"ரகு, அங்க பாரு, வந்துட்டாடா"
அன்னிக்கு வெளிர் மஞ்ச கலர் சுடிதார். ஒரே நொடி, பட்னு கடந்து போய்ட்டா. ஆனா அந்த நொடி, இன்னிக்கும் ஞாபகம் இருக்கு. எதையோ நெனச்சு மனசுக்குள்ள சிரிச்சிட்டு இருந்திருப்பா போல, புன்னகை ததும்பும் முகம். (ஒரு வேளை என்ன பத்தியா இருக்குமோ?). எங்கள கடந்து போகும் போது பாத்தா மாதிரி இருந்துச்சே! பாத்திருப்பாளோ? .
"என்னடா இன்னைக்கு வேற வண்டில வந்திருக்கா!"
அப்போ தான் அத கவனிச்சேன். சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா? அத மொதல்ல பாக்கவே இல்ல நான். அன்னிக்கு ஸ்கூட்டில வந்தா.
"ராகுல், டேய் ராகுல்"
சாமி தரிசனம் பண்ணிட்டு இருக்கும் போது யாருடா அது நந்தி மாறி,"என்னடா"
"ராகுல், அந்த வண்டிய வேற யாரோ ஓட்டிட்டு வராங்க பாருடா!"
"அவங்க அப்பா மாறி இருக்கு. என்னடா இப்டி நம்மல அடிக்கற மாறி பாக்கறாரு?"
"டேய் எரும மாடு. உனக்கு புடிச்ச பொண்ணு தான். அதுக்குனு இப்டியா வெச்ச கண்ணு வாங்காம பாப்ப?அதான்"
அவர் முகத்த பாக்கணுமே. எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடித்தது அப்டினு கேள்வி பட்டு இருக்கேன், அன்னிக்கு தான் பாத்தேன். அவ வண்டிய ஓட்டிட்டு வருவா, வெளிய வரும் போது பேசிடலாம் அப்டினு நெனச்சிட்டு இருந்தேனே. இப்டி நம்ம கனவு கோட்டைய கலச்சிட்டாரே. இன்னும் கொஞ்ச நேரம் அங்க நின்னுட்டு இருந்தோம், அடி வாங்கிடுவோம்னு தெளிவா தெரிஞ்சது. என் வண்டி அன்னிக்கு தான் டாப் ஸ்பீட் போச்சு.
"நண்பா, என்னடா இப்டி சொதப்பிடுச்சு, சரி என்ன ஆபீஸ்ல விட்டுடு. சாயங்காலம் பாத்துக்கலாம், என்ன வந்து 5 மணிக்கு பிக் பண்ணிக்க. சாயங்காலம் கொஞ்சம் மறஞ்சு நிப்போம். இன்னைக்கு அவ வீட்டயாச்சும் கண்டுபுடிச்சிடலாம் கவலைபடாத"
காத்திருப்பது அப்டினா என்னனு அன்னிக்கு தான் தெரிஞ்சது. நொடி முள் எது, நிமிட முள் எதுன்னு கொழப்பமா இருந்தது. என்னங்க கொஞ்சம் அதிகமா இருக்கா? அப்டி தான் எனக்கும் தோணுச்சு. ஆனா என்ன பண்ண, கொஞ்சம் கூட நேரம் நகரவே இல்ல. 4 மணிக்கே ரகு ஆபீஸ் போய் நின்னேன். அவன கூட்டிட்டு 5 மணிக்கெல்லாம் அதே எடத்ல ஆஜர். கொஞ்சம் மறஞ்சு நின்னுகிட்டோம்.
"மச்சி ஒரு வேளை அவ வராம அவங்க அப்பா மட்டும் வந்தா என்ன பண்ண?"
"அத நான் யோசிச்சிட்டேன், ரெண்டு ஹெல்மெட் கொண்டு வந்திருக்கேன். ரெண்டு பேரும் போட்டுட்டு அவர் பின்னாடி போய் வீட்ட கண்டுபுடிக்காம வர்றதில்ல"
"அப்போ இன்னிக்கு களி திங்கறது உறுதி"
" மச்சி அவ தான் ஓட்டிட்டு வரா, பின்னாடி யாருடா?"
