத்து


கே.எஸ். ரவிகுமார், ரஹ்மான், தலைவர்... சூப்பர் கூட்டணி. ஒருவன் ஒருவன் பாட்டும், விடுகதையோ பாட்டும் என்னோட ஆல் டைம் ஹிட் லிஸ்ட்ல இருக்க பாடல்கள். கொஞ்சம் வேகம் கம்மி தான் படத்ல, இருந்தாலும் தலைவர் படம் ஆச்சே, பின்னணி இசை பட்டய கெளப்பும்.

8 . ஜானி
தலைவரும் சுருளியும் கூட்டணி போட்டு கொள்ளை அடிப்பாங்களே, அந்த நகை கடைல. அசால்டா அடிச்சிட்டு போய்டுவாரு. பாட்டு எல்லாம் செம. முக்கியமா தலைவர் ஸ்டைல் இந்த படத்ல நோட் பண்ண வேண்டிய விஷயம்.

9 . அடுத்த வாரிசு
ஆசை நூறுவகை பாட்டே போதும். படம் கொஞ்சம் மெதுவாதான் போகும்  இருந்தாலும் போக போக பிக் அப் ஆய்டும். தலைவர் ஹீரோ வா, வில்லனானு கொஞ்ச நேரம் மண்ட காயும். அவர் என்னைக்குமே ஹீரோ தான.

10 . படையப்பா
இந்த படத்துக்கு கடைசி எடமானு எல்லாம் கேக்க கூடாது. வரிசை படுத்தறது செரமம் தான். இந்த ஸ்டில் ஒன்னே போதும் இந்த படத்ல அவர் ஸ்டைல் சொல்றக்கு. பின்னணி இசை இந்த படத்துக்கு ஒரு பெரிய பிளஸ்.

இந்த அரிய பணியை தொடர்ந்து செவ்வனே செய்ய திரு. ரமேஷ் -பிரியமுடன் ரமேஷ் அவர்களை அழைக்கிறேன். 

Monday, November 15, 2010

லவ்னா என்னடா

ரெண்டவதோ, மூணாவதோ படிச்சிட்டு இருந்ததா ஞாபகம். அப்போ எங்க அப்பாக்கு கார் மெக்கானிக் ஒருத்தர் நல்ல நண்பர். அதனால அடிக்கடி விதம் விதமா கார் எடுத்துட்டு வருவாரு. பத்தாததுக்கு வீட்ல வேற ரெண்டு டூவீலர் இருந்தது. அதனால தினமும் வேற வேற வண்டில எங்க அப்பா என்ன ஸ்கூல்ல வந்து விடுவாரு. எல்லாம் நல்லா தான் போய்ட்டு இருந்தது, அன்னைக்கு வரைக்கும்.

ஒரு நாள் மத்யானம் எங்க ஸ்கூல் ஹெட்மிஸ்  என்ன கூப்டாங்க.
"அருண், நாளைக்கு வரும் போது உங்க அப்பாவ கூட்டிட்டு வா"
"சரிங்க மிஸ்".

இது அடிக்கடி நடக்கும். எங்க அப்பாவும், அவங்களும் நல்ல நண்பர்கள். எங்க வீட்டுக்கு எல்லாம் வருவாங்க. நானும் அவங்களுக்கு செல்ல பிள்ளை. அதனால என்னோட பிஞ்சு மனசுக்கு ( சரி சரி சிரிக்காதீங்க, உண்மைலயே பிஞ்சு மனசு தாங்க அப்போ) ஏதும் தப்பா தெரில. எனக்கு நானே சங்கு ஊதரேன்னும் தெரில. 

"டாடி, மிஸ் உங்கள வர சொன்னாங்க"
"எதுக்கு மா?"
"தெரில டாடி, வர சொன்னாங்க, எதுக்குனு தெரியாது"
"டாடிக்கு நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அதனால கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு சொல்லிடு"
"ஓகே டாடி"  

அடுத்த நாள் ஒரு 11 மணி இருக்கும். ப்யூன் வந்து என்னையும், எங்க கிளாஸ் மிஸ் சையும் கூட்டிட்டு வர சொன்னாங்கனு சொன்னாரு.
அங்க போனா, எங்க ஸ்கூல் மிஸ் எல்லாரும் இருக்காங்க. எங்க அப்பா நான் உள்ள வரும் போது ஒரு பார்வை பாத்தாரு பாருங்க, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. 
எங்க கிளாஸ் பொண்ணு ரேவதி அவங்க அப்பா அம்மா கூட அழுதுட்டே நின்னுட்டு இருக்கு.

"இந்த வயசுல என்னடா வேலை செஞ்சிருக்க நீ?" இது  ஹெட்மிஸ்.
"இவன் கிட்ட எல்லாம் பேச கூடாது, விஷம், விஷம், விஷம்(வடிவேலு ஸ்டைல் தாங்க) அப்டினு கொட்டு கொட்டுனு கொட்றாரு எங்க அப்பா. எனக்கு தலையும் புரில வாலும் புரில. அழுதுட்டே நிக்கறேன். ஹெட்மிஸ் வேற பெரம்புல அடிக்கறாங்க. 
 
"நல்ல கண்டிச்சு வைங்கனு" சொலிட்டு எங்க அப்பா போய்ட்டாரு.
எங்க அப்பா இருந்ததால அடிக்காத மிச்ச மிஸ் எல்லாம் ஆள் ஆளுக்கு அடிச்சிட்டு போனாங்க. அப்போ ரெண்டு மிஸ் பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்தது.

