என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, December 22, 2010

ஒல்லியா இருக்கறவங்க குண்டாவதற்கு அருமையான ஐடியா - என் அனுபவம்

இத பத்தி சொல்ல நான் போன வாரம் போன பெங்களுரு பயணம் பத்தி சொல்லணும். சனிக்கிழமை காலை ஊர் சுத்த எதுவும் பிளான் இல்லையேன்னு சோகமா டிவி பாத்துட்டு இருந்தேன். அப்போ எங்க UG வாத்தியார் பெனின் கால் பண்ணாரு. எங்க பசங்க கூட அவர் கொஞ்சம் க்லோஸ். நாங்க அவர தலனு தான் கூப்டுவோம். அவர் நார்மலா கூப்டாலே டூர் பிளான் தான். அதனால சந்தோசமா எடுத்தேன்.
"சொல்லுங்க தல, என்ன பிளான்?"
"அடப்பாவி நான் கூப்டாலே பிளான் தானா? சரி உன் நம்பிக்கை எதுக்கு வீண் போகணும். கெளம்பி வா, ப்ரீ தான?"
"ப்ரீ தான் ஆனா எங்க போறோம்?"
"சொன்னா தான் வருவியா? வாடா சொல்றேன்"

பிளான் சொன்னா தானா போவோமா என்ன? கெளம்பி போனேன். அப்பறம் தான் தெரிஞ்சது இனி தான் பிளானே பண்ணனும்ன்னு. அவர் சொன்ன டீடெயில்  இது தான். நாளைக்கு காலைல (ஞாயிறு) பெங்களூர்ல இருக்கனும். இன்னைக்கு ப்ரீ. பெங்களூர் ரூட்ல எங்கயாச்சும் போகணும். கார்ல முடியாது. காசு இல்ல.

என்னென்னமோ யோசிச்சு ஒன்னும் தேரல. கடசில ஹொகேனக்கல்ன்னு நெனச்சோம். ஆனா நைட் எங்க தங்கன்னு தெரில. சரி நாம தான் ஊட்டி போயி நாள் ஆச்சே. ஊட்டி போய், நைட் மைசூர் போய் பெங்களூர் போய்டலாம். இது தான் பிளான்.பஸ்ல.

மதியம் 2 மணி இருக்கும். ஊட்டி பஸ் ஸ்டான்ட் போனோம். அன்னிக்கு பாத்து ஊரே ஊட்டி போகுது போல. 
ஒருத்தன் எழவுக்கு போகணும்ன்னு கெளம்புனா, கருமாதிக்கு தான் போக முடியும். அவ்ளோ கூட்டம். சரின்னு மேட்டுப்பாளையம் போற பஸ்ல ஏறிட்டோம்.

"தல பெங்களூர் போக. மேட்டுப்பாளையம் பஸ் ஏறின ஒரே ஜீவன் நாம தான் தல"
"அட நமக்கு தான் நெறைய டைம் இருக்குடா, ஊட்டி போய்ட்டு ஒரு சுத்து சுத்தீட்டு போலாம்" ஊட்டின்னு சொன்னாலே, எங்களுக்கு புல் அரிக்க ஆரம்பிச்சிடும்.

எப்பவுமே கோயம்புத்தூர்ல ஊட்டி பஸ் கூட்டமாத்தான் இருக்கும். அந்த மாதிரி டைம்ல மேட்டுப்பாளையம் போய்டா, அடிக்கடி 50 , 100 ருபாய்க்கு வாடகை கார் இருக்கும். ஈசியா போய்டலாம். அன்னிக்கும் அதே மாறி ஒரு சுமோ கெடைச்சது. ஏறி உக்காந்ததும், அதுல சின்ன டிவி மாட்டி இருந்தாங்க, அதுல காமெடி ஓடிட்டு இருந்தது. என்ன தெரியுமா? மொத்த டயலாக்,
"யாரு தன்ராஜா, நான் ராமசாமி பேசறேன்"

எனக்கு நம்ம பன்னிகுட்டி தான் ஞாபகம் வந்தாரு. சிரிப்பே அடக்க முடில. அவர் கூட எனக்கு ரொம்ப புடிக்கும் போலன்னு நெனச்சிடாறு. அப்பறம் பதிவுலகம் பத்தியும், வேற சில விஷயம் பத்தியும் பேசிட்டு ஊட்டி வந்தோம். மணி 6 இருக்கும்.
"தல பெங்களூர்க்கு 9 30 க்கு SETC பஸ் இருக்கு புக் பண்ணிடலாமா?"
"ஆமாடா, 9 30 னா செரியா 12 , 1 மணிக்கு முதுமலை போகும். நம்ம மக்களை கண் குளிர பாத்துட்டு போலாம்"
"ஹி ஹி சரி தல" புக் பண்ணிட்டோம். மக்கள்ன்னு நாங்க சொன்னது காட்டு விலங்குகள். எங்களுக்கு அதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம். 