"எத்தன கேள்விடா கேப்ப? நானும் உன் கூட தான இருக்கேன். அவ அண்ணன் இல்ல தம்பியா இருக்கும். உனக்கு எதிரிகள் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதுடா"
வண்டி எடுத்துட்டு வெளிய வர்ற வரைக்கும் வெயிட் பண்ணோம்.அவ கூட வந்த பையன் ஸ்கூட்டிலயும், அவ சர்வீஸ் விட்ட வண்டிலையும் கெளம்பினாங்க. காந்திபுரம் பிரைவேட் பஸ் ஸ்டான்ட் போனாங்க.
"ரகு, என்னடா அவ ஊருக்கு போகறாளா, இல்ல அவன் போறானா. ரெண்டு வண்டில வேற வந்திருக்காங்க. ஒன்னும் புரிலடா"
"இங்கயே நில்லு வந்திடறேன்"
அவங்க நிக்கற பஸ் பக்கதுல போய் யார் கிட்டயோ பேசிட்டு இருந்தான்.
"மச்சி அது மெட்ராஸ் பஸ். அவ கூட வந்தது அவ தம்பி. அவ தான் போறா. அந்த கண்டக்டர் கிட்ட பேசும் போது அவளும் அவ தம்பியும் பேசிட்டு இருந்தத கேட்டேன். அப்பறம் வண்டி பஸ்ல ஏத்தி விட போறாங்கன்னு நெனைக்கறேன். அவ தம்பி பெட்ரோல் மொத்தமா எடுத்திடணும்னு பேசிட்டு இருந்தான்"
"என்னடா சொல்ற? அப்போ அவ போறாளா?"
ஒரே நிமிஷம் தான்.
"ரகு, அந்த பஸ்ல டிக்கெட் இருக்கா கேளேன்"
"தம்பி, நீ என்ன யோசிக்கறனு தெரியுது. இதுவரைக்கும் வந்தது ஓகே. ஆனா நீ பண்றது டூ மச் டா"
"தெரியுது மச்சி, ஆனா என் உள் மனசு ஏதோ சொல்லுது டா"
"சரி, உனக்கு தெரியாதது இல்ல.என்னமோ பண்ணு. வீட்ல என்ன சொல்ல போற"
"இருக்கவே இருக்கு இன்டெர்வியு. இப்போ தான் கால் பண்ணாங்க. நாளைக்கு இன்டெர்வியு, இப்போவே போகணும்னு சொல்லிடலாம்"
"அடப்பாவி, கிரிமினலா தான் பிளான் பண்ற"
"சரி வா, ATM வரைக்கும் போய்ட்டு, சாப்டுட்டு வரலாம்"
"ATM எதுக்கு டா, உனக்கு தான் அக்கௌன்ட் எங்கயும் இல்லையே"
"உன்கிட்ட இருக்கே, இன்னைக்கு உனக்கு சம்பள நாள் வேற"
"வந்து தொல"
பணம் எடுத்துட்டு வந்த போது, அவ தம்பி வண்டிய பஸ்ல ஏத்திட்டு இருந்தான். இவ கூட நின்னு பாத்துட்டு இருந்தா. கண்டிப்பா போணுமா? நான் யாருன்னே தெரியாதுனு சொல்லிட்டா? கண்டிப்பா அதான் சொல்ல போறா. ரெண்டு மனசு. என்ன முடிவு எடுத்தேன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல.ரகு டிக்கெட் எடுத்துட்டு வந்து குடுத்தான்.
"மச்சி, எனக்கு ஆம்பள கொழந்த பொறந்தா..."
"இதுக்கு மேல எதாச்சும் சொன்ன, கொன்னுடுவேன் உன்ன, பரதேசி. ஏன்டா 3 மணி நேரம் போற பஸ்லயே போர் அடிக்குது அப்டி இப்டினு சீன் போடுவ, இப்போ அவ்ளோ தூரம் எப்டிடா போவ?"
