என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Friday, October 29, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 6

எப்பவும் காலேஜ் முடிஞ்சதும் நேரா ஹாஸ்டல் மெஸ் போய் டீ சாப்டுட்டு, அங்க பசங்க கூட கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு அப்பறம் ஹாஸ்டல் போவோம். அன்னைக்கும் அதே மாறி, காலேஜ் முடிஞ்சதும் மெஸ்ல டீ சாப்டுட்டு இருந்தோம், நானும் விஜயும்.  அப்போ நரசிம்மா மட்டும் வந்தான்.

நரசிம்மா, வேலூர் பையன். செல்லமா சிம்மா. அவங்க அப்பா சொன்னதுக்கு வேண்டி இன்ஜினியரிங் படிச்சிட்டு இருந்தான், அவனுக்கு ஆனா ஆர்ட்ஸ் படிக்கணும்னு ஆசை. இவனுக்கு DD வந்திருச்சுன்னா, காலேஜ்ஜே குதூகலமாய்டும். DD வந்த அன்னைக்கு கண்டிப்பா சுத்த போவோம். ஒரு தடவ இவன் DDய பேங்க்ல மாத்த முடியாது, பேங்க்லயே பணம் இல்லனு சொல்லிடாங்கனா பாத்துக்கங்க ( கற்பனை இல்லீங்க, நெஜம்மா). 

"என்னடா பசங்க யாரையும் காணோம்? நீ மட்டும் வர" னு விஜய் கேட்டான்.
"நாளைக்கு ரீ எக்ஸாம்ல அதனால படிக்கறேன்னு எல்லாரும் கட், ஹாஸ்டல்ல இருப்பாங்க" 

அட பாவிங்களா, மத்யானம் கட்டா?  அப்போ எல்லாரும் படிச்சு பாஸ் பண்ணிடுவான்களோ? நான் மட்டும் பெயில் ஆய்டா என்ன பண்ண? 
இப்டி நெனச்சிட்டே ஹாஸ்டல் போய்ட்டு இருந்தேன். ஆனா நம்ம பசங்க என் நெனப்ப தவிடு பொடி ஆக்கீடாங்க. ஹாஸ்டல் குள்ள வரும் போது எல்லாரும் செம சந்தோசமா இருந்தாங்க. என்னடா ஆச்சு, எக்ஸாம் கான்செல் பண்ணிட்டாங்களானு JP கிட்ட கேட்டேன்.(அடுத்து இவன பத்தி)

"அதெல்லாம் இல்ல மாப்ள, அன்னிக்கு ________ படம் ஹாஸ்டல்ல பாத்ததுக்கு apology எழுதினோமே, இன்னைக்கு அதெல்லாம் முறி அடிக்கற மாறி நம்ம பசங்க சாதன பண்ணிட்டோம்" 

பக்கி பய புள்ளைங்க, எக்ஸாம் படிக்கறேன்னு லீவ் போட்டுட்டு, எல்லாரும் சேந்து, அதே ஹாஸ்டல் டிவில பிட் படம் போட்டு பாத்திருக்காணுங்க. இத பண்ணிட்டு என்னமோ அக்னி ஏவுகணை விட்டு சாதன பண்ண மாறி பெருமை வேற. எனக்கும் விஜய்கும் என்ன கடுப்புன்னா, எங்கள விட்டுட்டு பாத்துட்டானுங்க தான். ( எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான). அதுக்கப்றம் படம் எப்டினு பேசி செம காமெடி(அதெலாம் சென்சார்).

அதுக்கப்பறம் படிக்க ஆரம்பிச்சிருந்தா கூட apology எழுதிருக்க மாட்டோம்.
நம்ம லீடர் வந்தாரு, கைல கைப்பந்து (volley ball ங்க, நாங்க எல்லாம் ஏதோ சுமாரா வெளாடுவோம்)

"மச்சி, வாங்கடா ஒரு ஒன் ஹவர் விளையாடலாம்"  
எப்டியும் ரகு, விஜய் வர மாட்டாங்க, படிப்பாளிங்க. நான் தான் சிக்குவேன்.

"என்னடா எல்லாம் படிச்சாச்சா, மத்யானம் வேற கட் போட்டு படிச்சிட்ட, நாளைக்கு நீ பாஸ் பண்ணிடுவ, இப்போ தான் நான் புக்கே தொடரேன்"
"ஆமா ஆமா, நாங்க படிச்ச லட்சணம் சகிலா சேச்சி கிட்டையும் அந்த இங்கிலீஷ் பிகர் கிட்டையும் தான் கேக்கணும் (அப்போ ரெண்டு படமா?), கொஞ்ச நேரம் மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்டா அப்றம் படிக்கலாம்" ( ஆமா  இப்போ படிக்க ஆரம்பிச்சாலே வெளங்காது)

அப்போ கூட அவன் பேச்ச கேக்கமா இருந்தா apology  எழுதிருக்க மாட்டோம். என்ன பண்ண சனியன்ன தூக்கி பனியன் குள்ள போட்டுட்டு போனோம் (விஜயும், ரகுவும் வரல).
நல்லா விளையாண்டு முடிச்சிட்டு, செம சத்தமா பேசிட்டு வந்திட்டு இருந்தோம். 

