நாங்க தங்கி இருந்த ஹாஸ்டல் ரொம்ப பழைய கட்டிடம். அப்ப அப்ப பேய் கதை எல்லாம் உலா வரும். அத நாங்க யூஸ் பண்ணிட்டோம்.
பிரகாஷ் சொன்னான் "மச்சி, நாம எந்த ஹாஸ்டல் போனாலும் அந்த ஹாஸ்டல நாம ஆளனும், நாம இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியனும்"(அப்போ காக்க காக்க படம் வந்த புதுசு).
பிரகாஷ் சொன்னான் "மச்சி, நாம எந்த ஹாஸ்டல் போனாலும் அந்த ஹாஸ்டல நாம ஆளனும், நாம இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியனும்"(அப்போ காக்க காக்க படம் வந்த புதுசு).
"என்னடா திடிர்னு தத்துவம் அப்டிங்கற பேர்ல சினிமா டயலாக் எல்லாம் சொல்லிட்டு இருக்க"
"இல்லைடா, நேத்து பசங்க பேய் கதை பேசிட்டு இருந்தாங்க, இன்னைக்கு நைட் நாமளே பேய் வேஷம் போட்டுட்டு எல்லாரையும் பயமுறுத்தலாமா?"
எல்லாருக்கும் பல்பு எரிஞ்சது.
ஆபரேஷன் பேய் நடந்தது. JP தான் இதுக்கு சரியான ஆள்னு அவனுக்கு மூஞ்சி எல்லாம் திருநீறு அப்பி, பெருசா பொட்டு வெச்சு, முள்ளும் மலரும் படத்ல தலைவர் போத்தி இருப்பாரே அந்த கருப்பு சால்வை, அத முக்காடு போட்டு, அவன் மூஞ்சில அடிக்கற மாறி டார்ச் அவன் கைல குடுத்தாச்சு.
"யார் ரூம்க்குடா போக?"
"மலையாள பசங்க ரூம்க்கு போடா, அவங்க தைரியத்த பாக்கலாம்"
அவன லைட் ஆப் பண்ணிட்டு பாத்தா, மேக்கப் போட்ட எங்களுக்கே பயமா இருந்துச்சு. இன்னைக்கு ஏதோ ஏழரை நடக்க போகுதுனு அப்பவே உள் மனசு சொல்லுச்சு. அவன் போன அப்பறம் ஒரு 5 நிமிஷம் கழிச்சு, ஐயோனு ஒரு சத்தம். நாங்க எல்லாரும் ஓடி போய் பாத்தா, ஒரு மலையாள பையன், கட்டில்ல குப்புற படுத்துட்டு இருக்கான். JP பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கான். அந்த பையன தொட்டா, ஒடம்பெல்லாம் நடுங்கீட்டு இருக்கு வேற. அந்த பாதி ராத்திரில அவன தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனது தான் மிச்சம். செமையா பயந்துட்டான். பாவம் ரெண்டு மூணு எக்ஸாம் எங்க புண்ணியத்துல அவன் எழுதல. வெயிட் வெயிட், எக்ஸாம் எழுதலனு சொல்லும் போது இன்னொன்னு ஞாபகம் வருது.
இந்த மேட்டர்க்கு அப்பறம் தான் நாங்க எக்ஸாம்க்கு ஸ்கூட் (அதாங்க கட்) விடற கலாச்சாரத்தை கொண்டு வந்தோம். இத ஆரம்பிச்சு வெச்சது நவீன். எங்களுக்குள்ள யாரு எக்ஸாம் முடிச்சிட்டு மொதல் ரூம்க்கு வரோம்னு ஒரு போட்டி இருக்கும்.(இதுங்கெல்லாம் வெளங்கவானு நீங்க நெனைக்கறது புரிது). அன்னைக்கு 1 மணி நேரத்துக்குள்ள ஒரு பரிட்சை எழுதீட்டு (கணக்குனு நெனைக்கறேன்) வேக வேகமா ஹாஸ்டல் போனேன், நான் தான் மொதல் இன்னைக்குனு நெனச்சிட்டே. நவீன் சிரிசிட்டே நின்னுடு இருந்தான் (வட போச்சே).

"அடப்பாவி, இன்னைக்கு நான் தான்னு நெனச்சேன், எப்டி மச்சி அதுக்குள்ள வந்த?"
"போனா தான வர்ரக்கு, இன்னைக்கு ஸ்கூட் டா, பேய் வேசம் போட ஹெல்ப் பண்ணிட்டு இருந்தேனா சுத்தமா படிக்கல, அப்பறம் போய் 3 மணி நேரம் எதுக்கு வேஸ்ட் பண்ண? அந்த டைம்ல அடுத்த எக்ஸாம்க்கு படிக்கலாமே, நாளைக்கு எனக்கு ப்ரஸ்ட் செம் அரியர் இருக்கு" (எப்டி எக்ஸாம் போகாதத மேக் அப் பண்ணுது பாரு பக்கி)
"அதாச்சும் ஒழுங்கா பண்ணு "
அடுத்த எக்ஸாம் முடிஞ்ச அப்பறம் அதே எடத்ல நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம்.
"என்னடா, போன எக்ஸாம் கட் போட்டு இந்த எக்ஸாம்க்கு படிச்ச? தேறுமா?"
அவன் சோகமா ஒரு பார்வை பாத்தான். பக்கத்ல நின்னுட்டு இருந்த சிம்மா தான் பதில் சொன்னான்.
"அது ஒன்னும் இல்ல மாப்ள, இந்த எக்ஸாம்க்கு படிக்க போன எக்ஸாம் லீவ் போட்டானா, போன எக்ஸாம் போகாத சோகத்துல இந்த எக்ஸாம்க்கும் போகல"
இவன நெனச்சு அழுகவா சிரிகவாங்க? நீங்களே சொல்லுங்க?
