எங்க ஹாஸ்டல்ல இருந்து காலேஜ் போற வழி எல்லாம் வயல்வெளி. மலை பகுதில வயல் எப்டி இருக்கும்னு உங்களால கற்பனை பண்ண முடியும்னு நெனைக்கறேன். நாங்க காலேஜ்ல சேந்தது தெரியாம அந்த வயல்ல காரட் போட்ருந்தாங்க. அந்த செடிய அப்டி ஒரு ஆட்டு, இப்டி ஒரு ஆட்டு, கைல காரட். அந்த காரட் மண்ண கழுவி கழுவியே எங்க ஹாஸ்டல் வாஷ் பேசின், பிரவுன் கலர் ஆய்டுச்சு. பொருத்து பொருத்து பாத்தாங்க அந்த வயலுக்கு சொந்தகாரங்க. பின்ன, காட்டு பன்னி காரட்ட தின்னத விட ஹாஸ்டல் பன்னிங்க அதிகமா தின்னா அவங்க என்ன பண்ணுவாங்க?. அடுத்த மகசூல் முள்ளங்கி போட்டுடாங்க. அப்பறம் என்ன பண்ண, அப்போ தான் நான் முள்ளங்கி சாப்ட்டு பழகினேன். என்ன தான் இருந்தாலும் ஓசில வருதுனா பினாயில் கூட டேஸ்டா தான் இருக்கும் போல.
இப்டி திருட்டும் தின்பண்டமுமா எங்க மொதல் வருஷம் போய்ட்டு இருந்தது. அட இத சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இந்த மேட்டர் சொல்ல எங்க ஹாஸ்டல் எப்டி இருக்குனு சொல்லணும். பூமராங் (boomerang )இருக்குல்ல அதே மாறி தான் எங்க ஹாஸ்டல் இருக்கும். பூமராங் ஓட ஒரு சைடுல தான் என்ட்ரி. இன்னொரு சைடு அடச்சிருக்கும், அந்த சைடு தான் எங்க பசங்க ரூம். ரெண்டு ரூம் எதிர் எதிர்ல. பூமராங் ஓட நடூல டிவி ரூம். அந்த டிவி ரூம் க்கு நேர் எதிர்ல வார்டன் ரூம். அதனால வார்டன் ரூம் இருக்குற எடத்ல இருந்து ரெண்டு பக்கம் பாத்தாலும் தெரியாது. அது தான் எங்களுக்கு ரொம்ப வசதி.
வெள்ளிகிழமை, இல்ல சனிக்கிழமை எல்லா பசங்களும் வார்டன் தூங்குன அப்பறம் டிவி ரூம்க்கு போவோம். வார்டன் தூங்கிட்டாரானு பாக்கற வேலை பிரகாஷ்க்கு. எல்லாரும் டிவி ரூம்ல அசெம்பிள் ஆகறக்குள்ள இவன பத்தி பாத்துடலாம். எதாச்சும் பிரசன்ன வந்தா, எல்லாரும் உக்காந்து ஆள் ஆளுக்கு ஒரு ஐடியா சொல்லிட்டு இருப்போம். அப்போ பையன் ஒரு ஐடியா சொல்வான் பாருங்க, அப்பிடி யாருமே யோசிக்க முடியாது. அந்த மாறி ஒரு சூப்பர் ஐடியா சொல்லுவான். அவன் சொல்ற மேட்டர் 90 % ஓகே ஆய்டும். ஆனா வித்யாசமா எல்லா விசயத்தையும் பாத்து பாத்து, கடசில ரொம்ப வித்யாசமா பாக்க ஆரம்பிச்சிட்டான். அதனால இவன் பேறு நெகடிவ். இன்னொரு பிரபலமான பேறு டாக்டர் பிரகாஷ் (இதுக்கு விளக்கம் தேவைப்படாதுனு நினைக்கறேன்). சொந்த ஊர் கரூர் பக்கதுல வேலாயுதம்பாளையம்.
இங்கிலீஷ் படத்ல எல்லாம் வருமே, அந்த மாறி வார்டன் ரூம்ல லைட் ஆப் ஆனப்பறம், அந்த எடத்ல இருந்து நம்ம பிரகாஷ் டார்ச் லைட் அடிப்பாரு. உடனே ஒருத்தர் ஒருத்தரா போய்டுவோம். போய் டிஸ்கவரி சேனல் பாப்போம்னு சொன்னா நம்பவா போறீங்க. மிட் நைட் மசாலா தான். ரொம்ப எதிர் பாத்துட்டு போனா, மிஞ்சி போனா கட்டிபுடி கட்டிப்புடிடா ஓடிட்டு இருக்கும். ஒரு ஒன்னு ரெண்டு மாசம் இதே மாறி நல்லா தான் போய்ட்டு இருந்தது. அன்னைக்கும் நல்லா தான் போயிருக்கும். நம்ம பிரகாஷ் வித்யாசமா யோசிக்காம இருந்தா.
அன்னைக்கு தலைவர், "டிஸ்கோ ராமா, டிஸ்கோ கிருஷ்ணா, டிஸ்கோ ஸ்ரீராமா" சூப்பர்ரா பாடிட்டு இருந்தாரு. வார்டன் ரூம்ல அவர் எந்திரிக்கற மாறி சவுண்ட் கேட்டுது. எல்லாரும் தெரிச்சிட்டோம். ரூம் குள்ள போய் அமைதியா இருந்தோம்.
"ஏன்டா இப்டி பயந்து சாகறீங்க, அதும் இல்லாம இப்டி பண்ணா தான் மாட்டிப்போம். இப்போ பார் நான் எதார்த்தமா வார்டன் ரூம்ம கிராஸ் பண்ணி அந்த பக்கம் போய்ட்டு வரேன். அப்போ தான் நம்ம மேல தப்பு இல்லாத மாறி இருக்கும்" சொன்னது யார்னு சொல்ல தேவை இல்ல.
வலைல மீன் மாட்ற மாறி இவனே போய் மாட்டி, இவனே டிவி பாத்துட்டு இருந்தோம்னு ஒளறி, அடுத்த மன்னிப்பு கடிதம் எழுதினோம். பின்ன ராத்திரி 3 மணிக்கு பேய் மாறி இவன் நடந்து போனா சந்தேகம் வராதா? இத்தனைக்கும் அவர் சுச்சு போக எந்திருச்சிருக்காரு (அவரே சிரிசிட்டே சொல்லிட்டு இருந்தாரு,"நீங்களே மாட்டீங்களேடா" ) .
ஜாலியாவே போய்ட்டு இருந்தா லைப் போர் அடிச்சிறாதா? (apology எழுதறது என்னடா ஜாலினு கேக்கறீங்களா? அது அப்டி தான்.) சின்ன சின்ன சண்ட எங்களுக்குள்ளும் வந்தது.
5 comments:
Apology letter laey un college oduchunu sollu.. Padikaratha vida appology letters dhan neraya eluthi irruka...mmmmm.... Indha blog interesting a irruku....
@ Mithra : அரசியல்ல இதெலாம் சாதாரணம் தான?
Yep Yep....
அருமையான நினைவுகள் நண்பரே...
@வெறும்பய : மிக்க நன்றி நண்பா... அடிக்கடி வாங்க, நெறையா பேர கூட்டிட்டு வாங்க :)
Post a Comment