"மச்சி, கார்த்திக் ஜெஸ்ஸிய தேடி ஆலப்புழா போனாரே. சூர்யா மேக்னாவ தேடி U.S வரைக்கும் போனாரே. போகும் போது அவங்க லவ்வர் பத்தி நெனச்சு பாத்துட்டு தான் போயிருப்பாங்க. அவங்க அவ்ளோ தூரம் நெனச்சு பாத்துட்டே போகும் போது, நான் அவள நேர்ல பாத்துட்டே இந்த 10 மணி நேரம் போக முடியாது?"
"வாய் கிழிய பேசு. இதோட 2500 ரூபா வாங்கிருக்க. கம்னாட்டி வேலை கெடச்சதும் பெரிய பார்ட்டி வெக்கிற. சரி நான் கெளம்பறேன் பாத்து போ"
"இருடா உனக்கு இன்னும் வேலை இருக்கு. சுனில்க்கு கால் பண்ணி கோயம்பேடு வந்து கூட்டிட்டு போக சொல்லிடு. அப்பறம் அவ தம்பி பின்னாடி போய்.."
"சொல்லாத செஞ்சு தொலைகிறேன்"
பஸ்ல அவ சீட்க்கு ரெண்டு சீட் பின்னாடி நான்.பேசலாமானு யோசிச்சேன். சக பயணிகள் என்ன சாகடிசிட்டாங்கனா என்ன பண்ண?காலைல போய் பேசிக்கலாம்னு விட்டுட்டேன். அன்னிக்கு நைட் சிவராத்திரி.
ஹ்ம்ம, அவள பாத்துட்டே இருந்த அந்த நைட், என்ன என்ன எண்ணம் தோணுச்சுன்னு வார்த்தையால விவரிக்க முடில.காலைல போய் என்ன நடக்கும், என்ன பண்ண போறோம். ஒன்னும் தெரில. என்ன பாத்தா மாறியோ, நான்னு ஒருத்தன் இருக்க மாறியோ அவ காமிச்சிக்கவே இல்ல. அன்னிக்கு பொழுது ஒரே கொழப்பதோட விடிஞ்சது.
மெட்ராஸ் வந்துச்சு. கூடவே என் வாழ்கைல வசந்தமும்.
78 comments:
இன்னிக்கு வடை எனக்குத்தான்...
அட.... செல்வா பாவம்
சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா?////////////
ரசனையான வரிகள்!! ம்ம்ம்..... கலக்குங்க
ஸ்க்ரீன்ப்ளே சூப்பர் அருண் :-) ஆனா நான் தான் தூங்கிட்டேன் :-)
ரசனையான வரிகள்!! ம்ம்ம்..... கலக்குங்க//
நன்றி வைகை.... உங்க படத்ல இருக்க 3 கத்தி தான் பயமா இருக்கு...
அடங்கொக்கா மக்கா..... தூங்காமல் படித்தால் பரிசுன்னு சொல்லிடலாமா?
ரொம்ப அழகா போகுது!
நன்றி சார்.. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்
Arun Prasath said...
ரசனையான வரிகள்!! ம்ம்ம்..... கலக்குங்க//
நன்றி வைகை.... உங்க படத்ல இருக்க 3 கத்தி தான் பயமா இருக்கு...////////////
அது காவாளிபயளுகளுக்கு மட்டும்!! நீங்க ஏன் பயப்படறீங்க?!!!
//அப்போ தான் அத கவனிச்சேன். சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா?//
எலேய் எடுத்துகாட்டுக்கு சாமிய,தேர எல்லாம் இழுக்குற .........சாமி கண்ணை குத்த போகுது .....நல்ல தான் எழுதுறான்
@வைகை
அட நாம எல்லாம் கூட்டு களவானி தான...
/அப்போ தான் அத கவனிச்சேன். சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா? அத மொதல்ல பாக்கவே இல்ல நான். அன்னிக்கு ஸ்கூட்டில வந்தா.
///
அட அட ..!! எண்ணமா லவ் பண்ணுறாங்க ..?!
