ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ்ல சேர வெயிட் பண்ணிட்டு இருந்த டைம். நான் வாங்குன மார்க்குக்கு கண்டிப்பா கோயம்புத்தூர்ல காசு குடுக்காம சீட் நகினு தெரியும் (எவ்ளோ மார்க்னு கேக்க கூடாது).
சேலம் ல, சீட் கெடச்சது, அந்த காலேஜ்அ பத்தி தெரியாம அந்த சீட்ட பெரிய ________ மாறி எடுத்துட்டு, அங்க போனேன். பஸ்ல போகும் போது நான் கண்ட கனவெல்லாம் சொன்னா, நம்ம அப்துல் கலாம் அய்யா ரொம்ப சந்தோஷபடுவாரு... நாம தான் கோழி முட்டை வாங்கறக்கு முன்னாடியே கோழி பண்ணை வெச்சு, அம்பானி கூட மீட்டிங் ல பேசற மாறி யோசிப்போமே.....
ஆனா அந்த காலேஜ் போனா நடந்ததே வேற, பஸ்ச விட்டு இறங்கி பாத்தா, என் கனவ கலைச்சது மட்டும் இல்லாம அதுல புல்டோசர் வெச்சு நசுக்கிடாங்க..... காலேஜ் பில்டிங் பாத்து அப்டியே ஷாக் ஆய்ட்டேன் ( வடிவேலு ஸ்டைல் ).... நான் EEE , அந்த லேப் குள்ள பழைய டயர், drum எல்லாம் அடுக்கி வெச்சிருந்தாங்க... அப்டியே கோயம்புத்தூர் க்கு பஸ் ஏறி, அந்த காலேஜ் இருந்த திசைல திரும்பி கூட பாக்கல.... பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி, இல்ல இல்ல பஸ் ஏறி வந்துட்டேன்..
அப்பறம் மறு கலந்தாய்வு ( அதாங்க re counselling ), ல எனக்கு ஊட்டி ல சீட்னு முடிவு பண்ணிடாங்க ( கசாப்பு கடைல ஆட்ட கேட்டுட்டா வெட்றாங்க? )... அப்போ மின்னலே படம் வந்த டைம், அதுல ஊட்டில காலேஜ்னு சொல்வாங்களே, நானும் அந்த காலேஜ்அ பாத்து மெரண்டு போய் அத செலக்ட் பண்ணேன்...ஏன் நா ஊட்டில இருந்ததே ஒரே காலேஜ் தான்... எனக்கு இதுலயும் ஆப்பு னு தெரியாம, சந்தோசமா கோயம்புத்தூர்க்கு ட்ரெயின் ஏறினேன் ( re - counselling சென்னைல)... ஆனா இப்போவே சின்னதா ஒரு டவுட் இருந்தது, நாம வாங்கின மார்க்குக்கு அவ்ளோ சூப்பர் காலேஜ் கெடைக்குமானு...
ரெண்டு நாள் கழிச்சு அப்பா கூட ஊட்டி போனேன்... ஆசையா மினி பஸ்ச விட்டு கீழ குதிச்சேன்... அப்பறம் தான் தெரியும், மின்னலே படம் பாத்து நான் மட்டும் இல்ல நெறைய பேர் அங்க சேந்திருக்காங்கனு ...
விதி வலியது...
தொடரும்...
பின் குறிப்பு :
மொதல்ல தாங்க அந்த காலேஜ் பில்டிங் எல்லாம் கம்மியா இருந்தது, இப்போ, பய புள்ளைங்க வளைச்சு வளைச்சு பில்டிங் கட்டி பட்டய கிளப்பிட்டாங்க...
அதும் இல்லாம நாங்க சேந்தப்ப பில்டிங் தான் ஒரே குறை, மிச்ச படி காலேஜ் சூப்பர்....
10 comments:
Super boss.....athan arun.maddy nu mail id vachurukingala........:-)
@ Prasanna : ஹி ஹி ஹி ஆமா, அது ஒரு தனி கதை, பின்னாடி வரும்...
sema build up da machi...:-)
Hey sooper a elutha ra arun..............mmmmmmmmmmmmmmmm.... kalaku.. all d best.. keep posting machi....:)
@ rockarthik : அதெலாம் இல்ல மச்சி, உண்மையா நடந்தது டா....
@ Mithra : நன்றி மச்சி, அடிக்கடி பாரு....
Dai mapila, Start from the beginning da , ethullam 3 months ku apuram nadanthu da. Ragging, sorrow Arun matter(Kovilpatti accident), Iyer poojai panrathu, Sunil kulikama erukarathu, Lalitha madam pathu bayanthathu, College ground 20 rounds adicathu - first day, Namba room mates story,, Ellam build up pannu da.. eruma
Regards
Vijay
நண்பா, எதெல்லாம் எழுதுனா கொஞ்சம் காமெடியா இருக்குமோ அதெல்லாம் யோசிச்சு பாக்கறேன். நம்ம பதிவுல சீரியஸ்க்கு எடமே இல்ல.... இத படிக்கறவங்க சிரிக்கனுமே தவிர ஐயோ சே சே, அப்டி எல்லாம் நெனைக்க கூடாது..... எல்லாருக்கும் எத்தனையோ பிரச்சனை, இங்கயும் ஏன் சோகமான விஷயம் எல்லாம் எழுதனுமானு பாத்தேன். மிச்ச படி கொஞ்சம் காமெடியா, யார்க்கும் பிரச்சன இல்லாம கொண்டு போக ட்ரை பண்றேன்.
ஆஹா ஊட்டி காலேஜ்ஆ? என் கசின் கூட அங்க தான் படிச்சான்... அப்படியா இப்படியா ஏக பில்ட் அப்பு விடுவானே... எல்லாம் டூப்பா? இன்னைக்கே போன் போடுறேன்... இருங்க எதுக்கும் உங்க பார்ட் 2 படிக்கறேன் மொதல்ல...
@அப்பாவி தங்கமணி
பில்ட் அப் எல்லாம் சரி தான்... என்ன மொதல் டைம் பாக்கும் பொது கொஞ்சம் ஏமாற்றமா இருக்கும் அவ்ளோ தான்
ஹா ஹா ஹா நல்லா இருக்குது...
Post a Comment