"என்ன தனியா விட்டுட்டு போய்டாத"
"சே அதெல்லாம் இல்ல, எங்கயும் போக மாட்டேன். கொஞ்ச நேரம் கவலை படாம இரு"
"எனக்கு என்னமோ நீ கூடவே இருக்கனும் போல இருக்கு. இங்க கூடவே இருக்க சம்மதிப்பாங்களா?"
"இது என்ன வெளிநாடா? பிரசவம் போது கூடவே இருக்க?நமக்கு இது முதல் குழந்தை. நல்ல படி தான் நடக்கும் சரியா?"
"இல்ல எனக்கு பயமா இருக்குடா"
"அட லூசு பையா, பிரசவம் எனக்கு தான? நான் பயப்படனும், நீ சமாதான படுத்தனும். அது தான் எல்லா பக்கமும் நடக்கும். இங்க என்னடானா?"
"சிரிக்காத வீணா, எனக்கு எப்டி இருக்குனு எனக்கு தான் தெரியும்"
"உனக்கு எப்பவும் எப்டி இருக்கும்னு எனக்கு தெரியும், கவலை படாம இரு. நான் பக்கதுல இல்லன்னு தம் அடிக்க போன, கொன்னுடுவேன் உன்ன"
வீணா சொல்றது சரி தான். நான் ஏன் இப்டி பயப்படறேன்?அவளே சாதாரண மாத்தான் இருக்கா. டாக்டர் கூட ஒண்ணும் பிரச்சன இல்லனு சொல்றாரு, அப்டியும் மனசு கேக்கமாட்டேங்குது. நான் ஏன் இப்டி பயப்படறேன்.
எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்னு விவேக் சொல்லுவாரே? அதுக்கு சரியான உதாரணம் நான் தாங்க. என் பேரு ராகுல். கோயம்புத்தூர் தான் சொந்த ஊர். ஜாலி அப்டிங்கற வார்த்தையே எனக்கு தான் கண்டுபுடிச்ச மாறி ஜாலியா இருந்தவன் நான். படிச்சு முடிச்சிட்டு வேலை கெடைக்காம சுத்தீட்டு இருந்த காலம். 2 வருஷம் முன்னாடி, KFC எங்க ஊர்ல ஓபன் பண்ண டைம். என் நண்பன் ரகு அங்க கூட்டிட்டு போனான்.
"டேய் ரகு, கைய எடுடா, இருக்கறதே ஒரே லெக் பீஸ் தான், அது எனக்கு தான். காசு குடுத்து வாங்கினவன் தான் சாப்டனும்"
"தம்பி, காசு குடுத்தது நானு, அத ஞாபகம் வெச்சுக்க"
"நான் சொன்னது, கவுன்ட்டர்ல குடுத்து வாங்கினது"
"இப்போ என் கிட்ட சண்ட போடு. அங்க அந்த பொண்ணு கிட்ட ரெண்டு லெக் பீஸ் போட சொல்ல வேண்டியது தான, பொண்ண பாத்தா பேச தோணாதே?"
"சே பாவம் டா, எவ்ளோ பேருக்கு அந்த பொண்ணும் லெக் பீஸ் குடுக்கும், கோழிக்கு இருக்கறதே ரெண்டு கால் தான். நீதான் பெரிய விஞ்ஞானி ஆச்சே, 4 ,5 கால் இருக்க மாறி ஒரு கோழி கண்டுபுடி"
"பேசிகிட்டே பீஸ்ல கை வெக்காத, எடு"
"என்ன நண்பா, தனி ஒருவனுக்கு பீஸ் இல்லேனா ஜகத்தினை அழித்திடுவோம்னு சொல்லிருக்காங்க"
"டேய் பொது எடத்துக்கு வந்து இப்டியா கத்துவ? அங்க பாரு எல்லாரும் நம்மள பாத்து சிரிச்சிட்டு இருக்காங்க"
அப்போ தான் அவள பாத்தேன், பளீர் செகப்பு சுடிதார். வாய்ல கை வெச்சிக்கிட்டு, என்ன பாத்து அப்டி சிரிச்சிட்டு இருந்தா! நான் பாக்கறது தெரிஞ்சதும் சிரிப்ப அடக்க பாத்து, அது முடியாம, மொகம் எல்லாம் செவந்து போய், அந்த கணம் அவ முகம் காட்டுன உணர்சிகள், என்னால விவரிக்க முடில, ஆனா அப்டியே ஞாபகம் இருக்கு. யாரையும் அவ்ளோ நேரம் பாத்துட்டு இருக்கனும்னு தோணினது இல்ல. அவளையே பாத்துட்டு இருந்தத பாத்துட்டு லைட்டா மொறச்சிட்டு குனிஞ்சுகிட்டா. அப்டியும் அவ முகத்தில சிரிப்பு இருந்தது தெரிஞ்சது.
