என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Saturday, October 23, 2010

மங்களூர் பகுதி 3


என்ன தான் நாங்க 10 மணிக்கு எந்திரிக்கற பசங்களா இருந்தாலும், டூர் அப்டினு வந்துட்டா, என்ன சொன்னாலும் செய்வோம். அதனால அன்னைக்கும் சீக்கரமே எந்திரிச்சாச்சு. காலைல எழுந்து கெளம்பும் போது நவீன்கும் மைனாகும் சண்ட. சப்ப மேட்டர், வண்டி யார் ஓட்டறது அப்டினு தான். டூர் போனா நான் தான் எப்பயும் வண்டி ஓட்டுவேன், அன்னைக்கும் ஒரு வண்டி எனக்கு, இன்னொரு வண்டிக்கு தான் சண்ட. பாதி பாதி ஓடுங்கடானு எல்லாம் சொல்லி பாத்தாச்சு, மொதல யாரு எடுக்கறதுனு தான சண்டையே. என்னமோ பேசினானுங்க அப்பறம் நவீன் தான் வண்டிய எடுத்தான். அதுக்கப்பறம் அவனுங்க ரெண்டு பேரும் தான் கடைசி வரைக்கும் ஏதோ காதலர்கள் மாறி வண்டிய விட்டு எறங்கவே இல்ல. எப்டியோ நல்லா இருந்தா சரி தான்னு விட்டுட்டேன்.

ஊட்டில இருந்து ஒரு 8 மணிக்கு சாப்ட்டுட்டு கெளம்பினோம். பைக்காரா வழியா கூடலூர் ரோடுல போய்ட்டு இருந்தோம். என் வாழ்க்கைலயே ரொம்ப அனுபவிச்சு பைக் ஓட்டுனது அந்த 50 km தான். லேசா பனி, கொஞ்சமா மழை, அதாவது சாரல், கொஞ்சம் குளிர், இப்போ நெனச்சாலும் அந்த நொடி நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு. (லவ்வர் கூட போயிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்!!! ஹம்ம், பின்னாடி பாத்தா தீனா, ஈ ஈ னு இளிக்கறான். நான் என் விதிய நொந்துட்டு பேசாம இயற்கைய மட்டும் ரசிச்சிட்டு வந்துட்டேன்).

கூடலூர் வந்துட்டு, தம் அடிச்சிட்டு வழி கேட்டுட்டு, சுல்தான் பத்தேரி அப்டினு ஒரு ஊருக்கு போய்ட்டு இருந்தோம். என்னனே தெரிலங்க, தமிழ்நாடு தாண்டி கேரளா போனது தான் தெரியும். மழை மழை தான். நேத்து மாறியே உள்ளாடை எல்லாம் நெனஞ்சிருச்சு. என்ன பண்ண இன்னைக்கு எப்டியும் இன்னும் 300 km போனுமே மங்களூர்க்கு. அப்டியே ஓட்டிட்டு போனோம். நடூல ஓட்டிட்டே இருக்கும் போது காஞ்சிரும். மறுபடியும் பேய் மழை, இப்டியே நின்னு நின்னு கண்ணூர் போறக்கே 5 மணி ஆய்டுச்சு.

கூடலூர்ல இருந்து சுல்தான் பத்தேரி 60  km, நாங்க போன போது ரோடு அருமையா இருந்தது, அருமையான காட்டு பாதை. பச்சை பசேல்னு இருந்தது.  சுல்தான் பத்தேரி ல இருந்து மானந்தவாடி போனும், அது 40 km. புதுசா போனா வழி கொஞ்சம் குழப்பமா இருக்கும். ஒரு ரெண்டு மூணு பேர் கிட்ட கேட்டுகங்க. அங்க இருந்து ஒரே ரோடு தான் கண்ணூர் வரைக்கும். மானந்தவாடில இருந்து கண்ணூர் 95  km.  இந்த ரோடும் நல்லா இருக்கும். அனுபவிச்சு வண்டி ஓட்டலாம். 

கண்ணூர்ல இருந்து கேரளா பார்டர் ஒரு 140  km .வெஸ்ட் கோஸ்ட் ரோடுல தான் போகணும், ரோடு கொஞ்சம் மோசம் தான். போற வழில பேகல் போர்ட் ( Bekal  fort ) னு ஒரு கோட்டை இருக்கு. பாம்பே படத்ல உயிரே உயிரே பாட்டு வரும்ல அந்த பாட்டு எடுத்த எடம் இது தான். அருமையா இருக்கும். ஆனா சாயங்காலம் 5  30  வரைக்கும் தான் உள்ள போக முடியும். நாங்க கண்ணூர் வரக்கே 5  மணி, அதனால காசர்காட் ( இது தான் கேரளா, கர்நாடகா பார்டர் ) போய் ரூம் எடுத்தோம். இந்த வழில கண்ணூர்ர விட்டா  காசர்காட்ல தான் தங்க முடியும். இத விட்டா மங்களூர் தான். கொஞ்சம் காசு அதிகம் செலவு ஆகும் மங்களூர்ல தங்குனா.


கண்ணூர்ல இருந்து கெளம்பி காசர்காட்போய் ரூம் போட்டோம். ரொம்ப எதிர் பாக்காதீங்க, ஒன்னும் நடக்கல. ரொம்ப லேட் ஆனதால சரக்கு கெடைக்கல. இழுத்து போ(பொ)த்தீட்டு தூங்கிட்டோம். எனக்கு ஒரு டவுட், 10 மணிக்கு மேல, ஒரு 4 பசங்க ஹோட்டல்ல ரூம் போட்டா அந்த ஹோட்டல்ல இருக்கறவங்க எங்கள தீவிரவாதி மாறி பாக்கறாங்களே ஏன்? நான் ரொம்ப சாதுங்க, என்ன ஏன் அவங்க டெரரிஸ்ட் மாறி பாத்தாங்கனு தெரில....

சரி இனி அடுத்த எபிசொட்ல மிச்சம்....


6 comments:

Indian said...

Interesting narration dude.Keep going.

PS: Pls remove word verification. It is annoying.

arunmaddy said...

@ Indian : உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நான் இப்போ தான் இத பழகீட்டு இருக்கேன்... சிரமத்துக்கு மன்னிக்கவும் நீங்க சொன்னத பண்ணிட்டேன்...

Mithra said...

Enna word verification? i cudnt undrstnd...

arunmaddy said...

@ Mithra : அட நீ கமெண்ட் பண்றல, அப்போ ஒரு வோர்ட் குடுத்து டைப் பண்ண சொல்லுமே.. அதான்.. இப்போ அது வராது...

Prasanna said...

Good good

Prasanna said...

Next boss