"இவன அடிச்சு என்னங்க பண்றது? அவ தான சொல்லிருக்கா?, எவ்ளோ நாள் நோட் பண்ணிருந்தா அவங்க அப்பா கிட்ட போய் சொல்லிருப்பா அவ"
"இவனுக்கு தெரியாம நடந்திருக்குமா மிஸ் நீங்களே சொல்லுங்க"

என்ன நடந்ததுனா,  அந்த பொண்ணு அவ அப்பா கிட்ட, "அப்பா, அருண்னு ஒரு பையன் எங்க கிளாஸ்ல படிக்கறான். அவங்க பெரிய பணக்காரங்க, அவன தினமும் அவங்க அப்பா ஒவ்வொரு  கார்ல  வந்து விடுவாரு. அவன் ரொம்ப நல்லா படிப்பான், எப்பவும் ப்ரஸ்ட் ரேங்க் தான்(நெஜம்மா தாங்க). நான் அவன லவ் பண்றேன், அவன தான் கல்யாணம் பண்ணிப்பேன்" அப்டினு சொல்லிருக்கு.  அதனால தான் அவ்ளோ பெரிய களேபரம். 

அந்த பொண்ணு அந்த வருஷம் தான் ஸ்கூல்ல சேந்தது. ஒரு 5 மாசம் தான்  அவள தெரியும். ஆரம்பத்ல இருந்து, அருண், அது எங்க இருக்கு, இந்த மிஸ் பேர் என்ன, உங்க வீட்ல எத்தன பேர் அப்டினு சம்பந்தமே இல்லாம என்னயே சுத்தி சுத்தி வரும். அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னே தெரியாம வெகுளி பையனா இருந்திருக்கேன்.

அந்த வயசுல என்ன வேலை பாத்திருக்கு பாருங்க. எதுவுமே தெரியாம நான் அடிவாங்கினது தான் மிச்சம். டைட்டானிக்ல மட்டும் இல்ல, எல்லா பக்கமும் பொண்ணுங்க உஷார் தான். அதுக்கு அப்பறம் இப்டி எல்லாம் பண்ண கூடாது அப்டினு ஏகப்பட்ட சொற்பொழிவு.

எல்லாம் முடிஞ்சு அழுதுட்டே கிளாஸ்க்கு போனேன். இந்த  விஷயம் நடந்ததால எந்த கிளாஸ்ம் நடக்கல. 
என் கூட L .K .G ல இருந்து 12 வரைக்கும் படிச்சவன் கார்த்தி. அவன் வந்து கேட்டான்.

"என்னடா ஆச்சு, அடிச்சாங்களா? நீ என்ன பண்ண? எதுக்கு அழுகுற?"

"கார்த்தி, லவ்னா என்ன டா?"


பின் குறிப்பு : 
அந்த பொண்ணு பாவம், அதுக்கப்பறம் ஸ்கூல் விட்டு போய்டுச்சு.
(அந்த பொண்ணோட பேர் மாத்தி இருக்கேன், ஏன்னா இது உண்மை சம்பவம்).

Friday, November 12, 2010

பாலி பகுதி 4

அவனுங்க குடுத்த சூட்ட போட்டுட்டு வந்தேன். ரெண்டு பேர் வந்து நாங்க தான் உங்க கூட வரபோறோம்னு சொல்லிட்டு ஆக்ஸிசன் சிலிண்டர் எப்டி யூஸ் பண்ணும்னு சொல்லி குடுத்தாங்க. நான் கூட ஏதோ பிரச்சன வந்தா அத எடுக்கணும் போல இருக்குனு நெனச்சேன். எனக்கு நீச்சல் தெரியுமானு அவன் கேட்டான்.

"எதுக்கு மச்சான் நீச்சல் தெரியுமானு கேக்கறான்? டேய் எதாச்சும் வம்புல மாட்டி விட்டுடாதீங்கடா, எனக்கு தண்ணில கண்டம்னு கடலைமுடி ஜோசியர் சொல்லிருகாறு"
"சும்மா ஓவர் சீன் போடாதடா, சும்மா எதாச்சும் பிரச்சனனா நீயா நீந்துவியா, இல்ல ஹெல்ப் பண்ணனுமானு தெரியனும்ல அதுக்கு தான் கேட்டான்"
"உங்கள நம்பி தான்டா போறேன்" எனக்கு பாராசூட்ல போனது நல்லா இருந்தது, அதனால வேற ஏதும் அதிகமா கேள்வி கேக்கல. என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு போனேன்.

என்ன மட்டும் தனியா நடு கடல்க்கு போட்ல கூட்டிட்டு போனாங்க. போகும் போது போட் ஓட்றவன் கிட்ட கேட்டேன், எங்க போறோம்னு. அவன் சொன்னதுலயே எனக்கு புரிஞ்ச ஒரே வார்த்தை "ஸ்கூபா டைவிங்". எனக்கு மூச்சே நின்னுருச்சு. எனக்கு நீச்சல் தெரியாதுனு கெஞ்சி பாத்தேன், கதறி பாத்தேன்.

அவன் "நோ ப்ராப்ளம், வி வில் டேக் கேர், வி ஆர் தேர் பார் யு".
"நீ இருப்படா நான் இருப்பனா?"   
"வாட் வாட்"
"நத்திங் ஆபீசர்,  யு ப்ரோசீட் ஆபீசர்"

 பேசிட்டே இருக்கேன், சுத்தி பாத்தா யாருமே இல்ல. இரு வரேன்னு சொல்லிட்டு கடல்ல குதிச்சான். என்னனு கேட்டா, எதாச்சும் பிரச்சன இருக்கானு பாத்துட்டு வர போயிருக்கான்னு இன்னொருத்தன் சொன்னான். நான் பேய் அறஞ்ச மாறி உக்காந்து இருந்தேன். அவன் கேமரா ரெடி பண்ணிட்டு இருக்கான். கடல் குள்ள போட்டோ எடுக்கற கேமராவாம்.