"என்ன தான் இருந்தாலும் ஊட்டி வந்து ஏறங்கினதும் மைன்ட் டப்ன்னு ரிலாக்ஸ் ஆகுது கவனிசீங்களா"
"ஆமாடா.. கண்டிப்பா...அதுக்கு தான வரது?"
"ம்ம் ஆமா தல,  நல்ல குளிர் இல்ல?, 3 மணி நேரம் இருக்கு. அப்டியே ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்"

ஊட்டி கமர்சியல் ரோடு. எல்லா கடைக்கும் போனோம். ஒன்னும்  வாங்கல. சும்மா குளிர அனுபவிக்க தான். சாப்டுட்டு பஸ் ஏற வந்தோம். ஒரு அருமையான பஸ் நின்னுட்டு இருந்தது. இந்தியன்ல வர 3 ஸ்டார் பஸ் தோத்து போய்டும். கண்டக்டர் கதவுக்கு முட்டு குடுத்து நின்னுட்டு இருந்தாரு. அவர் நிக்கற ஸ்டைல்ல பாத்து சந்தேகமா டிக்கெட் குடுத்தோம். டிக்கெட் எல்லாம் பாத்துட்டு உள்ள போக சொல்லிட்டு கொஞ்சம் நகந்து நின்னாரு பாருங்க, கதவு தானா மூடிகிச்சு. இது தான் தானியங்கி கதவு போலன்னு நெனச்சிட்டு உக்காந்தோம்.

"தல, கொண்டு போய் சேப்பாரா? எனக்கு டவுட் தான்"
"அடப்பாவி, வாய கழுவு" கரெக்ட்டா டிரைவர் பஸ்ச ஸ்டார்ட் பண்ணாரு. 
"என்ன தல எலி கத்தற மாறி சத்தம் வருது?"
திடிர்ன்னு எங்க காலுக்கு அடில நிலநடுக்கம் மாறி ஒரு சத்தம். பயந்து கால தூக்கி சீட் ல வெச்சிட்டோம். பாத்தா டிரைவர் கியர் மாத்தி இருக்காரு. இன்னைக்கு தூங்கின மாறி தான்னு நெனச்சிட்டு பேசிட்டே வந்தோம். 

முதுமலை வந்துச்சு. செக் போஸ்ட்ல கார்ட் தூங்கிட்டு இருந்தாரு. அவர அடிக்காத குறையா எழுப்பி, அப்பறம் பஸ் காட்டுகுள்ள போக ஆரம்பிச்சது. ( இப்போ நைட் 9 ல இருந்து காலைல 6 வரைக்கும் காட்டுக்குள்ள தனியார் வண்டி எதையும் விடறதில்ல. பஸ் மட்டும் தான்). 

கண் குளிர சில பல யானைகள், காட்டு எருமை, மிளா, மான், எல்லாம் பாத்துட்டு தூங்கலாம்ன்னு கண்ண மூடினோம். நறுக்ன்னு ஒரு கடி கழுத்துல. சரமாரி தாக்குதல். லைட் போட சொல்லி எந்திரிச்சு பாத்தா. 10 மூட்ட பூச்சி இருக்கும். எல்லாம் கட்டெறும்பு சைஸ். எல்லாம் ஓடிடுச்சு. அப்பறம் எங்க தூங்க?கடி வாங்கறதும், புடிக்கறதும், அடிக்கரதுமா நைட் புல்லா போய்டுச்சு. ஒரு அரை லிட்டர் ரத்தம் போயிருக்கும் போல. இதுக்கு நடூல பஸ் வேற. நம்ம ஊர் விவசாய ட்ராக்டர் கூட அவ்ளோ சத்தம் வராதுங்க. சாமி ஒரு வழியா காலைல 6 மணிக்கு பெங்களூர் வந்தோம். எங்கள கூட்டிட்டு போக வந்த எங்க நண்பர் எங்கள பாத்ததும் கேட்டாரு,

"டேய் அருண், போன டைம் பாத்தத விட நல்லா குண்டாய்ட டா. முகம் எல்லாம் சதை போட்டு இருக்கு"
எங்களுக்கு  தான தெரியும் அது சதை இல்ல. கடின்னு.

