என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Tuesday, December 21, 2010

அது ஒரு காதல் காலம் பகுதி 5

நான் அவளயே வெச்ச கண் வாங்காம பாத்துட்டு இருந்தேன். அவளும் என்ன பாத்து தான் நடந்து வந்துட்டு இருந்தா. என்ன நடக்க போகுதோ ஆண்டவா. ஒரு நிமிஷம், நான் அந்த நொடி வரைக்கும் நாத்திகன், ஏன் ஆண்டவானு சொன்னேன்? பிரச்சன வந்தா தான் அப்டி சொல்வோமா? சரி சரி இத பத்தி அப்பறம் பேசலாம், இதோ பக்கத்துல வந்துட்டா. உங்க இதயம் துடிச்சு உங்க காதுக்கு கேட்ருக்கா? எனக்கு அப்போ கேட்டுச்சு. அட பயம்ங்க.

"என்ன சார், உங்க பேர் கூட எனக்கு தெரியாது. ரெண்டு மூணு நாளா உங்கள நீங்க கண்ணாடில பாத்தத விட என்ன தான் அதிகமா பாத்திருப்பீங்க போல? நேரடியா கேக்கறேன். எனக்கு சுத்தி வளைக்க தெரியாது. are you in love with me?"

சத்யமா அத நான் எதிர் பாக்கவே இல்ல. சம்பிரதயமா என்ன வேணும் உங்களுக்கு? ஏன் என் பின்னாடி வரீங்க? இந்த மாறி கேள்விய தான் எதிர் பாத்து அதுக்கு பதில் சொல்ல தயார் ஆய்ட்டு இருந்தேன். அவ மேல இருந்த ஈர்ப்பு எல்லாம் ஒரு சின்ன ஆசைய மாறின நேரம் அதுதான். நான் என்ன பதில் சொல்ல போறேன்னு வித்யா என்னையே பாத்துட்டு இருந்தா.

"லவ்வா? அதெல்லாம் பெரிய வார்த்தைங்க. உங்க பேர் கூட எனக்கு தெரியாது. உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் நான் உங்க பின்னாடி வரது. லவ்ன்னு நெனச்சு எல்லாம் வரலீங்க. ஏதோ ஒரு ஈர்ப்பு.அவ்ளோதான். உங்க கூட பேசனும், பழகனும்னு தோணுச்சு அவ்ளோ தான்"
"அப்டியா............." சின்ன தடுமாற்றம் அவ கண்ல. "யோசிச்சு சொல்றேன்"
சொல்லிட்டு கெளம்பிட்டா.

எனக்கு ஒன்னும் புரில, அவ்ளோ தானா, அவ எபிசொட் என் வாழ்க்கைல முடிஞ்சதா? வித்யா வா பாத்தா அவ சிரிச்சிட்டு இருக்கா. ஒன்னுமே புரில.

"என்ன வித்யா இப்டி சொல்லிட்டு போய்டா. நான் பேசினது தப்பா? இனி பேச மாட்டாளா?"
"மக்கு, மக்கு. நீ சொன்னதும் அவ முகத்த பாத்தியா? அவ அத எதிர் பாக்கல. நீ லவ் பண்றன்னு சொல்வனு தான் எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா. அதான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு எஸ் ஆய்டா. அவ சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கு அர்த்தம் ஓகே "
அப்போ தான் எனக்கு புரிஞ்சது. கூடவே வழிஞ்சது.

ஆய்த எழுத்துல ஈஷா தியோல் சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும் வித்யாசம் இருக்கு. ஈஷா சொன்னது ஓகே. த்ரிஷா சொன்னது இது வேலைக்கு ஆகாது வேற ஆள பாரு. அட சாமி பொண்ணுங்க அகராதிய புரிஞ்சுகறது கஷ்டம்.

அன்னிக்கு நான் பறக்காத குறை தான்.இமய மலை சைடு எல்லாம் போனேன். அன்னில இருந்து எப்படா அடுத்த நாள் வரும்ன்னு  காத்திருக்க ஆரம்பிச்சேன். காலைல சீக்கிரம் எந்திரிக்க முடியாத ஆளா நீங்க? லவ் பண்ணுங்க, 5 மணிக்கு எந்திரிச்சிடலாம். கூடவே டெய்லி குளிச்சு, நல்லா புள்ள இமேஜ் வர வெக்க ட்ரை பண்ணுவீங்க. இதெல்லாம் நானும் பண்ணேன்.அனுபவம் தான். அடுத்த நாள் காலைல அதே பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன். வந்தா.
கொஞ்சம் சிரிச்ச முகமாத்தான் இருந்தா. அப்பா தப்பிச்சேன்.