எலேய் எடுத்துகாட்டுக்கு சாமிய,தேர எல்லாம் இழுக்குற .........சாமி கண்ணை குத்த போகுது .....நல்ல தான் எழுதுறான்//
நான் இது வரைக்கும் தேர் இழுத்ததில்ல, நீங்க இழுத்திருகீங்க?
வைகை said...
அது காவாளிபயளுகளுக்கு மட்டும்!! நீங்க ஏன் பயப்படறீங்க?!!!
அப்ப அது உங்களுக்கு (வைகைக்கு) மட்டும் தான?
அட அட ..!! எண்ணமா லவ் பண்ணுறாங்க ..?!//
தம்பி நீ மொக்கை போடும் போது நான் கண்ணு வெச்சேனா?
அப்ப அது உங்களுக்கு (வைகைக்கு) மட்டும் தான?//
தலைவர் கேக்கறாரு இல்ல, சொல்லுங்க வைகை....
//நொடி முள் எது, நிமிட முள் எதுன்னு கொழப்பமா இருந்தது. என்னங்க கொஞ்சம் அதிகமா இருக்கா? அப்டி தான் எனக்கும் தோணுச்சு. //
ஆஹா , கலக்கல் ..!!
நன்றி செல்வா
ஸ்பீடு எடுத்திருச்சு! :-)
@ அருண்
//"தெரியுது மச்சி, ஆனா என் உள் மனசு ஏதோ சொல்லுது டா"//
நாங்க பாக்குறது சினிமாவா ..?
ஸ்பீடு எடுத்திருச்சு! :-)//
இன்னுமா இந்த உலகம் உன்ன நம்புது?
நாங்க பாக்குறது சினிமாவா ..?//
உனக்கு ஏன் இந்த டவுட்...
//U.S வரைக்கும் போனாரே. போகும் போது அவங்க லவ்வர் பத்தி நெனச்சு பாத்துட்டு தான் போயிருப்பாங்க. //
அப்படின்னா அடுத்த பாகம் பாட்டா ..?
//மெட்ராஸ் வந்துச்சு. கூடவே என் வாழ்கைல வசந்தமும்.//
வசந்த காலத்துக்கு அப்புறம் இலையுதிர் காலமா??
மெட்ராஸ்தானே போறீங்க! அப்ப கூவம் நதிக்கரையோரம் ஒரு டூயட் சாங் போடச் சொல்லுங்க!
@செல்வா
அப்படின்னா அடுத்த பாகம் பாட்டா ..?//
யப்பா சாமி எனக்கு பாடு எல்லாம் எழுத தெரியாது (மொதல்ல கதையே வராது)
வசந்த காலத்துக்கு அப்புறம் இலையுதிர் காலமா??//
சார் நீங்களுமா
மெட்ராஸ்தானே போறீங்க! அப்ப கூவம் நதிக்கரையோரம் ஒரு டூயட் சாங் போடச் சொல்லுங்க!//
லவ் பண்ண ஐடியா குடுங்கன்னா, கும்மி அடிக்க தான் ஐடியா தரீங்க
(: .
சோக smileyயா, சந்தோஷ smileyயா # டவுட்
அப்பவே வந்து பார்த்தேன். அதுக்குள்ள சங்கவிக்கு வடை போயிருச்சு :-)
இதையெல்லாம் பார்த்தா கதை மாதிரியே தெரியலையே....ஹ்ம்ம்ம்!!
விறுவிறுப்பா நகைச்சுவையுணர்வோட போகுது.. Awaiting the next parts.
// Arun Prasath said...
சோக smileyயா, சந்தோஷ smileyயா # டவுட்///
டவுட் என்றால் என்ன ..?
அப்பவே வந்து பார்த்தேன். அதுக்குள்ள சங்கவிக்கு வடை போயிருச்சு :-)//
வடைக்கு புது போட்டியா?
இதையெல்லாம் பார்த்தா கதை மாதிரியே தெரியலையே....ஹ்ம்ம்ம்!!//
நீ தான் பாக்கி... நியும் கேட்டுட்ட
விறுவிறுப்பா நகைச்சுவையுணர்வோட போகுது.. Awaiting the next parts.//
அப்டியா என்ன? எழுதிடுவோம்....