பின் குறிப்பு : இப்போ புரிஞ்சதா? சீக்கிரம் குண்டாகனும்னா SETC ல போங்க நண்பர்களே....

116 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

I am first

ஜீ... said...

ஆகா! :-)

karthikkumar said...

வடை போச்சே

karthikkumar said...

இரு படிச்சிட்டு வரேன்

Arun Prasath said...

வாங்க ஜி!! சீக்கிரம் நம்ம பஸ்ல போங்க

Arun Prasath said...

வா வா

வெறும்பய said...

online >>>>>>>>>>>>

Arun Prasath said...

online >>>>>>>>>>>>//

வைகை ப்ளாக்ல இதே கமெண்ட்.... காப்பி பேஸ்ட் பண்ரதுல நம்ம அண்ணனுக்கு நிகர் அண்ணன் தான்

வெறும்பய said...

நல்லா சொல்றியே மக்கா கதை..

Arun Prasath said...

நல்லா சொல்றியே மக்கா கதை..//

வைத்தெரிச்சல் அண்ணே

வெறும்பய said...

Arun Prasath said...

online >>>>>>>>>>>>//

வைகை ப்ளாக்ல இதே கமெண்ட்.... காப்பி பேஸ்ட் பண்ரதுல நம்ம அண்ணனுக்கு நிகர் அண்ணன் தான்

//

தேங்க்ஸ்ப்பா .

karthikkumar said...

"ஒல்லியாக இருக்கும் பிகரை குண்டாக்குவது எப்படி? அருனின் அனுபவங்கள் " மச்சி நீ இதைத்தானே பதிவா போடறேன்னு சொன்ன? இப்போ மாத்திட்ட. ஏன்.

இம்சைஅரசன் பாபு.. said...

மூட்டை பூச்சி கடிச்சா தன குண்டாக முடியுமா மக்கா .....பக்கத்துல இருந்த பொண்ணு கச்சிஆளும் குண்டகாலம் மக்கா .......

Arun Prasath said...

தேங்க்ஸ்ப்பா //

தேங்க்ஸ்சா.. அப்போ இதே தான் தொழிலா

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
மூட்டை பூச்சி கடிச்சா தன குண்டாக முடியுமா மக்கா .....பக்கத்துல இருந்த பொண்ணு கச்சிஆளும் குண்டகாலம் மக்கா ///

ஏம்பா பொண்ணு கடிச்சா தான் குண்டா ஆக முடியுமா வேற பண்ண முடியாதா

Arun Prasath said...

"ஒல்லியாக இருக்கும் பிகரை குண்டாக்குவது எப்படி? அருனின் அனுபவங்கள் " மச்சி நீ இதைத்தானே பதிவா போடறேன்னு சொன்ன? இப்போ மாத்திட்ட. ஏன்.//

பங்காளி அதெல்லாம் பதிவு போட முடியாது.. நேர்ல வா சொல்றேன்... கொழந்த பையனா
இருப்பன் போலயே

இம்சைஅரசன் பாபு.. said...

//கண் குளிர சில பல யானைகள், காட்டு எருமை, மிளா, மான், எல்லாம் பாத்துட்டு தூங்கலாம்ன்னு கண்ண மூடினோம்.//

ஆமா ஆமா குரங்கு கூட்டம் எல்லாம் பசுக்குள்ள இருந்துச்சு சௌந்தர் ......அதனால தான் இதுக எல்லாம் காட்டுல இருக்கு .....இப்ப புரிஞ்சித சௌந்தர்

Arun Prasath said...

மூட்டை பூச்சி கடிச்சா தன குண்டாக முடியுமா மக்கா .....பக்கத்துல இருந்த பொண்ணு கச்சிஆளும் குண்டகாலம் மக்கா .......//

பக்கதுல பொண்ணா? அதெல்லாம் இல்லையே. என்னமோ கூட வந்த மாறி சொல்றீங்க?

