என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, October 20, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 2

ஊட்டி காலேஜ்ல சேந்ததுல ஒரு நல்ல விஷயம்   என்னனு கேட்டா, அது நம்ம நண்பர்கள் தாங்க. ( படிப்புனு நீங்க கேக்கறது காதுல விழுகுது, என்ன பாஸ் ப்ரீயா  விடுங்க )
மின்னலே படம் பாத்துட்டு  இந்த காலேஜ் எடுத்த பசங்க எல்லாம் ஒன்னு கூடிட்டோம்.

என் நண்பன் ஒருத்தன் அவன் காலேஜ் வந்தப்ப என்ன நடந்ததுனு சொன்னத நான் இங்க சொல்லியே ஆகணும். 
" காலேஜ் கேட்ல இருந்து காலேஜ் குள்ள போறவரைக்கும் வேடிக்க பாத்துட்டே வந்தேன்டா, அப்போ ஒரு பில்டிங்க பாத்தேன், ஏதோ காலேஜ் ஸ்போர்ட்ஸ் ஹால்ஆ இருக்கும்னு நெனச்சேன் மச்சி, கடசில கேட்டா, அது தான் காலேஜ் மெயின் பில்டிங்னு சொல்லிட்டாங்க, அப்போ என் மூஞ்சில வழிஞ்ச வழிசல் வெச்சு ஒரு பில்டிங்கே கட்டலாம்"      
 இந்த டயலாக் சொன்னவன் சுனில்.

ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தோசம் என்னனா சேலம் காலேஜ்க்கு இது பரவால்ல. சரி என்ன பண்ண, உலைல போட்டாச்சு, வெந்து தான ஆகணும்?. ஆனா இந்த கஷ்டம் எல்லாம் பசங்க ஒன்னா சேந்ததும் காணாம போச்சு. இனி மேல் நாங்க ஹாஸ்டல்ல பண்ண அழிச்சாட்டியம் எல்லாம் ஒன்னு ஒன்னா சொல்றேன்.

பசங்க ஒன்னா சேந்ததும் மொதல்ல ஒரு லீடர் வேணும்ல. அப்படி லீடர் ஆனவன் சுனில். பையனுக்கு நெல்லை தான் சொந்த ஊர். தமிழ் பசங்க எதிரியான மலையாள பசங்கள கவுக்க இவன் போட்டு குடுத்த சில ஐடியா பாத்து, அடடா புள்ளைக்கு என்னா அறிவுனு அவன லீடர் ஆகிட்டோம்.  இந்த பய செம சோம்பேறி, 5 அடி தூரத்துல போன் அடிச்சா எட்டி எடுக்க மாட்டான் ( என்ன விட சோம்பேறினா பாத்துக்கங்க). அதனால நொந்து போய் இவன லீடர் போஸ்ட்ல இருந்து ஏறக்கிடோம். இப்போ ஹரி தான் லீடர். ( இவன பத்தி அப்பறம் பாப்போம்) .

எங்க ஹாஸ்டல்ல மலையாள பசங்களோட சண்ட வந்த மொதல் விஷயம் டிவி.....அவன் எப்படி மலையாள சேனல் பாக்கலாம், இவன் எப்படி தமிழ் சேனல் பாக்கலாம்னு ஒரே சண்ட. அப்போ இருந்த கடுப்புல எங்க பசங்க நைட் ரூம்ல பல திட்டம் போட்டோம். (ஆமா பெரிய 5 ஆண்டு திட்டம்னு நீங்க சொல்றது காதுல விழுகுது). 

 அவனுங்க ரூம் மேல கல் எரியறது தான் மொதல் பிளான், ஆனா கண்டிப்பா மாட்டிப்போம்(எங்க ஹாஸ்டல்ல அப்படி கட்டி இருப்பாங்க) அதனால அந்த பிளான் நடக்கல, அவனுங்க வெச்சிருக்க ஷாம்பூ, சோப்பு எல்லாம் எடுத்து வாஷ் பேசின் கழுவ வெச்சிடலாம், இல்லைன்னா ________ல  ஊத்திடலாம் ( எப்டி எல்லாம் மூளை வேலை செஞ்சிருக்கு பாருங்க), இது எல்லாதையும் விட சுனில் ஒரு ஐடியா சொன்னான் பாருங்க, அதுல தான் எல்லாரும்  புல் அரிச்சு போய் அவன லீடர் ஆக்குனோம்.

