என்னடா, டூர்னு போட்டுட்டு மங்களூர போட்ருகான்னு பாக்கறீங்களா, நாங்க போனது, ஊட்டி வழியா... அத பத்தி விலாவரியா பாப்போம்...
எப்டியும் பாதி பேர் என்னோட சுய விபரத்த படிக்காம தான் இத படிச்சிட்டு இருப்பீங்க, அதனால ஒரு சுய விளம்பரம்...
என் பேர் அருண், நான் கோயம்புத்தூர்ல தான் ஸ்கூல் படிச்சேன், வளந்தேன், உருண்டேன், இன்னும் எவ்ளோ டேன் இருக்கோ அவ்ளோவும் இந்த அழகான ஊர்ல தான் ( உடனே மத்த ஊர் எல்லாம் அழகு இல்லையானு கேக்க கூடாது ).... எல்லா ஊரும் அழகு தான?..... இப்போ இங்க தான் வேலையும்....
சரி இப்போ, சும்மா அங்க போனோம், இங்க போனோம் , அது நல்லா இருந்தது, இது நல்லா இருந்தது அப்டி சொல்லிட்டே இருந்தா மொக்கை தான் மிஞ்சும்..... அதனால, அந்த டூர்ல நடந்த சில பிரச்சனைகள், காமெடிகள் இதெல்லாம் சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் னு தோணுது... வேணாம்னா சொல்லிடுங்க.....
அப்பறம் இன்னொரு முக்கியமான மேட்டர்... நான் போன டூர் எல்லாமே பசங்க கூட ( கல்யாணம் ஆகாதவங்கனு சொல்ல வந்தேன் )... தண்ணி, சைட் ( மனசுக்கு புடிச்ச பொண்ண ஜஸ்ட் பாக்கறது மட்டும் தான், வேற ஏதும் இல்லீங்க ), தம் எல்லாம் சகஜமா வரும் புடிக்கலனா சொல்லிடுங்க...திட்டிட போறீங்க.... நான் குழந்த பையன்....
சரி சரி கோச்சுகாதீங்க, விஷயத்துக்கு வரேன் மங்களூர் பிளான் எப்டி ஆரம்பிச்சதுனா, 2008 ஆகஸ்ட் மாசம்னு நெனைக்கறேன்.... அப்போ நமக்கு வேலை இல்ல, வெட்டி தான்.... ஒரு வெள்ளி கிழமை காலைல என் நண்பன் ரூம் க்கு போனேன், அந்த ரூம்ல மொத்தம் 3 பேர், ( என் நண்பர்கள் பத்தி விளக்கமா அடுத்தடுத்து சொல்றேன், இப்போ பேர் மட்டும்)... மைனா ( ஒரிஜினல் பேர் கண்ணன் ), நவீன் ( இவனோட பட்ட பேர சொல்ல முடியாது, கொஞ்சம் பப்ளிக்...) , அப்பறம் தீனா ( மைனா கூட ரூம் ல தங்கி இருந்ததால தெரியும்), மைனா , நான் , நவீன் எல்லாரும் ஊட்டி ல காலேஜ் மேட்ஸ்....
நான் ரூம் குள்ள போறப்ப, மைனா வும் நவீன் உம், தீனா கிட்ட என்னமோ போலாம் டா, ஒரே நாள் ல வந்திடலாம், ஒரு நாள் மட்டும் வேலைக்கு போகாத னு சொலிட்டு இருந்தாங்க.... நான் போனதும் அவங்களுக்கு குஷி,
"வாடா, எப்டியும் நீ வருவனு தெரியும் ( வெட்டி பையன் தானே ), இன்னைக்கு நானும், மைனா வும் வேலைக்கு கட், ரெண்டு பேரும் தல வலி னு லீவ் போடாச்சு, ஊட்டி போலாம் னு பிளான், இவன வர சொல்லி கேட்டுட்டு இருந்தோம், கரெக்ட்ஆ நீ வர, போலாம் தான" இது நவீன்.....
தீனா சொன்னான், "இல்லடா கண்டிப்பா போனும்"னு, அப்பவே தெரியும், அவன் வந்திடுவான்னு..... 4 பேர் ஓகே.... இப்போ அடுத்த பிரச்சன, வண்டி இல்ல ( நாங்க பஸ்ல எல்லாம் போறது இல்லீங்க ), ( அப்போ என்கிட்ட வண்டி இல்ல ).... நான் என் மாமா கிட்ட கேட்டு ஒரு வண்டி ரெடி பண்ணிட்டேன் ( நான் மாமா கிட்ட பேசிட்டு இருந்த டைம்ல தீனா வரேன்னு ஒத்துக்கிட்டான் ).
மைனா, அவன் நண்பன் (அவன் பேரும் அருண் தான் ) கிட்ட கெஞ்சிட்டு இருந்தான், கடசில, "மச்சான் ஓகேடா, வண்டி ரெடி, சர்வீஸ் விடணுமாம், 200 km மேல ஓட்ட வேணாம்" னு சொன்னான்.
நான், "அவ்ளோ கூட ஓடாது டா, ஊட்டி தான ( ஊட்டி கோயம்புத்தூர் ல இருந்து 88 km ) நாளைக்கு காலைல வண்டி திருப்பி குடுத்துடலாம் (சனி கிழமை காலைல)" னு ஒரு பிட்அ போட்டேன்....
நானும் நவீன் உம் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டோம், எங்க ரெண்டு பேருக்கு தான் தெரியும், எப்டியும் 800 km வண்டி ஓடும்னு.....
அடுத்தடுத்து என்ன நடந்ததுனு அடுத்த எபிசொட்ல சொல்றேன்.... அப்டியே சில படங்களை சேக்க முடிஞ்சா சேக்கறேன்....
7 comments:
am waiting for next episode boss..:-)
நல்ல ஆரம்பம் தோழா ... பிழைகள் சில இருந்தாலும் ரசிக்கும் படியாக இருப்பது இனிமை....
@ Prasanna : நன்றி, மேல படிங்க, அடுத்தடுத்து எழுதறேன்
@ Krish :நன்றி Krish, எனக்கு தமிழ் தாய் மொழி தான், இருந்தாலும், இதுல டைப் பண்ண கஷ்டமா இருக்கு, அதான் சில பிழைகள்... மன்னிக்கவும், அந்த பிழைகள திருத்த முயற்சி பண்றேன்...
Its very nice, This adventure like professional writer, because i know u r not professional writer, keep it up...
@ Raja : நன்றி, ஆனா இது எனக்கு கொஞ்சம் அதிகம் தான் :)
Dei oppice la irundha blog eludhara?? namma Gopal naidu episode onnu eludhu da...
@rockarthik : ஆபீஸ் ல இல்ல டா, வீட்ல இருந்து தான்....சரி டா, எழுத பாக்கறேன்.
Post a Comment