காலைல சீக்கரமா எழுந்தாச்சு, நாங்க தங்கி இருந்த எடத்ல இருந்து மங்களூர் 40 km தான். அங்க போய் காலைல சாப்டுக்கலாம்னு கெளம்பி போய்டோம். ரோடு கொஞ்சம் மோசமா இருந்தது. அதும் இல்லாம நடூல நின்னு நின்னு போட்டோ வேற எடுத்துட்டே போனோம். இல்லனா நாங்க மங்களூர் போனதுக்கு சாட்சி இல்லல (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே). அதனால மங்களூர் போனப்ப மணி 8க்கு மேல ஆய்டுச்சு. எல்லாருக்கும் செம பசி. ஹோட்டல் தேடி சுத்தீட்டு இருந்தோம்.
" மச்சி வண்டிய நிறுத்து, பின்னாடி அவங்கள காணோம்" தீனா கத்தினான்.
"எங்கடா இதனை நேரம் பின்னாடி தான வந்தாங்க? சரி இரு வந்த வழிலயே போய் பாக்கலாம்"
"அதோ அங்க நிக்கறாங்க பாருடா"
நாங்க திரும்பி வர்றது கூட தெரியாம கை காட்டி பேசிட்டு இருந்தாங்க. நான் கூட ஏதோ ஹோட்டல் தான் இருக்கு போலனு பக்கத்ல போய் பாத்தா, 2 , 3 பொண்ணுங்க நடந்து வந்துட்டு இருந்தாங்க. அவங்க பாத்து மெய் மறந்து சைட் அடிச்சிட்டு இருக்குதுங்க பக்கி பயலுங்க.
" நாதாரி, பசிக்குதுனு ஹோட்டல் தேடி அலைஞ்சிட்டு இருந்தா, இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா" வாய் தான் திட்டிட்டு இருந்தது, நானும் சைட் தான் அடிச்சிட்டு இருந்தேன்.
" ஆமா ஆமா, இவரு புத்தர் ஓட ஒன்னு விட்ட சகல, பொண்ணுகள பாக்கவே மாட்டாரு, பாரு பேசிட்டே எங்க பாத்துட்டு இருக்கான்னு. நண்பா, இந்த மாறி அழகான பொண்ணுங்கள பாத்து அவங்க அழக ஆராதிக்கணும். அப்போ பசி தெரியாது" இது நவீன். ( என்ன அறிவு புள்ளைக்கு)
"சரி சரி மானத்த வாங்காத, அழகா தான் இருக்காங்க, வா போலாம், பசிக்குது".
நல்லா சாப்டுட்டு, மங்களூர்ல பீச்க்கு போய்ட்டு, வர்ற வழில நேத்து பாக்காத பேகல் போர்ட் பாத்துட்டு கெளம்பினோம்.
வழி எல்லாம் பச்சை பசேல்னு அழகா இருந்தது. அத பாத்துட்டே வண்டி 100ல போனதையோ, ஒரு வளைவு வந்ததையோ நான் கவனிக்கல. கிட்ட போனப்பறம் பாத்தா, நல்ல வளைவு. நாம ஊர் ரோடு பத்தி தான் தெரியுமே. ரோடு கிட்டதட்ட 1 அடி உயரம். கீழ அந்த வேகத்ல ஏறக்குனா தூக்கி வீசிடும். நானும் முடிஞ்ச அளவுக்கு படுத்து திருப்புனேன். வண்டி படுக்கவே இல்ல. நான் கிட்ட தட்ட வண்டிய அமுக்கி படுத்து, ரோடு ஓரத்துல போய் ரொம்ப கஷ்டப்பட்டு திருப்பிட்டேன்.
கொஞ்ச தூரம் போய் டீ சாப்டும் போது இத நவீன் கிட்ட பயத்தோட சொல்லிடு இருக்கேன். தீனா சொன்னான், " அட நீ படுக்க ட்ரை பண்ணிட்டு இருந்தியா? சொல்லணும்ல, நான் கூட வண்டி தான் சாயுதுன்னு எதிர் பக்கம் அமுக்கிட்டு இருந்தேன்". எனக்கு மூஞ்சில ஈ ஆடல. நவீன்னும் மைனாவும் விழுந்து விழுந்து சிரிக்கறானுங்க. பரதேசி நான் வலது பக்கம் படுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன், இவன் பின்னாடி உக்காந்து இடது பக்கம் சாஞ்சுட்டு இருந்திருக்கான். வண்டி ஓட்டும் போது பின்னாடி உக்காந்து வர்றவங்க, வண்டி படுத்து திரும்பும் போது வண்டி கூடவே படுக்கணும். வண்டி ஓட்டறவனுக்கு தெரியும் எவ்ளோ படுக்கணும்னு. அப்டி பண்ணலனா என்னக்கு ஆனது மாறி தான் ஆகும். நடந்ததுக்கு அப்றம் அவன திட்டி என்ன பண்ண?