" மச்சி, எல்லாரும் தூங்குன அப்பறம், ஒரு 3 இல்ல 4 மணிக்கு ரெண்டு ரெண்டு பேரா போய் அவங்க ரூம் வாசல்ல நின்னு சுச்சு போய்டலாம், பசங்க நாத்ததுல செத்திருவாங்க" இது எப்டி இருக்கு. எல்லா பசங்க மூஞ்சில ஒரு சந்தோசம், ஐடியா கெடச்சிருச்சுனு.    அப்பறம் அந்த ஐடியா செயல் படுத்த நாள் குறிச்சோம். யார் யார் எத்தன மணிக்கு போகணும், எந்த ரூம்க்கு போகணும், போய்ட்டு அவங்க அவங்க ரூம்க்கு வரணும், எல்லாம் பிளான் பண்ணி தெளிவா பேசி வெச்சாச்சு. எல்லாரும் 3 மணி வரைக்கும் முழிச்சு இருக்க ரூம்ல சீட்டு கச்சேரி தான். எனக்கு நடுக்கத்துல அப்பவே சுச்சு வந்திருச்சு ( குளிர்ல இல்லீங்க பயத்ல). யாரும் நைட் 11 க்கு மேல   சுச்சு போக கூடாதுனு லீடர் ஆர்டர் வேற. மணி 12 இருக்கும். வெளிய கொஞ்சம் சத்தம் கேட்டுச்சு.

என்னனு பாத்தா மிச்ச தமிழ் பசங்க எல்லாம் மலையாள பசங்களோட சமாதானமா போய்டலாம்னு, எங்கள கேக்காம முடிவு பண்ணி எங்களோட மிக பெரிய பிளான்ன சொதப்பிட்டாங்க. அத செயல் படுத்த முடிலயேனு எல்லாருக்கும் வருத்தம். அப்பறம் என்ன பண்ண?
இப்போ எங்களுக்குள்ள சண்ட, யாரு மொதல்ல பாத்ரூம் போகறதுனு. ஒரு வழியா வந்து படுத்தோம். 

இது தான் சொதப்பல் ப்ளான்ஸ் எல்லாத்துக்கும் ஆரம்பம்.  இதுக்கு அப்பறம் அந்த சனி, ஞாயிறு நான் ஊருக்கு போய்ட்டேன். ஊருக்கு போய்ட்டு ஞாயிறு மாலை ரூம்க்கு போனா, எல்லாரும் கன்னத்துல கை வெச்சு கப்பல் கவுந்த மாறி இருந்தாங்க. என்னடானு கேட்டதுக்கு அவனுங்க சொன்னத கேட்ட எனக்கு மயக்கமே வந்திருச்சு.

தொடரும்...

 

8 comments:

க்ரிஷ் said...

Very Interesting yaar...So Nice

Prasanna said...

Ena oru thrilling boss......What is the matter...?

Arun Prasath said...

@ krish : மொக்கையா இருந்தா சொல்லிடுங்க தல..... உங்கள் அன்புக்கு நன்றி...

@ Prasanna : இது கண்டிப்பா உள் குத்து தான்

rockarthik said...

Machi..minnale story madiriye pokudhu...

Arun Prasath said...

@rockarthik : இதெல்லாம் உண்மைலயே நடந்தது.... படத்ல இருந்து காப்பி இல்லடா ....

NaSo said...

உங்க எழுத்து நடை நல்லாருக்கு.

Arun Prasath said...

@ நாகராஜசோழன் MA : நன்றி தலைவரே....

Anonymous said...

2006 pass out ?... this is chittap / Perrussu...