என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, November 23, 2010

தேடினேன் காதலை 3

"என்ன சூர்யா முடிவு பண்ணிருக்க? அவர் கிட்ட போய் பேச போறியா? இல்ல அவங்க உங்க வீட்டுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ண போறியா?"
"தெரில வித்யா, அத பத்தி தான் நெனச்சிட்டு இருக்கேன், நீயும் இதயே கேக்கற!"
"இந்த டைம்ல அத பத்தி நெனைக்காம வேற எத பத்தி நெனைக்க போற? இன்னும் கொஞ்ச நேரம் தான், உன் ஹீரோ வந்திருவாரு"

 ஆனாலும் இவ பயங்கரமா கிண்டல்  பண்றா. இன்னைக்கும் வருவாரா? பாக்கலாம். என்னென்னமோ நெனச்சிட்டு இருக்கும் போதே என் டீம் மேட் செல்வாவும் அவன் நண்பர்கள் 3  பேரும் ஜன்னல் பக்கத்ல நின்னுட்டு பேசிட்டு இருந்தது கேட்டது.

"பாஸ், அவனே தான் பாத்தீங்களா? அதே மஞ்ச கலர் யமஹா"
"ஆமா செல்வா, அவன மாறி தான் இருக்கு"
"நேத்தே வண்டி மேல ஏறி நின்னுட்டு நம்ம கேம்பஸ் குள்ள பாத்துட்டு இருந்தான், என்னனு கேக்க போலாம்னு நெனச்சேன், அதுக்குள்ள எஸ் ஆய்ட்டான். கண்டிப்பா சைட் அடிக்க தான் வந்திருக்கான். லாக் அவுட் பண்ணிட்டு எல்லாரும் வாங்க என்னனு கேட்டுடலாம். இன்னைக்கு ரெண்டு பேர் சிக்கியிருக்காங்க, கைமா பண்ணிடலாம்"

இதெல்லாம் கேட்டதுமே எனக்கு தல சுத்திடுச்சு. செல்வா கிட்ட வேணாம்னு சொல்லலாம்னு எழுந்தேன். அப்ப பாத்துதான் டீம் லீடர் கால் பண்ணனும்? ஐயோ இவனுங்க வேற கெளம்பி போறாங்களே. நம்ம ஆள ஒன்னும் பண்ணாம இருக்கனும் ஆண்டவா.
....
"டேய் அருண், ஆனாலும் மாமனார் வீட்டுக்கு வந்த என்ன இங்க கூட்டிட்டு வந்து கடுப்பு கெளப்பற மச்சி நீ"
"அங்க போய் என்னடா பண்ண போற? எனக்கும் ஒரு மாமனார் கெடைக்கற மாறி இருக்கு, அதுக்கு நீ ஹெல்ப் பண்ணா உன் பேர் சரித்திரத்ல இடம் பெறும் விஜய், கவலை படாத"
"நேத்து நடந்தது எல்லாம் ரகு போன் பண்ணி சொன்னான்,  சேட்ட எல்லாம் பண்ணியாமே? அப்பவே சொன்னான் நீ போன் பண்ணா எடுக்க வேணாம்னு நான் தான் அவன் பேச்ச கேக்காம மாட்டிகிட்டேன்"
"இருடா இன்னும் கொஞ்ச நேரம் தான், இன்னைக்கு எப்டியும் கண்டுபுடிச்சிடலாம்"
"மச்சி அங்க பாருடா, ஒரு 4 பேர் நம்ம பாத்து நடந்து வந்துட்டு இருக்காங்க, இன்னைக்கு கதை கந்தல் தான்"

"ஹலோ, யாருங்க நீங்க, டெய்லி எங்க ஆபீஸ் முன்னாடி நின்னுட்டு இருக்கீங்க, நேத்து நீங்க தான பைக் மேல ஏறி பாத்துட்டு இருந்தீங்க? கேக்க ஆள் இல்லனா என்ன வேணா பண்ணுவீங்களா?"

அவர் கழுத்துல இருந்த ID கார்டு அவருக்கு சூர்யாவ தெரியும்னு காட்டுச்சு. 
"கும்புட போன தெய்வம் குறுக்க வந்த மாறி நீங்க வந்திருக்கீங்க தல"
எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த டைம்ல சிரிச்சது தப்பு தான். ஆனா என்ன பண்ண வந்திருச்சே.