நல்லா இருக்கு நண்பா...
நல்லா இருக்கு நண்பா...//
ரொம்ப நன்றி ஜெயந்த் அண்ணே
டவுட் என்றால் என்ன ..?//
எதிர் மொக்கை போட தெரியாமல் எஸ்கேப் ஆவோர் சங்கம்
தம்பி ரொம்ப நல்லா போகுது... எதோ சொந்த அனுபவமோனு தோணுது
க்கும், இல்லன்னு சொன்னா
நம்பவா போறீங்க.....
அப்போ தான் அத கவனிச்சேன். சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா? அத மொதல்ல பாக்கவே இல்ல நான். அன்னிக்கு ஸ்கூட்டில வந்தா.///
நீர் எதைத்தான் ஒழுங்காய் கவனித்தீர்.
நீர் எதைத்தான் ஒழுங்காய் கவனித்தீர்.//
பங்காளி பாக்க வேண்டியத செறிய பாப்போம் ல
காத்திருப்பது அப்டினா என்னனு அன்னிக்கு தான் தெரிஞ்சது. நொடி முள் எது, நிமிட முள் எதுன்னு கொழப்பமா இருந்தது.//
இதுலென்னங்க சந்தேகம் வேகமா சுத்துறது நொடி முள் மெதுவா சுத்தறது நிமிச முள். இதுபோக மோகமுள் அப்டின்னு ஒரு படம் கூட இருக்கு.
ATM எதுக்கு டா, உனக்கு தான் அக்கௌன்ட் எங்கயும் இல்லையே"
"உன்கிட்ட இருக்கே, இன்னைக்கு உனக்கு சம்பள நாள் வேற"
"வந்து தொல"///
ஒரே நேரத்தில எப்படி ரெண்டு வேல பண்ண முடியும் ஒன்னு வர முடியும் இல்ல தொலைய முடியும் இந்த வந்து தொலைனா எப்படி.
.ரகு டிக்கெட் எடுத்துட்டு வந்து குடுத்தான்.
"மச்சி, எனக்கு ஆம்பள கொழந்த பொறந்தா..///
நன்றி கெட்ட உலகம் நானா இருந்தேன்னா எனக்கு பொம்பள குழந்தை பொறந்தா கூட ரகுனுதான் வைப்பேன்.
ஒரே நேரத்தில எப்படி ரெண்டு வேல பண்ண முடியும் ஒன்னு வர முடியும் இல்ல தொலைய முடியும் இந்த வந்து தொலைனா எப்படி.//
யோவ் கேள்வி கேக்கணுமேன்னு கேக்கற மாறி இருக்கு..
கார்த்திக் ஜெஸ்ஸிய தேடி ஆலப்புழா போனாரே.///
நான் எதுக்குங்க அவ்ளோ தூரம் போகணும் என் வீட்டுக்கு அடுத்த வீதில என்னோட மொற பொண்ணு இருக்கா
மெட்ராஸ் வந்துச்சு. கூடவே என் வாழ்கைல வசந்தமும்.///
வசந்த காலத்துல போயிருப்பீங்க
Arun Prasath said...
ஒரே நேரத்தில எப்படி ரெண்டு வேல பண்ண முடியும் ஒன்னு வர முடியும் இல்ல தொலைய முடியும் இந்த வந்து தொலைனா எப்படி.//
யோவ் கேள்வி கேக்கணுமேன்னு கேக்கற மாறி இருக்கு.///
உமக்கு பத்தி தெர்லைன்னு சொல்லுயா. மத்த கேள்விக்கு பதில் அடுத்த பதிவிலா
நான் எதுக்குங்க அவ்ளோ தூரம் போகணும் என் வீட்டுக்கு அடுத்த வீதில என்னோட மொற பொண்ணு இருக்கா//
அப்டி ஒரு ஆசை வேற இருக்கா? அங்க பொய் அடி வாங்கிட்டு வரது எனக்கு தான தெரியும்
வசந்த காலத்துல போயிருப்பீங்க//
அது யாரு வசந்த்?