நான் செத்துட்டா, இந்தா போட்டோவயே ப்ரேம் பண்ணி மாட்டுங்கடா. இன்னைக்கு ஜல சமாதி தான், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்னு மனச தேத்திகிட்டேன். ஆனா எத்தன நேரத்துக்கு தான் நான் பயபடாத மாறி நடிக்க?

திடிர்னு சிலிண்டர் மாட்டி விட்டு கடல்ல குதிக்க சொன்னாங்க.
கண்ணாடி மாட்டிகிட்டு, கடல் குள்ள தலை மட்டும் கொண்டு போய், மூச்சு விட முடியுதானு பாக்க சொன்னான். அதெல்லாம் நல்ல தான் இருந்தது. கடல்குள்ள போக முன்னாடி எடுத்த போட்டோ கீழ.
என்னடா சிரிக்கற மாறி இருக்கேன்னு பாக்காதீங்க, கண் மூடி இருக்க நால பயம் தெரில
சின்ன புள்ளைய கை புடிச்சு கூட்டிட்டு போற மாறி நீந்தி ஒருத்தன் கூட்டிட்டு போனான். கடல் குள்ள போனது தான் தெரியும். மொதல் டைம் வாய்லயே மூச்சு விடணுமா, அது சுத்தமா வரல. அந்த கண்ணாடி மூக்க மூடிருக்கும், மூக்குல மூச்சு விட முடியாது, வாய்ல தான் இழுக்கணும், விடணும். ஒரு 10 செகண்ட் சுத்தமா முடில, கண்ண கட்டுது, காது அடைக்குது.  இந்தியால செத்து போன கொள்ளு பாட்டி, இந்தோனேசியால தெரியறாங்க. வைரமுத்து சார் எழுதினாரே, வயிற்றுகும் தொண்டைக்கும் நடூல உருண்டை உருளுதுனு, அன்னைக்கு  தான் அந்த உருண்டை என்னனு எனக்கு தெரிஞ்சது . 

இந்த களேபரம் எல்லாம் முடிஞ்சு கண்ணு தெளிவா தெரியவே ஒரு 20 செகண்ட் ஆய்டுச்சு. அதுக்கு அப்பறம்  தாங்க அந்த கடலின் அழகே எனக்கு தெரிஞ்சது. சும்மா சொல்ல கூடாதுங்க, அந்த அழகா பாக்க, கஷ்டபடலாம் தப்பில்ல. ஒரு அரை மணி நேரம் கடல் குள்ள இருந்தேன். மறக்கவே முடியாதுங்க. சுத்தியும் கலர் கலர் மீன், பாறை, பாசி, கடல் தாவரம், சுத்தமா ஒரு புது அனுபவம். அங்க நெறையா பேர் மீன்க்கு சாப்பாடு போட்டு பழக்கி இருப்பாங்க போல. மனுசங்கள பாத்தா எல்லாம் பக்கத்ல வருதுங்க. மீன நம்ம  தொரத்தறது போய், அது நம்ம தொரத்துது. அதுல ஒரு மீன் என் கைய கடிச்சிடுச்சு.  நம்ம ஊர் தெப்பகுளம், ஆத்து மீன்கள் கிட்ட கடிபட்ட எனக்கு, இந்த கடி நல்லாவே இருந்தது. கிராமத்து சைடுல மீன் கடி வாங்கிட்டே குளிச்ச எல்லாருக்கும் நான் சொல்றது புரியும். சில போட்டோ கீழ.
பயபடாத மாறி நடிப்பு தான்
தண்ணீரை காதலிக்கும்... பின்னாடி நான் தான்

என்னை கடித்த மீன்


மொதல் டைம் சிலிண்டர் மாட்டினது நால, எவ்ளோ வேகமா மூச்சு விடணும்னு தெரில, அதனால நான் கொண்டு போன சிலிண்டர் சீக்கரம் தீந்திருச்சு ( பயத்ல உறிஞ்சி தள்ளிட்டேன்). இல்லனா இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம். அப்றம் மேல வந்து கரைக்கு கூட்டிட்டு வந்தாங்க. 

"என்னடா எப்டி இருந்தது?"
மறக்க முடியாத அனுபவம், அதனால யாரையும் திட்டல.
"மச்சி, சூப்பர்டா, இப்டினு தெரிஞ்சிருந்தா, பயபடாம போயிருக்கலாம்"
"சரி விடு, அடுத்து எங்க போறோம்னு ஞாபகம் இருக்கா?"

எப்டி இல்லாம போகும், நானே இல்ல வாய் விட்டு மாட்டிட்டேன், என்ன நடக்க போகுதோ?

Thursday, November 11, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 9

எங்களுக்கு செகண்ட் செம் எக்ஸாம் எல்லாம் எங்க சினியர்ஸ்க்கு எக்ஸாம் முடிஞ்சு அவங்க ஊருக்கு போன அப்றம் தான் வரும். அந்த டைம்ல பாய்ஸ் ஹாஸ்டல்ல NCC பொண்ணுங்களுக்கு ஆல் இந்திய லெவல்ல நடக்கற கேம்ப்க்கு குடுத்துருவாங்க. எங்க  சினியர் பொண்ணுங்க தங்கி இருந்த ரூம்ல தான் தங்க வெச்சிருப்பாங்க. இதுல காமெடி என்னன்னா, எங்களுக்கும் ஒரு மேடம் தான் வார்டன். பாவம் அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அந்த ரூம், காலேஜ்ல இருந்து வர வழில தான் இருக்கும். ரூம்கும் ரோடுகும் நடூல குட்டி சுவர்.கழுத கெட்டா அங்க தான இருப்போம்?