"சொல்லுங்க. என்ன பேசனும்"
"என்ன பேசனுமா? இதுக்கெல்லாம் நோட்ஸ் எடுத்துட்டா வருவாங்க? மொதல்ல சாரி. நான் பின்னாடி வந்தது உங்களுக்கு எரிச்சலா இருந்தா. அப்பறம் ஒரு வேண்டுகோள். நீங்க வாங்கனு கூப்ட எனக்கு கஷ்டமா இருக்கு"
"எனக்கும் தான். நீ வா னே கூப்டுங்க. எரிச்சல் எல்லாம் இல்ல, கொஞ்சம் பயமா இருந்தது. அப்பறம் உங்களால எனக்கு எந்த பிரச்சனயும் வராதுனு தெரிஞ்ச அப்றம் தான் இப்போ உங்க கூட பேசிட்டு இருக்கேன் "
"தேங்க்ஸ் .நானும் மரியாதை எதிர் பாக்கல.நீ வா னே கூப்டு. அப்பறம் என் பேர் ராகுல்"
"என் பேர் வீணா"

அவ்ளோ தான் அப்போ பேசினோம். லேட் ஆச்சுனு போய்டா. ரூம்க்கு போய் சாயங்காலம் எப்போ வரும்ன்னு வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.சாயங்காலம் அவ ஆபீஸ் போனேன். அவ ஆபீஸ்ல இருந்து, அசோக் பில்லர் ஹாட் சிப்ஸ் வரைக்கும் பேசிட்டே நடந்து வந்தோம். தூரம் தெரில. அங்க ஒரு காபி. அப்றம் அங்க இருந்து கெளம்பி போய்டா . காலைல ஒரு அரை மணி நேரம். சாயங்காலம் ஒரு 2 மணி நேரம். அவ்ளோ தான். 

அப்போ தான் சொன்னா, நான் அவ பின்னாடி வந்தது அவளுக்கு நல்லா தெரியும்ன்னும், மெட்ராஸ் பஸ்ல ஏறினத தான் அவ எதிர்பாகலன்னும்  சொன்னா. ஆனா அந்த நொடி அவ மனசுல நான் எங்க இருக்கேன்ன்னு கண்டுபுடிக்க முடில.

காலைல எப்போ வரும்ன்னு சாயங்காலமும், சாயங்காலம் எப்போ வரும்ன்னு  காலைலயும் காத்திருக்க ஆரம்பிச்சேன். காத்திருப்பு அப்டினா என்னன்னு உண்மையா தெரிஞ்சது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மாசம் அது தான். சில நேரம் வண்டி இல்லாம நடந்து வருவா. ஒரு கைல குடை. இன்னொரு பக்கம் நான். அவ கைய புடிச்சிட்டு நடக்க முடியாதான்னு அப்போ எல்லாம் ஏங்கிருக்கேன்.

நெறையா பேசினோம். என் கூட இருக்கோமே அப்டிங்கறதுக்காக அவ பேசிட்டே இருந்தா. பேசும் போது எல்லாம் கூடவே இருப்பாளே அப்டிங்கறதுக்காக அவ பேசறத கேக்க ஆரம்பிச்சேன். சுருக்கமா சொல்ல போனா அவ கூடவே இருக்கனும்ன்னு தோன ஆரம்பிச்சது.

நெனச்சது எல்லாம் நடந்திருமா?

84 comments:

karthikkumar said...

வடை எனக்குதான். கம்மா கரையில சும்மா இருந்தா நீ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ.

Arun Prasath said...

ரைட் ரைட்

எஸ்.கே said...

www.templates.com/

நாகராஜசோழன் MA said...

அருண் கொன்னுட்டே!!

எஸ்.கே said...

மேலே போட்டது என்ன தெரியுமா?
டெம்ப்ளேட் கமெண்ட்!

நாகராஜசோழன் MA said...

// எஸ்.கே said...

மேலே போட்டது என்ன தெரியுமா?
டெம்ப்ளேட் கமெண்ட்!//

எஸ் கே நீங்களுமா??