"டேய் என்ன நக்கலா?நான் மரியாதையா தான கேட்டேன்? சிரிக்கற? இந்த ஊர் காரங்களுக்கு குசும்பு அதிகம் தான் டா"

நல்ல வேலை விஜய் இடைல வந்து அடிக்க வந்த அவர தடுத்து நிறுத்தினான்," அறிவு கெட்ட மாடு எப்ப என்ன பண்ணனும்னு கூட தெரியாது உனக்கு" "சாரி பாஸ், தப்பா நெனச்சுக்காதீங்க"

அவன் என்ன மேட்டர்னு அவர் கிட்ட சொல்ல சொல்ல அவர் முகம் தெளிவாச்சு. உஸ்ஸ் தப்பிச்சேன்.

"அட என்ன அருண் நீங்க, இது தான் மேட்டரா, இப்டி ரோடுல நின்னு தேடுனா எப்டி கண்டு புடிக்க முடியும்? எந்த கம்பெனினு தெரியும், அப்றம் என்ன, ID கார்டு பாத்து யாராச்சும் பசங்க கிட்ட கேக்க வேண்டியது தான? லவ்க்கு ஹெல்ப் பண்ணாம நாம எதுக்கு இருக்கோம்? சரி பொண்ணு பேர் என்ன?"
"சூர்யா"
....
"ஐயோ வித்யா அங்க பாரு அருண் கிட்ட செல்வா கோவமா பேசிட்டு இருக்கான், சீக்கரம்வா"
"போறக்குள்ள எதாச்சும் பிரச்சன ஆய்டும், நீ செல்வாக்கு போன் பண்ணு"
....
"குட் சாய்ஸ் பாஸ், நல்ல பொண்ணு"
"என்ன செல்வா சொல்றீங்க, உங்களுக்கு சூர்யாவா தெரியுமா?"
"தெரியுமாவா? என் டீம் மேட் பாஸ், இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும், அந்த பேக்கரில வெயிட் பண்ணலாம், வந்ததும் போய் பேசலாம்"
"இல்ல பாஸ் இன்னைக்கு பேச வேணாம், ப்ரஸ்ட் மீட்டிங் கொஞ்சம் ஞாபகம் இருக்க மாறி இருக்கனும்னு நெனைக்கறேன்"
"என்ன பாஸ் உங்க ஆள் போன் பண்ணுது? இருங்க ஸ்பீக்கர்ல போடறேன்"

"ஹலோ, சொல்லுங்க சூர்யா?"
"செல்வா, எங்க இருக்கீங்க? ரோடுல யார் கூடவோ கோவமா பேசிட்டு இருந்தீங்க? எதாச்சும் பிரச்சனையா?"
"அதெல்லாம் இல்லேங்க, சின்ன மேட்டர் தான், ஒன்னும் பிரச்சனை இல்ல"
"ஓ! யார் அவங்க? போய்டாங்களா?"
"தெரிலங்க, ஒன்னும் சொல்லல....."
....
"என்னடி என்ன சொன்னான்"
"சரியாவே பதில் சொல்லலடி, வா போய் பாக்கலாம்"
....
"என்னங்க தல, இப்டி பதறுது உங்க ஆளு?"
"சே அவ தான் சொன்னாளே, உங்கள பாத்தேன்னு, எதேச்சையா கேட்ருக்கும்"
"யாரு சூர்யாவா? பக்கதுல இடி விழுந்தா கூட அலட்டிக்க மாட்டாங்க? அவங்க குரல்ல பதட்டம் இருந்தது கேட்டீங்களா?"
"அப்போ அவளுக்கு என்ன பத்தி தெரியும் போலயே. என் போட்டோ பாத்திருப்பாளோ?"
"அதெல்லாம் அப்றம் கேட்டுக்குங்க........ தல அங்க பாருங்க அந்த சிகப்பு சுடிதார் தான் சூர்யா"
 
நாங்க நின்னுட்டு இருந்த எடத்ல இருந்து அவள பாக்கலாம் ஆனா  அவளுக்கு தெரியாது. 
 தேவதைக்கு எல்லாம் யாரப்பா வெள்ளை டிரஸ் குடுத்தது? இனிமேல் செகப்பு தான். இவ்ளோ சீக்கரம் உன்ன பாப்பேன்னு நெனைகல சூர்யா. அவ கண்ல ஒரு பயம் தெரிஞ்சது. அது எனக்காக தான் இருக்கனும்னு மனசு முட்டாள் தனமா யோசிச்சிட்டு இருந்தது. இவள காமிச்ச செல்வா என்னோட புது பெஸ்ட் ப்ரண்ட் ஆகிட்டாரு.

சினிமால மட்டும் கதாநாயகிய ஹீரோ பாக்கும் போது ஸ்லோ மோசன்ல காட்றாங்க? நான் அவள பாக்கும் போது மட்டும் பட் னு கிராஸ் பண்ணி போய்டா? வாழ்கைல ஸ்லோ மோசன், ரீவைண்ட் எல்லாம் இருந்தா அவ என்ன கடந்து போற அந்த நொடிய பாஸ் பண்ணி பாத்துட்டே இருக்கலாம்.