எங்க பசங்க எல்லாரும், எக்ஸாம் முடிச்சிட்டு சீக்கரம் வந்திடுவாங்க ( எழுதினா தான லேட் ஆகும்?). பொண்ணுகள கிண்டல் பண்றதுனா என்னனு எனக்கு அப்ப தான் தெரிஞ்சது. (அட நம்புங்க, ஸ்கூல்ல எல்லாம் நான் அப்பிராணி). சாயங்காலம் வரைக்கும் அங்க தான் உக்காந்து இருப்போம். அப்றம் படிப்போம்னு சொல்லமாட்டேன். ஒரே கிண்டல் கேலி தான்.

அந்த ஹாஸ்டல்ல செக்யூரிட்டி அவ்ளோ செக் பண்ண மாட்டாங்க, அதனால ஹாஸ்டல் குள்ளயே பசங்க தம் அடிப்பாங்க. சாப்டுட்டு வரும் போது JP ஒரு தம்ம வெச்சு என்னமோ பண்ணிட்டு இருந்தான்.

"டேய் என்னடா பண்ற? புகையிலை எல்லாம் கொட்டிட்டு இருக்க?"
"பேசாம பாருடா" 
நவீன்ன பாத்து, "என்னடா நீ ரெடி பண்ணிடியா?" கேட்டான். (இந்த நவீன் கூட தான் அந்த மங்களூர் டூர்).
"ஆச்சு மச்சி, இந்தா" என்னமோ கருப்பா ஒரு பொடிய குடுத்தான்.
"என்னடா இது? கஞ்சாவா?"
"எங்கள பாத்தா கஞ்சா அடிக்கற மாறியா இருக்கு? (இல்ல இல்ல விஜய் மல்லையா பார்ட்னர் மாறி இருக்கு), இது தீக்குச்சி மருந்துடா, இத சிகரட்க்கு நடூல வெச்சு, நாங்க அடிக்க ஆரம்பிப்போம், ராபின் வந்து கேப்பான், பாதில அவனுக்கு குடுத்துடுவோம், அவன் வாய் பொகஞ்சிரும். எப்டி நம்ம மாஸ்டர் பிளான்?"  
"உனக்கு ரெண்டு இன்ஜினியரிங் டிகிரி குடுக்கணும்டா, எதாச்சும் ஏடாகூடமா நடந்திர போகுது பாத்து"

ராபின் அப்போ வந்தான். "டேய் தம் இருக்கா" (அடடா பொறி இருக்கானு எலி கேக்குதே).
"உனக்கு இல்லாததா, இந்தா கட் ஆப் போட்டுக்கலாம்" (அடா அடா, பங்கு போட்டு வாழனும்னு, தமிழ்நாடு உங்க கிட்ட தான்டா கத்துக்கணும்)
வாய்ல வெச்சு ரெண்டு இழுப்பு தான் இழுத்தான். மருந்து எரிஞ்சு, அவன் புருவம், தலை முடி கொஞ்சம் எரிஞ்சு, கருப்பு கலர்ல நாமம் போட்ட மாறி ஆய்ட்டான். பாம் வெடிச்ச வடிவேலு மூஞ்சி இருக்குமே, அதே மாறி இருந்தான். அவன பாத்து அழுகறதா சிரிக்கறதா தெரில எனக்கு. JP யும், நவீனும் பொரண்டு பொரண்டு சிரிச்சிட்டு இருந்தாங்க.
ரெடியா தண்ணி, பர்னால் எல்லாம் எடுத்து வெச்சிருந்தாங்க. ஆனா என்ன பண்ண, போன முடி போனது தான?

அவன் முடி எறிஞ்சத கொண்டாடனும்னு ஒரு மனதா முடிவு பண்ணி, அதுக்கான வேலை எல்லாம் செஞ்சுட்டு இருந்தோம். ராபின் கோயம்புத்தூர் தான். கொழு கொழுனு இருப்பான். அவன் ஒரு டவுசர் போட்ருபான் பாருங்க, கிளி பச்சை கலர்ல, அத பாத்து ரெண்டு நாய்க்கு வெறி புடிச்சிருச்சு.மூணு பேருக்கு கண்ணு நொள்ளை ஆய்டுச்சு. அதனால அந்த டவுசர எரிக்கணும்னு முடிவு பண்ணோம். அந்த  டவுசர் தான் மெயின் தீம், அன்னைக்கு கொண்டாட்டத்துக்கு.
ஒரு கம்பு ரெடி பண்ணி, அந்த டவுசர கொடி மாறி கட்டி வெச்சு, அத நட்டு வெச்சிட்டோம்.

"லீடர், நீங்க வந்து தான் நம்ம கட்சி கொடி ஏத்தணும், நம்ம கொடி பட்டொளி வீசி பறக்கணும்"
"ஹா ஹா ஹா, மச்சி செம காமெடிடா, கேமரா எடுத்துட்டு வரேன், போட்டோ எடுத்து வைக்கணும் இத எல்லாம்."

ஹாஸ்டல் பசங்க எல்லாம் சுத்தி உக்கார வெச்சு, பரேட் எல்லாம் நடத்தி, மிட்டாய் குடுத்து செம ஜாலியா இருந்ததுங்க. அன்னைக்கு மாறி நாங்க யாருமே சிரிச்சதே இல்ல. இத படிக்க மொக்கையா இருக்கா தெரில, ஆனா எழுதும் போது எனக்கு சிரிப்பு அடக்க முடில. இத படிக்கற எங்க பசங்களுக்கும் அப்டி தான் இருக்கும்னு நெனைக்கறேன்.