23 comments:
ஹா........ ஹா..... கலக்கல் தலைவா...
இப்பவும் நவீன் அரியர் எழுதுறாரா? அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் பட சீன் மாதிர் ஆகிடப்போவுது )
///ஹா........ ஹா..... கலக்கல் தலைவா...
இப்பவும் நவீன் அரியர் எழுதுறாரா? அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன் பட சீன் மாதிர் ஆகிடப்போவுது )///
நன்றி தல....
இல்ல இல்ல, எல்லாரும் முடிச்சாச்சு, தக்கி முக்கி....
அருண் நகைச்சுவை கலந்த எழுத்து நடைல கலக்குறீங்க!
///அருண் நகைச்சுவை கலந்த எழுத்து நடைல கலக்குறீங்க!///
நன்றி சோழரே.... எனக்கு சோழர் காலத்து விசிறியா? கலக்கல்... :P
Superb Maddy..கலக்கல் :-)
//Superb Maddy..கலக்கல் :-)//
எல்லாம் உங்க ஆசிர்வாதம்
உங்கள் தொகுப்பும் நன்றாகவே உள்ளது!
//உங்கள் தொகுப்பும் நன்றாகவே உள்ளது!//
தொகுப்பா? நடந்தவைகள் ஓட தொகுப்பை சொல்றீங்கன்னு நெனைக்கறேன்.... ரொம்ப நன்றி எஸ்.கே
மறுபடியும் வட போச்சே ..
//"இல்லைடா, நேத்து பசங்க பேய் கதை பேசிட்டு இருந்தாங்க, இன்னைக்கு நைட் நாமளே பேய் வேஷம் போட்டுட்டு எல்லாரையும் பயமுறுத்தலாமா?//
வேஷம் போடாமலே போலாமே ..
அது போன பதிவுக்கு போட நினைச்சேன்! சாரி!:-)
ஆனா இந்த 10 பகுதிக்கும் கூட அது பொருத்தமாதான் இருக்கு!
//நான் தான் மொதல் இன்னைக்குனு நெனச்சிட்டே. நவீன் சிரிசிட்டே நின்னுடு இருந்தான் (வட போச்சே)//
அட ச்சே ., நானே இனிமேல் ஒரு வடை கடை வைக்கலாம்னு இருக்கேன் . இப்பவெல்லாம் வடை அதிகமா போய்டுது ..
//மறுபடியும் வட போச்சே ..//
ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்தா ஊசி போகாதா?
//வேஷம் போடாமலே போலாமே ..//
புள்ளைக்கு என்ன அறிவு
///லீவ் போட்டானா, போன எக்ஸாம் போகாத சோகத்துல இந்த எக்ஸாம்க்கும் போகல"
///
அழுகறதோ சிரிக்கறதோ அவரோட கடமை உணர்சிய பாரட்டனும்க ..!
///அது போன பதிவுக்கு போட நினைச்சேன்! சாரி!:-)
ஆனா இந்த 10 பகுதிக்கும் கூட அது பொருத்தமாதான் இருக்கு!///
நெனச்சேன், பரவால்ல விடுங்க....... வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
//அட ச்சே ., நானே இனிமேல் ஒரு வடை கடை வைக்கலாம்னு இருக்கேன் . இப்பவெல்லாம் வடை அதிகமா போய்டுது ..//
சீக்கரம் வெய்ங்க, அங்க எனக்கு தான் மொதல் வடை
//அழுகறதோ சிரிக்கறதோ அவரோட கடமை உணர்சிய பாரட்டனும்க ..!//
பாராட்டின செல்வாக்கு அவர் கடைல இருந்து ரெண்டு வடை பார்சல்
பள்ளி வாழ்வின் ஞாபகங்கள் நல்லாய் இருக்கு . சிரிச்சேன்
//பள்ளி வாழ்வின் ஞாபகங்கள் நல்லாய் இருக்கு . சிரிச்சேன்//
இத பகிர்ந்துகரதே அதுக்கு தாங்க..... எனக்கு எழுதும் போது சிரிப்பு வருமே, அதுவே போதும்.... நல்ல அனுபவங்கள்
அடப்பாவி என் பேரை வெச்சிகிட்டு இப்படி அழிச்சாட்டியம் பண்ணி இருக்கற...
நான்லாம் ரொம்ப சமத்து ஆக்கும்... அரியரே இல்லாம வெளில வந்தவன்...
//அடப்பாவி என் பேரை வெச்சிகிட்டு இப்படி அழிச்சாட்டியம் பண்ணி இருக்கற...
நான்லாம் ரொம்ப சமத்து ஆக்கும்... அரியரே இல்லாம வெளில வந்தவன்...//
சே என் பேர வெசுக்ட்டு, அரியர் இல்லாம பாஸ் பண்ணி இருக்கீங்க. நம்ம பேருக்கே அவமானம்
குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...
கொஞ்சம் லேட்(ரொம்ப லேட் ன்னு திட்டாத மக்கா ).....நல்ல இருக்கு ...............இது தான் முதல் தடவை வந்திருக்கேன் .....போக போக .......பாருங்களேன்
//கொஞ்சம் லேட்(ரொம்ப லேட் ன்னு திட்டாத மக்கா ).....நல்ல இருக்கு ...............இது தான் முதல் தடவை வந்திருக்கேன் .....போக போக .......பாருங்களேன்//
சே சே திட்ட எல்லாம் மாட்டேன்... நம்ம கடைக்கு வந்திருக்கீங்க, திட்டுன்னா நல்லா இருக்குமா? இனி மேல் லேட்டா வந்தா வெட்டு தான்..... பாப்போம்
Post a Comment