எல்லாரும் திரும்பி பாக்கிறேன்னு எழுதினாங்க. ஆனா நான் திரும்பி பாத்தா ஜன்னல் தான் தெரிஞ்சது. ஹி ஹி அதனால தான் டாபிக் மாத்திட்டேன். இந்த தொடர் பதிவு எழுத அழைத்த அன்பு, பாசம், வீரம், பொறுமை, அழகு எல்லாம் நிறைந்த அருண் அவர்கள் ( ஹி ஹி, நம்ம பேரு இவருக்கு இருக்கறதுல எவ்ளோ நன்மை இருக்கு பாருங்க) வாழ்க. ஒன்னும் பெருசா படிப்பினயோ, வாழ்க்கை பாடத்தையோ கத்து குடுகலங்க இந்த 2010 . ஆனா அலுங்காம வந்து கஷ்டத்த கூட தராம போய்டுச்சு. அதானங்க ரொம்ப முக்கியம்.
நான் ப்ளாக் ஆரம்பிச்ச வருஷம், வேலை கெடச்ச வருஷம்ன்னு அருண் அண்ணன் மொக்க போட்ட மாறி நான் போட விரும்பல (யாராச்சும் உண்மைய சொல்லணும்ல). அதனால நான் ரசிச்ச சில நேரங்கள், மனிதர்கள் பத்தி சொல்றேன். ( வாடா, நெனச்சேன்... ரெண்டு மூணு பொம்பள புள்ளைங்க பேரு வருமே, அத சொல்லாட்டி தூக்கம் வராதுல ).
ரொம்ப முக்கியமான நிமிடம் - தல சச்சின் 200 * அடிச்ச நிமிடம்
ஆபீஸ்ல இருந்த நேரத்த வெறுத்த நிமிடம். தல ஆடின அழக பாக்க முடியலேன்னு தான். ஆனா ஆபீஸ் சீட் நுனில உக்காந்திருந்தேன். அடிச்சதும் செம சந்தோசம். சுத்தி இருந்த வெள்ள காரன் எல்லாம் ஒரு மாறி பாக்கறான். அதுவாங்க முக்கியம், தல சரித்திரம் படைச்சு இருக்கு, இவனுங்க கெடக்கறாங்க.
ஹி ஹி ஆனா இன்னும் ஒரு 50 அடிச்சு 250 * போட்ருந்தா நல்லா தான் இருக்கும் இல்ல. இன்னும் 10 வருஷம் ஆடுங்க தல. எவன் என்ன சொல்றான்னு பாக்கலாம்.
இப்படிக்கு நீங்க அவுட் ஆனதும் டிவி சேனல் மாற்றுவோர் சங்கம்.
கமான் வெல்த் தங்கங்கள்
ஆஸ்திரேலியாக்கு பின்னாடி இரண்டாம் இடம் கெடச்சது பெரிய சந்தோசம் பாருங்க. இந்த இங்கிலீஷ்காரங்க, அதாங்க இங்கிலாந்து பயபுள்ளைங்க 3 வது இடம். ஹப்பா என்ன சந்தோசம். அப்டியே ஒலிம்பிக்ல ஒரு 10 , 15 வாங்குங்கப்பா. இதான் ஒவ்வொரு இந்தியனின் கனவு.
ரொம்ப வருஷம் கழிச்சு ரசிச்சு பாத்த படம் - விண்ணை தாண்டி வருவாயா
ஒரு காதல் கதைய இதுக்கு மேல அழகா எவனாலயும் சொல்ல முடியாது, இது என் கருத்து. கூடவே தல மியூசிக் வேற. கேக்கணுமா. அணு அணுவா ரசிச்சு பாத்தேன்.
"இப்போ என்ன சொல்ல வர ஜெஸ்ஸி"
"எனக்கு உன்ன பிடிச்சிருக்கு கார்த்திக், ஆனா இது எனக்கு வேணாம், புரியுதா, புரியுதாடா"
ஹம்ம், நீங்க சொல்றது எல்லாம் புரிஞ்சா தான் ஆம்பளைங்க பாதி பேரு லூசு ஆகாம இருப்பாங்களே.
அப்பறம் மன்னிப்பாயா பாட்டு, இப்போ கேட்டாலும் ஒரு சிலிர்ப்பு, யப்பா என்ன வரிகள் ஒவ்வொன்னும்.
"மேலும் மேலும் உருகி உருகி, உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்" கிளாஸ்... வேற என்ன சொல்ல. லவ் பண்ணா இப்டி உருகி உருகி பண்ணனும். என்ன சொல்றீங்க?
ரசித்த பெண்கள் ( வா வா, இதுக்கு தான் வைடிங்)
சமந்தா ருத் பிரபு
"நந்தினி ஹீரோயின் நீ தான், ஒத்துக்க மாட்டன்னு தெரியும். டிரஸ்ட் மீ, நீ தான் பண்ணனும்"
விண்ணைத்தாண்டி வருவாயால சிம்பு கேப்பாரு, சமந்தா கிட்ட, அப்போ ஒரு சிணுங்கல் சிணுங்கி,
"ஹே, யாரு கிட்ட கேக்கணும் சொல்லு" அப்டின்னு சொல்வாங்க பாருங்க, அப்போ முடிவு பண்ணோம் அடுத்த மன்றம் சமந்தாவுக்கே அப்டினு. ஹி ஹி ஆமாங்க என்ன மாறியே இன்னும் கொஞ்சம் பேரு சுத்தீட்டு இருக்காங்க மெட்ராஸ்ல. ரசிச்ச பண்களின் டாப் இவங்க தான்.
சாய்னா நெக்வால்
நல்ல திறமைங்க அக்கா கிட்ட, சாரி தங்கச்சி கிட்ட. ஆனா இவங்கள அக்கான்னு பெருமையா சொல்லலாம். நாம எல்லாம் பொட்டி தட்டிட்டு இருக்கோம், இவங்க பாருங்க கமான் வெல்த்ல தங்கம், ஹாங் காங்ல தங்கம். தங்க மங்கை. கலக்கிட்டு இருக்காங்க. ஒலிம்பிக்ல அடுத்த தடவ மெடல் வாங்கிடுங்க அக்கா. ப்ளீஸ்.
இன்னும் இருக்காங்க, இதுக்கு மேல சொன்னா அடி தான் விழும். அதனால என் உரையை, அதாவது பதிவை முடிக்கிறேன்.
அரசியல் நிமிடங்கள், இன்னும் பல பல சொல்லிட்டே போலாம், ஆனா இப்போ போட்டு இருக்கறது தான் டாப் ஆப் தி லிஸ்ட்.
இது போக என் வாழ்க்கைல சொல்ற மாறி ஒன்னும் நடக்கலங்க, உங்கள போலவே நானும் 115 கோடில ஒருத்தன். அவ்ளோ தான்.
தொடர் பதிவுனா, யாரச்சையும் தொடர சொல்லணும்ல. நம்ம பங்காளி முறைமாமன் கார்த்திக் தான் அடி வாங்கிய தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். வாங்க பங்காளி.
படங்கள் நன்றி -Galata.com