மங்குனி அமைச்சர் said...

ஒரு மார்கமாத்தான் இருக்குப்பா

Arun Prasath said...

அருண் கொன்னுட்டே!!//

ஐயோ நான் யாரையும் கொல்லல மை லார்ட்

Arun Prasath said...

மேலே போட்டது என்ன தெரியுமா?
டெம்ப்ளேட் கமெண்ட்!//

சத்யமா யாராலும் யோசிக்க முடியாது சார்?

Arun Prasath said...

ஒரு மார்கமாத்தான் இருக்குப்பா//

எந்த மார்க்கம்.... சென்னை மார்க்கமா?

எஸ்.கே said...

//ஆய்த எழுத்துல ஈஷா தியோல் சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும் வித்யாசம் இருக்கு. ஈஷா சொன்னது ஓகே. த்ரிஷா சொன்னது இது வேலைக்கு ஆகாது வேற ஆள பாரு. //

எப்டி இதெல்லாம்! நீங்கள் ஒரு காதல் அகராதி!

Arun Prasath said...

எப்டி இதெல்லாம்! நீங்கள் ஒரு காதல் அகராதி!//

நானா? நன்றி நன்றி....

எஸ்.கே said...

வீணா பின்னாடி போய் வீணாப் போய்ட்டாரோ ராகுல்?

Arun Prasath said...

வீணா பின்னாடி போய் வீணாப் போய்ட்டாரோ ராகுல்?//

வீனா எல்லாம் போல சார்
.... நம்ம ஸ்டோரி எப்பவுமே ஹாப்பி எண்டிங் தான்... :) நோ tragedy

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//www.templates.com///

பாரேன்... இந்த புள்ள எவ்வளவு வேகமா கும்மி அடிக்க கத்துகிச்சி... :))

Arun Prasath said...

பாரேன்... இந்த புள்ள எவ்வளவு வேகமா கும்மி அடிக்க கத்துகிச்சி... :))//

நல்லா இருந்த பயபுள்ளைய கெடுத்துட்டு பேச்ச பாரு

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
அருண் கொன்னுட்டே!///

யாரை ??

எஸ்.கே said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//www.templates.com///

பாரேன்... இந்த புள்ள எவ்வளவு வேகமா கும்மி அடிக்க கத்துகிச்சி... :))///

எல்லாம் தங்களிடம் குடித்த கும்மிப்பால் மன்னா!

Arun Prasath said...

யாரை ??//

அதன் நான் இல்லன்னு சொல்லிட்டேன்ல.... அப்றம் என்ன நாட்டாமை பண்ண வந்திருக்க

karthikkumar said...

எஸ்.கே said...
மேலே போட்டது என்ன தெரியுமா?
டெம்ப்ளேட் கமெண்ட்///

என்ன ஒரு புத்திசாலிதனம்... :)

Arun Prasath said...

எல்லாம் தங்களிடம் குடித்த கும்மிப்பால் மன்னா!//

யாரு மன்னா? கிழிஞ்சது.... வெளங்கிடும்

Arun Prasath said...

மேலே போட்டது என்ன தெரியுமா?
டெம்ப்ளேட் கமெண்ட்///

என்ன ஒரு புத்திசாலிதனம்... :)//

கண்ணு வெக்காத பங்காளி

karthikkumar said...

Arun Prasath said...
யாரை ??//

அதன் நான் இல்லன்னு சொல்லிட்டேன்ல.... அப்றம் என்ன நாட்டாமை பண்ண வந்திருக்க///

ஏன்னா எங்க வூர்ல நாங்கதான் நாட்டாமை குடும்பம் அதான். நாட்டாம பாதம் பட்டா இங்க வெள்ளாம வெளையுமடி.

Arun Prasath said...

அதன் நான் இல்லன்னு சொல்லிட்டேன்ல.... அப்றம் என்ன நாட்டாமை பண்ண வந்திருக்க///

ஏன்னா எங்க வூர்ல நாங்கதான் நாட்டாமை குடும்பம் அதான். நாட்டாம பாதம் பட்டா இங்க வெள்ளாம வெளையுமடி.//


கால் வை.... ரத்த ஆறு ஓடும் பாரு

ம.தி.சுதா said...