மொதல் வருஷ அனுபவங்கள் அடுத்த பகுதில முற்றும்னு நெனைக்கறேன், பாக்கலாம்.

Thursday, November 4, 2010

பாலி பகுதி 3

அடுத்த நாள் எங்க டிரைவர் வாட்டர் ஸ்போர்ட்ஸ் இருக்கற எடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான்.

"ஏன்டா ஏதோ தண்ணி வெளையாட்டுன்னு சொல்றானே, அத தான் நாம ஊர் ப்ளாக் தண்டர் இல்ல அதிசயம் போனாலே போதுமே இங்க வந்து அது தான் பண்ணனுமா?"
"அதையே தான் நானும் நெனச்சிட்டு இருக்கேன்டா, ஏதோ ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றான், பாக்கலாம்"

வாட்டர் ஸ்போர்ட்ஸ்ன்னு அவன் கூட்டிட்டு போன எடம் பீச். அங்க பாத்தா பாராசூட் பறந்துட்டு இருந்தது, என்ன என்னமோ பறந்துட்டு இருந்தது. பாத்துட்டு எனக்கு கிலி கெளம்பிடுச்சு. இன்னைக்கு உயிரோட திரும்பி போறது கஷ்டம்னு நெனச்சிட்டு இருந்தேன். இவனுங்க ஏதோ பாராசூட்ல பொறந்த மாறி ரொம்ப சீரியஸ்ஸா பேசிட்டு இருந்தாங்க. யாரோ ஒருத்தன் கிட்ட "நோ நோ, ரேட் ஓவர்" னு என்னமோ வாரம் ரெண்டு டைம் பாராசூட்ல போற மாறி பேரம் பேசிட்டு இருந்தாங்க. இவங்க பெரிய ஆள் போல, நாமளும் போய்டுவோம் இல்லனா ஓட்டுவாங்கன்னு அவனுங்க கேட்டதுகெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிடேன். கடசில பாத்தா நான் தான் ஏமாந்துட்டேன்.

"ஓகே வாடா?, போலாம் வா"
"யாரு போலாம், நீ மட்டும் தான் போற, எங்களுக்கெல்லாம் தண்ணி, ஹைட்னா பயம், அதுக்கு தான் உன்ன ஏமாத்தி கூட்டிட்டு வந்தோம், உன்ன வெச்சு தான் டெஸ்ட் பண்ணி பாக்கணும். காசு குடுத்தாச்சு, கண்டிப்பா போகணும்"

அடபய புள்ளைங்களா இங்கயும் நான் தான் மாட்டிகிட்டேனா? பாசகார பசங்கடா நீங்க.
வருவது வரட்டும் பாத்துக்கலாம்னு ஏதோ குருட்டு தைரியத்ல கெளம்பிட்டேன்.

லைப் சூட் எல்லாம் போட்டு என்னமோ சாக போற பீலிங் குடுத்தாங்க. போட் கிட்ட வந்ததும் அந்த கைர புடிச்சு என் லைப் சூட்ல கட்டி விட்டுடாங்க. அப்டியே ஜிவ்ன்னு பறந்தேன். சும்மா சொல்ல கூடாது நல்லா தான் இருந்தது. அப்டியே பீச்ச ஒரு ரவுண்டு வந்தான். மொத்த ஊரும் தெரிஞ்சது. பிளேன்ல போனா தெரியும்ல அதே மாறி. என்ன கண்ணாடிக்கு உள்ள இருந்து பாக்காம, சில்லுனு கடற்கரை காத்து மூஞ்சில அறைய, அந்த கடல் வாசம் ஆள தூக்க நல்ல ஒரு சுகானுபவம்.


சில புகைப்படங்கள் கீழே

நான் பறக்கிறேனே மம்மி
தூரத்துல தெரியறது அண்ணன் தான்
நாங்க கை விட்டுட்டே பறப்போம்


ஏதோ சாதிச்ச மாறி சிரிசிட்டே வந்தேன்.
"ரொம்ப சிரிக்காதடா, இந்த சந்தோசம் நிரந்தரம் இல்ல".
அவன் பி.எஸ் வீரப்பா மாறி சிரிச்சான். எனக்கு அடுத்த அடிவிழுந்தது.

"சரி லைப் வெஸ்ட் கழட்டு. இந்த டிரஸ் போடணுமாம்"
"இது எதுக்குடா" அப்பிராணியா கேட்டேன்.
"அடுத்த நிகழ்ச்சி தான் முக்கியம்"
அடுத்து விழுந்த அடி இருக்கே,அப்பா அப்பா ஒரு கொழந்த புள்ளைய எத்தன அடி தான்டா அடிப்பீங்க.


பின்குறிப்பு :
இது பதிய சில டிப்ஸ் அடுத்த பதிவுல சொல்றேன்.இப்போவே ரொம்ப பெருசா போச்சு.
பின்குறிப்பு 2:
அருண் அண்ணே மாறி நான் நெனையலயே!!!!! அவர் எப்டி நெனஞ்ச கோழி மாறி இருக்காருன்னு இங்க போய் பாருங்க. அவர் நடு கடல்ல போய்  பாராசூட்ல போயிருக்காரு. நான் கரைல இருந்து போனேன். அவ்ளோ தான் வித்யாசம்.