அவள பாத்துட்டு இருந்த கேப்ல இவன் எல்லா பீஸ்சையும் தின்னுட்டான்.
"அடப்பாவி எல்லாதையும் காலி பண்ணிட்ட "
"ஆமா, நீ அங்கயே பாத்துட்டு இருந்த, நான் என்ன பண்ண? அங்க என்ன படமா தெரியுது"
"இல்லைடா அவ என்ன பாத்து சிரிச்சிட்டு இருந்தா. அழகா இருந்தது, அதான் பாத்துட்டு இருந்தேன்"
"ஊரே சிரிச்சதே, உன் கூட வந்து எனக்கும் மானக்கேடு, சரி எந்த பொண்ணு?"
"அதான்டா அந்த செகப்பு சுடிதார்"
"எங்கடா யாரையும் காணோம்?"
இவன் கூட பேசிட்டு இருந்த டைம்ல போய்ட்டாங்க போலயே. ஹோட்டல் விட்டு வெளிய போய்ட்டு இருந்தா. பாத்துட்டேன். கதவு மூடும் போது என்ன பாத்து, கீழ குனிஞ்சு சிரிச்சா பாருங்க, அடா அடா, அந்த சிரிப்ப பாக்கறதுக்கே எத்தன தடவ வேணாலும் மானம் கெடலாம்.
"ரகு, அதோ வெளிய போறா பாரு, அவ தான்"
"என்னடா போயிட்டு இருக்கானு சொல்லிட்டு இருக்க? போய் பேசு"
"என்னன்னு பேச? முன்ன பின்ன தெரியாதே?"
"ரெண்டு லெக் பீஸ் இருக்கானு கேளு... யார்ரா இவன். தெரியாத பொண்ணு கிட்ட பேச கிளாஸ் எடுக்க சொல்வ போலயே. தெரியாத பொண்ணு தான் டா, கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்ச பொண்ணா ஆகும், சீக்கிரம் போடா"
போனேன். என்ன பேசனு தெரியாமலயே போனேன். போய் என்ன பண்ண? ஈவ் டீசிங்னு சொல்லிட்டானா? பாத்ததும் காதல்னு சினிமா தனமா எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா அவ சிரிச்சது, வெளிய போகும் போது குனிஞ்சு சிரிச்சிட்டு, ஒரு பார்வை பாத்தது, அதுவே போதும், ஒரு ஈர்ப்பு அவ மேல. என்ன தான் நடக்குது பாக்கலாமேனு போனேன். ஆனா, வெளிய போனதும் தெரிஞ்சது, ஒரு 20 அடி கேப்ல ஒரு வண்டில போய்ட்டு இருந்தா. அவ கூட வந்தவங்க யாருமே காணோம். கரெக்ட்டா ரகு வெளிய வந்தான்.
"என்ன ஆச்சுடா?"
"அதோ அந்த வண்டி தான். போய்டா வெளிய வரும் போதே"
"அந்த ஊதா பூ கலர் வண்டியா? "Suzuki Access" தான, நம்பர் பாத்தியா"
"பாத்தேன், அத வெச்சு என்ன பண்ண? RTO ஆபீஸ் போய் கேக்கலாம்னு சொல்றியோ?"
"சினிமா பாத்து ரொம்ப கெட்டு போய்டடா நீ, அங்க யாரு உன் சொந்தகாரனா உக்காந்துட்டு இருக்கான்? நீ போய் நம்பர் சொன்னதும் அட்ரெஸ் சொல்ல? நீ நம்பர் சொல்லு நான் ஒரு ஐடியா சொல்றேன்"
"TN37 BL 1415"
அவன் சொன்னா ஐடியா என்னன்னா.... அப்பறம் சொல்றேன்......
69 comments:
i am first
ஜாலியா ஆரம்பிச்சிருக்கீங்க... தொடருங்க. நல்லாருக்கு... வாழ்த்துக்கள்
நன்றி நன்றி..... அப்டியே வோட் போட்டுட்டு போங்க....
i am first//
உங்களுக்கு தான் வடை.... என்ன ஸ்பீட்....
வடை போச்சே ., அப்புறமா வந்து படிக்கிறேன் ..!!
