என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, October 27, 2010

கல்லூரி அனுபவங்கள் பகுதி 5

எக்ஸாம் டைம்னு ஒன்னு வந்தது. அப்போ அடிக்கடி கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆய்டுச்சுன்னு புரளி கெளம்பும். ஒன்னு ரெண்டு டைம்னா பரவால்ல. எல்லா எக்ஸாம்கும் ஆளாளுக்கு ஒரு பேப்பர்ர வெச்சு படிச்சிட்டு இருந்தத பாத்து செம கடுப்பு பசங்களுக்கு.
" என்னடா ஒவ்வொருத்தன் ஒரு பேப்பர் குடுக்கறானுங்க" இது விஜய்.
"இப்டி இருந்தா வேலைக்கு ஆகாது மச்சி, நாமலும் ஒரு பேப்பர் ரீலிஸ் பண்ணனும், அப்போ தான் நம்மளையும் 4 பேர் மதிப்பாங்க"  இந்த அரிய தத்துவத்த உதிர்த்தவன் ரகு.

அவனோட ஐடியாவ பாக்கறக்கு முன்னாடி அவன பத்தி பாக்கலாம். இவனுக்கும் கோவை மாநகரம் தான் சொந்த ஊர். நானும் இவனும் 4  வருசமா ரூம் மேட்ஸ். நல்லா படிப்பான் ( இவனும், விஜய்யும் தான் படிப்ஸ், ஆனா எப்டி எங்க கூட சேந்தாங்கனு தெரில). நல்ல வேலையா இவன் மெக்கானிக்கல், இவன் கிட்ட படிக்க வர்ற பசங்கள இவன் கொட்றத பாத்தா எனக்கு கதி   கலங்கும் ( நம்ம லீடர் சுனில்லும் சேத்து தான் ). ஆனா சில நேரத்துல டெக்னிகல்  ஐடியா எல்லாம் சொல்லி அசத்துவான்.   அப்பறம் முக்கியமா இவன் ஒரு காதல் மன்னன் ( அப்பாடி என்னடா நம்ம பதிவு ஒண்ணுல கூட லவ் வரலயேனு பாத்தேன்).

"நான் புக்க பொரட்டுரேன், நீ  ஸ்டாப் சொல்லு, அந்த பேஜ்ல ஒரு கொஸ்டீன் எடுத்துடலாம், இதே மாறி 5 கொஸ்டீன் எடுக்கலாம், அப்பறம் அத சர்க்குலேசன் விட்டுடலாம்"  இது தான் அவனோட ஐடியா.
இப்படியாக எல்லா எக்ஸாம்கும் நாங்க ஒரு பேப்பர் செட் பண்ணிட்டு இருந்தோம். இதுல உச்சகட்ட காமெடி என்னன்னா, நாங்க செட் பண்ண பேப்பர்ர என் ஸ்கூல் நண்பன் ஒருத்தன்  கோயம்புத்தூர்ல இருந்து கால் பண்ணி பேப்பர் அவுட்டானு சொல்லி என்கிட்டயே சொன்னான் பாருங்க.           

சுனில், விஜய், நான், ரகு, பிரகாஷ்(இன்னும் இன்ட்ரோ குடுக்காத ரெண்டு மூணு பேர் ஒரே ரூம்ல தான் படிப்போம் ). நாங்க பண்ற அழிச்சாட்டியத்த பாத்துட்டு உங்க கூட இருந்தா படிக்க முடியாதுடானு சுனில் மட்டும் வேற ரூம்க்கு போய்ட்டான் ( தனியா படிச்சா இவரு ஸ்டேட்ல மொதல் ரேங்க் வாங்கிடுவாரு பாரு). அங்க தான் பிரச்சன ஆரம்பம். கடைசி எக்ஸாம்ல  கொஸ்டீன் பேப்பர் கண்டிப்பா அவுட்னு எனக்கும் ரகுகும் எங்க நண்பர்கள் கோயம்புத்தூர்ல இருந்து கால் பண்ணி சொன்னாங்க. நாங்களும் கண்டிப்பா அவுட் தான்னு அதே பேப்பர்ர எல்லாத்துக்கும் குடுத்து படிக்க சொல்லிட்டோம். சுனில் அவன் ரூம்க்கு போய்டதால அவன சுத்தமா மறந்துட்டோம். (லீடர்ர மறந்தது தப்பு தாங்க).

