என்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.
நானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.
படிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க

Thursday, October 28, 2010

அடுத்த சுற்றுலா: பாலி பகுதி 1

நாம தான் அங்க இங்கனு இல்லாம கண்டபடி ஊர் சுத்தி இருக்கோமே, அடுத்து என்ன போடலாம்னு ஒரே கொழப்பமா இருந்தது. அப்பறம் நம்ம அருண் பிரசாத் அண்ணே அவங்க பாராசூட் அனுபவம் பத்தி எழுதி இருந்தாங்க. அத பாத்த அப்பறம் தான் சரி இத போடலாம்னு முடிவு பண்ணேன். அவர் அனுபவத்த இங்க  படிங்க.
-------------------------------------------------------------------------------------------------------
" மச்சி டீ அடிக்க போலாம் வா" கூப்டது கோகுல்.
" என்னடா திடீர்னு கோயம்புத்தூர் பக்கம்?"
"இல்லடா இன்னும் ரெண்டு வாரத்துல சிங்கப்பூர் போறேன், என்னோட பாஸ்போர்ட் மழைல நெனஞ்சு கொஞ்சம் அழிஞ்சிருச்சு, அது மாத்தணும், அதுக்கு தான் வந்தேன்"  சொல்லிட்டு இருக்கும் போதே அவனுக்கு போன் வந்துச்சு. 

இவன் ஊர் தஞ்சாவூர். பெரிய வியாபார காந்தம் ( அதாங்க Business magnet). இவன் கோயம்புத்தூர்ல காலேஜ் படிச்சான். இவன எப்டி பழக்கம்னு மெதுவா சொல்றேன். ரொம்ப நல்ல பையன். ஆன என்ன விட மொக்கை போடுவான்னா பாத்துக்குங்க. சரி சரி இப்போ அவன் போன்ல என்ன பேசுனான்னு பாக்கலாம். 

"சொல்லு மாப்ள"
.................
"ம்ம், 3 பேர் மட்டுமா? மொக்கையா இருக்குமே? சுனில்ல கேட்டியா?"
.................
"ஆமா, அதும் சரி தான், சரி கோயம்புத்தூர்ல ஒருத்தன் இருக்கான், அவன கேட்டு பாக்கறேன்" ( அவன் என்ன ஓர கண்ல பாத்துட்டு இருந்தான்னு சொல்லணுமா என்ன, அதான் நம்மல கேக்காமயே முடிவு  எடுத்துடுவாய்ங்களே!).

போன் வெச்சுட்டு என்ன ஒரு பார்வை பாத்தான் பாருங்க, காதலி கூட காதலன அப்டி பாத்திருக்க மாட்டா.

" டேய் பாலி போலாம் வா" ( என்னது என்ன பலி குடுக்க போறியா?). 
தம்  அடிச்சு உங்களுக்கு புரை ஏறிருக்கா? அன்னைக்கு எனக்கு ஏறுச்சு.
"என்னாது? அடப்பாவி, நான் தான் அந்த கோயம்புத்தூர்ல இருக்கறவனா?(இப்போ தான் கண்டுபுடிச்சியா?), சிங்கப்பூர்னு சொன்ன?"
"ஆமாடா, நான் சிங்கப்பூர் போறேன், ரெண்டு நாள் கழிச்சு, நானும் சுரேஷும், அங்க இருந்து பாலி வந்திடுவோம்,  அப்பறம்  வினீத் ஆஸ்திரேலியால இருக்கான்ல அவனும் வந்திடுவான், நீ மெட்ராஸ்ல இருந்து நேரா பாலி வந்துடு,"
என்ன தல சுத்துதா? என்னோட நெலமைய யோசிச்சு பாருங்க. 
"அது எங்கடா இருக்கு?"
"இந்தோனேசியா மச்சி"
நான் யோசிச்சிட்டு இருந்தேன். "போலாமா? ஆபீஸ்ல லீவ் தருவாங்களா?" 
அவன் போன் பண்ணத நான் பாக்காம போய்ட்டேன். 

"ஆமாடா, ம்ம், சென்னைல இருந்து சீப் டிக்கெட் பாரு" ( இன்னும் யோசிகல இர்ர்ருங்கடா!!!!)
...............
"அதெல்லாம் அவன் தனியா வந்திடுவான்" ( நான் எப்போடா சொன்னேன்?)
...............
"ரைட், நீ எனக்கு அனுப்பீடு, நான் அவன் கிட்ட சொல்லிடறேன்"

இப்போ பாத்த பார்வை கொஞ்சம் வேற மாறி இருந்தது.(என்னமோ இடிக்குதே)

"மச்சி, டிக்கெட் ஓகே, 20 k வருது ( 20000 ங்க ), நான் போட சொல்லிட்டேன்" 
( ஓ, ஸ்பான்சர்ரா? அப்போ ஓகே!!!) 
" நீ மெதுவா குடு "( அப்போ குடுக்கணுமா, கிழிஞ்சது)
"மாப்ள, டிக்கெட்டே 20 னா, செலவு எல்லாம் கைய கடிக்கும்டா"
"என்னடா, நீயா பேசற, நாம என்னைக்குடா காச பத்தி கவலை பட்டு இருக்கோம்? அதும் இல்லாம டூர்னு சொன்னதும் என்ன ஏதுனு கேக்காம  நீ வர வேணாமா? 
(ரைட்டு டா, கம்பளி எல்லாம் ரெடியா வெச்சுக்குட்டு, போத்த ஆள தேடறீங்க, சிக்கீட்டேன்).