Arun Prasath said...

ஏம்பா பொண்ணு கடிச்சா தான் குண்டா ஆக முடியுமா வேற பண்ண முடியாதா//

இவனுங்க பதிவ 18 + ஆக்காம விடமாட்டாங்க போலயே

Arun Prasath said...

ஆமா ஆமா குரங்கு கூட்டம் எல்லாம் பசுக்குள்ள இருந்துச்சு சௌந்தர் ......அதனால தான் இதுக எல்லாம் காட்டுல இருக்கு .....இப்ப புரிஞ்சித சௌந்தர்//

எனக்கு புரிஞ்சது...

அருண் பிரசாத் said...

பேசாம நீ ஒரு fitness centre வெச்சிடு.... குண்டை ஒல்லியாவும், ஒல்லிய குண்டாவும் ஆக்கலாம்...

அருண் பிரசாத் said...

நானும் 3 நாள் ஊட்டி டிரிப் பத்தி எழுதனும். ஆனா, போட்டோ எல்லாம் இந்தியால இருக்கு. இந்த முறை வரும் போது எடுத்துட்டு வண்டுட வேண்டியது தான்

Arun Prasath said...

பேசாம நீ ஒரு fitness centre வெச்சிடு.... குண்டை ஒல்லியாவும், ஒல்லிய குண்டாவும் ஆக்கலாம்...//

ஐடியா குடுக்கறதுல அண்ணனுக்கு நிகர் அண்ணன் thaan

Arun Prasath said...

நானும் 3 நாள் ஊட்டி டிரிப் பத்தி எழுதனும். ஆனா, போட்டோ எல்லாம் இந்தியால இருக்கு. இந்த முறை வரும் போது எடுத்துட்டு வண்டுட வேண்டியது தான்//

எழுதுங்க எழுதுங்க... ஊட்டினாலே நமக்கு ஜாலி தான்

எஸ்.கே said...

Nice idea! let us try!

Arun Prasath said...

Nice idea! let us try!//

வாழ்த்துக்கள்

karthikkumar said...

லஞ்ச் முடிச்சிட்டு வரேன்... குறிப்பு இன்னும் பதிவ படிக்கல.. :)

Arun Prasath said...

லஞ்ச் முடிச்சிட்டு வரேன்... குறிப்பு இன்னும் பதிவ படிக்கல.. :)//

சரி சரி....படிக்காம தான் அளப்பர விட்டியா

Samudra said...

nice

Arun Prasath said...

nice//

வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சமுத்ரா

Phantom Mohan said...

karthikkumar said...
வடை போச்சே
December 22, 2010 12:54 PM
///////////////////

யோவ் இதென்ன ஸ்பெக்ட்ரம் ஏலம்ன்னு நினைச்சியா??? முதல்ல வர்ரவங்களுக்கு முன்னுரிமை குடுக்க...வந்தமா கலாய்ச்சமான்னு இல்லாம ”ராசாக்கனி” மாதிரி பேசிக்கிட்டு.

Arun Prasath said...

யோவ் இதென்ன ஸ்பெக்ட்ரம் ஏலம்ன்னு நினைச்சியா??? முதல்ல வர்ரவங்களுக்கு முன்னுரிமை குடுக்க...வந்தமா கலாய்ச்சமான்னு இல்லாம ”ராசாக்கனி” மாதிரி பேசிக்கிட்டு.//

அடடா, ஒரு வடைய spectrum வரைக்கும் கொண்டு போய்டீங்களே

கோமாளி செல்வா said...

//"ஹி ஹி சரி தல" புக் பண்ணிட்டோம். மக்கள்ன்னு நாங்க சொன்னது காட்டு விலங்குகள். எங்களுக்கு அதுல கொஞ்சம் ஆர்வம் அதிகம்.
//

ஓ ,அப்படிங்களா ..?

Arun Prasath said...

ஓ ,அப்படிங்களா ..?//

உண்மை தான்ப்பா

வைகை said...

வந்தேன்

வைகை said...

Arun Prasath said...
பேசாம நீ ஒரு fitness centre வெச்சிடு.... குண்டை ஒல்லியாவும், ஒல்லிய குண்டாவும் ஆக்கலாம்...//////


அதெல்லாம் சரிதான் யாரையும் உண்டாக்காம இருந்தா சரி!

Arun Prasath said...