"ஹலோ பாஸ், போதும் பாத்தது? எப்போ பேச போறீங்க?"
"அதுக்கு உங்க ஹெல்ப் வேணும் செல்வா"
"சொல்லுங்க செஞ்சிடுவோம்"
.....

35 comments:

Anonymous said...

first?

Anonymous said...

அங்க போய் என்னடா பண்ண போற? எனக்கும் ஒரு மாமனார் கெடைக்கற மாறி இருக்கு, அதுக்கு நீ ஹெல்ப் பண்ணா உன் பேர் சரித்திரத்ல இடம் பெறும் விஜய், கவலை படா//
செம கலக்கல்

Madhavan Srinivasagopalan said...

me the first..'இன்ட்லில' ஒட்டு போட்டதைச் சொன்னேன்.

Arun Prasath said...

//first?//
வடை உங்களுக்கே

//செம கலக்கல்//

நன்றி தல, கொஞ்சம் பெருசா இருக்கா?

Arun Prasath said...

//me the first..'இன்ட்லில' ஒட்டு போட்டதைச் சொன்னேன்.//

ஐ அது நானு

Madhavan Srinivasagopalan said...

//Arun Prasath said...

//me the first..'இன்ட்லில' ஒட்டு போட்டதைச் சொன்னேன்.//

ஐ அது நானு//

பதிவர் / கும்மி சங்க வழக்கப் படி, நமக்கு நாமே போட்டுக்குற கமெண்டும், ஓட்டும் 'வடை' கணக்குல வராது..
டவுட்டுன்னா.. செல்வாகிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்கோங்க..

Arun Prasath said...

//பதிவர் / கும்மி சங்க வழக்கப் படி, நமக்கு நாமே போட்டுக்குற கமெண்டும், ஓட்டும் 'வடை' கணக்குல வராது..
டவுட்டுன்னா.. செல்வாகிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்கோங்க..//

தெளிவா தான் இருக்காங்கப்பா.... சரி சரி இன்டலி வடை உங்களுக்கே...

Madhavan Srinivasagopalan said...

ஒட்டு போட்ட உரிமைல கேக்குறேன்..
என்னதான் சொல்ல வரீங்க.. புரியலையே ?

எஸ்.கே said...

தேடிய காதல் கிடைத்ததா?

Arun Prasath said...

//ஒட்டு போட்ட உரிமைல கேக்குறேன்..
என்னதான் சொல்ல வரீங்க.. புரியலையே ?///

ஜனநாயக நாட்டில் ஓடு போடுவது உங்கள் கடமை... உங்களுக்கு வேண்டியது செய்வது என் கடமை.... அண்ணனுக்கு பிரியாணி பொட்டலம் பார்சல்.....

Arun Prasath said...

//தேடிய காதல் கிடைத்ததா?//

கெடச்சிடும்ன்னு நெனைக்கறேன்

கருடன் said...

எண்டா தம்பி ஒரே தொடரா போடறியே.. நீ ஒரு தொடர் கதையா இருக்க போல. எல்லாம் தொடர் முடிச்சிட்டு வந்து சொல்லு. நான் வந்து மொத்தமா படிக்கிறேன்....

Arun Prasath said...

//எண்டா தம்பி ஒரே தொடரா போடறியே.. நீ ஒரு தொடர் கதையா இருக்க போல. எல்லாம் தொடர் முடிச்சிட்டு வந்து சொல்லு. நான் வந்து மொத்தமா படிக்கிறேன்....//

தொடர் கதைனா பொறுமை வேணும் அண்ணே.... சரி சரி முடிச்சிட்டு சொல்றேன்.... இது வரைக்கும் எப்டி இருக்குன்னு சொல்லிட்டு போங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//சினிமால மட்டும் கதாநாயகிய ஹீரோ பாக்கும் போது ஸ்லோ மோசன்ல காட்றாங்க? நான் அவள பாக்கும் போது மட்டும் பட் னு கிராஸ் பண்ணி போய்டா? வாழ்கைல ஸ்லோ மோசன், ரீவைண்ட் எல்லாம் இருந்தா அவ என்ன கடந்து போற அந்த நொடிய பாஸ் பண்ணி பாத்துட்டே இருக்கலாம்//

எலேய் மக்கா........இந்த பாரா ரொம்ப அருமையா இருக்கு மக்கா ..............

Arun Prasath said...

//எலேய் மக்கா........இந்த பாரா ரொம்ப அருமையா இருக்கு மக்கா//

என்ன இம்சை சார், அனுபவிச்சு சொல்ற மாறி இருக்கு..... ரொம்ப நன்றி சார்

ஹரிஸ் Harish said...