வடை போச்சே ., அப்புறமா வந்து படிக்கிறேன் ..!!//
ரைட் ரைட்
நல்ல துவக்கம்.............போகப் போகப் படிக்கிறேன்
நல்ல துவக்கம்.............போகப் போகப் படிக்கிறேன்///
நன்றி தல...கண்டிப்பா படிங்க...
நல்ல தொடக்கம் நண்பா..அருமையா இருக்கு...
@வெறும்பய
நன்றி தல... முழுசும் படிச்சிட்டு சொல்லுங்க.... சீக்கரம் அப்டேட் பண்ண முயற்சிக்கிறேன்
நல்ல ஆரம்பம்...
இப்படி எத்தனை தொடர் எழுதப்போறீங்க...
இவ்ளோ பெரிய கவிதையா ? சூப்பரு..
அதுவும்.... தொடருமா ?
நல்லாப் போகுது...அப்பிடியே கொண்டு போய்யா...!
நல்ல ஆரம்பம்...
இப்படி எத்தனை தொடர் எழுதப்போறீங்க..//
வாழ்கையே தொடர் தானே (!).... நெறைய இருக்கு.... பாப்போம் எவ்ளோ வருதுன்னு
இவ்ளோ பெரிய கவிதையா ? சூப்பரு..
அதுவும்.... தொடருமா ?//
கவிதை? உங்க ரசனை சூப்பர்... கண்டிப்பா தொடரும்..
நல்லாப் போகுது...அப்பிடியே கொண்டு போய்யா...!//
எங்க கொண்டு போக? அமெரிக்கா?
நல்ல எழுத்து நடை அருண். அப்படியே தொடர்ந்து இதே நடையில் எழுதவும்.
//Arun Prasath said...
நல்லாப் போகுது...அப்பிடியே கொண்டு போய்யா...!//
எங்க கொண்டு போக? அமெரிக்கா?//
அமெரிக்கா இல்ல, அந்த ஆசுபத்திரிக்கு!
நல்ல எழுத்து நடை அருண். அப்படியே தொடர்ந்து இதே நடையில் எழுதவும்.//
நடந்திருவோம், சீ எழுதிடுவோம்
அமெரிக்கா இல்ல, அந்த ஆசுபத்திரிக்கு!//
ஏன் இப்டி?
இந்த தம்பிக்கு சஸ்பென்ஸ் வைக்கிறதே பொழப்பா போச்சு!! ஏம்பா அந்த முழுகதைய எனக்கு மட்டும் மெயில் பண்ண கூடாதா?!!!
இந்த தம்பிக்கு சஸ்பென்ஸ் வைக்கிறதே பொழப்பா போச்சு!! ஏம்பா அந்த முழுகதைய எனக்கு மட்டும் மெயில் பண்ண கூடாதா?!!!//
அது தெரிஞ்சா நான் பதிவுலயே போட்டுட மாட்டேனா.... பொறுமை எருமையை விட பெரியது...
அவள பாத்துட்டு இருந்த கேப்ல இவன் எல்லா பீஸ்சையும் தின்னுட்டான்///
இவன் பின்ன எண்ட தளபதி. (read in mammooty style)
Arun Prasath said...
இந்த தம்பிக்கு சஸ்பென்ஸ் வைக்கிறதே பொழப்பா போச்சு!! ஏம்பா அந்த முழுகதைய எனக்கு மட்டும் மெயில் பண்ண கூடாதா?!!!//
அது தெரிஞ்சா நான் பதிவுலயே போட்டுட மாட்டேனா.... பொறுமை எருமையை விட பெரியது..///
அதானே என்கிட்ட ஆலோசனை பண்ணிட்டுதான் பதிவே போடுவார்.
இவன் பின்ன எண்ட தளபதி. (read in mammooty style)//
ஹா ஹா ஹா...... பங்காளி கலக்கிடீங்க
ஆனா உங்களுக்கு இந்த லவ் நல்லா வருது.
அதானே என்கிட்ட ஆலோசனை பண்ணிட்டுதான் பதிவே போடுவார்.//
பங்காளி என்ன சொனாலும் நான் கேப்பேன்.. ( ஒன்னும் பெருசா கேடுட மாட்டீங்களே).
ஆனா உங்களுக்கு இந்த லவ் நல்லா வருது//
அப்போ ரொமாண்டிக் ஹீரோ ஆகிட வேண்டியது தான்
Arun Prasath said...
இவன் பின்ன எண்ட தளபதி. (read in mammooty style)//
ஹா ஹா ஹா...... பங்காளி கலக்கிடீங்க///
யாரு நானா? நீர்தானையா. நானும் என்னோட காதல் அனுபவங்கள எழுதலாம்னு நெனைக்கிறேன்
Arun Prasath said...