அதெல்லாம் சரிதான் யாரையும் உண்டாக்காம இருந்தா சரி!//

அடப்பாவமே... எல்லாம் ஒரு மார்கமா இருக்கீங்க இன்னைக்கு

கோமாளி செல்வா said...

//திடிர்ன்னு எங்க காலுக்கு அடில நிலநடுக்கம் மாறி ஒரு சத்தம். பயந்து கால தூக்கி சீட் ல வெச்சிட்டோம். பாத்தா டிரைவர் கியர் மாத்தி இருக்காரு. இன்னைக்கு தூங்கின மாறி தான்னு நெனச்சிட்டு பேசிட்டே வந்தோம்.
//

இதுதான் இந்தியன் வர்ற பஸ்ங்களா ..?

Arun Prasath said...

இதுதான் இந்தியன் வர்ற பஸ்ங்களா ..?//

நான் இந்தியன் தானே... அப்போ இந்த பஸ் தான்

கோமாளி செல்வா said...

//ஒரு அரை லிட்டர் ரதம் போயிருக்கும் போல. இதுக்கு நடூல பஸ் வேற///

ரதம் அப்படின்னா தேருங்களா..?

Arun Prasath said...

உன் கண்ணுக்கு மட்டும் எப்டி தெரியுது?

வினோ said...

அட ஊட்டி - பெங்களூர் பஸ் சா? அது சரி...

Arun Prasath said...

அட ஊட்டி - பெங்களூர் பஸ் சா? அது சரி...//

ஆமாங்க போட்டோ எடுக்கணும்ன்னு நெனச்சேன் மறந்துட்டேன்

நாகராஜசோழன் MA said...

உன்னை குண்டாக்கி அழகு பார்த்த அரசு பேருந்தையே கலாய்க்கிறியே நியாயமா அருண்?

Arun Prasath said...

உன்னை குண்டாக்கி அழகு பார்த்த அரசு பேருந்தையே கலாய்க்கிறியே நியாயமா அருண்?//

ஐயோ நான் கிண்டல் பண்ணலையே... எல்லாரும் போங்கன்னு தான சொல்லிருக்கேன்.. கொ ப செ வாக்கும் நான்

நாகராஜசோழன் MA said...

எப்படியோ பெங்களூரு போய் சேர்ந்தீங்களே, அதுவரைக்கும் சந்தோஷப் படு.

Arun Prasath said...

எப்படியோ பெங்களூரு போய் சேர்ந்தீங்களே, அதுவரைக்கும் சந்தோஷப் படு.//

நம்ம இன மக்கள்... அதாங்க காட்டு வாழ் மக்கள்.. அவங்கள பாத்ததே சந்தோசம் தான்

நாகராஜசோழன் MA said...

//வைகை said...

Arun Prasath said...
பேசாம நீ ஒரு fitness centre வெச்சிடு.... குண்டை ஒல்லியாவும், ஒல்லிய குண்டாவும் ஆக்கலாம்...//////


அதெல்லாம் சரிதான் யாரையும் உண்டாக்காம இருந்தா சரி!//

அதானே பையன் ஏற்கனவே ஒரு மார்க்கமாத்தான் சுத்திட்டு இருக்கான்.

Arun Prasath said...

அதானே பையன் ஏற்கனவே ஒரு மார்க்கமாத்தான் சுத்திட்டு இருக்கான்.//

நீங்களுமா தலைவரே

karthikkumar said...

50

Arun Prasath said...

வந்தாம்பாரு சரியாய்

karthikkumar said...

கண்டக்டர் கதவுக்கு முட்டு குடுத்து நின்னுட்டு இருந்தாரு. அவர் நிக்கற ஸ்டைல்ல பாத்து சந்தேகமா டிக்கெட் குடுத்தோம்.///
அவர்தானே டிக்கெட் கொடுக்கணும்? அப்போ சரக்கில இருந்தியா மச்சி?

karthikkumar said...
This comment has been removed by the author.
Arun Prasath said...

அவர்தானே டிக்கெட் கொடுக்கணும்? அப்போ சரக்கில இருந்தியா மச்சி?//

அடுத்த வரிய படிச்சிட்டு கமெண்ட் போடு..

karthikkumar said...

இப்போ புரிஞ்சதா? சீக்கிரம் குண்டாகனும்னா SETC ல போங்க நண்பர்களே....///
முடியாதுப்பா இப்போ என்ன பண்ணுவ?

karthikkumar said...