////அன்னிக்கு நான் பறக்காத குறை தான்.இமய மலை சைடு எல்லாம் போனேன். /////

ஹ..ஹ..ஹ..

அது தான் பைக்கில் நிக்கிறிங்களோ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

Arun Prasath said...

ஹ..ஹ..ஹ..

அது தான் பைக்கில் நிக்கிறிங்களோ...//

அவ்ளோ தூரம் போக முடியாது நண்பா?!

karthikkumar said...

Arun Prasath said...
அதன் நான் இல்லன்னு சொல்லிட்டேன்ல.... அப்றம் என்ன நாட்டாமை பண்ண வந்திருக்க///

ஏன்னா எங்க வூர்ல நாங்கதான் நாட்டாமை குடும்பம் அதான். நாட்டாம பாதம் பட்டா இங்க வெள்ளாம வெளையுமடி.//


கால் வை.... ரத்த ஆறு ஓடும் பாரு///

ரத்த சரித்திரம் படம் பாத்துட்டு இருக்கியா மச்சி?

சௌந்தர் said...

ஒரு ஈர்ப்பு.அவ்ளோதான். உங்க கூட பேசனும், பழகனும்னு தோணுச்சு அவ்ளோ தான்///


நம்ப முடியலையே ....அருண்

Arun Prasath said...

கால் வை.... ரத்த ஆறு ஓடும் பாரு///

ரத்த சரித்திரம் படம் பாத்துட்டு இருக்கியா மச்சி?//

இன்னும் பாக்கல... நான் உன் ரத்தத சொன்னேன் தம்பி

Arun Prasath said...

ஒரு ஈர்ப்பு.அவ்ளோதான். உங்க கூட பேசனும், பழகனும்னு தோணுச்சு அவ்ளோ தான்///


நம்ப முடியலையே ....அருண்//

இதுல என்ன நம்பமுடியாம போச்சு???

வெறும்பய said...

www.allblogtools.com

சௌந்தர் said...

நெனச்சது எல்லாம் நடந்திருமா?///

.........நடக்கும் என்பார் நடக்காது...நடக்காது என்பார் நடந்துவிடும்

karthikkumar said...

வெறும்பய said...
www.allblogtools.com///

ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கீங்களா

Arun Prasath said...

நெனச்சது எல்லாம் நடந்திருமா?///

.........நடக்கும் என்பார் நடக்காது...நடக்காது என்பார் நடந்துவிடும்//

கரெக்ட்... அதே தான்

Arun Prasath said...

வெறும்பய said...
www.allblogtools.com///

ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கீங்களா//

ஆமா!! எதுக்கு இந்த லிங்க்?

வெறும்பய said...

karthikkumar said...

வெறும்பய said...
www.allblogtools.com///

ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கீங்களா

//

இல்ல மக்கா மெடிக்கல் ஷாப்..

Arun Prasath said...

ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கீங்களா

//

இல்ல மக்கா மெடிக்கல் ஷாப்..//


எதுக்கு மெடிக்கல் ஷாப் லிங்க் இங்க??? புரிஞ்சிருச்சு,...............

வெறும்பய said...

Arun Prasath said...

வெறும்பய said...
www.allblogtools.com///

ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கீங்களா//

ஆமா!! எதுக்கு இந்த லிங்க்?

//

அங்கே நிறைய template கிடைக்கும்..

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@எஸ்.கே

//www.templates.com///

பாரேன்... இந்த புள்ள எவ்வளவு வேகமா கும்மி அடிக்க கத்துகிச்சி... :)///

உங்களால் தான் அந்த புள்ள கெட்டு போச்சி

Arun Prasath said...

உங்களால் தான் அந்த புள்ள கெட்டு போச்சி//

யப்பா சரியா சொல்லு..

சௌந்தர் said...

Arun Prasath said...
உங்களால் தான் அந்த புள்ள கெட்டு போச்சி//

யப்பா சரியா சொல்லு///

இதுலே உள்குத்து இருக்கு முடிந்தால் கண்டுபிடிங்க

Arun Prasath said...

யப்பா சரியா சொல்லு///

இதுலே உள்குத்து இருக்கு முடிந்தால் கண்டுபிடிங்க//

கண்டுபுடிச்சாலும் சொல்ல மாட்டேன்... உள் குத்த சொல்லி நான் குத்து வாங்க வேணாம்பா

சௌந்தர் said...