அதானே என்கிட்ட ஆலோசனை பண்ணிட்டுதான் பதிவே போடுவார்.//
பங்காளி என்ன சொனாலும் நான் கேப்பேன்.. ( ஒன்னும் பெருசா கேடுட மாட்டீங்களே).
ஆனா உங்களுக்கு இந்த லவ் நல்லா வருது//
அப்போ ரொமாண்டிக் ஹீரோ ஆகிட வேண்டியது தான்///
இவன்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்............. இந்த சிறுக்கி மனதை சிறைபிடித்தானோ. இவன்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.......
யாரு நானா? நீர்தானையா. நானும் என்னோட காதல் அனுபவங்கள எழுதலாம்னு நெனைக்கிறேன்//
அப்டியா என்ன? எழுதுங்க எழுதுங்க... ஆனா இது என் அனுபவம் இல்ல, கற்பனை தான். அதான் ஹீரோ பேறு மாத்திட்டேன்ல அப்போ கூட ஒதுக்க மாட்டீங்களா
இவன்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்............. இந்த சிறுக்கி மனதை சிறைபிடித்தானோ. இவன்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.......///
நான் இல்லீங்கோ, கார்த்திக்குமார் தான்...
Arun Prasath said...
யாரு நானா? நீர்தானையா. நானும் என்னோட காதல் அனுபவங்கள எழுதலாம்னு நெனைக்கிறேன்//
அப்டியா என்ன? எழுதுங்க எழுதுங்க... ஆனா இது என் அனுபவம் இல்ல, கற்பனை தான். அதான் ஹீரோ பேறு மாத்திட்டேன்ல அப்போ கூட ஒதுக்க மாட்டீங்களா///
என்னப்பா இப்படி சொல்லிட்டே? குடிச்சிபோட்ட பாட்டல வாங்கி எடைக்கு போட்டானாம். எடைக்கு போட்ட காசை வாங்கி குடிச்சு போட்டானாம்.
என்னப்பா இப்படி சொல்லிட்டே? குடிச்சிபோட்ட பாட்டல வாங்கி எடைக்கு போட்டானாம். எடைக்கு போட்ட காசை வாங்கி குடிச்சு போட்டானாம்.////
இந்த தத்துவம் இங்க எதுக்கு?
என்னப்பா இப்படி சொல்லிட்டே? குடிச்சிபோட்ட பாட்டல வாங்கி எடைக்கு போட்டானாம். எடைக்கு போட்ட காசை வாங்கி குடிச்சு போட்டானாம்.////
இந்த தத்துவம் இங்க எதுக்கு///
இல்ல வேற கடைல நீங்க சின்ன பிள்ளைன்னு போற்றுகீங்க நான் எதாவது கேட்டேனா.
இல்ல வேற கடைல நீங்க சின்ன பிள்ளைன்னு போற்றுகீங்க நான் எதாவது கேட்டேனா.//
நாம எல்லாம் சின்ன பசங்க தான !
Arun Prasath said...
இல்ல வேற கடைல நீங்க சின்ன பிள்ளைன்னு போற்றுகீங்க நான் எதாவது கேட்டேனா.//
நாம எல்லாம் சின்ன பசங்க தான ///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................ சரி சரி விடுங்க உங்களையும் நம்ம வட்டத்துல சேர்த்தாச்சு.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்................ சரி சரி விடுங்க உங்களையும் நம்ம வட்டத்துல சேர்த்தாச்சு.///
எத்தன ஐஸ் வெக்க வேண்டியதா இருக்கு...
அந்த ஐடியா என்ன? தொடருங்கள் .வாழ்த்துக்கள்
அந்த ஐடியா என்ன? தொடருங்கள் .வாழ்த்துக்கள்//
சீக்கரமே சொல்றேன்...நன்றி நண்பரே
சூப்பர்'டே மக்கா......
சூப்பர்'டே மக்கா......//
மிக்க நன்றி நண்பா.... முதல் வருகைன்னு நெனைக்கறேன்.. அடிக்கடி வாங்க...
முதல் பாகமே அருமை அருண்.. விதவிதமான எக்ஸ்பீரியன்ஸ் வைச்சிருக்கீங்க போலவே.. :-)
தொடருங்கள்.. அருமையான கதை..
முதல் பாகமே அருமை அருண்.. விதவிதமான எக்ஸ்பீரியன்ஸ் வைச்சிருக்கீங்க போலவே.. :-)
தொடருங்கள்.. அருமையான கதை..//
தலைவா இது அனுபவம் இல்ல... ஐயோ நம்பவே மாட்டாங்களோ...