அடுத்த வரிய படிச்சிட்டு கமெண்ட் போடு///
ச்சே கவுந்துட்டமே..

karthikkumar said...

ஊட்டி கமர்சியல் ரோடு. எல்லா கடைக்கும் போனோம். ஒன்னும் வாங்கல. சும்மா குளிர அனுபவிக்க தான்.///
அதானே குளிர்தானே ப்ரீயா கெடைக்குது..

Arun Prasath said...

முடியாதுப்பா இப்போ என்ன பண்ணுவ?//

அந்த அனுபவம் வேணாம்னா போ

Arun Prasath said...

ச்சே கவுந்துட்டமே..//

இதெல்லாம் உனக்கு சகஜம் தான மச்சி

karthikkumar said...

ஆமா தல phantom mohan வந்திருப்பாரு போல.

Arun Prasath said...

அதானே குளிர்தானே ப்ரீயா கெடைக்குது..//

கஞ்சப்பிரபு நீ தான்

Arun Prasath said...

ஆமா தல phantom mohan வந்திருப்பாரு போல.//

வந்துட்டு பட்டா அண்ணன் ப்ளாக் போய்ட்டாரு

karthikkumar said...

மச்சி தீம் நல்லா இருக்கு ஆனா கலர் கண்ண உறுத்துது. என்னோட போடோவ வெச்சி ஒரு தீம் தரேன். அத போட்டுக்கோ ஓகேவா ..

Arun Prasath said...

மச்சி தீம் நல்லா இருக்கு ஆனா கலர் கண்ண உறுத்துது. என்னோட போடோவ வெச்சி ஒரு தீம் தரேன். அத போட்டுக்கோ ஓகேவா ..//

அதுக்கு நான் ப்ளாக் delete பண்ணிடுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மூட்டப்பூச்சி கடிச்சி குண்டான மொத ஆள இப்பத்தான் பாக்குறேன்......

Arun Prasath said...

மூட்டப்பூச்சி கடிச்சி குண்டான மொத ஆள இப்பத்தான் பாக்குறேன்......//

இன்னுமா குண்டுன்னு சொல்லிடு இருக்கீங்க? அதுக்கு பேரு தடிப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா ஏற்கனவே குண்டா இருக்கறவங்க போனா என்னாகும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Arun Prasath said...
மூட்டப்பூச்சி கடிச்சி குண்டான மொத ஆள இப்பத்தான் பாக்குறேன்......//

இன்னுமா குண்டுன்னு சொல்லிடு இருக்கீங்க? அதுக்கு பேரு தடிப்பு////

படுவா டைட்டில்ல குண்டுன்னு போட்டு வெச்சிட்டு இப்ப கொழுப்ப பாரு?

சி.பி.செந்தில்குமார் said...

magic realism in comedy angle.?good

Arun Prasath said...

ஆமா ஏற்கனவே குண்டா இருக்கறவங்க போனா என்னாகும்?//

என்னடா யாரும் இந்த கேள்வி கேக்கலன்னு பாத்தேன்... அத அடுத்த பதிவுல சொலறேன்

சி.பி.செந்தில்குமார் said...

always u in byke..y?

Arun Prasath said...

magic realism in comedy angle.?good//

அப்டினா என்ன சார்? நெஜம்மா தெரில

Arun Prasath said...

இன்னுமா குண்டுன்னு சொல்லிடு இருக்கீங்க? அதுக்கு பேரு தடிப்பு////

படுவா டைட்டில்ல குண்டுன்னு போட்டு வெச்சிட்டு இப்ப கொழுப்ப பாரு?//

இன்னுமா இந்த ஊர் நம்மள நம்புது

Arun Prasath said...

always u in byke..y?//

because i love bikes :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதுல சின்ன டிவி மாட்டி இருந்தாங்க, அதுல காமெடி ஓடிட்டு இருந்தது. என்ன தெரியுமா? மொத்த டயலாக்,
"யாரு தன்ராஜா, நான் ராமசாமி பேசறேன்"


எனக்கு நம்ம பன்னிகுட்டி தான் ஞாபகம் வந்தாரு. சிரிப்பே அடக்க முடில. அவர் கூட எனக்கு ரொம்ப புடிக்கும் போலன்னு நெனச்சிடாறு. /////

பன்னிக்குட்டி கண்டபடி பேமசாயிட்டாம்பா..., ஆமா "அவர் கூட எனக்கு ரொம்ப புடிக்கும் போலன்னு நெனச்சிடாறு." அப்படின்னா உனக்கு புடிக்கதா,என் தானைத்தலைவன? எலேய்.. சின்றாசு கட்றா வண்டிய......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
always u in byke..y?/////

திருட்டு பைக்குல்ல, இறங்குனா ஓனரு கண்டுபுடிச்சசிட மாட்டாரு?