Wednesday, November 3, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 8

எப்போ ரிசல்ட் வந்தாலும், இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு புரளி கெளம்பிட்டே இருக்கும். அன்னைக்கு இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் மேட்ச் வேற த்ரில்லிங்கா நடந்துட்டு இருந்தது. வழக்கம் போல ரிசல்ட்னு சொன்னானுங்க. மேட்ச் பாக்கற ஆசைல ரிசல்ட் பாக்க நான் வரலனு சொல்லிட்டேன்.  அப்போ இன்டர்நெட், செல் எல்லாம் அவ்ளோ ஈசியா கெடைக்காது.  ரிசல்ட் பாக்க கொஞ்ச தூரம் வேற நடந்து போனும். நமக்கு தான் வேலை செய்யறது அலர்ஜி ஆச்சே, அதனால மேட்ச் பாத்துட்டே உக்காந்துட்டேன், கழுத அப்றம் பாத்துக்கலாம்னு. அப்போ தான் ஹரி நான் போறேன்னு கெளம்பினான். அவனுக்கு வெற்றி திலகம் எல்லாம் வெச்சு போய்ட்டு வாடானு எல்லார் நம்பரும் குடுத்து அனுப்பினோம்.

ஹரி, நம்ம பிரகாஷ் கூட ஸ்கூல் படிச்சவன். இவன பத்தி சொல்ல ஆரம்பிச்சா இந்த பதிவு எல்லாம் பத்தாது. காமெடி திலகம் இவன். இவன் பண்ண காமெடி எல்லாம் டைமிங் காமெடி தான். சொல்றது கஷ்டம், ஆனா முடிஞ்சா அப்ப அப்ப சொல்றேன். இவனுக்கு மொதல்ல வெச்ச பேறு நர்ஸ். ஏன்னா, எப்பயும் டாக்டர் பிரகாஷ் கூட சுத்தீட்டு இருப்பான். சொந்த ஊர் கரூர் பக்கத்ல வேலாயுதம்பாளையம்.    

ஹரி ஹாஸ்டல் குள்ள வரும் போது சச்சின் 90 க்கு மேல அடிச்சிருந்தாறு. 
"டேய் என்னடா ஆச்சு, எல்லாரும் பாஸ் தான?"
"ஆமா படிக்காம பிட் படம் பாத்தா எப்டிடா பாஸ் ஆவோம்?" (இவர் இப்டி தான், அடிக்கடி அட்வைஸ் பண்ணுவாரு)
"அப்போ எல்லாரும் கப்பா?"
"ஆமா, ரகு மட்டும் தான் எல்லாமே பாஸ், மத்த எல்லாருமே கப்"
அப்போ சரியா சச்சின் 100, அவர் தனி ஆளா 100 அடிச்சிட்டாரு, அந்த ரீ எக்ஸாம்ல எங்க ரூம் பசங்க எல்லாத்தோட மார்க் சேத்தாலும் 100 வரல. 
"மச்சி, எனக்கு அந்த எக்ஸாம்ல 8 மார்க் தான் போட்ருக்காங்கடா" இது நான்.
"ஆமா எக்ஸாம் ஹால் குள்ள அர மணி நேரம் தான எழுதின, அதுக்கு ஏத்த மாறி தான் மார்க் வரும்"
"ஏன்டா நிமிசத்துக்கு ஒரு மார்க் போட்டு 30 போட்ருக்க கூடாது?"
நான் என்னங்க தப்பா கேட்டேன்? எல்லாரும் என்ன அடிக்க வந்துட்டாங்க,ஒரு வழியா சமாளிச்சு, "மச்சி நம்ம லீடர் பாவம் டா, நமக்கே இவ்ளோ கம்மியா மார்க் வந்திருக்குன்னா, அவன் இங்கிலீஷ் கூட பாஸ் ஆக மாட்டேன்னு சொன்னனே, வா அவன பாத்துட்டு வரலாம் "
பரிவாரம் சூழ லீடர் ரூம் க்கு ஒப்பாரி வெக்க கெளம்பினோம்.

அங்க போனா லீடர்க்கு அவங்க ரூம் பசங்க பொது மாத்து போட்டுட்டு இருந்தாங்க.
"என்ன மச்சி ஆச்சு, வொய் நோண்டிங் சாம்பு மவன்?"
"சாம்பு மவனா இவன்?, எல்லா எக்ஸாம்லயும் பாஸ் பண்ணிட்டான் டா" அவன் ரூம் பையன் ஜெப குமார் சொன்னதும்,  காதுல எங்களுக்கு ஈயத்த காசி ஊத்துன மாறி இருந்தது.

நம்ம நண்பர் ஒருத்தன், பெயில் ஆய்டா சோகமா இருக்கும், அவனே எல்லாதையும் பாஸ் பண்ணி, நாம அரியர் வெச்சா அது ரொம்ப சோகம் இல்ல? (இது 3 idiots டயலாக், சிங்க் ஆய்டுச்சு).
"குல துரோகினு முத்திரை குத்தி அவன ஒதுக்கி வைங்க, அவன் கூட ஆறும் பேச கூடாது, ஆறும் அன்னம், தண்ணி பொழங்க கூடாது, இது தான் டா தீர்ப்பு" ஹரி தீர்ப்பு சொன்னான்.

தீர்ப்ப எல்லாரும் தீவிரமா கடைபிடிச்சது எல்லாம் ரெண்டு நாள் தான்.ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? கொஞ்ச நாள் கழிச்சு ஒன்னா சேந்துட்டோம்.

எங்க டிகிரியவே கேள்வி குறி ஆக்குன செகண்ட் செம் எக்ஸாம் வந்துச்சு அடுத்து....

Tuesday, November 2, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 7

பரீட்சைக்கு முந்தின நாள் எவ்ளோ படிச்சாலும் தான் ஏறாதே. ஏதோ கொஞ்சம் படிச்சிட்டு ஒரு 2 மணி போல படுத்து தூங்கினேன். காலைல 6 மணிக்கு  எந்திரிக்கலாம் அப்டினு அலாரம் எல்லாம் சிறப்பா வெச்சிட்டு படுத்தாச்சு. படிபாளிங்க மட்டும் படிச்சிட்டு இருந்தாங்க.நானும் JP யும் ஒரே கட்டில்ல படுத்திருந்தோம்.