புது தொடர் நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
புது தொடர் நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!//
நன்றி சார்.... படிச்சிட்டு சொல்லுங்க எப்படி இருக்கு ன்னு
நல்ல ஆரம்பம்
வாழ்த்துக்கள் நண்பா,
அருமையான தொடக்கம் தொடருங்கள்...
//அவன் சொன்னா ஐடியா என்னன்னா.... அப்பறம் சொல்றேன்......//
எதிர்பார்ப்புடன்.........
நல்ல ஆரம்பம் தொடருங்கள்
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
எழுத்து நடை அருமை
ஐ வடை
வந்த வேலை முடிஞ்சுது.
வட போச்சே,,
மூனு டெம்ப்லேட் பின்னூட்டம் போட்டு பங்காளி வட வாங்கிட்டு போய்ருக்காரு..
ஓகே..சாரி பார் த லேட்..
நல்ல ஆரம்பம்...கலக்குங்க..
வந்த வேலை முடிஞ்சுது. //
காத்திருந்து கவ்விய பங்காளி வாழ்க
நல்ல ஆரம்பம்//
நன்றி அன்பரசன், அடிக்கடி வாங்க
எதிர்பார்ப்புடன்.........//
சீக்கரம் சொல்லிடறேன்
மூனு டெம்ப்லேட் பின்னூட்டம் போட்டு பங்காளி வட வாங்கிட்டு போய்ருக்காரு..
ஓகே..சாரி பார் த லேட்..
நல்ல ஆரம்பம்...கலக்குங்க..//
நன்றி ஹரிஸ்
வடைக்கு நெறைய பேர் போட்டி போலயே... எப்டியோ செல்வாக்கு வடை கெடைக்காம இருந்தா சரி....
/ நான் பக்கதுல இல்லன்னு தம் அடிக்க போன, கொன்னுடுவேன் உன்ன"//
செம செம .! excellent பீலிங் ..!!
என்னபா இவ்ளோ நேரம் கழிச்சு வந்திருக்க?... ஹ்ம்ம்.... தேங்க்ஸ் பா
//சே பாவம் டா, எவ்ளோ பேருக்கு அந்த பொண்ணும் லெக் பீஸ் குடுக்கும், கோழிக்கு இருக்கறதே ரெண்டு கால் தான். நீதான் பெரிய விஞ்ஞானி ஆச்சே, 4 ,5 கால் இருக்க மாறி ஒரு கோழி கண்டுபுடி"///
அட அட .!! எண்ணமா ஆராய்ச்சி பண்ணுறாங்க ..!!
அட அட .!! எண்ணமா ஆராய்ச்சி பண்ணுறாங்க ..!!//
வடை தான் வாங்க முடில... கால் வாங்கலாம்ன்னு தான்
//அடா அடா, அந்த சிரிப்ப பாக்கறதுக்கே எத்தன தடவ வேணாலும் மானம் கெடலாம். ///
அட பாவமே ..!!
//அவன் சொன்னா ஐடியா என்னன்னா.... அப்பறம் சொல்றேன்...//
சொல்லுங்க சொல்லுங்க ..! உண்மைலேயே அருமையான நடை ..!! தொடருங்க ..!!
சொல்லுங்க சொல்லுங்க ..! உண்மைலேயே அருமையான நடை ..!! தொடருங்க ..!!//
இன்னைக்கே சொல்லிடறேன்
@பிரசாத்
ஹாய்டா!!! உனக்கு கதை நல்லா வருது. உன் சொந்த கதையாகூட இருக்கலாம். ஆன் நடை நல்லா இருக்கு. கதைல ஒன்றி படிக்க முடியுது.. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு தம்பி.... :)))
ரொம்ப நன்றி அண்ணே.. நெஜம்மா இது சொந்த கதை இல்ல.... நம்பவே மாட்டீங்களே.... வாழ்த்துக்கு நன்றி அண்ணே
அட கோயம்புத்தூரா நீங்க? நம்ம ஊரு... நல்லா எழுதறீங்க... கலக்குங்க...
அட கோயம்புத்தூரா நீங்க? நம்ம ஊரு... நல்லா எழுதறீங்க... கலக்குங்க...//
ஆமாங்க... பீளமேடு... நீங்க எங்க?
Heyyy... Youuu.... :)
ஒன்னுமில்ல. கதை நல்லா இருக்கு :) Continue..
Post a Comment