Arun Prasath said...

பன்னிக்குட்டி கண்டபடி பேமசாயிட்டாம்பா..., ஆமா "அவர் கூட எனக்கு ரொம்ப புடிக்கும் போலன்னு நெனச்சிடாறு." அப்படின்னா உனக்கு புடிக்கதா,என் தானைத்தலைவன? எலேய்.. சின்றாசு கட்றா வண்டிய......//அடங்கொன்னியா... அத பாத்துட்டு உங்க ஞாபகம் வந்ததுன்னு சொல்ல வந்தேன்

Arun Prasath said...

திருட்டு பைக்குல்ல, இறங்குனா ஓனரு கண்டுபுடிச்சசிட மாட்டாரு?//

நல்ல வேலை இது திருட்டு சட்டைன்னு கண்டுபுடிக்கல

karthikkumar said...

Arun Prasath said...
always u in byke..y?//

because i love bikes :)///

உன்னோட பைக்க லவ் பண்ணு மச்சி .. அடுத்தவங்க வண்டி எதுக்கு.

Arun Prasath said...

உன்னோட பைக்க லவ் பண்ணு மச்சி .. அடுத்தவங்க வண்டி எதுக்கு.//

பொதுவா i love kids ன்னு சொன்னா, நம்ம குழந்தைய மட்டுமா புடிக்கும்ன்னு சொல்றோம்? பொதுவா தான? அப்டி தான் இதுவும்

karthikkumar said...

Arun Prasath said...
உன்னோட பைக்க லவ் பண்ணு மச்சி .. அடுத்தவங்க வண்டி எதுக்கு.//

பொதுவா i love kids ன்னு சொன்னா, நம்ம குழந்தைய மட்டுமா புடிக்கும்ன்னு சொல்றோம்? பொதுவா தான? அப்டி தான் இதுவும்//

ஹேய் நல்ல இருக்குயா... மாட்சிங் சூப்பர்.ஏன் குழந்தைகளோட ஸ்டாப் பண்ணிட்ட " பொதுவா i love girls " அப்டின்னு சொல்ல வேண்டியதுதானே..

Arun Prasath said...

ஹேய் நல்ல இருக்குயா... மாட்சிங் சூப்பர்.ஏன் குழந்தைகளோட ஸ்டாப் பண்ணிட்ட " பொதுவா i love girls " அப்டின்னு சொல்ல வேண்டியதுதானே..//


உனக்கு புடிக்கும்ன்ன நீ சொல்லு.... என்ன ஏன் சொல்ல சொல்ற?

karthikkumar said...

சரி மச்சி ஆணி இருக்கு.. வரேன்.. 98 வது கமென்ட் வந்த வுடன் சொல்லு :)

Arun Prasath said...

சரி மச்சி ஆணி இருக்கு.. வரேன்.. 98 வது கமென்ட் வந்த வுடன் சொல்லு :)//

அடப்பாவி

மாணவன் said...

எங்க வடை.....

பதிலுக்கு பதில்....

ஹிஹிஹி....

Arun Prasath said...

எங்க வடை.....

பதிலுக்கு பதில்....

ஹிஹிஹி....//


நானாச்சும் பரவால... நீங்க ரொம்ப லேட்

மாணவன் said...

//ஒல்லியா இருக்கறவங்க குண்டாவதற்கு அருமையான ஐடியா - என் அனுபவம்//

இந்த ஐடியாவ நம்ம அண்ணன் சிரிப்பு போலீசுக்கு சொல்லுங்கண்ணே,

என்ன சாப்பிட்டாலும் உடம்பு ஏறமாட்டேங்குது அவருக்கு

ஹிஹிஹி

மாணவன் said...

online..........

மாணவன் said...

89

Arun Prasath said...