நான் போறேன்னு தெரிஞ்சதும் ஏகபட்ட கால். அதுல ஒன்னு சுனில்.
"என்னடா பாலி போற போல"
"அத ஏன்டா கேக்கற, லைட்டா யோசிச்சேன், போலாமானு, அதுக்குள்ள டிக்கெட் போட்டு அனுப்பீட்டாங்க, என்ன பண்ண சொல்லு?"
" ஹா, ஹா என்ன கூப்டாங்க, நான் தப்பிச்சிடேன், நீ  சிக்கீட்ட"
"சின்னதா ஆசை, அத யூஸ் பண்ணிடாங்க. பொது வாழ்க்கைல இதெல்லாம் சந்திச்சு தான ஆகணும்"
"இதெல்லாம் நல்லா பேசு, ஆபீஸ்ல லீவ் சொல்லிடியா?"
"ம்ம் ஆச்சுடா, குடுத்துடாங்க"
"சரி, பாலினு நெட்ல தேடி பாத்தேன், என்னடா ஒரே கில்பான்ஸ்சா இருக்கு ஊரு?, நீ பாத்தியா?"
"இல்ல மச்சி, என்ன போட்ருக்காங்க"
"எல்லாம் உனக்கு ஒத்துவராதேடா?" ( அதெப்படி நீ முடிவு பண்ண?)
"என்னனு சொல்லு"
"மசாஜ் பத்தி தான் பாதி வெப்சைட்" 
(உடனே கூகிள் ஓபன் பண்ணி பாலினு டைப் பண்ணாதீங்க!!!!)
"அப்டியா? பாக்கலியேடா"
"நீ அங்க போய் எப்டியும் பராக்கு தான் பாக்க போற, எதுக்கு அவ்ளோ செலவு" ( பராக்கு பாக்கறதுக்கு பதிலா அவன் சொன்ன லைன் வேற, இது பப்ளிக் இல்லையா, சொல்ல முடில.)
"டேய் என்ன பாப்பானு நெனச்சியா? போயிட்டு வந்து சொல்றேன் என்ன நடந்ததுனு" 
"கிழிஞ்சது, நீ கடசில பாதர் ஆப் பாரின் கன்ட்ரி ஆக போற"
"என்னடா அப்டியும் பேசற இப்டியும் பேசற?"
"என்ன பேசுனாலும் நீ பராக்கு பாக்கறது தான் நடக்க போகுது, அப்பறம் என்ன?"
"அண்ணே, எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர ஒரு கலக்கு கலக்கணும், நாம யாருனு காட்டணும்"
"ஆமா ஆமா, காக்க காக்க பாண்டியா பாரு நீ, உன்ன எல்லாம் வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போய்டும், எப்ப கெளம்பற?"
"அடுத்த வாரம் புதன் கிழமை, மெட்ராஸ் ரூம்க்கு வந்துட்டு தான் போனும்" ( ஊட்டில காலேஜ் முடிஞ்சதும் பசங்க எல்லாரும் மெட்ராஸ்ல தான் ரூம் எடுத்து தங்கி இருக்காங்க, எல்லாரும் அங்க தான் வேலை, எப்ப போனாலும் அங்க தான்).
"சரி வா"

எப்டி போனேன், என்ன நடந்தது? கொஞ்சம் காத்திருங்கோ!!!!!

8 comments:

அருண் பிரசாத் said...

அட உங்களுக்கு காமெடி நல்லா வருது... அப்படியே கண்டினியு பண்ணுங்க...

Arun Prasath said...

@ அருண் பிரசாத் : ஹா ஹா ஹா! தேங்க்ஸ் தல... நாம நியாயமா காமெடியன் தானே.... நிச்சயம் கண்டினியு பண்றேன்.

மங்குனி அமைச்சர் said...

( பராக்கு பாக்கறதுக்கு பதிலா அவன் சொன்ன லைன் வேற, இது பப்ளிக் இல்லையா, சொல்ல முடில.) ////

என்ன கெட்டவார்த்தையா ????
வாழ்த்துக்கள் , நன்றாக எழுதிகிறீர்கள்

Arun Prasath said...

@ மங்குனி அமைசர் : கெட்ட வார்த்தை எல்லாம் இல்ல அமைச்சரே! அது ஒரு சொல், இந்த மாறி மேட்டர் கெல்லாம் கூட போனா சொல்லுவாங்களே.... இதுக்கு மேல சொல்ல முடியாது.... உங்கள் வாழ்த்துக்கு நன்றி!!!

கருடன் said...

@மங்கு

//என்ன கெட்டவார்த்தையா ????//

ஏன் மங்கு ஒரு வேளை இவர் விலக்க பத்தி சொல்ல வராரோ?? பயிற்சி கொடுக்கனுமோ??

அருண் பிரசாத் said...

ஆமாம் மச்சி! புதுசு இல்ல கொஞ்சம் டிரெயினிங் கொடுக்கனும்

Arun Prasath said...

@TERROR-PANDIYAN(VAS):
அப்பாடி, நான் எப்டி சொல்றதுனு பாத்தேன், TERROR சொல்லிடாரு, ஏன்னா, நான் ரொம்ப நல்லவன் பாருங்க...

Arun Prasath said...

@அருண் பிரசாத் : ஆமா தல, எப்டியாச்சும் டிரெயினிங் குடுத்து, என்ன ஒரு சுஜாதா சார் ரேஞ்சுக்கு வளத்து விடுடீங்கன்னா புண்ணியமா போகும்....