நான் சொன்னேன் "மச்சி வார்டன் வராருடா"
"வந்தா என்ன, நம்ம படம் பாத்தத அவர் கண்டு புடிக்கவே முடியாது"இது JP.
"குட் ஈவ்னிங் சார்" ( எங்க அப்பன் குதிர் குள்ள இல்லையே!)
"ஏன்டா, நாளைக்கு எக்ஸாம் தான, பால்லும் கையுமா இருக்கீங்க"
"இல்ல சார் சும்மா ஒரு கேம் போட்டோம், இப்போ போய் படிக்கணும்" இது சுனில்.
"ஆமா ஆமா, நீ படிக்கற லட்சணம் தான் எனக்கு தெரியுமே" (வார்டன்னும் நெல்லை தான், அதனால சுனில் மேல தனி பாசம்.)
"மொதல் வேலை உன் வீட்டுக்கு கால் பண்ணி சொல்றேன், உங்க பையன் என்ன பண்ணிட்டு  இருக்கான் பாருங்கனு"(இப்போ தெரியுதா பாசம்?)
"எல்லார் வீட்டு நம்பர்ரும், எழுதுங்கடா, நாளைக்கு பரிட்சய வெச்சுட்டு வெளாட்டு கேக்குதா?"
 
ஒரு 2 மணி நேரம் செம திட்டு, அப்பறம் apologyல முடிஞ்சதுனு சொல்லணுமா?
எல்லாம் முடிஞ்சு சாப்டுட்டு  புக் எடுக்கும் போது 10 மணி. நல்லா தான் படிச்சிட்டு படுத்தோம்.

அதுக்கப்றம் நம்ம ஆள் ஒருத்தன் பண்ண காரியம், ரூம் குள்ள எவனுமே தூங்க முடில. என்னவா?........... சொல்றேன்.

9 comments:

ப.செல்வக்குமார் said...

//சாப்டுட்டு இருந்தோம், நானும் விஜயும். ///
நடிகர் விஜய்ங்களா ..?

ப.செல்வக்குமார் said...

//"குட் ஈவ்னிங் சார்" ( எங்க அப்பன் குதிர் குள்ள இல்லையே!)//
இதையும் சேர்த்தா சொன்னீங்க ..?

ப.செல்வக்குமார் said...

//அதுக்கப்றம் நம்ம ஆள் ஒருத்தன் பண்ண காரியம், ரூம் குள்ள எவனுமே தூங்க முடில. என்னவா?........... சொல்றேன்.//

இதுல கூட தொடரா ..? சரி சரி சொல்லுங்க ..

arunmaddy said...

//சாப்டுட்டு இருந்தோம், நானும் விஜயும். ///
நடிகர் விஜய்ங்களா ..?////
அவர் கூட சாப்பிட போரக்கு பதிலா பட்னியா இருந்திருவேன். பார்ட் 3 படிச்சு பாருங்க விஜய் யாருன்னு தெரியும்.

//"குட் ஈவ்னிங் சார்" ( எங்க அப்பன் குதிர் குள்ள இல்லையே!)//
இதையும் சேர்த்தா சொன்னீங்க ..?//
இந்த மாறி எதாச்சும் கேப்பீங்கனு தான் அடைப்பு குறி குள்ள போட்டு இருக்கோம்ல.

//அதுக்கப்றம் நம்ம ஆள் ஒருத்தன் பண்ண காரியம், ரூம் குள்ள எவனுமே தூங்க முடில. என்னவா?........... சொல்றேன்.//

இதுல கூட தொடரா ..? சரி சரி சொல்லுங்க ..//

தல!!! 1 வாரமா தொடர் தான் எழுதீட்டு இருக்கேன். புல்லா படிங்க...

வந்ததுக்கு நன்றி தல!!!

வெறும்பய said...

எலேய் மக்கா கொஞ்சம் பொறுமையா போனா நல்லாயிருக்கும்...

arunmaddy said...

//எலேய் மக்கா கொஞ்சம் பொறுமையா போனா நல்லாயிருக்கும்...//

போலாம் தான் தல!!! இப்போ தான் மொத செமஸ்டர் முடிஞ்சிருக்கு, இதுக்கு மேல இழுத்தா, மொத வருஷம் முடியறக்கே 50 பதிவு ஆய்டும், உங்களுக்கு ஓகேனா எனக்கு ஓகே தான்.

rahul said...

machan..intha pakuthi konjamm dull adikuthu da...somthn missin

rockarthik said...

enna da machi..hostel la bit padam paakradhu Tamilnatula ella college la yum nadandiruku pola ;-)

Arun Prasath said...

rockarthik : ஹா ஹா ஹா, இதுக்கு பேர் தான் வேற்றுமையில் ஒற்றுமை