மங்களூர்ல ஒரு பாம்பு மியுசியம் இருக்கு. காலைல 10 மணிக்கு தான் தெரப்பாங்க. அத விட்டா பீச் நல்லா இருக்கும். நாங்க போன போது நல்ல மழை காலம். அதனால கடல் ரொம்ப ஆக்ரோசமா இருந்தது. பாக்கவே பயமா இருந்தது. திரும்பி அதே வழில தான் கண்ணூர் போனும். போற வழில முன்னாடி சொன்ன மாறி பேகல் போர்ட். கண்ணூர்லும் பீச் இருக்கு. கண்ணூர்ல இருந்து கோயம்புத்தூர் போற வழில மாஹி பீச்க்கு போலாம். கண்ணூர் மாஹி 35 km. ரோடு சுமாரா இருக்கும். நம்ம ECR மாறியே சைடுல பீச் வரும். இது WCR. அப்பறம் கோழிகோடு போனும். மாஹில இருந்து 60 km. அங்க இருந்து பாலக்காடு வழியா கோயம்புத்தூர் 190 km. ஆக மொத்தம் மங்களூர்ல இருந்து கோயம்புத்தூர் 420 km. பாலக்காடு கோயம்புத்தூர் ரோடு மகா மோசமா இருக்கும் பாத்து வண்டி ஓட்டுங்க.
எப்பவும் ஒரு டூர் முடியும் போது, கடைசி 40 km. ஓட்டவே முடியாது. செம மொக்கையா இருக்கும். அப்பவும் அப்டி தான் இருந்தது. பத்தாததுக்கு போலீஸ் வேற தமிழ்நாடு எல்லைல நிறுத்துனாங்க. ஓசி வண்டி, அதனால வண்டி நம்பர் தெரில. ஒரு வழியா பேசி சமாளிச்சிட்டு இருக்கும் போது, நவீன் எதுக்கோ சிரிச்சிட்டு இருந்தான். ஏட்டு எதுக்குப்பா சிரிக்கறனு கேட்டுட்டு இருந்தாரு. அவன் ஒன்னும் இல்ல சார் அப்டினு சொல்லிட்டு இருந்தான். அவங்க போக சொன்னதும் வழில கேட்டேன் "எதுக்குடா சிரிச்ச?" " ஒன்னும் இல்ல மச்சி, 3 நாளா ஒரே டூர்ல இருக்கோமா, சரியா பல்லு தேய்கல, அவர் வேற குடிச்சிருக்கேனா பாக்க ஊத சொன்னாரு, ரொம்ப கப் அடிச்சு அவர் மயக்கம் போட்டுட்டாருனா என்ன பண்ண? அதான் சிரிச்சேன்"
ஒரு வழியா சிரிச்சுட்டே கோயம்புத்தூர் வந்தோம்.
பின் குறிப்பு : 3 நாளா நிக்காம 1000 km ஓடிருக்கு வண்டி. ரெண்டு வண்டிலும் செம சத்தம். அடுத்த நாள் மைனா சொன்னான். நாம போனதுக்கு வண்டிக்காரன் 1000 ரூபா செலவழிச்சு இருக்கான்டானு. விடு மச்சி நம்ம ஊர் சுத்த அவன் நம்ம தத்து எடுத்துட்டான்னு நெனச்சுக்கலாம். (இருந்தாலும் அவனுக்கு காசு குடுத்துட்டோம், நாங்க ரொம்ப நல்லவங்கல?)
9 comments:
தூக்கம் வருது மச்சி... இறுதி பகுதி சொதபல்...
Nice boss
But matha part ku ithu konjam sothapal than...:-)
@ krish : உங்க ஐடியாக்கு நன்றி. அடுத்த பதிவுல கரெக்ட் பண்ணிக்கறேன். அப்போ அப்போ தப்பு பண்ணா கொஞ்சம் சுட்டி காட்டுங்க. ஏன்னா நான் இப்போ தான் இப்டி எல்லாம் எழுத பழகீட்டு இருக்கேன்.
@ Prasanna : சாரி தல, உங்க அன்புக்கு நன்றி, அடுத்த பதிவுல கண்டிப்பா கரெக்ட் பண்ணிக்கறேன். சீக்கரமே அடுத்த டூர்....
summar thaan nanba..tour mudiyum pothum mokkai thaan..tour history eluthi mudikum pothum mokkai thaan...bt styl a grt grt attempt 4 a beginner...nyssssssss
@ rahul : மிக்க நன்றி நண்பா, அடுத்த டூர் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுத ட்ரை பண்றேன்....
Nalla irruku arun.....I dont feel it as sothappal.. indha tour konjam mokkai ya irrunthu irruku adhan niyum mokkaiya eluthita.. but i like the way u present..i wish u to have enjoyable tours..
@ Mithra : நன்றி... அவ்ளோ ஒன்னும் சொதப்பல் டூர் இல்ல, நான் தான் கொஞ்சம் சொதப்பல்லா எழுதீட்டேன்... நெக்ஸ்ட் சரி பண்ணிடறேன்.
Post a Comment