JP சொந்த ஊர் நாகர்கோயில். பேருக்கு தான் கம்ப்யூட்டர் பொறியாளர். ஆனா காட்ல எலி புடிப்பாங்களே, அவங்க செய்யற வேலை எல்லாம் கரெக்ட்டா செய்வான். பல்லி புடிச்சு பொண்ணுங்க பேக்ல போடறது. ரூம் குள்ள வந்த கரபான்பூச்சி புடிக்கறது, இந்த மாறி வேலை எல்லாம் இவன நம்பி குடுக்கலாம். இவனோட பட்ட பேறு நாகை சுருளி. அதுக்கு காரணம் அவன் ஹேர் ஸ்டைல். அன்னிக்கு என்ன நடந்ததுனு சொல்றக்கு முன்னாடி எங்க ரூம் எப்டி இருக்கும்னு சொல்லிடறேன்.

எங்க ஹாஸ்டல் ரூம் எல்லாம் ஆரம்பிக்கரகுள்ள முடிஞ்சிடும். அவ்ளோ பெருசு. ரூம் க்கு 4 பேர் இருக்கனும், அது தான் ரூல்ஸ். ஆனா நாங்க 6 பேர் இருப்போம். ரெண்டு டபுள் காட் பெட் போட்ருபாங்க. அத சேத்தி போட்டுட்டா 6 பேர் ஈசியா படுத்துக்கலாம்.   பரீட்சை நேரத்ல எடம் அதிகமா வேணும்னு ரெண்டு கட்டிலும் பிரிச்சு போட்டுடுவோம். அன்னைக்கும் அப்டி தான் போட்டு இருந்தோம்.

நானும் JP யும் கீழ படுத்திருந்தோம். எங்களுக்கு மேல ஒருத்தன். என் ஊர்காரன். திருவாளர் மோகன்ராம். apology  எழுதின பசங்கள்ள ஒருத்தன். அவன் மெத்தைய சூடா இருக்கனும்னு, பாலிதீன் கவர் கூட பிரிக்காம போட்ருபான். 4 மணி இருக்கும்.

"டேய் JP ஜன்னல மூடு டா, மழை பேயுது போல, சாரல் கால்ல அடிக்குது"
"ஒன்னும் இல்ல, எனக்கு அடிக்கல, உனக்கு மட்டும் எப்டி அடிக்கும்?"

இப்பவே தெரிஞ்சிருக்குமே என்ன விஷயம் னு.

"டேய், டேய் JP எந்திரிடா, மோகன் மேல இருந்து சுச்சு போய்ட்டான்."
அடிச்சு புடிச்சு எந்திரிச்சு பாத்தா, ஆனந்தமா தூங்கிட்டு இருக்கான்.

"டேய், எந்திரிடா" " சுச்சு போய்ட்டு தூக்காத பாரு, மாப்ள, ஒரு எத்து எத்துடா"

எந்திரிச்சு மணி பாத்தான், "6 மணிக்கு தான் எழுப்ப சொன்னேன், இப்போ எதுக்குடா எழுப்பி விட்டீங்க?" அப்டினு கேட்டான் பாருங்க, செம கடுப்பு எனக்கும் JP கும். படிச்சிட்டு இருந்த எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தாங்க.
JP சொன்னான், ஒரு மாஸ்டர் பீஸ் டயலாக், " நான் உன்ன எழுப்ப சொல்லவே இல்லையே, நீ எதுக்குடா பன்னீர் தெளிச்சு எங்கள எழுப்பின?" 

அவனுக்கு புரியவே இல்ல, அப்பறம் ஈரத்த பாத்துட்டு சொன்னான்," ஐயோ! மச்சி கெட்ட கனவுடா, வார்டன் எங்க அப்பா கிட்ட போன் பண்ணி சொல்லிடறாரு, அவரும் என்கிட்ட  apology எழுதி கேக்கற மாறி, செமையா பயந்துட்டேன்டா"

அவன நெனச்சு அழுகறதா, சிரிக்கவா? நீங்களே சொல்லுங்க!!!! அவன் அப்பா அவன் கிட்ட apology கேக்கற அளவுக்கு பயந்திருக்கான்.

நல்ல வேலை வடக்க சூலம்னு  நானும் JPயும் இந்த பக்கம் தல வெச்சு படுத்தோம், அந்த பக்கம் தல வெச்சிருந்தா, என்ன ஆயிருக்கும்? ஜலக்கீரீடை தான்.

அதுக்கப்பறம் எங்க தூங்க, படிக்க!!! நாங்க குளிச்சு, எங்க மெத்தைய தொவச்சு, 8 மணி ஆய்டுச்சு. பரீட்சை எழுதும் போதே தெரியும் கப் னு.

இது எல்லாத்தையும் விட பெரிய அதிர்ச்சி, ரிசல்ட் வந்த போது தான்!!!!

Monday, November 1, 2010

பாலி பகுதி 2


வீட்ல என்னென்னமோ சொல்லி அனுமதி வாங்கிட்டு மெட்ராஸ் ட்ரெயின் ஏறிட்டேன். எப்போ ட்ரெயின், இல்ல பஸ் ஏறுனாலும் பக்கத்ல எதாச்சும் பிகர் உக்காருதானு பாத்துட்டே இருப்போமே. உக்காந்தா என்ன பண்ண போறனு தான கேக்கறீங்க. மச்சி பக்கத்ல சூப்பர் பிகர் டா, அப்டினு மெசேஜ் மட்டும் தான் அனுப்புவேன். மத்தபடி அந்த பொண்ண நிமிந்து கூட பாக்கமாட்டேன்( சத்யமா பாஸ்!!!).  பேட் லக், அன்னிக்கு யாரும் வரல. வெளிய பராக்கு பாத்துட்டே மெட்ராஸ் வந்தேன். நைட் 1 மணிக்கு பிளைட்.  பஸ் ஏறினாலே பீர் உட்டுட்டு தான் ஏறுவோம். ஏரோபிளேன்னா சும்மாவா?. 