கடசில எக்ஸாம்ல பாத்தா 2 மார்க் கொஸ்டீன் கூட அவுட் ஆன பேப்பர்ல இருந்து தான் வந்தது. 100 வாங்க கூடாதுன்னு நான் ஒரே 2 மார்க் மட்டும் எழுதல.
"98 வரும்டா, அது எப்டி மாப்ள, அதே கொஸ்டீன் கேட்டாங்க?" 
"டேய் மரமண்ட, அவங்க அதே கொஸ்டீன் கேக்கலடா, அவங்க கேட்ட கொஸ்டீன் தான் அவுட் ஆய்டுச்சு" ( நாம கொஞ்சம் ட்யூப் லைட் தான).
எல்லாரும்  சந்தோசமா வந்துட்டு இருந்தோம். 

சுனில் ஏதோ கோவமா நரசிம்மா (இவன பத்தி அடுத்து) கிட்ட கத்தீட்டு இருந்தான்.
" அது எப்டிடா என்ன மட்டும் மறந்தீங்க?" 
"இல்ல மச்சி ஏதோ தெரியாம நடந்திருச்சு.."
நாங்க அங்க வந்ததும் சண்ட கொஞ்சம் முத்திடுச்சு. எங்க மேல  தப்பு, அதனால அமைதியா அவன சமாதான படுத்தி கெளம்பி ஊருக்கு போய்டோம். ஆனாலும் பையன் பயங்கர கோவத்ல இருந்தான்.( பின்ன எல்லாரும் 95, அவன் மட்டும் கப் வாங்குனா எப்டி இருக்கும்? ).

அடுத்த நாள் பேப்பர்ல ஒரு நியூஸ், " கொஸ்டீன் அவுட் ஆனதால ரீ எக்ஸாம்னு". எல்லா பசங்களுக்கும் துக்கம். நாங்க மட்டும் சண்ட ஓஞ்சிடும்னு  சந்தோஷ பட்டோம் (கழுத எக்ஸாம்ம கண்டு பயபடுறதெல்லாம் சின்ன கொழந்த பண்றது). அந்த எக்ஸாம்க்கு முந்தின நாள் தான் அடுத்த மன்னிப்பு கடிதத்துக்கான கதை களம்.






13 comments:

vidya said...

Oru vela Sunil than news paper and anna university ku thagaval kuduthano nu doubt a irruku....

Arun Prasath said...

@ Vidya : ஹா ஹா ஹா.... இது நல்லா இருக்கே, அவன் கிட்ட தான் கேக்கணும்

அருண் பிரசாத் said...

வலை அனுபவத்திற்கும் வருகைக்கும் வாழ்த்துக்கள்.

இண்ட்லி ஓட்டு பட்டன் வைங்க...

Arun Prasath said...

@ Arun prasath : (என் பேர நானே டைப் பண்ண நல்லா தான் இருக்கு.)மிக்க நன்றி தல! கொஞ்சம் அது எப்டினு சொல்லி குடுங்களேன், நானும் தேடி தேடி பாத்துட்டேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா இருக்கு நண்பா... கல்லூரி கால நினைவுகளை தட்டிஎளுப்புகிறது...

Arun Prasath said...

@வெறும்பய : இத எழுதும் போதும் அதே தான் எனக்கு தோணுது தல.... எத்தன பேர் இதே டயலாக் சொன்னாலும் தகும், கோல்டன் டேஸ்னா அது தான்....

Unknown said...

machi... ellam super da........
need more interesting matter...... pal peru maanatha atu kappal yeathanum.....

Arun Prasath said...

@ jeyaprathap : ஏன் டா உனக்கு இந்த கொலை வெறி?

NaSo said...

கல்லூரி நாட்களை நினைவு படுத்துகிறது உங்கள் பதிவு. தொடருங்கள்.

Arun Prasath said...

@ நாகராஜசோழன் MA : கண்டிப்பா தொடரும். எல்லாரையும் டார்சர் பண்ணாம விட மாட்டேன். நீங்களும் அடிக்கடி வரணும்.

Unknown said...

Sooper.... semeh interesting... ippadi dhan ella yearnum nadanthutha? paavam pa sunil nama nanbana ippadi neenga ellorum vittuteengalay.. but avanuku dhan semeh santhoshama irrunthu irrukum reexam nu therinjathum....ur blogs posts going gud... vera neraya eluthu arun...

Arun Prasath said...

Mithra : ஒரு டைம் தான் பேப்பர் அவுட் ஆச்சு... நாங்க என்ன பிளான் பண்ணியா விட்டோம்? தெரியாம நடந்தது....

Unknown said...

hmm arun pattaya kelapu da