50
வந்த வேலை முடிஞ்சுது.
அடப்பாவி
Arun Prasath said...
அடப்பாவி///
ME அப்பாவி
அத நாங்க சொல்லணும்...
Arun Prasath said...
அத நாங்க சொல்லணும்..///
உங்கள மாறியா பஸ்சுக்குள் பல்லேலக்கா. பாலி தீவில் பம்சங்கள், யமகாவில் கொக்கமக்கா. இப்படி நா எதையுமே பண்ணல
நாங்க எல்லாம் செஞ்சத சொல்லிடுவோம்.... உங்கள மாறியா? ஊதற பூவுலயே தெரியுதே நீங்க அப்பாவின்னு
Arun Prasath said...
நாங்க எல்லாம் செஞ்சத சொல்லிடுவோம்.... உங்கள மாறியா? ஊதற பூவுலயே தெரியுதே நீங்க அப்பாவின்னு///
என்னோட அடுத்த பதிவில பாருங்க நான் பாவியா இல்ல அப்பாவியா அப்டின்னு
பாக்கறேன்... கண்டிப்பா வருவேன்...we will meet, will meet, meet
எனக்கேவா....
I ME THE 60
அதுக்கெல்லாம் வடை கிடையாது
Arun Prasath said...
அதுக்கெல்லாம் வடை கிடையாது///
சொந்த கடைல வட திங்க முடியலேன்னு வயிதெரிச்சல். சரி நான் வரேன்.
க்ரிஷ் said...
வைகை said...
அது காவாளிபயளுகளுக்கு மட்டும்!! நீங்க ஏன் பயப்படறீங்க?!!!
அப்ப அது உங்களுக்கு (வைகைக்கு) மட்டும் தான/////////////////
எனக்கு மொக்க கத்தி பின்னாடி வச்சிருக்கேன்!!
Arun Prasath said...
அப்ப அது உங்களுக்கு (வைகைக்கு) மட்டும் தான?//
தலைவர் கேக்கறாரு இல்ல, சொல்லுங்க வைகை...////////////////
சொல்லியாச்சு அருண்! கொஞ்சம் லேட்டா!!
லவ் சென்னை போகுதா.. சரி சரி...
//மெட்ராஸ் வந்துச்சு. கூடவே என் வாழ்கைல வசந்தமும்.//
ம்ம்ம்ம்..தொடர்ந்து கலக்குங்க நண்பா...
தொடரட்டும் உங்கள் பணி
சொல்லியாச்சு அருண்! கொஞ்சம் லேட்டா!!//
நானும், கொஞ்சம் லேட்டா
லவ் சென்னை போகுதா.. சரி சரி...//
ஹி ஹி எத்தன நாள் தான் கோயம்புத்தூர்லயே லவ் பண்ண...
ம்ம்ம்ம்..தொடர்ந்து கலக்குங்க நண்பா...
தொடரட்டும் உங்கள் பணி//
நன்றி நண்பா...
செமயாப் போயிட்டிருக்குங்க.. கலக்குங்க..
கலக்கலான பதிவு ம்ம்ம்ம் தொடருங்க..
செமயாப் போயிட்டிருக்குங்க.. கலக்குங்க..//
ரொம்ப நன்றி பாபு....
ரொம்ப நன்றி அரசன்.... கண்டிப்பா
74
75
சுவாரஷ்யமா எழுதறீங்க தல... செம..
வாங்க ரமேஷ்.. நன்றி
//சாமி சிலை பவனி வரும் போது எந்த தேர்ல வருதுன்னு யாராச்சும் பாப்பாங்களா?//
ஹா ஹா ஹா.. எப்படி எல்லாம் யோசிக்கறீங்க? சான்சே இல்ல... நம்மூர்ல எந்த காலேஜ் நீங்க? இல்ல... சும்மா கேட்டேன்... இவ்ளோ ட்ரைனிங் இருக்கேன்னு...ஹா ஹா ஹா
Post a Comment