என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Wednesday, October 20, 2010

மங்களூர் பகுதி 2



இந்த பதிவோட முக்கிய நோக்கமே டூர் பத்தி பேசறது. எப்படி  போகணும், ரோடு எல்லாம் எப்படி  இருக்கும்றது தான். அதனால இந்த கதைக்கு நடுல இப்டி கலர் மாத்தி எழுதிருக்க எடம் எல்லாம் வழி பத்தி எழுதி இருப்பேன்.. இதை விட்டுட்டு படிச்சாலும் கதை புரியும்.... 

அடுத்த பிரச்சனை பணம், ATM சென்டர்ல போய் என் கார்ட போட்டேன், அது காரி மூஞ்சில துப்பிடுச்சு, மினிமம் balance கூட இல்லடானு சொல்லி தொரத்தி விட்டுருச்சு. 
நவீன் கிட்ட சொன்னேன், '' மச்சி பணம் இல்லடா", 
"ஒன்னும் கவலை படாதடா (அம்பானி கசின் பிரதர் இவரு), தீனாக்கு சம்பளம் போட்ருக்காங்க, விடு பாத்துக்கலாம்' ... (பய புள்ள, நேத்து தான் காசு இல்லைங்கற காரணத்துக்காக தம்ம விட போறேன்னு சொன்னானே , இப்போ செல்வ செழிப்பு மாறி பேசறானேனு  பாத்தேன்). 

"சரி அத விடு, ஊட்டி போறோம்னு சொல்லி தான  கூட்டிட்டு போறோம், எப்படிடா மங்களூர்னு சொல்றது" அதுக்கு நவீன் ஒரு சிரிப்பு சிரிச்சான் பாருங்க, நம்ம தலைவர் வில்லனா வரும் போது சிரிப்பாரே அது மாறி. எனக்கு அப்பவே வயித்த கலக்குச்சு, சரி நடக்கறது நடக்கட்டும்னு விட்டுட்டேன்.

எப்படியோ டீ, தம் எல்லாம் அடிச்சிட்டு கெளம்பிட்டோம். 
துடியலூர்ல  பெட்ரோல் போடும் போது நானே மைனா கிட்ட வாய் விட்டு மாட்டிகிட்டேன் .  
" அண்ணே டாங்க் புல் பண்ணுங்க", இது நான்.
"ஊட்டிகு எதுக்கு டா  டாங்க் புல் பண்ற" இது மைனா, (ஐயோ மாடிகிட்டேனே, தவள, தவள )
அப்பறம் என்ன பண்ண, மங்களூர் போற பிளான் பத்தி சொல்லிட்டேன். ஏதோ பையன் நல்ல மூட் ல இருந்தான், அதனால தப்பிச்சேன். தீனா கிட்ட போட்டு குடுத்துடாதனு சொன்னதுக்கு, '' அவன் கிட்ட எப்போடா சொல்ல போறீங்க?"
" இப்போவே சொல்லிட்டா அவனுக்கு ஆபீஸ் பக்கம் தான், அப்டியே ஓடிருவான், அதனால ஊட்டி போய் சொல்லலாம், அப்போ தான் கூட வருவான், அதும் இல்லாம டூர்க்கு  அவன் தான் காசு குடுக்கணும்" னு சொன்னேன். அப்பறம் தான் ஒத்துக்கிட்டான். ( கிரேட் எஸ்கேப் )

ஊட்டி போறதுக்கு மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கு. அதுல 14  வது வளைவு ஜங்ஷன் பேறு காட்டேரி ஜங்ஷன். நாங்க காலேஜ் சேந்த போது மேட்டுபாளையம் ஊட்டி ரோடு மகா மோசம், அதனால 14 வளைவுல இருந்து  காட்டேரி ஜங்ஷன் வழியா போய்டுவோம். ரோடு நல்லா இருக்கும். ஊட்டி போறவங்க ஒரு சேஞ்சுகு அந்த ரோடு வழியா போய் பாருங்க, அழகா இருக்கும். 1 km தான் சுத்து. வழி- காட்டேரி ஜங்ஷன் - காட்டேரி கிராமம் - பாலாடா - எள்ளநல்லி - ஊட்டி.

   கூடலூர் போய் ரூம் எடுத்துக்கலாம்னு நானும் நவீன்னும் பிளான் பண்ணோம் . ஊட்டி போக சாயங்காலம் ஆய்டுச்சு, அப்போ ஊட்டில ஒரு மழை அடிச்சது  பாருங்க, உள்ளாடை எல்லாம் நனைஞ்சு, அந்த குளிர்ல  நனைஞ்ச கோழி மாறி ஆய்டோம். மழை விட நைட் ஆய்டுச்சு. இனி கூடலூர் போனா ரூம் எடுக்கறது கஷ்டம்னு ஊட்டிலயே ரூம் போட்டுட்டோம். மழைல நனைஞ்சு ஊட்டில ரூம் எடுத்தா என்ன பண்ணுவோமோ அத  தான் பண்ணோம். ( அட டாஸ்மாக் தான் ).

ரெண்டு ரவுண்டு போனதும் தீனா கிட்ட மெதுவா சொன்னோம், மங்களூர் பிளான் பத்தி, அவனுக்கு அடிச்ச போதை பாதி ஏறங்கிடுச்சு. பேஸ்து மாறி பாத்தான், ஒரு கொல வெறி அவன் கண் ல பாத்தேன். ஒரு டயலாக் சொன்னான் பாருங்க, '' என்னை  வேலைய விட்டு தூக்கறதுல  உங்களுக்கு என்னடா சந்தோசம்? "  

அப்பறம் அவன எப்டியோ சமாதான படுத்தி சாப்ட கூட்டிட்டு போனோம். எங்க மேல இருந்த கடுப்புல சர்வர் கிட்ட சண்ட போட்டான். ஒன்னும் மேட்டர் இல்ல, ஆம்லேட்ல  உப்பு போடல, அதான் பிரச்சனை. அத நாங்க பேசி தீத்துட்டு பாத்தா இவன காணோம். வெளிய இவரு ஆம்லேட் போட்டுட்டு இருக்காரு. எல்லாம் முடிஞ்சு அவனுக்கு லிம்கா வாங்கி குடுத்துட்டு ரூம்க்கு  வந்து படுத்தோம். காலைல சீக்கரமா எந்திரிக்கணும்னு அலாரம் எல்லாம் வெச்சிட்டு படுத்தாச்சு.

இப்போ நெறைய போடாச்சு, இனி அடுத்த பதிவுல..

பின் குறிப்பு : 
நீங்க கேக்கலாம், மங்களூர் போக எதுக்கு ஊட்டி போனீங்கனு. 
நாங்க எந்த டூர் போனாலும் ஆரம்பம் ஊட்டில இருக்கும், இல்ல முடிவு ஊட்டில இருக்கும். அங்க 4  வருஷம் படிச்சதால ஒரு ஈர்ப்பு ஊட்டி மேல. 

6 comments:

rockarthik said...

machi..server kooda sanda podra palakkam unga gang la ellarkum iruka?

க்ரிஷ் said...

நல்ல கதை சொல்ற மச்சி.. ரசிக்கும் படி இருக்கு... :-)

Arun Prasath said...

@ rockarthik : ஹா ஹா ஹா, எல்லாம் சும்மா டா... ஒரு கோவத்துல தான்...

Arun Prasath said...

@ krish : நன்றி நன்றி அடிக்கடி வாங்க....

Prasanna said...

Continue boss...ne yen director aga kudathu?

Arun Prasath said...

@Prasanna : இதுல ஏதோ உள் குத்து இருக்கற மாறி இருக்கே