ஜெயந்த நண்பா online ஆ இல்லை offline எது சொல்லு...

Arun Prasath said...

ஜெயந்த நண்பா online ஆ இல்லை offline எது சொல்லு...//

அது ஜோதி கிட்ட தான் கேக்கணும்

பிரியமுடன் ரமேஷ் said...
This comment has been removed by the author.
பிரியமுடன் ரமேஷ் said...

//ஆய்த எழுத்துல ஈஷா தியோல் சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும் வித்யாசம் இருக்கு. ஈஷா சொன்னது ஓகே. த்ரிஷா சொன்னது இது வேலைக்கு ஆகாது வேற ஆள பாரு. அட சாமி பொண்ணுங்க அகராதிய புரிஞ்சுகறது கஷ்டம்.//

உண்மைதான்.. நல்லா எழுதிருக்கீங்க..

வைகை said...

present sir

Arun Prasath said...

உண்மைதான்.. நல்லா எழுதிருக்கீங்க..//

நன்றி நன்றி..

Arun Prasath said...

present sir//

உங்களுக்கு ஆப்சென்ட்..... லேட்

வைகை said...

காதல பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது இருங்க ஜெயந்துக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்

வைகை said...

வடை

வைகை said...

ஆணி அதிகம்

வைகை said...

கடைல வேற ஆள் இல்ல

Arun Prasath said...

காதல பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது இருங்க ஜெயந்துக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்//

என்கிட்டயே கேளுங்க,,, ஆனா சொல்ல மாட்டேன்

Arun Prasath said...

கடைல வேற ஆள் இல்ல//

இருக்கேன் பா.. ஆனா இப்போ இல்ல

இம்சைஅரசன் பாபு.. said...

//

உங்க கூட பேசனும், பழகனும்னு தோணுச்சு அவ்ளோ தான்"
"அப்டியா............." //

என்ன ......பழைய படியும் லிவிங் டூகதேர் .....

இம்சைஅரசன் பாபு.. said...

//நெனச்சது எல்லாம் நடந்திருமா?//

ஒரு காலும் நடக்காது மக்கா ....(எல்லாம் வைத்து எரிச்சல் தான் )

Arun Prasath said...

என்ன ......பழைய படியும் லிவிங் டூகதேர் .....//

அண்ணே உங்களுக்கு மட்டும் எப்டி இப்டி தோணுது

Arun Prasath said...

ஒரு காலும் நடக்காது மக்கா ....(எல்லாம் வைத்து எரிச்சல் தான் )//

ஹி ஹி

கோமாளி செல்வா said...

// உங்க இதயம் துடிச்சு உங்க காதுக்கு கேட்ருக்கா? எனக்கு அப்போ கேட்டுச்சு. அட பயம்ங்க.
//

வாவ் , செம செம ..!!

கோமாளி செல்வா said...

//ஆய்த எழுத்துல ஈஷா தியோல் சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும்//

யோசிச்சிட்டு சொல்றேன் அப்படின்னு சொல்லுவாங்க ... பட் அந்த சீன் செமையா இருக்கும் ..!!

Arun Prasath said...

யோசிச்சிட்டு சொல்றேன் அப்படின்னு சொல்லுவாங்க ... பட் அந்த சீன் செமையா இருக்கும் ..!!//

அத சொல்லும் போது சிரிப்பால... அந்த expression தான் முக்கியம்....

கோமாளி செல்வா said...

//காலைல எப்போ வரும்ன்னு சாயங்காலமும், சாயங்காலம் எப்போ வரும்ன்னு காலைலயும் காத்திருக்க ஆரம்பிச்சேன்.//

அட அட .. உண்மைலேயே செம பீலிங் ..! என்னாலையும் உணர முடியுது .!!

Arun Prasath said...

அட அட .. உண்மைலேயே செம பீலிங் ..! என்னாலையும் உணர முடியுது .!!//

தம்பி.... உனக்கும் புரியுதா???? அப்டினா??

கோமாளி செல்வா said...

//அத சொல்லும் போது சிரிப்பால... அந்த expression தான் முக்கியம்....
//

உண்மைதான் , வாய்ப்பே இல்ல அந்த எச்ப்ரசன். ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும் ..!! அதுதான் மணி கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும் .!!

அருண் பிரசாத் said...