இந்த ஐடியாவ நம்ம அண்ணன் சிரிப்பு போலீசுக்கு சொல்லுங்கண்ணே,

என்ன சாப்பிட்டாலும் உடம்பு ஏறமாட்டேங்குது அவருக்கு

ஹிஹிஹி//


அவர தான் காலைல இருந்து ஆள காணோமே

மாணவன் said...

வந்தேன் 90 ஆவது வடையை வென்றேன்..........

மாணவன் said...

//அவர தான் காலைல இருந்து ஆள காணோமே//

ஆணி அதிகமா இருக்கும்... அதான் இன்னைக்கு ஆள காணோம்...

kumar said...

நண்பரே புல்லரிக்குது..... நீங்க சொன்ன விஷயம் உண்மைதான்.

Arun Prasath said...

ஹி ஹி அது எனக்கு

Arun Prasath said...

நண்பரே புல்லரிக்குது..... நீங்க சொன்ன விஷயம் உண்மைதான்.//

வாங்க குமார்.. இதான் முதல் தடவ வரீங்க போல...
ஆமாங்க, கஷ்ட காலம்

அரசன் said...

setc ல போனா ஒரே ஜாலி தான் ...

நல்ல சந்தோஷம் தான் போல ...

ஒல்லியா ஆகணும்னா எந்த பஸ்ல போகணும் தல ...

Arun Prasath said...

setc ல போனா ஒரே ஜாலி தான் ...

நல்ல சந்தோஷம் தான் போல ...

ஒல்லியா ஆகணும்னா எந்த பஸ்ல போகணும் தல ...//

ஜாலியா,... அடப்பாவமே.. சரி விடுங்க....
அத பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்

karthikkumar said...

100

karthikkumar said...

100

karthikkumar said...

100

karthikkumar said...

vadai

Arun Prasath said...

ஒரே வடை வேட்டை தான் போல

karthikkumar said...

Arun Prasath said...
ஒரே வடை வேட்டை தான் போல//

ஏம்பா நீ வேற.. ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் நூறாவது வடை வாங்கிருக்கேன். சரி I GOING TO AANI

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

Arun Prasath said...

ரைட் ...ரைட் ...//

வாங்க சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

Arun Prasath said...

Present sir//

உங்களுக்கு ஆப்சென்ட்... எல்லாரும் பொட்டி கட்டிட்டு கெலம்பிடாங்க

விக்னேஷ்வரி said...

கருமாரிக்கு //
அது கருமாரி இல்ல தம்பி. கருமாதி. :)

தல பெங்களூர் போக. மேட்டுப்பாளையம் பஸ் ஏறின ஒரே ஜீவன் நாம தான் தல //
ஹாஹாஹா...

பாவம்ங்க நீங்க.ரொம்பக் கொடுமையான பயணமா..

Arun Prasath said...

கருமாரிக்கு //
அது கருமாரி இல்ல தம்பி. கருமாதி. :)//

பேச்சு தமிழ்.. சொல்லி சொல்லி பழகிடுச்சு :)


ஹாஹாஹா...

பாவம்ங்க நீங்க.ரொம்பக் கொடுமையான பயணமா..//

லைட்டா... வெளிய காட்ட மாட்டோம்ல

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. என்னா வில்லத்தனம்..

நீங்க ஜோக்கா சொன்னாலும் அதான் நிஜம்.. SETCல எல்லாம் பயங்கரமான மூட்டப் பூச்சிங்க.. நானும் யோசிச்சுட்டு இருந்தேன்.. நீங்களே அருமையாக எழுதீட்டீங்க..

Arun Prasath said...

ஐ அப்போ நான் தான் first

சிவகுமாரன் said...

கோயம்பத்தூர்ல படிச்சப்ப
கூட ஊட்டி போனதில்லைங்க, பகிர்வுக்கு நன்றி.

சுபத்ரா said...

U have a very good sense of humour Arun... Go ahead, wishes :-)

Arun Prasath said...

கோயம்பத்தூர்ல படிச்சப்ப
கூட ஊட்டி போனதில்லைங்க, பகிர்வுக்கு நன்றி. //

அப்டியா? அடடா மிஸ் பணிடீங்கலே... போங்க
நன்றி

Arun Prasath said...

U have a very good sense of humour Arun... Go ahead, wishes :-)//

thanks Subatra.... i ll write more for sure

ராம்குமார் - அமுதன் said...

:))))