//வாழ்கைல ஸ்லோ மோசன், ரீவைண்ட் எல்லாம் இருந்தா அவ என்ன கடந்து போற அந்த நொடிய பாஸ் பண்ணி பாத்துட்டே இருக்கலாம்//

கவித..கவித...

Arun Prasath said...

//கவித..கவித...//

ஹி ஹி ஒரு விளம்பரம்

karthikkumar said...

நீ போன் பண்ணா எடுக்க வேணாம்னு நான் தான் அவன் பேச்ச கேக்காம மாட்டிகிட்டேன்///
பவம்

karthikkumar said...

தேவதைக்கு எல்லாம் யாரப்பா வெள்ளை டிரஸ் குடுத்தது? இனிமேல் செகப்பு தான். ///
போய்யா போ என் தேவதைக்கு எல்லாம் வெள்ளை டிரஸ்தான். யாரகேட்டு இனிமேல் செவப்புன்னு சொல்லலாம்

karthikkumar said...

வாழ்கைல ஸ்லோ மோசன், ரீவைண்ட் எல்லாம் இருந்தா அவ என்ன கடந்து போற அந்த நொடிய பாஸ் பண்ணி பாத்துட்டே இருக்கலாம்//
ஆமா அப்படி இருந்தா நீங்க மொக்கை ஆனத திரும்ப திரும்ப நான் பாத்துகிட்டே இருப்பேன்.

karthikkumar said...

பாவம் அந்த பொண்ணு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்புறம் என்ன தான் ஆச்சு..

Unknown said...

தேவதைக்கு எல்லாம் யாரப்பா வெள்ளை டிரஸ் குடுத்தது? இனிமேல் செகப்பு தான். ///

செம..

ஒரு சிரிப்போடவே படிக்க முடியுது.. ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு உங்க கதை.. கண்டிப்பாக நிஜக்கதை இதுல இருக்கு..

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..

Arun Prasath said...

//செம..

ஒரு சிரிப்போடவே படிக்க முடியுது.. ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு உங்க கதை.. கண்டிப்பாக நிஜக்கதை இதுல இருக்கு..

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..//

ரொம்ப நன்றி பாபு, இந்த பார்ட்ல நிஜ கதை கண்டிப்பா இல்ல, மோதல் பார்ட் ல வேணா 10 % நிஜம் இருக்கு

Anonymous said...

தேடியது கிடைத்ததா இல்லையா???

Arun Prasath said...

//தேடியது கிடைத்ததா இல்லையா???//

இன்னைக்கு தெரிந்து விடும்... மறக்காம பாருங்க!!!1

செல்வா said...

//இன்னைக்கு ரெண்டு பேர் சிக்கியிருக்காங்க, கைமா பண்ணிடலாம்"
/

ஹி ஹி ஹி ., இந்த மாதிரி சண்டையெல்லாம் என்னால முடியாது ..!!

Arun Prasath said...

உன் பேர் தான், அதுக்காக நீ இல்ல செல்வா தம்பி

செல்வா said...

// தேவதைக்கு எல்லாம் யாரப்பா வெள்ளை டிரஸ் குடுத்தது? இனிமேல் செகப்பு தான்.///

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்...!!!

செல்வா said...

// ஸ்லோ மோசன், ரீவைண்ட் எல்லாம் இருந்தா அவ என்ன கடந்து போற அந்த நொடிய பாஸ் பண்ணி பாத்துட்டே இருக்கலாம்.//

சத்தியா அருமையா இருக்கு .., எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல .. கலக்கிட்டீங்க ..!!

Arun Prasath said...

//போய்யா போ என் தேவதைக்கு எல்லாம் வெள்ளை டிரஸ்தான். யாரகேட்டு இனிமேல் செவப்புன்னு சொல்லலாம்//

ரைட்

//ஆமா அப்படி இருந்தா நீங்க மொக்கை ஆனத திரும்ப திரும்ப நான் பாத்துகிட்டே இருப்பேன். //

ஏன் இந்த கொலை வெறி

Arun Prasath said...

//அப்புறம் என்ன தான் ஆச்சு..//

கூடிய சீக்கிரம் அடுத்த பார்ட்

Arun Prasath said...

//சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்...!!!//

//சத்தியா அருமையா இருக்கு .., எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல .. கலக்கிட்டீங்க ..!!///

நன்றி செல்வா..... எல்லாம் உன் கூட சேந்த அப்புறம் தான்

ராம்குமார் - அமுதன் said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்!!!


Sema Flow machi.... Pick up semaiya aaguthu... i mean Kathai...

Kalakkal da... Innum neraiya Stroies ezuthu....

Arun Prasath said...

மச்சி ஏதும் உள் குத்து இல்லையே