அடேய் தம்பி... உன் கூட சேர்ந்து நானும் வீனாவை சைட் அடிச்சிட்டேன் ... தப்பா எடுத்துக்காத

Arun Prasath said...

அடேய் தம்பி... உன் கூட சேர்ந்து நானும் வீனாவை சைட் அடிச்சிட்டேன் ... தப்பா எடுத்துக்காத//

அடப்பாவமே... மின்னலே விவேக்கா நீங்க?

அருண் பிரசாத் said...

ங்கொய்யால... இப்படி ஒரு லவ் ஜோடிய கண்ணு முன்னாடி காட்டினா யாருக்குதான் ஜொள்ளு வராது

Arun Prasath said...

ங்கொய்யால... இப்படி ஒரு லவ் ஜோடிய கண்ணு முன்னாடி காட்டினா யாருக்குதான் ஜொள்ளு வராது//

ரொம்ப லவ் பீலிங் ஆயிடுச்சோ

வினோ said...

செம கலக்கலா இருக்கு.. பல வரிகள் உண்மை தான்....

Arun Prasath said...

செம கலக்கலா இருக்கு.. பல வரிகள் உண்மை தான்....//

நன்றி தல.. அனுபவமோ?

அரசன் said...

நடத்துங்க ...

Arun Prasath said...

நடத்திருவோம்...நன்றி அரசன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல டெவலப்மென்ட்டுதான்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா பிக்கப் பண்றது இம்புட்டு ஈசியா? இது தெரியாம போச்சேப்பா.... சே 4-5 பிகர மிஸ் பண்ணிட்டேனே, இதுவரைக்கும்........!

பதிவுலகில் பாபு said...

என்னங்க சிம்பு மாதிரி உடனே பிக்கெப் பண்ணிட்டார். ஹீரோ..

ஒருமாதிரி விண்ணைத்தாண்டி வருவாயா.. ஓடறமாதிரியே ஃபீல்..

நல்லாயிருக்குங்க..

Arun Prasath said...

என்னங்க சிம்பு மாதிரி உடனே பிக்கெப் பண்ணிட்டார். ஹீரோ..

ஒருமாதிரி விண்ணைத்தாண்டி வருவாயா.. ஓடறமாதிரியே ஃபீல்..

நல்லாயிருக்குங்க..//

இன்னும் லவ் பண்றேன்ன்னு சொல்லவே இல்லையே?!

rockarthik said...

//ஆய்த எழுத்துல ஈஷா தியோல் சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா சொன்ன யோசிச்சு சொல்றேன்னுக்கும் வித்யாசம் இருக்கு.

Chanceless da...room pottu yosipayya..

Arun Prasath said...

ஹி ஹி அதெல்லாம் இல்ல டா...

நிலாமதி said...

ஆகா வந்துரிச்சு ............வெற்றிக்கு வாழ்த்துக்கள். ..

Arun Prasath said...

ஆகா வந்துரிச்சு ............வெற்றிக்கு வாழ்த்துக்கள். ..//

என்னங்க என்ன வந்துச்சு? ஹி ஹி... வாழ்த்துக்கு நன்றி

சுபத்ரா said...

//ஈஷா சொன்னது ஓகே. த்ரிஷா சொன்னது இது வேலைக்கு ஆகாது வேற ஆள பாரு. அட சாமி பொண்ணுங்க அகராதிய புரிஞ்சுகறது கஷ்டம்//

:-)))) என்ன ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்க? இதெல்லாம் படிப்புல காட்டியிருந்தா இன்னொரு அப்துல் கலாம் ஆகியிருப்ப போல?

Arun Prasath said...

:-)))) என்ன ஒரு ஆராய்ச்சி பண்ணிருக்க? இதெல்லாம் படிப்புல காட்டியிருந்தா இன்னொரு அப்துல் கலாம் ஆகியிருப்ப போல?//

ஹி ஹி.... இதுவும் முக்கியம் தானே

அப்பாவி தங்கமணி said...

interview க்கு வந்தவர் ஒரு மாசம் வீட்டுக்கு போகலைனா வீட்டுல கேக்க மாட்டாங்களா சார்? ஒருவேள வேலை கிடைச்சுடுச்சுன்னு பொய் சொல்லியாசோ... காதல் மழை பெய்ய கூடவே பொய் மழையும் பெய்யுமோ... ஹா ஹா