"எத்தன மணிக்கு டா பிளைட்" அடுக்கி வெச்சிருந்த பீர் பாட்டில்ல பாத்துட்டே சுனில் கேட்டான்.
"நைட் ஒரு மணிக்குடா"
"டேய் மணி இப்போவே 10 டா. நீ சாப்ட வேணாமா? கெளம்புடா, ஆமா கோகுல், சுரேஷ் எப்டி வராங்க?"
"வினீத் என்ன ஏர்போர்ட் வந்து கூட்டிட்டு போவானாம். இவங்க ரெண்டு பேரும் நான் போன அப்பறம் நாளைக்கு சாயங்காலம் சிங்கப்பூர்ல இருந்து வருவாங்க"
"வினீத் ஏர்போர்ட் வரலைனா?"
"உன் நெனபுல கொல்லி வெக்க, அதெல்லாம் வந்திடுவான்"(உள்ள ஒதருச்சு)
" என்னமோ!!! கெளம்பு கெளம்பு, மணி ஆச்சு!" 

பாலி போக, சென்னைல இருந்து டைரக்ட் பிளேன் கெடையாது. சிங்கப்பூர் போய் போலாம் இல்ல, பாங்காக் போய் போலாம். கொஞ்சம் முன்னாடியே பிளான் பண்ணி புக் பண்ணா, சிங்கப்பூர் வழியா சீப் டிக்கெட் கெடைக்கும். இந்தோனேசியா போக விசா தேவ இல்ல. அங்க போய் எடுத்துக்கலாம்(on arrival visa).  முக்கியமா US டாலர் கொண்டு போங்க. நம்ம ஊர்ல இந்தோனேசியன் ருபயாஹ் கெடைக்காது. ஏர்போர்ட்லயே அவங்க காசு மாத்திக்கலாம். ஹோட்டல் எல்லாம் இங்க இருந்தே புக் பண்ணிட்டு போறது நல்லது. 

நான் பாங்காக் போய் அங்க இன்னொரு பிளேன் மாத்தி பாலி போனும். பிளேன்ல புரியாத மொழில பேசிட்டு இருந்தாங்க. அவங்க பேசற இங்கிலீஷ் கூட புரில. சென்னைல தான் இருக்கோமா, ஒன்னுமே புரில. காலைல அந்த ஊர் டைம் படி 6 மணிக்கு கொண்டு போய் விட்டுடாங்க. தூங்கியும் தூங்காமலும் போய் அடுத்த பிளேன் புடிச்சு பாலி போனேன். அந்த பிளேன்ல என்ன தவிர நம்ம ஊர் காரங்க இருக்க மாறியே தெரில.பாலி போன பிறகு செக்யூரிட்டில நோண்டி நோண்டி கேள்வி கேக்கும் போது தான் தெரிஞ்சது, நான் முழிச்ச முழி, நம்ம கலர் எல்லாம் சேந்து அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். (என்ன பாத்தா போதை மருந்து கடத்துற மாறியா இருக்கு?). கடசில இது டம்மி பீஸ்னு தெரிஞ்சு விட்டுடாங்க. 

நல்ல வேலை, வினீத் வெளிய வந்திருந்தான். டிரைவர்னு ஒருத்தன காமிச்சான். அவன் வணக்கம் வெச்சத பாத்து மெரண்டு போய்ட்டேன்.

"என்ன மச்சி, உட்டா கால்ல விழுந்திருவான் போல?, நமக்கு இப்டி ஒரு வரவேற்ப்பா?"
"இந்த ஊர்ல இப்டி தான் டா, சரி நம்ம ஹோட்டல் போலாம், அங்க நீ கொஞ்சம் தூங்கு, அப்பறம் நைட் 7 மணிக்கு அவங்க வந்திருவாங்க, இன்னைக்கு சரக்கு போட்டுட்டு தூங்கிடலாம், நாளைக்கு வெளிய போலாம், ஓகே வா?" (ஓப்பனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு).

அது ஹோட்டல் இல்லேங்க, தனி வீடு. வேலைக்கு ஆள், நீச்சல் குளம் எல்லாம் இருந்தது. கூடவே மொக்கை ஒருத்தன் இருந்தான்.அட நான் இல்லேங்க, அந்த வீட்டு சொந்தக்காரன். மொக்கை போட்டான் பாருங்க, ஐயோ ஐயோ, ரத்தமே வந்திருச்சு. அவன் காதல் கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டான். அவன் கிட்ட இருந்து கழண்டு தூங்க போகறகுள்ள போதும் போதும்னு ஆய்டுச்சு. 

சாயங்காலம் எந்திருச்சு, அவங்கள போய் கூட்டிட்டு, சரக்கு வாங்கிட்டு வந்தோம். குடிச்சிட்டே, குளிச்சிட்டு..... குளிச்சிட்டே, குடிச்சிட்டு சூப்பர்ரா இருந்தது. நல்லா ஆட்டம் போட்டுட்டு படுத்தோம். 

அடுத்த நாள், என் வாழ்க்கைல மறக்க முடியாத நாள். உயிர் போய் உயிர் வந்த நாள். எப்டினு சொல்றேன்.